இன்னும் இருக்கிறது ஆகாயம்














‘ஆகாயம் ஒரு மாயை’
அறிவியல் சொல்லும் உண்மை.

சூரிய ஒளி உடைபட்டு நீலம் மட்டும் தெரிகிறது – அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு ஆனால்
தெய்வமாயில்லை.

பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.

மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும் சுவர்க்கமுமில்லை.

ஆகாயம் ஒரு மாயை.

மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....



12 மறுமொழிகள் to “இன்னும் இருக்கிறது ஆகாயம்”

  1. நிர்மல் சொல்கிறார்:

    நல்ல கவிதை சிறில்

  2. Sivabalan சொல்கிறார்:

    சிறில்

    சூப்பர்.. கலக்கிடீங்க..

  3. ஜோ / Joe சொல்கிறார்:

    சிறில்,
    கவிதை கலக்கல்!

  4. Anonymous சொல்கிறார்:

    அருமையான கவிதை!
    நீங்கள் எழுதினீர்களா?
    பாராட்டுக்கள்.

    அன்பரசன்.

  5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    பாராட்டுக்களுக்கு நன்றி.

  6. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

    //ஆவி உண்டு
    பரிசுத்த ஆவியில்லை.//

    சிறில்…!
    காகம் பறந்தாலும், மேகம் மிதந்தாலும் ஆகாயம் தான் அழுக்காக ஆகிப்போனதில்லை என்று தலைவர் பாடி இருக்கிறார்.

    ஆகயத்தில் ஆவி உண்டு எனில் அது பரிசுத்த ஆவியாகத்தான் இருக்கும்.

    //மடமை பூசிய மனங்களிலேயே
    இன்னும் இருக்கிறது ஆகாயம். //

    நல்லா முடிச்சிருக்கிங்க !

    ஆனால் மடமை பூசிய மனங்களில் ஆகயம் இருக்கிறது என்று சொல்வது அவர்களுக்கு பெரிய மனசு இருப்பது போல் பொருள்படுகிறது.

  7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    //ஆகயத்தில் ஆவி உண்டு எனில் அது பரிசுத்த ஆவியாகத்தான் இருக்கும்.//

    இன்னைக்கு சூழல்ல ஆகாயம் அழுக்காகிக் கிடப்பது உங்க தலைவருக்குத் தெரியலியா? :)

    நான் சொல்லவந்தது மதம் சார்ந்த ஆகாயம்/சொர்க்கம் கடவளர் வாழும் இடம் எனும் பொருளில்..

    அந்தமாதிரியான ஆகாயம் மடமை பூசிய மனங்களில்தான் இருக்கு… உங்க லேட்டஸ்ட் மதம் பற்றிய பதிவுக்கு ஏற்ற கவிதைன்னு நினைக்கிறேன்.

    :)

  8. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

    //இன்னைக்கு சூழல்ல ஆகாயம் அழுக்காகிக் கிடப்பது உங்க தலைவருக்குத் தெரியலியா? :)//

    சிறில்…!
    முதல் பின்னூட்டத்தில்
    டிஸ்கி [:)] போட மறந்துட்டேன், சீரியஸ் ஆக சொல்லவில்லை :))

    நீங்க செல்வனை சீண்டுகிறீர்கள் !
    :)

  9. இராம் சொல்கிறார்:

    சிறில்,

    உங்கள் இக்கவிதை முதல் பரிசுப் பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    நன்றி ராம்.
    லேட்டா வந்தாலும் லேட்டச்ட்டா வந்த ரிசல்ட்.
    தமிழ் சங்கத்துக்கு நன்றி.

  11. மதுமிதா சொல்கிறார்:

    மனமார்ந்த வாழ்த்துகள் சிறில்

  12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

    மனமார்ந்த நன்றிகள் மதுமிதா

    :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்