நன்றி

நவம்பர் தேன்கூடு போட்டியில் வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் போட்டி நடத்திய தமிழோவியம் தேன்கூடு நிர்வாகிகளுக்கும் நன்றி.

தேன்கூடு நடத்திய முதல் போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசும் பெனாத்தல் சுரேஷுக்கு முதல் பரிசும் கிடைத்தது. நவம்பரில் எனது ‘சொர்க்கம் இலவசம்’ கதைக்கு முதல் பரிசும் அவருக்கு இரண்டாம் பரிசும் கிடைத்துள்ளது. (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆர்னர்).

மக்கள்ஸ் அனைவருக்கும் நன்றி.

கூடவே ஒரு சின்ன போட்டி.

அடுத்த மாதப் போட்டிக்கு ஒரு நல்ல தலைப்பை பின்னூட்டுங்கள். கடைசி போட்டி என தேன்கூடு அறிவித்திருப்பதால் சிறப்பாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

தலைப்பு போட்டிக்குப் பரிசு பாராட்டு மட்டுமே. :)

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....23 மறுமொழிகள் to “நன்றி”

 1. Sivabalan சொல்கிறார்:

  சிறில்,
  போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் !

 2. Sivabalan சொல்கிறார்:

  நான் கொடுக்க விரும்பும் தலைப்பு

  “பணம்” (Money)

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சிவபாலன். ‘பணம்’ ரெம்ப நல்ல தலைப்பு.

 4. நிர்மல் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்

 5. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆர்னர்).
  – ஓ…

  வாழ்த்துக்கள், சிறிலுக்கும், சுரேஷுக்கும்..

  மூன்றாவது பரிசு?

 6. kannabiran, RAVI SHANKAR (KRS) சொல்கிறார்:

  சுரேஷ், சிறில்
  போட்டியில் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!

  //கடைசி போட்டி// என்பதால் நான் நினைக்கும் தலைப்புகள்
  “கனவுகள்”
  இல்லையேல்
  “நாளை” (future)

 7. மணி ப்ரகாஷ் சொல்கிறார்:

  வாழ்த்துகள் சிறில். :)

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பெனாத்தல் சுரேஷின் பின்னூட்டம்.

  சிறில்,

  முதல் பரிசுக்கான எல்லாத்தகுதிகளும் இருந்த கதை. முதல் தேன்கூடு போட்டியின் முடிவுகள் ரிவர்ஸ் ஆனது ஆச்சரியமான கோ-இன்சிடென்ஸ் என்றாலும், தகுதி அடிப்படையில் ஒர் ஆச்சரியமும் இல்லை, என் கணிப்பும் இவ்வாறே இருந்தது.

  அடுத்த போட்டிக்கான தலைப்பாக நான் பரிந்துரைக்க விரும்புவது:

  மஞ்சள் துண்டு, பச்சைக்கலர், ஒன்பது நாலு எண்கள், எதிரே வரும் தண்ணீர்க்குடக்காரி, குறுக்கே போகும் பூனை – என நம் அன்றாட வாழ்வை பெரிதும் பாதிக்கும் –

  ராசி!

 9. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்…

  பணமே அருமையான தலைப்பு…

 10. ஷைலஜா சொல்கிறார்:

  மனம் நிறைந்த வாழ்த்துகள் சிறில் அலெக்ஸ்!
  ஷைலஜா

 11. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் மிஸ்டர் சிறில்!
  பணம் என்ற தலைப்பே நல்ல தலைப்புதான்

 12. லக்கிலுக் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்.

  நான் Suggest செய்ய விரும்பும் தலைப்பு “இன்றே கடைசி”

 13. சிவமுருகன் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்.

 14. நெல்லை சிவா சொல்கிறார்:

  போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள், அலெக்ஸ்.

  இரண்டு தலைப்புகள், எனக்குத் தோணியது.

  1. வாய்மையும் பொய்மையிடத்து…

  அன்றாடம் நிறைய பொய்கள், நம்மை அறியாமல், பேசுகிறோம். சில நன்மைக்காக, சில தவறுகளை மறைக்க.

  பொய் மெய்யிடத்தில் தோற்றும் போகலாம், ஜெயிக்கவும் செய்யலாம், அது படைப்பாளரின் களம் பொறுத்தது.

  2. மாத்தி யோசி.

  இது இன்னொரு தலைப்பு. வழக்கமான பாணியில் யோசிக்காமல், மாறுபட்ட கோணத்தில் யோசித்தால், தீர்வுகள் எளிதாகலாம். புதிய சிந்தனை தேவை, புதிய மாற்றங்கள் உருவாக, வித்தியாசமான எண்ணங்கள் வேண்டும்.

  தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்!

 15. Anonymous சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்.

  நம்ம மக்களுக்கு காதல்னாலே ஒரு தனி குஷி தான், அதனால என் தேர்வு “காதலே உன்னை காதலிக்கிறேண்”, அது மட்டும் இல்ல இதுல விதம் விதமான காதல படிக்கலாம் இல்லையா? அதான்.

 16. கப்பி பய சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்!

 17. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வாழ்த்தளித்த நண்பர்களுக்கு நன்றி.

  பொன்ஸ் தேன்கூடு போய் பாருங்க விவரம் தெரியும்..
  :)

  தலைப்பளித்த நண்பர்களுக்கும் நன்றி.

 18. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  தலைவா! அடுத்த தலைப்பு சொல்லியாச்சா?

  சீக்கிரம் சொல்லுங்க! கவுஜ எயுத தயாராக்கீறேன்!

  வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ்!

 19. ஜோ / Joe சொல்கிறார்:

  சிறில்,
  மகிழ்ச்சி! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 20. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சிபி, அடுத்த தலைப்பை தேன்கூடு குழுவுக்கு அனுப்பியுள்ளேன் பதிலை எதிர்பார்த்திருக்கிறேன்.

  வாழ்த்துக்கு நன்றி.

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜோ,
  வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

 22. -L-L-D-a-s-u சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்.

  ‘குறும்பு’ தலைப்பை பரிந்துரைக்கிறேன் .. ;);)

 23. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  LLDASU,
  நீங்க செய்றது குறும்பா இல்ல குசும்பா…?

  வாழ்த்துக்கு நன்றி.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்