தேன்கூடு பெட்டகம்

thenkoodu.com டெலிஷியஸ் எனும் சேவை பற்றி முன்பு பதிவுகள் எழுதியிருந்தேன். எத்தனைபேர் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் தெரியவில்லை.

தேன்கூடு குழுமம் ‘பெட்டகம்’ எனும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு பிடித்த சுட்டிகளை குறிச் சொற்களோடு சேகரித்து பயன்படுத்த உதவும் சேவை. டெலிஷியசை மிஞ்சும் ஒரு அருமையான பயனோடு வந்துள்ளது(பின்னர் இதைச் சொல்கிறேன்).

இதன் அடிப்படை பயன் என்ன?
Favorites என உங்கள் உலவியில்(Browser) சுட்டிகளை சேகரிக்க ஒரு வசதி அதைப் போல பெட்டகத்தில் உங்களுக்கு பிடித்த சுட்டிகளை சேகரிக்கலாம்.

இதுபோல ஏற்கனவே Favourites சேகரிக்கும் தளங்கள் இருக்கின்றனவே? முக்கிய வித்தியாசம் சுட்டிகளுக்கு குறிச்சொற்களை வழங்க முடிகிறது. மேலும் சில குறிப்புக்களோடும் சுட்டிகளை சேர்க்கலாம்.

குறிச்சொற்கள்னா?
Tags என அழைக்கப்படுகின்றன. ஒரு சுட்டி சொல்லும் சேதிக்கேற்ப, அதை பல சொற்களால் வகைப்படுத்தமுடிகிறது. உதாரணமாக ‘தேன்’ எனும் இந்தப் பதிவகத்துக்கு சிறில்அலெக்ஸ் தேன் வலைப்பதிவு சிறுகதை கவிதை சமூகம் கட்டுரை என குறிச் சொற்களை சேர்க்கலாம். இப்படி பல தொடர்புள்ள பதிவுகளை குறிச் சொர்களின்கீழ் வகைப்படுத்தலாம்.

பெரிய சுட்டிக்குவியலில் சிறுகதைகளைத் தேடவேண்டுமானால் சிறுகதை எனும் குறிச் சொல்லை சுட்டினால் போதுமானது. அதன் கீழிருக்கும் எல்லா சுட்டிகளும் பட்டியலிடப்படும்.

பெட்டகத்தில் என்ன சிறப்பு?
பெட்டகத்தில் நீங்கள் சேகரிக்கும் சுட்டிகளை உங்களுக்கென தனிப்பட்டதாகவும்(Private) பொதுவானதாகவும்(Public) அல்லது உங்களை கவனித்துக்கொண்டிருப்பவர்கள் (People watching your list) மட்டும் பார்க்க இயன்றதாகவும் வகைப்படுத்தலாம். இந்த சேவை புதியதாக உள்ளது. (Compared to Delicious).

‘தனி’ சுட்டிகள் சிவப்புக் கோட்டால் குறியிடப் படுகின்றன. ஆரஞ்சு நிறத்தில் ‘கவனிப்பவர்களுக்காக’ என வகைப்படுத்தப்பட்டவை குறியிடப்படுகின்றன. ‘பொது’ சுட்டிகள் குறியிடப் படவில்லை.

எப்படி பயன் படுத்துவது?
தேன்கூட்டில் அல்லது பெட்டகத்தில் பயனாளராக பதிவுசெய்துகொள்ளுங்கள். பெட்டகத்தில் நுழையுங்கள். பார்வையாளராய், அங்கே ஏற்கனவே சேர்த்துவைக்கப்பட்டிருக்கும் சுட்டிகளைக் காணலாம். குறிச்சொல் தொகுப்பை பயன்படுத்தலாம்.

‘குறியத்தை சேர்க்க’ எனும் பகுதிக்குச் சென்று உங்கள் சுட்டிகளை சேர்க்க ஆரம்பிக்கலாம்.

உங்கள் சொந்த சுட்டித் தொகுப்பைக் காண ‘தேடுக’ எனும் பகுதியில் ‘என் குறியம்’ என்பதை தேர்ந்தெடுத்து ‘தேடுக’ எனவும்.
pettagam.com
பெட்டகத்தின் உள் நுழையாமல் சுட்டிகளை சேகரிப்பதெப்படி?
‘குறியத்தை சேர்க்க’ எனும் பகுதியில் ‘Post To பெட்டகம்’ எனும் சுட்டியை உங்கள் உலவியின் favorites-ல் சேர்த்துக்கொண்டு(right click and add to favourites), பெட்டகத்தில் சேர்க்கவேண்டிய வலைப்பக்கத்திலிருந்து இந்த favorites சுட்டியை சுட்டி எளிதில் பெட்டகத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஏற்கனவே del.icio.us பயனாளராயிருப்பவர்களுக்கு…
டெலிஷியஸில் சேகரிக்கப்பட்டிருக்கும் சுட்டித் தொகுப்பை எளிதில் பெட்டகத்தின் உளேற்றமுடிகிறது. ‘குறியத்தை சேர்க்க’ எனும் பகுதியில் கீழே, ‘Import bookmarks from del.icio.us’ எனும் சுட்டியை சுட்டினால் இதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.

என் உலவியின் Favorits-ஐ சேர்க்கமுடியுமா?
முடியும். ‘குறியத்தை சேர்க்க’ என்மு பகுதியில் கீழே இதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. கவனிக்க: இப்படி செய்யும்போது Private ஆகச் சேர்ப்பது நல்லது. நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் சுட்டிகளை பின்னர் பெட்டகத்தினுள் நுழைந்து Public-ஆக மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கனவே நான் சேர்த்த சுட்டியை திருத்தவோ வேறு குறிச்சொற்களை சேர்க்கவோ வாய்ப்புண்டா?
நீங்கள் சேகரித்த சுட்டிகளை திருத்த அல்லது நீக்க வசதி உண்டு. ஒவ்வொரு சுட்டிக்கும் கீழே சுட்டிகள் தரப்பட்டுள்ளன.

அடுத்தவர் சேர்த்திருக்கும் சுட்டியை எனதாக்க முடியுமா?
ஆம். Copy எனும் சுட்டியை சுட்டி உங்களுக்குத் தேவையான குறிச் சொற்களோடு சேகரிக்கலாம்.

பிற பயனர்களை ‘கவனிப்பது’ எப்படி?
முகப்பிலுள்ள சுட்டித் தொகுப்பில் பயனாளர் பெயரை சுட்டி அவரது ‘பொது’ தொகுப்புக்களை பார்க்கலாம். அங்கே வலப்பக்கத்தில் ‘கவனிப்பில் சேர்க்க’ என்பதைச் சுட்டினால் அந்தப் பயனரின் ‘பொது’ சுட்டிகளும் ‘கவனிப்பில் இருப்பவர்களுக்கு மட்டும்’ என வகைப்படுத்தப்பட்ட சுட்டிகளையும் காண முடியும்.

முடிந்தவரை பெட்டகத்தை பயன்படுத்த தேவையானவற்றை சொல்லிவிட்டேன்.

இதை முறையாகப் பயன்படுத்துவது அவசியம். கவனத்தில் கொள்ளவேண்டியவை சில.


குறிச்சொற்களை சேர்க்கும்போது முடிந்தவரை ஏற்கனவே இருக்கும்
குறிச் சொற்களை பயன்படுத்துவது நல்லது.

குறிச் சொற்கள் Space (ஒற்றை இடைவெளி) கொண்டு தனிப்படுத்தப்
படுகின்றன. ‘சிறில் அலெக்ஸ்’ என்பது சிறில் எனும் ஒரு குறிச் சொல்லாகவும் அலெக்ஸ் எனும் ஒரு குறிச்சொல்லாகவும் சேர்க்கப்படும். இவற்றை ‘சிறில்அலெக்ஸ்’ எனவோ அல்லது சிறில்_அலெக்ஸ் என்பது போலவோ சேர்ப்பதுதான் சரியாகும்.

பொதுவானவை என சேகரிக்கப்படும் சுட்டிகளை கவனத்துடன் சேர்க்கவும்.

குறிச் சொற்களை சரியாக தேந்தெடுப்பது அவசியம்.

உருப்படியானவற்றை மட்டுமே பொதுவில் வைக்க வேண்டுகிறேன். பெட்டகத்தின் சேவையை சிறப்படையச் செய்வது பயனீட்டாளர்கள் கையில்தான் இருக்கிறது.
நல்ல சுட்டிகளை ‘பொதுவில்’ செகரிப்பதன்மூலம் இதை கிட்டத்தட்ட ‘பூங்கா’ போன்ற ஒரு இதழாகவே இதை பயன்படுத்த முடியும்.

நண்பர்களை கவனிப்பில் வைப்பதன்மூலம் அவர்களின் சுட்டிகளைப் பார்க்க இயலும் (அவர் உண்மையிலேயே நண்பரா பகைவரா எனவும் கண்டுகொள்ளலாம் :)

வலைப்பதிவுகளுக்கேயான சேவையல்ல இது என்பதை நினைவில் கொள்க.
எந்தவித சுட்டியையும் இதில் சேகரிக்கலாம். ஆங்கிலத் தளங்களுக்கான சுட்டிகளை தமிழ் குறிச் சொற்களோடு சேர்த்துவைக்கலாம்.

பெட்டகம் தந்துள்ள தேன்கூட்டுக்கு வாழ்த்துக்கள். இன்னும் சில கருவிகளையும் மேம்பட்ட பயன்களையும் அவர்கள் தருவார்கள் என நம்புகிறேன். தேன்கூட்டின் புதிய வடிவம் பாராட்டும்படியுள்ளது.

என்ன, பெட்டகத்தை நிரப்பத் தயாரா?

தொடர்புள்ள சுட்டிகள்

http://pettagam.thenkoodu.com (or) http://pettagam.com

தேன்கூடு அறிவுப்பு

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....11 மறுமொழிகள் to “தேன்கூடு பெட்டகம்”

 1. naive சொல்கிறார்:

  Hey i really liked your blog. it is wonderful. Although I am a north indian but i was born and brought in chennai…it is good to see a blog in Tamil!!! you know i too have just started writing blogs. hope you like it. it is on true incidents which i came across in my life. so please read and let me know ur comments too. you can read them at

  http://naiveslife.blogspot.com/

  Thanks for your time.

 2. சுதர்சன் சொல்கிறார்:

  //பெட்டகத்தில் நீங்கள் சேகரிக்கும் சுட்டிகளை உங்களுக்கென தனிப்பட்டதாகவும்(Private) பொதுவானதாகவும்(Public) அல்லது உங்களை கவனித்துக்கொண்டிருப்பவர்கள் (People watching your list) மட்டும் பார்க்க இயன்றதாகவும் வகைப்படுத்தலாம்.//

  இந்த வசதி யாகூ மை வெப்பில் பல காலமாக இருக்கிறது; அங்கே private, public, friends என்று 3 படிகள் உண்டு

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சுதர்சன்,
  தகவலுக்கு நன்றி.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  naive are you for real man?
  I am confused, if you really mean those words you said or just stuck a poster here at my blog :)

  anyways thanks for the comment.

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இந்தப் பதிவை படித்து பயன் பெற்றீர்களா?

 6. Anonymous சொல்கிறார்:

  அருமையான தகவல், நன்றி.

 7. Mayooresan சொல்கிறார்:

  அந்த பெட்டகம் ஐகான்க்கான கோட்டை எங்கே பெறுவது! தேன்கூட்டில் காணவில்லையே

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி இலக்கியா பெட்டகத்தை பயன்படுத்துங்கள் பயன்பெறுங்கள்.

  :)

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மயுரேசன் ,

  http://www.thenkoodu.com/blog/2006/10/13/code-for-pettagam/

  அந்தப் பதிவில் விவரங்கள் இருக்கின்றன.

 10. Anonymous சொல்கிறார்:

  நன்றி நண்பரே!
  உங்கள் மூலம் தேன்கூட்டின் இன்னொரு சுவையான பெட்டகத்தை பற்றி நன்கு தெரிந்துக் கொண்டேன்.
  இன்றுதான் பெட்டகத்தில் புகுந்த வேளைதான் தேன்கூட்டின் ஒரத்தில் உங்களின் குறிப்பை பற்றிய அறிந்து இங்கு வந்தேன்.
  பொட்டகம் பயன்மிக்க ஒரு முயற்சி.
  மீண்டும் நன்றிகள்!
  தொடர்வோம் கருத்து பரிமாறலை!

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி மேமன்கவி அவர்களே. நல்ல ஒரு சேவை தமிழில் கிடைத்திருப்பதுபற்றிய மகிழ்ச்சியிலேயே அந்தப் பதிவை எழுதினேன். மற்றபடி தேன்கூட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை பயனாளர் என்பதைத் தவிர.

  தொடர்ந்து பகிர்வோம். நட்புக்கு நன்றி

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்