மீள் அறிவிப்பு

சில நேரம் என்ன பதிவிடுவது எனக் குழம்பித் தவிக்கும் சக வலலப்பதிவகளுக்காக வாரம் ஒரு தலைப்பை தர இருக்கிறேன். இது போட்டியல்ல மாறாக ஒரு தலைப்பில் பல படைப்புக்கள் வரும்போது பல மாற்றுக்கருத்துக்களையும் காண முடிகிறது.

இந்த வாரத் தலைப்பு ‘நரகாசுரன்’. இந்தத் தலைப்பில் வந்த பதிவுகளை இங்கே வலதுபக்க பட்டையில் (ராவா அடிப்பீங்களே அந்த பட்டையில்ல) போய் பார்க்கலாம்.

உங்களுக்குத் தோன்றிய தலைப்புக்களையும் பின்னூட்டமக இட்டால் சேர்த்துக்கொள்ள ஆவன செய்யப்படும்.

படைப்பை இங்கே சேர்த்துக்கொள்ளவிரும்புபவர்கள் சுட்டியை பின்னூட்டமாகவோ தனிமடலிலோ அனுப்பலாம்.

ஆதரவிற்கு நன்றி.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....7 மறுமொழிகள் to “மீள் அறிவிப்பு”

 1. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  இந்த தலைப்பு ரொம்ப கஷ்டமா இருக்கே… கொஞ்சம் எங்கள மாதிரி கத்துக்குட்டிகளுக்கு ஏத்த மாதிரி வெக்க கூடாதா???

  எனக்கு பிடிச்ச தலைப்பு : மழை

  இதை வேணா அடுத்த தடவை கொடுங்க

 2. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  தலைப்புக்களைத் தாருங்கள் – இடம்
  தருவேன் என்பதிவில் என்றவரே
  எங்கள் நல்சிறில் அலெக்சாரே!
  ஏன் கேட்டீர் அவ்வாறு?

  தமிழ்நாட்டில் பலவுண்டு
  தலையாய பிரச்சினைகள்!
  தலைப்பிற்கா பஞ்சம்?
  தந்திடுவோம் பலநூறு!

  இரண்டுஜிபி அஞ்சல்பெட்டி
  இதற்குப் போதுமென்றால்
  இப்போதே தெளிந்துசொல்லும்
  இரண்டுநாளில் அதைனிறைப்போம்!

  SP.VR.SUBBIAH

 3. துளசி கோபால் சொல்கிறார்:

  ச்சும்மா இருக்கற தலைச்சுற்றல் போதாதுன்னு,
  இப்பத் ‘தலைப்பை’ப் பிடிச்சுக்கிட்டு சுத்தணுமாக்கும்?:-))

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வெட்டிப்பய்யல்,
  மழை அழகானத் தலைப்பு.
  அடுத்தமுறை கண்டிப்பா வச்சுக்கலாம்.

  சுப்பையா சார்,
  ஒங்க ஆதரவுக்கு மிக்க நன்றி.

 5. G.Ragavan சொல்கிறார்:

  பட்டி விக்கிரமாதித்தன் கதைகள் படிச்சிருக்கீங்களா? கதைக்குள் கதைன்னு வரும். அதுமாதிரி இது தமிழ்மணத்துக்குள்ள தமிழ்மணமா :-)

  உங்கள் எண்ணம் போல் வண்ணம் அமைய எனது வாழ்த்துகள்.

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இராகவன்,
  இப்ப என்ன ‘பட்டி’ண்றீங்களா விக்ரமாதித்தண்றீங்களா. :)

  தமிழ்மணத்துக்குள்ள தமிழ்மணம் பண்ணணும்னு இல்ல. ஒரு தலைப்பை வைத்து மத்தவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெருஞ்சுக்கலாமே.

  தேன்கூடு போட்டிகளில் கடைசியில் பெரிதாய் கிடைக்கும் பெரும்பயன் இதுவாகத்தான் தெரிகிறது. (ஒரு தலைப்பில் பல எழுதுவது)

  பரிசுன்னு சொன்னாத்தான் எழுதணுமா என்ன?

  குறைந்த பட்சம் எனக்கு ‘என்ன எழுதலாம் என்கிற’ கேள்வ் குறையும். கோவ்கண்ணனுக்கும் து உதவியதாகச் சொன்னார்.

  வாங்க நிங்களும் கலந்துக்குங்க ராகவன். போட்ட்யெல்லாம் இல்ல…

  சுவாரஸ்யம் மட்டுமே.
  :)

 7. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  அடுத்த தலைப்பிற்கு ஒரு கவிதை!

  நண்பர் சிறில் அலெக்ஸ் அவர்கள் அடுத்த தலைப்பு ‘மழை’ என்று சொன்னார். அவர் சொன்ன நேரம் எங்கள்
  கோவையில் மழை.

  வெளியே மழை. ஜன்னலருகே அமந்திருக்கிறேன்.
  தெறிக்கும் நீர்த்திவலைகள்.கையில் தேநீர்க் கோப்பை.
  ஆகா என்ன ரம்மியமான சூழ்நிலை!
  மழையைப் பற்றிய வார்த்தைகள் அடை மழையாக வந்தன. பிடித்துக் கொடுத்துள்ளேன்.

  படித்து ரசிப்பதற்கு இங்கே சொடுக்குங்கள்:

  URL: http://devakottai.blogspot.com

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்