ஆங்கிலம் பேசலாம் வாங்க!
நானும் ஒரு கிராமத்தாந்தான். 10வரைக்கும் தமிழ் வழிக் கல்விதான் படித்தேன். 11 மற்றும் 12 ஆங்கிலத்தில் படிக்கவேண்டிய நிர்பந்தம். படித்தேன். 11ல் எப்போதும் ஜஸ்ட் பாஸ் மதிப்பெண்களே வாங்குவேன். ஆனால் 12 முடிக்கும்போது மாநில பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி பள்ளியில் மூன்றாவது இடத்தைப் பெற்றேன், அதே ஆங்கில வழிக் கல்வியில்.
ஆரம்ப பள்ளி முதலே ஆங்கிலம் நமக்கு சொல்லித்தரப் படுவதால் நமக்கு போதுமான அளவு அடிப்படை ஞானம் இதில் இருக்கிறது. ஆனால் நம்மிடம் இல்லாத ஒன்று ஆங்கிலம் பேசிப் பழகும் பழக்கம். செந்தமிழ் போல ஆங்கிலமும் “நாப்பழக்கம்தான்”.
எளிதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அல்லது ஆங்கில அறிவை மேம்படுத்த நீங்கள் தமிழில் அதிகம் தெரிந்து வைத்திருக்கும் கதைகளை அல்லது கருத்துக்களை ஆங்கிலத்தில் படிக்கக் கிடைத்தால் அதை ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு படிப்பது எளிய முயற்சி.
எனக்கு கைகொடுத்தது ஆங்கில பைபிள். பைபிளை தமிழில் தெரிந்துவைத்திருந்த நான் ஆங்கில பைபிள் படிக்க ஆரம்பித்தபோது ஒப்பீடு செய்து படிக்க முடிந்தது. இதுபோல உங்களுக்குத் தமிழில் தெரிந்த காப்பியங்களை, கதைகளை ஆங்கிலத்தொல் வாசிக்கக் கிடைத்தால் படிக்கலாம். படக்கதைகள் ஆங்கிலப் பேச்சறிவு வளர்ப்பதற்கு உதவும், அவற்றில் உரையாடல்கள் அதிகம் இருப்பதால்.
நம் மக்கள் பலர் ஆங்கிலம் அதிகமாய் பேச ஆரம்பித்தாலும் பல இலக்கணப் பிழைகளோடேயே பேசுகிறோம். பொதுவான சில ஆங்கில இலக்கணப் பிழைகளையும் அவற்றின் சரியான வடிவங்களையும் பார்ப்போம். (டேய்! மொதல்ல தமிழ் இலக்கணத்த படியுங்கடான்னு குரல்கொடுக்கிற மக்களுக்கு; தெரிஞ்சவங்க சொல்லுங்க, நிச்சயம் படிக்க ஆவலாயிருக்கிறேன்)
1. Did உபயோகிப்பது.
பலருக்கும் did என்பது இறந்த காலத்தில் செய்யப்பட்ட செயலை குறிக்கும் என்பது தெரியும்.
He did it. அவன் அதை செய்தான்/செய்துமுடித்துவிட்டான்.
did பயன்படுத்தும்போது அதனை அடுத்து வரும் வினைச் சொற்களில்(Verbs – செயலைக் குறிக்கும் சொற்கள்) Present Tenseஐயே பயன்படுத்த வேண்டும்.
உதாரணத்துக்கு He did killed. என்பது தவறானதாகும் He did kill. என்பதே சரியானதாகும். இந்தத் தவறை பலமுறை பலர் செய்யக் கேட்டிருக்கிறேன். முக்கியமாக கேள்வி கேட்கும்போது.
When did you arrived? என்பது தவறானது. ஏற்கனவே did இறந்த காலத்தை குறித்துவிட்டமையால் arrive எனும் வினைச் சொல் இறந்தகாலத்தை குறிக்கத் தேவையில்லை.
When did you arrive?(எப்போது நீ வந்து சேர்ந்தாய்) என்பதே சரியான உபயோகமாகும்.
சில சரியான did பிரயோகங்கள்
When did you do it?
When did you come?
Did you find it?
Did she finish it?
2. Does உபயோகம்.
Does என்பது did என்பதற்கான நிகழ்காலச் சொல். (Does, did இரண்டுமே Do என்பதின் மாற்றுருக்கள்.) பொதுவாக He, She, it எனும் Pronoun(சுட்டு பெயர்)களை நிகழ்காலத்தில் பயன்படுத்தும்போது வினைச் சொல்லை ‘s’ சேர்த்து சொல்லவேண்டும்.
உதாரணமாய். He come(அவன் வருகிறான்). என்பது தவறானது. He comes என்பதே சரியான உபயோகம்.
She dance well. தவறு She dances well சரியானது.
Does உபயோகிக்கும்போது இந்த ‘s’ சேர்க்கை அதிலேயே இருப்பதால் அடுத்துவரும் வினைச்சொல்லில் ‘s’ சேர்க்கத் தேவையில்லை.
Does என்பது do என்பதின் மறுவடிவம். He, she, it எனும் சுட்டுப் பெயர்களை பயன்படுத்தும்போது doவிற்குப் பதில் does பயன்படுத்துகிறோம்.
She does dances well. தவறானது She does dance well. சரியானது.
3. பலரில் ஒருவர்.
One of my friend என்பதுபோல பலசமயம் நாம் பேசுவதுண்டு. “என் சொந்தக்காரங்கள்ள ஒருத்தன் வலைப்பதிவுன்னு அலஞ்சுகிட்டிருக்கான்.” என உங்களைப்பற்றி யாராவது சொல்லியிருக்கக்கூடும்.
one of my friend என்பது தவறான உபயோகம். One of my friends என்பதே சரியான உபயோகம். என் நண்பர்களில்(friends) ஒருவர் என்பதே சரி அல்லவா? எனவே பன்மை அவசியம்.
One my friends இன்னும் சில தவறுகளுக்கு வழி வகுக்கலாம். friends என வந்ததால் பன்மை என நினைக்கிறோம். அதனால் சிலர் one of my friends have a horse named Cyril. என்பதுபோல சொல்கிறோம்.
ஆனால் நாம் பேசுவது ‘One’ of my freinds பற்றி. நம் நண்பர்களில் ‘ஒருவரைப்’ பற்றி பேசுவதால், அவரைப் பற்றியே பின்வரும் செய்திகளும் சொல்லப்படுவதால் haveற்குப் பதில் has தரப்படவேண்டும்.
One of my friends has a horse named Cyril. என்பதே சரியான வாக்கியம்.
4.அது, அதனது.
இதுல நான் பலமுறை தள்ளாடியிருக்கேன். It’sக்கும் Itsக்கும் என்ன வித்தியாசம்?
It’s என்பது ‘it is’ என்பதன் சுருக்கம். It is a beautiful day என்பதை it’s a beautiful day எனவும் சொல்லலாம்.
Its என்பது அதனது அல்லது அதனுடையது எனப் பொருள்படும். I can’t remember it’s name. என்பது தவறு. I can’t remember its name. -அதனது பெயர் நினைவில்லை- என்பதே சரியானது.
தமிழில் ‘செய்ய இயலவில்லை’ என்பதை சிலர் அப்படியே I can’t able to do this என மொழி பெயர்ப்பதுண்டு.
Can’t என்பதே முடியாமையை குறிப்பதால் able தேவையில்லை. ஆனால் I can’t do it. என்பது உங்கள் இயலாமையை முற்றுமாகச் சொல்வதில்லை. இது ஒரு மறுப்பாகவும் எடுத்துக்கொள்ளப் படலாம். எனவே உங்கள் இயலாமையை சொல்ல ableஐ பயன்படுத்துங்கள்.
I am not able to do it. – என்னல் அதை செய்ய இயலவில்லை.
I can’t do it – என்னால் இதை செய்ய முடியாது.
இதுபொலவே I can able என்பதும் சரியானதில்லை.
I can – என்னால் முடியும்
I am able/ I will be able to do something – என்னால் செய்ய இயலும்.
மேலுள்ள கேள்வியில் அவர் அங்கே இருக்கிறாரா என கேட்க நினைத்திருக்கிறார். இரண்டு is இதில் தவறாக வந்துள்ளன. இதுவும் ஒரு பொதுவான தவறே.
Is he there? Is he in yet? – என்பவைகளே சரியான உபயோகங்கள்.
7. more and morer
Comparitive speech. ஒப்புமைப்படுத்தி பேசும்போது மூன்று நிலைகளை ஆங்கில இலக்கணம் அனுமதிக்கிறது. சமதளம்(Positive), ஒப்புமைப்படுத்தும் நிலை(Comparative), ஒப்புமையில்லாத நிலை(Superlative).
இரு பதிவாளர்கள் சம அளவு பின்னூட்டம் பெறுவது சமதளம். Both the bloggers get same number of comments.
ஒருவருக்கு அதிகம் கிடைக்கையில் இருவரில் எவர் அதிகம் பெறுகிறார் என ஒப்புமைப் படுத்தலாம்.
Blogger Earthworm gets more comments than blogger Lukeworm.
ஆனால் நம்ம இலவசக்கொத்தனாரை குறிப்பிடும்போது He gets the most comments. அவருக்கு ஒப்பேயில்லை. இவை -est எனும் எழுத்துக்களில் முடியும் சொற்களால் குறிக்கப்படுகின்றன. tallest, smallest என்பதுபோல.
இதெல்லாம் பலருக்கும் தெரியும் என்றாலும் more உபயோகப் படுத்தும்போது இன்னுமொரு -er வார்த்தையை உபயோகப் படுத்துவோர் பலர்.
He is more taller than her. என்பது தவறானது.
He is taller than her. என்பதே சரியான வாக்கியம். இந்த இடத்தில் moreஐ தவிர்ப்பதே நல்லது ஏனெனில் Taller எனும் வார்த்தை சரியாக அமைந்துள்ளது.
8. ஒப்புமைகள் பலவிதம்.
மேலே கூறிய ஒப்புமைகளுக்கு சிலசமயங்களில் பிரத்யோக வார்த்தைகள் உபயோகிக்கப்படுகின்றன.
Good – Better – Best
bad – worse – worst (Worser என்பது தவறான உபயோகம்)
little – less- least
much – more – most
many – more – most
some – more – most
far – further – furthest
absolute, impossible, principal, adequate, inevitable, stationary, chief, irrevocable, sufficient, complete, main, unanimous, devoid, manifest, unavoidable, entire, minor, unbroken, fatal, paramount, unique, final, perpetual, universal, ideal, preferable and whole போன்றவற்றை more உடன் பயன்படுத்தலாம். (மோர்கூட ஊறுகாய் நல்லாயிருக்கும்னு சொல்றீங்களா – Could I have more pickle please?)
9. எடுத்துட்டு வந்ததும் வாங்கிட்டு வந்ததும்
Brought என்பது எடுத்துவருவது bought என்பது வாங்கி வருவது.
My brother brought me books from the exhibition. என் சகோதரர் புத்தகம் எடுத்து வந்தார் (அவர் வாங்கியிருக்கலாம், சுட்டிருக்கலாம், கடைவைத்திருப்பவராயிருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு எடுத்து வந்தார்).
My brother bought me books from exhibition. எனது சகோதரர் எனக்கு புத்தகங்களை வாங்கித்தந்தார் (அவர் வாங்கியது எனக்காகத்தான்.)
Brought என்பது Bringன் இறந்தகாலச் சொல். Bought என்பது buyன் இறந்தகாலச் சொல்.
ஆங்கிலத்தில் a மற்றும் an உபயோகத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. பொதுவாக a, e, i, o மற்றும் u வில் துவங்கும் வார்த்தைகளுக்கு an உபயோகிப்பது வழக்கம். ஆனால் இந்த (உயிர்) எழுத்துகளில் துவங்கும் வார்த்தைகள் என்பதை விட இந்த உயிரெழுத்துக்களின் உச்சரிப்பில் துவங்கும் வார்த்தைகள் என்பதே பொருத்தமாகும்.
இதன் அடிப்படையிலேயே Hour Hல் துவங்கினாலும் அது an Hour (அவர்) எனப்படுகிறது. University Uவில் துவங்கினாலும் யூ எனும் உச்சரிப்பில் துவங்குவதால் a பயன்படுத்தப்படுகிறது.
எளிதில் இதை நினைவுகூற என் 10ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியை சொல்லித்தந்த வழி என்னவென்றால், தமிழின் உயிரெழுத்துக்களான அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ எனும் ஒலிகளில் ஒரு வார்த்தை துவங்குமானால் அவற்றிற்கு an பயன்படுத்தவேண்டும். மற்றவைக்குத் தேவையில்லை. இதுபோல பேசும்போது theவை ‘தி’ எனச் சொல்வதும் இந்த உயிரெழுத்து ஒலிகளுக்கே பொருந்தும். It works all the time.
hour – சொல்லும்போது ‘அவர்’ என்கிறோம் எனவே an சேர்க்கப்படுகிறது.
University – ‘யூ’ எனும் உச்சரிப்பில் துவங்குகிறது எனவே a.
உங்களுக்கு மேலும் கேள்விகளிருந்தால் கேட்கலாம் பதில் தர முயற்சிக்கிறேன். ஏதோ எனக்குத் தெரிஞ்சத சொன்னேனே தவிர என் பெயர பீட்டர் அலெக்ஸுன்னெல்லாம் மாத்திவைக்க மாட்டேன். ஓரளவுக்கேனும் ஆங்கில அறிவு எல்லாருக்கும் தேவை (பின்ன எப்படி இலக்கியம் படைக்கிறது?) வெளிநாட்டில் வந்து வேலை பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே தேவை.
Popularity: 100% [?]
Print This Post
இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப
RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....

December 20th, 2006 at 6:52 pm
ஆங்கில வழி கல்வியில் ஆங்கிலம் பயின்றாலும், ஆங்கிலத்தில் பேசுவதற்க்கும், எழுதுவதற்க்கும் அது உதவுவதில்லை. நீங்கள் குறிப்பிட்டதுபோல் ‘நாப்பழக்கம்’தான் எப்போதுமே துணை நிற்கும்.
அப்படியே. ஆங்கில படத்தினை, துணைத் தலைப்பு (Sub title) கொண்டு பார்ப்பதும் அதிக பயன் அளிக்கும். அதுவும் DVD இருந்தால் இன்னும் நன்மை. புரியாவிட்டால், நிறுத்தி திரும்பவும் பார்ப்பதற்கு, கேட்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது.
என்ன சொல்றீங்க சிறில்?
December 20th, 2006 at 7:13 pm
நல்ல ஆரம்பம்.
//ஆனால் நம்ம இலவச கொத்தனாரை குறிப்பிடும்போது He gets the most comments. அவருக்கு ஒப்பேயில்லை.//
என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே!
)
December 20th, 2006 at 7:13 pm
ஆமா ஜி,
ஆங்கிலப் படம் பாப்பது செய்திகள் கேட்பதெல்லாம் நிச்சயம் பலனளிக்கும்.
ஆங்கிலப் படத்தில் ஸ்லாங் பயன்பாட்டை பிரித்தறிய வேண்டும்.
Ain’t போன்ற பயன்பாடுகள் அதிகம் இருக்கும்.
December 20th, 2006 at 7:16 pm
//நல்ல ஆரம்பம். //
என்னது தொடராவே போடச் சொல்றீங்களா? யோசிக்கிறேன்.
//என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே!
) //
வேற யார வச்சு பண்றது… நீங்க பதிவ எழுத ஆரம்பிச்சதுமே பின்னூட்டம் போட ஆரம்பிச்சுடுறாங்க..
December 20th, 2006 at 7:16 pm
Help Them. Help us.
December 20th, 2006 at 7:17 pm
//Help Them. Help us. //
அனானி யாரந்த them? யாரந்த us?
December 20th, 2006 at 7:19 pm
ரொம்ப நல்ல விஷயம் செய்யறீங்க சிறில்…
உங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள்!!!
December 20th, 2006 at 7:22 pm
நன்றி வெட்டிப்பயல்..
இதுபோல ஆஹரவு இருந்துச்சுன்னா துவக்கத்திலேர்ந்தே பேச்சிலக்கணத்த சொல்லியிருப்பேனே.. (அப்டியே நானும் ரிஃப்ரெஷ் செஞ்ச மாதிரி இருக்கும்)
December 20th, 2006 at 7:53 pm
நல்லதொரு முயற்சி!
மிகவும் தெளிவாக, அதே சமயம் எளிதாக புரிந்துக் கொள்ளும் வகையில் நீங்கள் ஆங்கிலம் கற்று தர ஆரம்பித்திருப்பது பாராட்டுக்குறியது!!!
வாழ்த்துக்கள் !!
December 20th, 2006 at 7:54 pm
keep up the good work / keep up the good sevice!
which is right?
December 20th, 2006 at 8:09 pm
நன்றி திவ்யா பயனுள்ளதாய் இருந்ததென நினைக்கிறேன்.
December 20th, 2006 at 8:22 pm
நல்ல முயற்சி.
Lifco dictionary-ல் பின்பாதியில் Words often misspelt போன்ற பயனுள்ள பகுதிகள் இருக்கும். முன்பாதியை விட இதுவே என்னை அதிகம் கவர்ந்தது.
உதாரணங்களில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
He did kill (He killed என்றும் சுருக்கிவிடலாம். கொலைதான் எடுத்துக்காட்டா?
)
He comes (?
)))
He, She-ஐ விட (கற்பனையான) பெயரைப் பயன்படுத்தினால் இன்னும் மெருகேரும்.
வழக்கமான பல்லவி: தவறான இலக்கணத்துடன் பேசும் நிறைய இந்தியர்களை நானும் சந்தித்துள்ளேன். பலருக்கு அது தவறு என்று தெரிவதில்லை. தெரிந்தாலும் திருத்திக்கொள்ள முனைவதில்லை.
December 20th, 2006 at 8:33 pm
பரி,
ரெம்ப நன்றி. நீங்க சுட்டிக் காட்டுனதை கவனத்தில் கொள்கிறேன்.
நல்ல பாயிண்ட்.
December 20th, 2006 at 8:57 pm
ஜி,
உங்களுக்கு ஒரு சின்ன ஆலோசனை. தமிழில் ‘ற்’ என்ற எழுத்தைத் தொடர்ந்து மெய் எழுத்து வராது. ‘எழுதுவதற்க்கும்’ என்பது சரி இல்லை. ‘எழுதுவதற்கும்’ என்றே வரவேண்டும்.
நான் பார்ப்பதில் அனேகம் பேர் செய்கிற தவறு இது. அதனால் உங்களை முன் வைத்து அனைவருக்கும் சொல்கிறேன்.
December 20th, 2006 at 8:59 pm
ஜி,
உங்களுக்கு ஒரு சின்ன ஆலோசனை. தமிழில் ‘ற்’ என்ற எழுத்தைத் தொடர்ந்து மெய் எழுத்து வராது. ‘எழுதுவதற்க்கும்’ என்பது சரி இல்லை. ‘எழுதுவதற்கும்’ என்றே வரவேண்டும்.
நான் பார்ப்பதில் அனேகம் பேர் செய்கிற தவறு இது. அதனால் உங்களை முன் வைத்து அனைவருக்கும் சொல்கிறேன்.
December 20th, 2006 at 11:01 pm
Mr.Cyril Alex
It is a good posting
Please continue the article and it will be useful for many youngsters!
SP.VR.SUBBIAH
December 21st, 2006 at 1:17 am
அடடா! நமக்கு பிடிச்ச விஷயமாச்சே! நிறைய பேசலாம். இப்ப நேரமில்லையே!!
December 21st, 2006 at 1:25 am
சிரில் அலெக்ஸ்
நல்ல பதிவு.பலர் தினசரி வாழ்கையில் செய்யும் சாதாரண தவறுகள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
குறிப்பாக கிராமத்தில் இருந்து வரும் மாணவர்கள் படித்தால் நலம் பயக்கும்.
சரி.சிங்கப்ப்பூரில் ஆங்கிலம் எப்படி பேசுவது என்று யாராவது எழுதினால் “செம தாமாசா இருக்கும்”.
பல முறை எனக்கு நான் பேசும் ஆங்கிலம் தவறோ என்று கூட தோன்றும்- இங்கே!!
December 21st, 2006 at 1:00 pm
நல்ல பதிவு சிறில். இது தொடராக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். நான் கவனித்த பலவற்றை நீங்கள் இங்கே எழுதியிருக்கிறீர்கள். தொடக்கத்தில் செய்த தவறுகளும் பின்னர் திருத்திக் கொண்டவைகளும் இவை. இன்னும் பல இருக்கின்றன. அவை நீங்கள் தொடராக எழுதினால் அவற்றில் வரும் என்று நினைக்கிறேன்.
இப்போதும் சில நேரத்தில் இந்த பிழையை செய்கிறேன். இன்னும் கொஞ்சம் கவனம் தேவை.
ஒரே ஒலியில் இருக்கும் Doctor, Daughter; Advise, Advice; Embarassed, Embraced போன்றவற்றிற்கும் வேறுபாடுகளை எழுதுங்கள். அண்மையில் ஒரு நண்பர் Embarassed என்று சொல்ல எண்ணி Embraced என்று எழுதியிருந்தார். அதனைப் பார்த்து எனக்கே கடைவாய் புன்னகை வந்தது. மற்றவருக்கு எந்த அளவிற்கு அது நகைச்சுவையாய் இருந்ததோ?!
December 21st, 2006 at 2:44 pm
I come to your post to english speak. your teach good. i can be able learn new new thinks. english very easy foreen tongue. i like speak. you teach continue. i follow. right’aa!
December 21st, 2006 at 3:04 pm
//Mr.Cyril Alex
It is a good posting
Please continue the article and it will be useful for many youngsters!
SP.VR.SUBBIAH//
Thank you Subbaiah sir. I did not think of making this a series, but now I think I should, after seeing all your responses.
December 21st, 2006 at 3:05 pm
//அடடா! நமக்கு பிடிச்ச விஷயமாச்சே! நிறைய பேசலாம். இப்ப நேரமில்லையே!! //
ராஜதுரை சார்,
கண்டிப்பா நேரம் கிடைக்கும்போது வந்து பேசுங்க.
December 21st, 2006 at 3:06 pm
குமரன் உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள். கூட்டுப்பதிவாகச் ச்ய்தால் கூட நல்ல விஷயம்தான்.
நீங்கள் தந்திருக்கும் பிரச்சனைகளை வைத்து பின்னர் பதிய முயல்கிறேன்.
நன்றி.
December 21st, 2006 at 3:07 pm
//I come to your post to english speak. your teach good. i can be able learn new new thinks. english very easy foreen tongue. i like speak. you teach continue. i follow. right’aa! //
Dharumi,
you too funny yaa..
thanks for the feedback.
December 21st, 2006 at 3:25 pm
ஆங்கில ஆசானுக்கு வணக்கம் !
Wishes to English Teacher !
December 21st, 2006 at 3:33 pm
thank you
December 21st, 2006 at 5:37 pm
you too funny yaa..
அதென்ன..too ? அதென்ன பெருசுங்கன்னா sense of humour இருக்காதா? இருக்கக் கூடாதா?
December 21st, 2006 at 5:43 pm
தருமி சார்,
அழகா அடுத்த டாப்பிக் எடுத்து கொடுத்தீங்க போங்க
tooவிற்கு இரு அர்த்தங்கள்..
ஸ்லேடைல போட்டுத் தாக்குறீங்க..
December 21st, 2006 at 5:45 pm
கண்ணன்..
ஆங்கில Assஆனா? இல்ல ஆசானா?
நன்றி.
வினையூக்கி உங்க பின்னூட்டம்தான் ரெம்ப வரவேர்க்கத்தக்கதா இர்ருந்துச்சுன்னு சொல்வேன்…
இதப் படிச்சுட்டு பயனடையணும்னுதான் இத எழுதுறேன். நீங்க பயனடஞ்சிருக்கீங்கன்னு நம்புறேன்.
நன்றி.
December 25th, 2006 at 5:38 am
கழுத்தில் மாலை கையில் நட்சத்திரம்
எழுத்தில் முட்டத்தின் வாசனை – பழுத்த
கனியாகப் பதிவுகள் தந்தெம் உள்ளத்தை
இனிய தாக்குக இயைந்து!
– SP.VR.சுப்பையா
December 25th, 2006 at 5:45 am
எளிமையாக அதே சமயம் அருமையாக வந்துள்ளது … இதை ஒரு தொடராக தந்தீர்களானால், பலருக்கும் பயன்படும்.
December 25th, 2006 at 5:47 am
நட்சத்திர முதல் பதிவே மீள்பதிவா?
December 25th, 2006 at 5:50 am
///சிறில் அலெக்ஸ் said…
கண்ணன்..
ஆங்கில Assஆனா? இல்ல ஆசானா?
//
ஆசனத்தில் அமர்ந்திருப்பதால் ஆசான் !
ஒருவழியாக சமாளித்தேனா ?
December 25th, 2006 at 6:15 am
நட்சத்திர வாழ்த்துக்கள் சிறில்.
நல்ல பயன் தருகின்ற முயற்சி!
ஆங்கிலம் பேசுதல் அவசியமானது.
எதைச் செய்தாலும் “செய்வன திருந்தச்செய் என்பதன் படி தவறில்லாமல் செய்யப் பழகவேண்டும் ஆங்கிலம் பேச /எழுத என்பதிலும்.
ஆனால் நம் மக்கள் ஆங்கிலம் பேசும்போதும் /எழுதும் போதோ தவறு ஏதும் இலக்கணத்திலோ எழுத்துப்பிழையாகவோ ஏற்பட்டால் அது தெய்வகுத்தம் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணவேண்டியதில்லை!
பொதுவாகவே நமது ஆட்கள் தம் தாய்மொழியை விட ஆங்கிலத்தில் ஏதாவது சிறு தவறு நேர்ந்தால் அது எவராலும் சுட்டப்பட்டால் உடனே சுருங்கிப்போய் விடுவார்கள்!
தமிழ் மூதுரையின் படி ஆங்கிலம் கற்பது என்கிற செயலையும் “செய்வனத் திருந்தச்செய்தாலே” போதும்!
ஆங்கிலத்துக்காக மட்டும் ஸ்பெஷல் ஃபீலிங் எல்லாம் தேவையில்லை!
)
இந்த விஷயத்தில் ஃப்ரஞ்சுக்காரன் மாதிரி பிழைப்புக்காக ஆங்கிலம் நன்கு தெரிந்துவைத்துக்கொண்டு அலட்டாமல் இருத்தல் வேண்டும்!
அன்புடன்,
ஹரிஹரன்
December 25th, 2006 at 1:52 pm
சுப்பையா சார்.. வாழ்த்துக்கு நன்றிகள்.
December 25th, 2006 at 1:53 pm
இன்பா,
பாராட்டுக்கு நன்றி.
GK,
தெளிவு படுத்துனதுக்கு நன்றி
December 25th, 2006 at 1:56 pm
ஹரிஹரன் பின்னூட்டத்துக்கு நன்றி.
//ஆங்கிலத்துக்காக மட்டும் ஸ்பெஷல் ஃபீலிங் எல்லாம் தேவையில்லை!
)//
உண்மை. வாய்ப்பிருந்தும் தவறுகளத் திருத்தாட்டிதான் ஃபீல் பண்ணனும்
December 25th, 2006 at 2:00 pm
நிர்மல் மீள்பதிவெல்லாமில்லீங்க.. என் முதல் நட்சத்திரப் பதிவப் போடுறதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அதான் பழச தூக்கி போட்டுட்டாங்க.
February 11th, 2008 at 2:25 pm
சிறப்பான விளக்கம்.
//He did killed. என்பது தவறானதாகும் He did kill. என்பதே சரியானதாகும்.//
இதை He killed என்பது தான் மிகச் சரியானப் பதம்.
//I can – என்னால் முடியும்
I am able/ I will be able to do something – என்னால் செய்ய இயலும்.//
I can
I am able – எனக்கு முடியும், என்பது சரியானது. இது நிகழ்காலம்.
I will be able to என்றால் எனக்கு செய்ய முடியுமாக இருக்கும், எனும் எதிர்காலச் சொல்.
“என்னால்” என்று தமிழில் குறிப்பிடுவதாயின் அவ்வார்த்தைகள் Passive Voice சொற்களாக இருக்க வேண்டும்.
நன்றி.
February 27th, 2008 at 2:32 am
Hi Cyril,
Great. It is very useful. Could you please continue with basic grammer….
Thanks. Senthil Chellamma.
July 15th, 2008 at 8:14 am
Hi cyril,
very super your teaching . is is very useful to me please continue this grammer thanks. chitra
November 9th, 2009 at 2:33 pm
enaku english teriyathu athei patti solli tharvum
December 16th, 2009 at 4:54 am
நல்லா இருக்கு.
January 15th, 2010 at 4:46 am
I’M VERY HAPPY.VERY NICE UR TEACHING.IT IS VERY USE TO ALL,CONTINUE THIS SYSTEM. THANK U SO MUCH.I LIKE ENGLISH SPEAK BUT I CAN’T.PLEASE HELP ME.
January 22nd, 2010 at 8:55 am
pls. give english book
March 9th, 2010 at 6:14 pm
enakku english pesa varathu
April 9th, 2010 at 2:34 pm
very good Keep it up.I want more details sir Please
April 9th, 2010 at 2:35 pm
Thank you
April 13th, 2010 at 7:49 am
VERY NICE TEACHING.I AM A TAMIL MEDIUM STUDENT.SINCE LAST TWO YEARS MY AIM IS SPEAK IN ENGLISH.BUT I CAN’T DID IT.NOW I SEE THIS WEBSITE CREATE CONFIDENCE FOR ME.WITHIN TWO MONTH I WILL FLUENTLY SPEAK IN ENGLISH.IN THIS COMMENT IF I WRITE IN ANY MISTAKE PLEASE SORRY.
April 13th, 2010 at 12:20 pm
very nice your explain …thank you
April 14th, 2010 at 12:23 pm
Arun sir……
it’s very useful for me….i don’t know how to thank u for your good thoughts about tamil people….i love tamil very much…..
really i’m very proud of your work…i got ur website recently only…u continue ur work….all the best…….
June 11th, 2010 at 12:17 pm
well i studied your section i could understand it.it was easy to way to me. i thing everybody can understand .
June 29th, 2010 at 5:20 am
This sit is very useful for beginners. I am tamil medium student. I read your english grammer in tamil i speak english fluently. Please you give A to Z english grammer in tamil it’s very useful to others.
Thank you,
October 2nd, 2010 at 10:03 am
I Like ur teaching . But i Con’t speak in English .I will Improve my english knowledge.
October 10th, 2010 at 7:33 pm
Nice post
come to my blog tamiltospokenenglish also
November 11th, 2010 at 10:26 am
perfect idea
January 20th, 2011 at 1:41 pm
it is very useful to all sir….i hav doubt present ,past and future perfect
January 21st, 2011 at 2:17 am
What’s the doubt?
January 31st, 2011 at 1:13 pm
I learned few tricks in your lessons. It is very usefull to not only beginners but also college students.
sk
January 31st, 2011 at 1:15 pm
I learned few tricks in your lessons. It is very usefull to not only beginners bu also college students.
sk
April 9th, 2011 at 9:56 pm
Welcome, I like to add your teaching subject in my website, You can see. “www.sihanmnc.yolasite.com” If you have more subject about English,pls send me.
April 9th, 2011 at 10:32 pm
But, your teaching is very well.
July 14th, 2011 at 10:30 am
good
August 3rd, 2011 at 11:04 am
my suggestion is really good, because many people try to speak in English fluently but no ideas to improve the knowledge but this web sit is very usefully to us including me. thank you.