தீபாவளி வாழ்த்துக்கள்

வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்

பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்

அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.

பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Popularity: 17% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....23 மறுமொழிகள் to “தீபாவளி வாழ்த்துக்கள்”

 1. வைசா சொல்கிறார்:

  நல்ல சிந்தனைகள்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  வைசா

 2. Sivabalan சொல்கிறார்:

  சிறில்,

  அருமை.. அருமை.. அருமை…

  கலக்கிடீங்க..

  //மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான் //

  இந்த வரிகள் சூப்பர்..

  நேரம் கிடைக்கும் போது அப்படியே நம்ம வீட்டுப்பக்கம் வரது…

 3. வைசா சொல்கிறார்:

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  வைசா

 4. ஜோ / Joe சொல்கிறார்:

  //தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
  மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
  ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
  புண்ணியம் சேர்ப்பதில்//

  அண்ணா! எங்கியோ போயிட்டீங்க .கவிதை அருமை!

  (பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
  அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான் -கண்ணதாசன்)

  அன்பே சிவம் ! ஆமென்!

  அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

 5. Boston Bala சொல்கிறார்:

  —இன்று
  ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.—

  :)

  இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

 6. தம்பி சொல்கிறார்:

  அழகான வரிகளுடன் வாழ்த்துக்கள்.

  மிகவும் ரசித்தேன்.

 7. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  //ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.//
  ஊசி வெடி !
  :)))

  //அந்த Sun டி.வியை அணைப்போம் -//

  அனைப்போம் ? (ஆஃப்)
  :))

 8. kannabiran, RAVI SHANKAR (KRS) சொல்கிறார்:

  //ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
  புண்ணியம் சேர்ப்பதில்//

  சத்தியமான வார்த்தை சிறில்! நீண்ட நேரம் இவ்வரிகளைப் படித்தேன்!

  பதார்த்தம் பகிர்வோம், பண்டிகையைப் பகிர்வோம்.
  ஆம்….பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தானே சிறந்த அறங்களுள் ஒன்று!

  நாங்கள் கொண்டாடிய தீபாவளி பற்றியும் இன்று மாலைக்குள் பதிவிட வேண்டும்!

  உங்களுக்கும் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்.

 9. கப்பி பய சொல்கிறார்:

  அருமை சிறில்!

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வைசா,
  வாழ்த்துக்கு நன்றி.

 11. கால்கரி சிவா சொல்கிறார்:

  வாழ்த்தி வழங்கி தீபாவளியை கொண்டாடுவோம்.

  நன்றி. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

 12. நெல்லை சிவா சொல்கிறார்:

  வாழ்த்துக்கள், அலெக்ஸ்.

 13. நிர்மல் சொல்கிறார்:

  தீபாவளி வாழ்த்துகள் சிறில்.

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சிவபாலன்,
  உங்கள் வீட்டுக்கு எப்ப வேண்ணா வரலாமே…
  இந்த வாரம் முயற்சி செய்கிறேன்.

  நிச்சயம் சந்திப்போம். தீபாவளி வாழ்த்துக்கள்.

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி பாபா..இனிய பண்டிகை வாழ்த்துக்கள்…

  இனிப்பு பார்சல்ல அனுப்பியிருப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  GK,
  அணைப்போம்- Off- அந்த அர்தத்தில்தான் எழுதினேன்..

  :)

  வாழ்த்துக்கள்.

 17. மணியன் சொல்கிறார்:

  சிறில்,
  அருமையான எண்ணங்கள். அல்லவை தேய்ந்து அறம் வளர நல்லவை நாடி பண்டிகை கொண்டாடுவோம். உங்கள் வாழ்துக்களை நன்றியுடன் பிரதிபலிக்கிறேன்.

 18. Anonymous சொல்கிறார்:

  unnga karuthukklaiyellam kontu kuppaila potung

 19. kalaI சொல்கிறார்:

  தீபாவளி…………

  இது தீபங்களின் விழா நாள்…………
  தீமைகளின் எரி நாள்……….
  நன்மைகளின் திரு நாள்………….
  உறவுகளின் ஒரு நாள்………..
  சந்தோசத்தின் மழை நாள்……..
  இன்பத்தின் சாரல்கள்
  பொழியும் பொது நாள்…………
  இனிமைகளின் மொட்டுக்கள்
  மலரும் நறுமண நாள்…………

  என் உளம் கனீந்த தீபாவளி நல்வாழ்த்துகள்…..
  கலை…..

 20. gowry சொல்கிறார்:

  இ‌ந்த ‌தீப‌த் ‌திருநா‌ளி‌ல் ‌பிறரது வா‌ழ்‌விலு‌ம் ஒ‌ளியே‌ற்‌ற முய‌ற்‌சி செ‌ய்வோ‌ம்!க‌ரியா‌‌ய் போகு‌ம் நமது காசு பண‌ம் ஆதர‌வி‌ல்லாத அவ‌ர்களு‌க்கு உணவாகவு‌ம், உடையாகவு‌ம் போ‌ய்‌ச் சேர‌ட்டுமே.! ‌நீ‌ங்க‌ள் அவ‌ர்களு‌க்கு‌ச் செ‌ய்யு‌ம்உத‌வியா‌ல் அவ‌ர்க‌ளி‌‌ன் உ‌ள்ள‌த்‌தி‌‌ன் ம‌கி‌ழ்‌ச்‌சி ஒ‌ளிமுக‌த்‌தி‌ல் ‌பிரகா‌சி‌த்து து‌ன்ப‌ம் எ‌ன்னு‌ம் ‌தீமையக‌ன்று ந‌ன்மை எ‌ன்னு‌ம் ஒ‌ளி அவ‌ர்க‌‌ள்வா‌ழ்‌வி‌லு‌ம் ‌பி‌ற‌க்க‌ட்டு‌‌மே!!
  (ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
  புண்ணியம் சேர்ப்பதில்)

 21. Anonymous சொல்கிறார்:

  Deepangal Jolikka,

  Pattasu vedikka,

  Pudhu Thuni Udhuthi,

  Magilchiyudan in’naalai neengal kondada,

  En Iniya Deepavali Vaazthukkall…

 22. Anonymous சொல்கிறார்:

  good to read

 23. m.ebenesh சொல்கிறார்:

  good to read

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்