- தேன்/cyrilalex.com - http://cyrilalex.com -

சிக்காகோ பதிவர்கள் சந்திப்பு

Posted By சிறில் அலெக்ஸ் On November 30, 2006 @ 3:27 pm In சந்திப்பு,நிகழ்வு,பதிவர்வட்டம்,பொது,வலைப்பதிவுகள்,அமெரிக்கா | 17 Comments

சிக்காகோவில் பதிவர்கள் மூவர் கடந்த ஞாயிறன்று சந்தித்தோம். அயராது பதிவு போடும் சிவபாலன் [1], சவுண்டாய் பதிவு போடும் உதயக் குமார் [2]மற்றும் அப்பப்போ பதிவு போடும் நான்.

மூவரும் சந்திப்பது கடைசி நேரத்தில்தான் முடிவானது. அறிவிப்பும் காடைசி நேரத்திலேயே தரப்பட்டிருந்தது. நண்பர் சுந்தரமூர்த்தி [3] மின் மடல் அனுப்பியிருந்தார். தொலைபேசினார். சந்திப்பில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்தார்.

ஞாயிறு மாலை நான்கு மணிக்கு சிக்காகோ தாவரவியல் பூங்காவில் சந்திப்போம் எனக் கூறியிருந்தார் சிவபாலன். தாவரங்களெல்லாம் வறண்டு நிக்கும் இந்தக் குளிர்காலத்தில் இங்கே ஏன் வருகிறீர்கள் என எண்ணியோ என்னவோ நானும் என் நண்பரும் குடும்பங்களுடன் போய் சேரும்போது பூங்காவை மூடியிருந்தார்கள்.

சிவபாலன் வீட்டுக்கு வழிசொல்ல நானும் என் மனைவி, மகனும் போய் சேர்ந்தோம்.

இரண்டு முறை தட்டியும் கதவு திறக்கவில்லை. உள்ளே சிவபாலன் உதயக்குமாரோடு பயங்கர விவாதத்தில் இருந்திருப்பார் போல.

‘அண்டக்கா கசம் அபுக்கா குசம்..’ சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதவு திறந்தது.

சிவபாலன். எளிமை இனிமை. அவர் எழுத்தைப் போலவே பட படவென இருக்கிறார் மனிதர். அருமையாய் உபசரித்தார். (பதிவுகள் போலவே) சமூக, அரசியல் விவாதங்களையே விரும்பிச் செய்தார். உண்மையில் அவர் சொல்வதற்கும் அவரின் கொள்கைகளுக்கும் தொடர்புள்ளது என்கிற நேர்மையைப் புரிந்துகொண்டேன்.

உதயக்குமார் எனும் விளையாட்டுப்பிள்ளை வந்திருந்தார். பீர் மணம் மாறாத முகம். (ரெம்ப இளையவர்னு சொல்ல வர்றேங்க) மத்தபடி அவர் சவுண்ட் பார்டின்னு தெரியும் தண்ணி பார்ட்டியான்னு தெரியல. வலைப்பதிவுகளில் சீரியசான இளைஞர். நேரிலும்.

மூவரும் ஏதோ சின்ன வயசுலேர்ந்தே பக்கத்து வீட்டில் வளர்ந்தவர்கள் போல பேசிக் கொண்டோம். வலைப் பதிவுகளில் அப்படி ஒரு அறிமுகம் கிடைக்கிறது. ஒருவரைப் பற்றிய முன் அனுமானங்களை அவரின் எழுத்திலிருந்தே செய்துகொள்ள முடிகிறது(ஓரளவுக்கு சரியாகவே) . சின்னச் சின்ன விவாதங்களே புரிந்தோம். கலந்துரையாடல். சீரியசாக எதையும் விவாதிக்கவில்லை எனச் சொல்லலாம்.

சிவபாலன் மனைவி மசால் வடை பரிமாற சந்திப்பு சூடு பிடித்தது. அடுத்து டீ இன்னும் இனிப்புடன் உபசரிப்பு தொடர்ந்தது. மசால்வடை போண்டா வடிவில் திரித்து செய்யப்பட்டிருந்தது. (வலைப்பதிவர் சந்திப்பில் போண்டா இருக்கவேண்டும் எனும் விதிமுறைக்கேற்ப.)

நண்பர்களை சந்தித்ததில் மெத்த மகிழ்ச்சி. வரும் கோடையில் மெகா சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்தோம்.

வலைப்பதிவர் சந்திப்பு என்பதை விட நண்பர்களின் சந்திப்பு எனச் சொல்லலாம். நிறைவான சந்திப்பு இனிவரும் சந்திப்புக்களுக்கு முத்தாய்ப்பு.

விடை பெறும்போது உதயக் குமார் நண்பர்களோடு கசினோ ராயேல் பார்க்கப் போவதாகச் சொன்னார்.

கூடவே வந்துகொண்டிருந்தார். ஹைவேயில் காரை விட்டபோது காணாமல் போயிருந்தார்.

இன்னும் சந்திப்போம். மகிழ்வோம். (போண்டா) பகிர்வோம்.

Popularity: 4% [? [4]]


Article printed from தேன்/cyrilalex.com: http://cyrilalex.com

URL to article: http://cyrilalex.com/?p=171

URLs in this post:

[1] சிவபாலன்: http://sivabalanblog.blogspot.com/

[2] உதயக் குமார் : http://soundparty.blogspot.com/

[3] சுந்தரமூர்த்தி: http://cyrilalex.comkumizh.blogspot.com

[4] ?: http://alexking.org/projects/wordpress/popularity-contest