டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு

கரும்பு விலை தன்னாலத்தான் ஏறிப்போச்சுன்னு ஜெ சொல்வது
அரசியல் குறும்பு
ப்ளூட்டோ திடீர்னு கோள் இல்லன்னு சொல்றது
அறிவியல் குறும்பு
கைப்புள்ள சீறி எழுந்தா
கிராமத்துக் குறும்பு
விவேக் விசிலடிச்சா
சிட்டிக் குறும்பு
ஆபீசில் பிற பாலிடம் சில்மிஷக் குறும்பு
ஸ்கூலில் ப்ரின்ஸ்பாலிடம் சின்னவயசுக் குறும்பு
கவுண்டமணி ஒதச்சா கர்வக் குறும்பு
செந்தில் ஒதச்சா காமெடிக் குறும்பு
காதலி லேட்டா வந்தா காதல் குறும்பு
காதலன் லேட்டா வந்தா குறும்பில்ல குமுறு
வெள்ளை சட்டை பாத்து கக்கா போவது
குழந்தைக் குறும்பு
வெள்ளை சுவத்தோரம் கண்டதும் போவது
பெரியவர் குறும்பு
விசிலோ, கண்ணோ அடிப்பது
வாலிபக் குறும்பு
விட்டா ஆளையே அடிப்பது
வயோதிகக் குறும்பு
மீள்பதிவு, தனிமனிதத் தாக்குதல்
வலைப்பதிவர் குறும்பு
படித்துவிட்டு சும்மா போவது
வாசகர் குறும்பு.

இந்த மாத தலைப்பு ‘குறும்பு’. சும்மா கலாட்டாவா எழுதுங்க.

நகைச்சுவை படைப்புகள் வருவதென்பதே மிகக் குறைவாக இருக்கும் இந்த காலத்தில் குறும்பு என்ற இந்த தலைப்பை மையமாக வைத்து ஜாலியான படைப்புகளை எழுதி மகிழ்வியுங்களேன்.

பிற தலைப்புக்களை தந்திருந்த நண்பர்களுக்கு நன்றி.

போட்டி பற்றிய தகவல்கள் – http://www.thenkoodu.com/contest.php படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் – http://www.thenkoodu.com/contestants.phpபடைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் – டிசம்பர் 20, 2006டிசம்பர் 21 முதல் வாக்கெடுப்புகள் நடைபெறும்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....23 மறுமொழிகள் to “டிசம்பர்-தேன்கூடு போட்டி தலைப்பு”

 1. நன்மனம் சொல்கிறார்:

  //படித்துவிட்டு சும்மா போவது
  வாசகர் குறும்பு.//

  :-)))))))

 2. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  //நகைச்சுவை படைப்புகள் வருவதென்பதே மிகக் குறைவாக இருக்கும் இந்த காலத்தில் குறும்பு என்ற இந்த தலைப்பை மையமாக வைத்து ஜாலியான படைப்புகளை எழுதி மகிழ்வியுங்களேன்.//

  சிறில் அவர்களே ….!
  குறும்பு என்ற பெயரில் நக்கலாக எழுதினால் ? ஆபத்து எங்கும் இருக்கிறது !
  :))))

 3. நிலா சொல்கிறார்:

  கவுத்திட்டீங்களே, சிறில்
  இந்த மாதப் போட்டில கலந்துக்கலாம்னு பார்த்தா, காமெடியைக் கையக் காட்டி விட்டுட்டீங்களே…
  அதுக்குன்னு ரவுண்டு கட்டி அடிக்கற ஸ்பெஷலிஸ்டெல்லாம் இருக்கறப்ப… ஊஹூம் இந்த வெளாட்டு நமக்கு சரிப்படாது :-(

  பரிசு பெற்றதுக்கு வாழ்த்துக்கள் :-)

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  GK,
  நக்கலா எழுதுங்க அதுதானே வேணும்.

  :)

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நிலா,
  என்னங்க குறும்புன்னு தலைப்புல சீரியசா எழுத முடியாதா என்ன. அழகா எழுதுங்க.

  அல்லது give humor a try.

  முயன்று பாருங்கள்.

 6. Sivabalan சொல்கிறார்:

  சிறில்

  ரொம்ப நல்ல தலைப்பு.. அதுவும் கடைசி போட்டிக்கு சரியான தலைப்புதான்.. எல்லா பதிவுகளும் ஜாலியான பதிவுகளா இருக்கும்..

 7. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  நல்ல தலைப்பு மிஸ்டர் சிறில்

 8. G.Ragavan சொல்கிறார்:

  வாழ்த்துகள் சிறில். வெற்றிச் செல்வி பற்றிக் கொண்ட சிறில் கொடுத்த தலைப்பும் குறும்புதான். :-) இதுதான் கடைசிப் போட்டியாம். எழுதலாமா என்று கூட ஒரு யோசனை இருக்கிறது.

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ரொம்ப நல்ல தலைப்பு.. //
  நன்றி
  //அதுவும் கடைசி போட்டிக்கு சரியான தலைப்புதான்.. எல்லா பதிவுகளும் ஜாலியான பதிவுகளா இருக்கும்.. //

  எதிர்பார்ப்போம்.

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //வாழ்த்துகள் சிறில். //
  நன்றி

  //வெற்றிச் செல்வி பற்றிக் கொண்ட சிறில் கொடுத்த தலைப்பும் குறும்புதான். :-) இதுதான் கடைசிப் போட்டியாம். எழுதலாமா என்று கூட ஒரு யோசனை இருக்கிறது//

  என்ன யோசனை. சீக்கிரமா எழுதுங்க.

 11. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  சிறில்,
  சூப்பர் தலைப்பூ!

  களத்துல குதிச்சிட்டம்ல!

  குறும்பு

 12. நெல்லை சிவா சொல்கிறார்:

  என்னங்க அலெக்ஸ், ஜாலியா நக்கலா எழுதலாம், அது அடுத்தவங்கள பத்தி என்றால், எல்லோரும் ரசிக்கிறாங்க, சும்மா நமக்குள்ளேயே கிண்டலடிக்கலாம்னா, மக்கள் ஜாலியா எடுத்துக்கிறதில்லையே..போனவாட்டி நான் எழுதின ‘வலைப்பு..தலைப்பு..வாழப்பூ’ பாருங்க, வலைஞர்கள் நிராகரிச்சுட்டாங்க. ஆனா, வாசகர்கள் இரண்டாவது இடம் கொடுத்திருக்காங்க. அந்தப் படைப்பு, முத்தமிழ் குழுமத்திலும், கருத்து.காமிலும் ரசித்திருத்திருந்தார்கள். குறும்பும் நல்ல தலைப்புதான், பார்க்கலாம்.

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சிவா,
  வருத்தப் படாதீங்க. நல்ல படைப்பு ஜாலியா எழுதியிருக்கீங்க. பலமுறை நானும் போட்டியில எதிரபார்த்து தோத்திருக்கேன்., எதிர்பாராம ஜெயுச்சும் இருக்கேன்.

  பல நேரங்களில் போட்டியில் நல்ல படைப்ப தந்தோங்கிற திருப்த்தியே மிஞ்சும்.

  தளராது தொடரவும்.

  :)

 14. அரை பிளேடு சொல்கிறார்:

  சிறில் தல

  நாமளும் அக்குறும்பா கோதாவுல இறங்கியாச்சு…

  ஹிந்தி ஒயிக.. எக்சாம் ஹால் அக்குறும்பு..

 15. அயன் சொல்கிறார்:

  குறும்பா ஒரு தலைப்பைக் கொடுத்துட்டு சீரியஸா எழுதுறவுங்களைக் கவுத்துட்டீங்கன்னு நிலா சொன்னா மாதிரி சொல்ல மாட்டேன். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். சீரியஸான சோப் ஓபெரா கதைகளைப் பார்த்து கூட சிரிக்காத ஆள் இல்லையா என்ன? இல்லை ஒரு காமெடி படம் பார்த்து அழாம தான் நாம் இல்லையா.
  நல்ல தலைப்பு. வெற்றி பற்றதற்கு வாழ்த்துகள்.
  ஆனால் என் கதைதான் ஸீரியஸா எழுதுனாலும் மக்கள் ரியாக்ஷன் தெரியற்து இல்லை. காமெடியா எழுதவே முடியறது இல்லை. இலவசத்துக்கு ஒரு நல்ல கதை போட்டோம்னு ஒரு திருப்தியில இருக்கும் போது அதுக்கு ஒரு நல்ல கமென்ட் கூட வரல. இது நன்மனம் சொன்னது போல வாசகர் குறும்பா கூட இருக்கலாம்.
  பெண்கள் மொபைல் ஃபோன் எங்க வைக்கிறது செல்லா காட்டுன ஃபோட்டோ குறும்பு பல பெண்களைப் பாதிச்சது தெரிஞ்சிருக்கும். அது மாதிரியான குறும்பு நடக்காம் பார்த்துக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அயன்,
  அவ்வளவா அறிமுகமில்லாத வலைப்பதிவாளர்களின் போட்டி படைப்புக்கள் படிக்கப்படுறதில்லன்னு ஒரு குறை இருக்கு. ஓரளவுக்கு அது உண்மைன்னே நினைக்கிறேன்.

  பின்னூட்டங்கள் வராமல் போகும் ச்சொதனை எல்லாருக்கும் இருந்திருக்கிறது. சில நேரங்களில் கஷ்ட்டப்பட்டு சிரத்தையுடன் எழுதிய பதிவுகளுக்கு ஒரு பின்னூட்டம்கூட கிடைக்காமல் போய்விடும்.

  தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

 17. அயன் சொல்கிறார்:

  நன்றி சிறில்,
  நடையை மாற்றனும்னு தான் நினைக்கிறேன். அதை கவனிக்கிறேன். மேலும் மறுமொழி மட்டுறுத்தல்னா என்னன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். தமிழ்மண்த்துல இருந்து நிறைய பேர் படிக்கிறாங்க. ஆனால் நீங்க எதைப் பற்றி சொல்றீங்கன்னு புரியல.

 18. மூன்றாவதுகண் சொல்கிறார்:

  தேன்கூடு டிசம்பர் மாதப் போட்டிக்கான ஆக்கங்களின் விமர்சனம் காண:

  http://criticseye.blogspot.com/2006/12/2006.html

 19. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அயன் உங்க ப்ளாகர் கணக்குக்குள்ள Setting போயி Comments போங்க.

  Enable comment moderationல Yes தேர்ந்தெடுங்க. அதன் கீழ உள்ள பெட்டியில உங்க மின்னஞ்சல் முகவரியத் தாங்க.

  இனி யார் பின்னூட்டம் விட்டாலும் உங்களுக்கு மின்னஞ்சல் வரும் (நேரடியா பதிவில் தெரியாது). இனி உங்க மின்னஞ்சலில் இருக்கும் சுட்டி வழியாவோ அல்லது ப்ளாகரில் நுழைந்தோ சேர்ந்திருக்கும் கமெண்ட்களை பிரசுரிக்கலாம்.

  வேண்டாத பின்னூட்டங்களை நிராகரிக்கவும் செய்யலாம்.

  Hope it helped.

 20. மதுமிதா சொல்கிறார்:

  வெற்றிக்கு வாழ்த்துகள் சிறில்
  நல்ல குறும்பு போங்க

  ஒருவரிகூட நகைச்சுவையா எழுதத்தெரியாதவங்க என்ன செய்யறதாம்

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மதுமிதா,
  நிச்சயமா சீரியசா எழுதலாம். இந்த தலைப்புல மத்த தலைப்புக்கள் போல படைப்புக்கள் இன்னும் வராததௌ கவலை அளிக்கிறது.

  நம்ம GK ஒரு மீடியம் சீரியஸ் கத ஒண்ணு எழுதியிருக்கார் பாருங்க.

  வாலிபக் குறும்ப மையமாவச்சு காதல் கதை எழுதலாம்

  வயோதிகக் குறும்ப மையமா வச்சு குடும்பக்கத எழுதலாம்

  குழந்தைக் குறும்புல பாசம் எழுதலாம் சோகமும் எழுதலாம்

  மாத்தியோசி…ங்க

 22. Anonymous சொல்கிறார்:

  பதிவுகளில் , சண்டைகலை … படிச்சிட்டு , அமைதியாய் இருப்பது .. உங்கள் குறும்பு ..

  அதையெல்லாம் நிறுத்த சொல்லி ஒரு அட்வைஸ் பதிவு பொடுங்க …அத படிச்சிட்டு அவுங்க திருந்தட்டும்.

 23. Anonymous சொல்கிறார்:

  சின்ன மீனைப் பிடித்து தண்டனை என்ற போக்குக் காட்டி, பீஹாரின் மிகப் பெரிய திமிங்கலத்தை விட்டுவிடுவது யார் செய்யும் குறும்பு!!!

  ‘unmai vilambi’

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்