நரகாசுரன் – SP.VR.SUBBIAH

சுப்பையா ஐயாவின் படைப்பு பின்னூட்டமாக இடப்பட்டது பதிவாய் உங்கள் பார்வைக்கு,

இந்த வாரத் தலைப்புக்காக

‘நரகாசுரன்’

சொன்னால் வருத்தம் வேண்டாம்
சொல்லிக்கொளள ஒன்றுமில்லை
சொர்க்க அசுரர்கள்தான் – இங்கேயுண்டு
சொல்லுங்கள் அவர்களைபற்றி எழுதும்படி

அரை நூறு பக்கம் கட்டுரை வேண்டுமா
ஆறு பக்கங்கள் கவிதை வேண்டுமா
அடுக்கு மொழியில் அவர்பெருமை பேச வேண்டுமா
அதெல்லாம் நொடியில் துவங்குவேன் செய்து முடிக்க!

நரக அசுரன்பற்றி எழுது என்றால்
நான் எப்படி அதைச் சொல்ல?
பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை
பணியில் அமர்த்தியவனே நரகாசுரன்!

- SP.VR.SUBBIAH

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “நரகாசுரன் – SP.VR.SUBBIAH”

 1. Vicky சொல்கிறார்:

  // பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை
  பணியில் அமர்த்தியவனே நரகாசுரன்!

  மிகவும் ரசித்த வரிகள். சுப்பையாவுக்கு வாழ்த்துக்கள்.

  நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் அலெக்ஸ்

 2. kannabiran, RAVI SHANKAR (KRS) சொல்கிறார்:

  வாத்தியார் அய்யா,
  அருமையிலும் அருமை!

  “துள்ளித் திரிகின்ற காலத்தே துடுக்கு அடக்கி,
  பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே” என்று பாரதியார் சொல்வார்!

  நீங்கள் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டீர்கள்.
  //பள்ளிக்குச் செல்ல வேண்டிய பாலகனை
  பணியில் அமர்த்தியவனே நரகாசுரன்!//

  கவிஞர் காசு மணியனின் நண்பர் சுப்பையா அவர்களும் ஒரு சிறப்பான கவிஞர் என்பது அறிதும் பெரிதும் மகிழ்ந்தேன்!

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஓசிப் பதிவு ஓசி பின்னூட்டம் கலக்குற சிறில் அலெக்ஸ்.

  :)

 4. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  ந்ன்றி இனிய நண்பரே – எஙகள்
  நல்சிறிலலெக்ஸ் நாயகரே!
  நீங்களும் ஒரு தோட்டம்தான்
  நித்தம்வருவேன் தேனெடுக்க!

  —- SP.VR.SUBBIAH

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வாங்கையா வாத்தியாரையா
  வரவேற்க வந்தோமைய்யா..

  :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்