பசி-சுப்பையா சார் கவிதை

பசி—————SP.VR. சுப்பையா
பணம்
உள்ளவனுக்குத்
தெரிந்த ‘பசி’
நிதியமைச்சர்
ப.சி!

கன்னிமாராவிற்குள்
காலடி வைப்பவனுக்கு
அங்கிருக்கும் நூல்களால்
ஏற்படுவது
அறிவுப் பசி!

கலங்கவைக்கும் நிகழ்வுகளை
எழுதியவுடன்அடங்குவது
கவிஞனின்
உள்ளத்துப் பசி!

கட்சிவிட்டு
கட்சிதாவச் செய்வது
அரசியல்வாதியின்
அகோரப்பசி
பதவிப் பசி!

நான்கு லார்ஜிற்குப் பின்
வரும் பசி
பாருக்குப்
போகிறவனுக்குப்
பழகிவிட்ட பசி!

உறவு பேதமின்றி
எந்தப் பெண்ணுமே
அழகாகத் தெரிவது
நெறிகெட்ட மனிதனின்
நிலையில்லாதகாமப் பசி

பதிவைப்
போட்டுவிட்டுக்
காத்திருப்பவனுக்கு
ஏற்படுவது
பின்னூட்டப் பசி!

என்னய்யா
பெரிய பின்னூட்டம்
என்றிருப்பவனுக்கு
என்றுமே வராது
ஏக்கப் பசி!

பாதி உணவோடு
இலையை மடக்குபவனுக்கு
ஏற்படுவது
என்றும் அவனோடுள்ள
அஜீரணப் பசி!

ஒரு வேளை
உணவிற்குத்
தவமிருப்பவனுக்கு
ஏற்படுவது
உண்மையான பசி!

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....3 மறுமொழிகள் to “பசி-சுப்பையா சார் கவிதை”

 1. Dharumi சொல்கிறார்:

  என்னாச்சு சிறில்? இதுவரை நல்லாதானே போய்க்கிட்டு இருந்திச்சு.. : )

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தருமிசார்.. வேலைல கொஞ்சம் பிசி அதனால முடிஞ்சவரை ஓசிப் பதிவா போட்டிட்டிருக்கேன்..

  அப்படியே ஓட்டவேண்டியதுதான்..

  உங்க சந்திப்பெல்லாம் சூப்பர். அதப்பத்தி எழுதணும்னு நினச்சேன்..

  நேரமேயில்ல..

  பாப்போம்.

 3. Babu சொல்கிறார்:

  nalla irukku cyril.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்