(சிரி) நட்சத்திரம்

எரி நட்சத்திரம் தெரியும் அதென்ன சிரி நட்சத்திரம். கீழே படியுங்க கிச்சு கிச்சு வருதாங்க?.

ஹலோ ஹவ் ஆர் யூங்க,
என் பேரு A. மாந்தவன், ‘ந்’ சைலண்டுங்க. இணையத்துல வாழ்க்கை நடத்துற ஆட்களுல நானும் ஒருத்தருங்க.

நிஜ வாழ்கையில எனக்கு நண்பர்கள் ரெம்ப கம்மிங்க. ஆனா எனக்கு தினம் தினம் மெயில் அனுப்புற இணைய நண்பர்கள் ஏராளமுங்க. இணையத்துல எனக்கு கெடச்ச அனுபவங்கள ஒங்களோட பகிர்ந்துக்கிறேனுங்க.

முதல்ல நான் அமெரிக்காவுல தனியா இருந்தப்போ எங்கம்மா சொன்னாங்க,”ஒரு வேலக்காரப் பொண்ண வச்சுக்கடா. ஈசியா இருக்குமே?”ன்னு.

ஒரு இணைய வரி விளம்பரத் தளத்துக்குப் போனேங்க. நம்ம ஊரு பொண்ணா இருந்தா நல்லாருக்குமேன்னு.”Help! Asian woman wanted” அப்படீன்னு போட்டேங்க. நெறைய நண்பர்கள் இதுக்கு படத்தோட பதிலனுப்புனாங்க.

அம்மாகிட்ட காமிச்சேன். “டேய், ட்ரெஸ் போடாத பொண்ணுங்க வீட்டுவேல எப்டிடா செய்வாங்கன்னு.” சொல்லிட்டாங்க. அதனால என் நண்பர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிட்டு நானே வீட்டு வேலையெல்லாம் செஞ்சுகிட்டிருக்கேனுங்க.

இன்னொரு நண்பன் டெய்லி எனக்கு மெயிலனுப்பிச்சு நான் UK லாட்டரில வெற்றி பெற்றதாகவும் சின்ன தொக ஒண்ண அனுப்புனா பெரிய தொக ஒண்ணு கிடைக்கும்னு மெயில் அனுப்பிட்டிருந்தாரு. எனக்கு லாட்டரி விழுந்திருக்குன்னு எனக்கே தெரியாது ஆனா இவரு எத்தன கவனமா பாத்து இதச் சொல்லியிருக்காரு பாத்தீங்களா? நல்ல நண்பருங்க. இப்பத்தான் இவருக்கு 500 டாலர் அனுப்பி வச்சேன். கூடிய சீக்கிரத்துல பணக்காரனாயிடுவேன். என்ன நல்லெண்ணம் பாத்தீங்களா என் நண்பருக்கு.

இன்னொரு நண்பரும் இதப்போல தினமும் நைஜீரியாவுலேந்து மெயில் அனுப்புவாரு. அவரு பேங்க் மேனேஜராம் ஆப்ரிக்காவுல நியோமியாங்கிற இடத்துல இருந்த அரசர் அவங்க பேங்குல ரெம்ப பணம் போட்டுட்டு செத்துப் போனாராம். அந்தப் பணத்த நம்மகூட பங்குபோடணுமாம். அதுக்கும் கொஞ்சம் காசு கேட்டிருந்தாரு. கொடுத்திருக்கேன். சீக்கிரம் அதுவும் வந்து சேந்த்துடும். எனக்கு என்ன பயம்ணா அந்த அரசப் பதவிய எனக்குத் தந்துட்டா ஆப்ரிக்கா போகணுமே?

இப்படி எனக்கு தினமும் மெயில் வந்துகிட்டே இருக்குதுங்க. ஆனா எல்லா மெயிலும் தனியா SPAM அப்டீங்க்ற Folderல போயி சேந்திரும். என் இணைய நண்பர்கிட்ட மெயில் அனுப்பிச்சு SPAMனா என்னண்ணு கேட்டேன். அவரு Special, Personal, Afeectionate Mails. அப்படீன்னாரு.

LonelyGirl69 அப்டீன்னு ஒரு தோழிய சாட்டிங்ல புடிச்சேன். ரெம்ப அருமையா பேசுவாங்க. கிழுகிழுப்பாயிருக்குமுங்க. ரெம்ப சீரியசா அவங்கள லவ் பண்ண ஆரம்பிச்சேனுங்க. அவங்க போட்டோ அனுப்பச் சொன்னேன், அனுப்பினாங்க. என்ன அழகாயிருந்தாங்க தெரியுமா? என் பிரண்டு ஒருத்தங்கிட்ட காமிச்சேன் அவன் பொறாமையில இது ஆஞலீனா ஜோலிங்கிற நடிகையோட படம்டான்னுட்டான்.

என் இணைய தோழி ஆஞலினா ஜோலி மாதிரி இருக்கலாம்லன்னு சொன்னேன். அவன் சிரிக்கிறான். பொறாமைங்க. சரி நம்ம போட்டொவையும் அனுப்பிவைப்போமேன்னு அனுப்பினேன் அதுக்கப்புறம் lonelyGirl69 என்கூட சாட் பண்றதே இல்லங்க.

ஒருநா ஒரு சோகமான மெயில் வந்துச்சுங்க ஒரு சின்னப் பையனுக்கு மூளையில ஏதோ ப்ராப்ளமாம். இதுவரைக்கும் அந்த வியாதி யாருக்கும் வந்ததேயில்லையாம். பாவம் அந்த சின்னப்பையன். அவனுக்கு மாசா மாசம் காசனுப்புவேன். பலபேரு இதப்பத்தி எனக்கு மெயிலனுப்பியிருக்காங்க. இதுலெ என்னண்ணா ரெண்டு வருசமா இந்தப் பயனுக்கு 10 வயசுதான் ஆகுதுங்க. இன்னைக்கும் அப்டித்தான் மெய்யில் வருது.

இன்னொரு நண்பர் ரெம்ப நாள மெயில் அனுப்பிட்டேயிருப்பாரு. ஒங்க ஆண்மைய பெரிதுபடுத்தணுமான்னு கேட்டு. இது நல்ல விஷயந்தானேன்னு அவருக்கும் காசனுப்பினேன் ஒரு பாட்டில் மாத்திரைய அனுப்பினாரு. அதுல சொல்லியிருந்தமாதிரியே சாப்பிட்டேன். இப்ப ரெம்ப நல்ல பலன் கெடச்சிருக்குது.

அதாவது அந்த மருந்து சாப்பிட்டதுலேர்ந்து எனக்கு ‘அந்த’ மாதிரி எண்ணங்களே கொறஞ்சுபோச்சுங்க. இப்ப எனக்கு ஆண்மை பெருசா இருந்தா என்ன சின்னதா இருந்தா என்ன? எப்படி ஒரு நிரந்தரத் தீர்வு பாத்தீங்களா. இணைய நண்பர்கள் இணைய நண்பர்கள்தாங்க.

நான் தனியான ஆளுங்க. அதுக்கு இணையத்துல ஒரு சொலூஷன் கெடச்சது. ‘Are you single? Call this number’னு ஒரு மெயில ஒரு தோழி அனுப்பினாங்க. போன்போட்டு பேசினா அவ்வளவு இனிமையான குரல். ரெம்ப நேரமா பேசினோம். எதெல்லாமோ பேசினோம். ஆனா ட்ரெஸ் போட்டுட்டு பேசினா அவங்களுக்குப் பிடிக்காதாம். ஒவ்வொண்ணண கழட்ட சொல்லிட்டாங்க ரெம்ப ஜாலியா இருந்துச்சு. அந்த மாசம் ஃபோன் பில் செமையா போயிடுச்சு. ஆஃபீஸ் கெஸ்ட் ஹவுஸ் ஃபோன் வேறையா. வேலையிலேர்ந்தே தூக்கிட்டாங்க.

அட தோழிக்காக இதுவுமில்லண்ணா எப்டி?

சாட்ல ஒருநா ஒரு தொழி என் க்ரெடிட் கார்டு நம்பரச் சொன்னா என் அக்கவுண்ட் பாஸ்வோர்ட சொல்றதா சொன்னாங்க. அட இந்த விளையாட்டு நல்லா இருக்குதேன்னு அவங்களுக்கு விபரத்த தந்தேன். ஆனா தப்பா கெஸ் பண்ணிட்டாங்க. நாலு தடவைக்கப்புறம் நானே சரியான விடைய அவங்களுக்குத் தந்தேன்.

இன்னைக்கும் பல தோழர்கள்கிட்டேந்து மெயில் வந்துட்டே இருக்குது. என் படம் அங்க இருக்குது போய் பாருன்னு ஒரு தோழி, AOL மைக்ரொசாஃப்ட் இணைஞ்சி காசு தர்றாங்கன்னு ஒரு தோழர். இந்த சர்வே எடுத்தா ப்ளாஸ்மா டி.வின்னு ஒருத்தர், இந்த மெயில 10 பேருக்கு அனுப்பினா சொர்க்கம் போகலாம் இல்லண்ணா நரகம்னு சிலர்.

தினம் தினம் இணையத்துல என்னையும் ஒரு நண்பனா ஏத்துக்கிட்டு மெயில் அனுப்புற எல்லா நண்பர்களுக்கும் இந்த A. மாந்தவனின் நன்றிகள். ‘ந்’ சைலன்டுங்கோவ்.

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....44 மறுமொழிகள் to “(சிரி) நட்சத்திரம்”

 1. Anonymous சொல்கிறார்:

  ;-)

 2. Vicky சொல்கிறார்:

  ROTFL :)

  Excellent post Alex :)

  வேலைக்கு சேர்ந்த புதுசில என் roommate ஒருத்தனுக்கு லாட்டரில prizeனு ஒரு நாள் night மெயில் வர பையன் பயங்கரமா குஜாலாயிட்டான். மறுநாள் officeக்கு லீவெல்லாம் போட்டு எல்லோரும் ரூமை விட்டு போனதுக்கு அப்புறமா மெதுவா details எல்லாம் fill பண்ணிட்டு 15 நாளா (cheque)courierக்காக வெயிட்டீங். ஒரு வழியா அதே mail idயில இருந்து 1000 டாலர் அனுப்பவும்னு இன்னொரு மெயில் வர பையன் கொஞ்சம் doubtaஆகி யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு சூடம் மட்டும் ஏத்தாம சத்தியம் வாங்கிட்டு என்னை நம்பி (!!!) பணம் அனுப்பலாமானு கேட்டான். இன்னிக்கு வரைக்கும் லாட்டரிங்கிற பேரைக்கேட்டாலே ஓடுற மாதிரி கவனிச்சு வைச்சிருக்கோம். :)

  – இன்னொரு A.மாந்தவனின் ரூம்மேட் (இங்கேயும் ந் சைலண்ட் :) )

 3. Radha Sriram சொல்கிறார்:

  A.Mandhavan and me seem to have a lot common friends!!!!!

 4. kannabiran, RAVI SHANKAR (KRS) சொல்கிறார்:

  ஒரு நட்சத்திரம் சிரிக்கிறது..ஹிஹி
  சிரிக்க வைக்கிறது
  :-))

 5. கப்பி பய சொல்கிறார்:

  :))))))

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி நிர்மல். ரசிச்சீங்களா? ரெண்டு வார்த்தை எழுதப்படாதா?
  :)

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ROTFL :)

  Excellent post Alex :)

  ROTFL :) – (rolling on the floor laughing) இணையத்துல தேட வச்சுட்டீங்க. ஒழுங்கா சாட் பண்ணி பல வருஷமாகுது.

  //
  – இன்னொரு A.மாந்தவனின் ரூம்மேட் (இங்கேயும் ந் சைலண்ட் :) ) //

  கலக்கல்.

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //A.Mandhavan and me seem to have a lot common friends!!!!! //

  :) Same here.

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கப்பி பய
  _/\_

 10. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  இந்த ஆளு நம்ம புரட்சிதலைவர் பாட்டெல்லாம் கேக்குறது இல்ல போல இருக்கே.

 11. சந்தோஷ் aka Santhosh சொல்கிறார்:

  :))

 12. Anonymous சொல்கிறார்:

  சிறில் அலெக்ஸ்!
  இந்த நைஜீரிய காசுக்காரர் ,லொத்தர் எனச் சில தொல்லை இருந்தது.குறிப்பாக குமுதத்திற்கு ஒன்லைனில் பதிந்த பின் இருந்தது. நைஜீரியாக்காரருக்கு இது பற்றிய உண்மை அறிய “தூதராலயத்தில் உதவி” நாடியுள்ளேன். எனப் பதிலிட்டேன்;லொத்தர்க்காரருக்கு உங்கள் அன்புக்கு நன்றி!!அச்சிறு தொகையைக் கட்டி அந்த முழுத் தொகையையும் நீங்களே!!எடுங்கள்; தொடர்ந்தும் இந்த மெயில் வந்தால் பிரான்ஸ் பொலிசுக்கு அனுப்புவேன்; எனப் பதிலிட்டேன்; அதன் பின் இத் தொல்லையில்லை.
  யோகன் பாரிஸ்

 13. ஜெயஸ்ரீ சொல்கிறார்:

  -))))))))))))))))))))))))))))

 14. Dharumi சொல்கிறார்:

  அதுல பாருங்களேன்… நீங்க எந்த ஊர்ல இருந்தாலும் அந்த நைஜீரியாக்காரர் எப்படி உங்கள, என்ன மாதிரி நல்லவங்கள மட்டும் கண்டுபிடிச்சி நம்மகூட கூட்டு சேருவாரு… அவரு ரொம்ப நல்லவருங்க..

  நீங்க சொன்ன மத்தவங்களும் அப்படித்தான் ரொம்ப நல்லவங்க..
  நல்லாயிருக்கட்டும்…

 15. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  A’மாந்தவன் என்பது என்ன உங்கள் புனைப் பெயரா – மிஸ்டர் சிறில்?

 16. G.Ragavan சொல்கிறார்:

  :-))))))))))))))))))))))))

  உண்மைதான் சிறில்..எத்தனையெத்தனை மெயில்கள். அவைகளை உண்மை என்று நினைத்துக் கொண்டு..அடடா!

  பெங்களூரில் ஒரு கொடுமை நடந்தது. அதாவது ஆறு ஆண்டுகளுக்கு முன்னர். சீமென்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணின் கணவருக்கு ரத்தத்தில் ஏதோ கோளாறு என்று….அது தொடர்பான தகவல்களையும் மருத்துவ முறைகளையும் கேட்டு. அதற்கு ஒரு எண் கொடுக்கப்பட்டிருந்தது. மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. பிரச்சனையென்னவென்றால் உண்மையிலே அந்த எண்ணும் மின்னஞ்சலும் ஒரு பெண்ணும் அந்தக் கம்பெனியில் உண்டு. ஆனால் அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. அந்தப் பெண்ணுக்குத் தொலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் நிறைய வந்து…அந்தப் பெண் மிகவும் பாதிக்கப்பட்டார். கடைசியில் கம்பெனியில் வேறொரு தொலைபேசி எண்ணும் மின்னஞ்சலும் கொடுத்தார்கள்.

 17. தம்பி சொல்கிறார்:

  படிக்க படிக்க ஒவ்வொருத்தனா ஞாபகம் வந்துட்டாங்க! நல்லா ரசிச்சி படிச்சேன். :))

 18. Anonymous சொல்கிறார்:

  a,b,c …Z = 1,2,3 …26

  madhavan = cyril ( C slient )
  13+1+4+8+1+22+1+14 = 64 — Madhavan

  3+25+18+9+12 =67-3 = 64 — Cyril(C slient)

  எனக்கு cyril (C slient) போன் பணுனாரு 2001-ல நினைக்கிறேன் இந்த மின்னஞ்சலை பத்தி ….

  அடடா … எனக்கு அவன் mail பண்னவேல்ல … சரி, அத என்க்கு fwd பண்னுங்கனு சொன்னென் ,
  அவரு என்க்கு மைல் பண்னவே இல்ல …பங்கு கேட்பேனு நினச்சாரொ என்னமொ …
  அத்க்கு அப்புரம் … இந்த பதிவ படிக்குறேன்

  :-)

 19. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  என் நண்பர் A மாந்தவனைப்பற்றிய சில தகவல்களை மறைத்தது ஏனோ?

  1. துல்லியமான வருங்காலத்தைக்காட்டும் ராசிபலன்களுக்கு போன் செய்து பல முறை பயன் பெற்றவர் நண்பர் A மாந்தவன்.

  2. படித்த 5 நிமிடங்களில் முக்கியமான மின்னஞ்சல்களை 20 பேர் வரை Forward செய்து “your life will improve drastically” ஆனவர் தோழர் A மாந்தவன்.

  3. அவருடைய தாம்பத்திய வாழ்க்கை நல்லபடி அமைய தினமும் 5 மெயிலாவது அனுப்பும் தியாகதீப நண்பர்களைப்பெற்ற பாக்கியவான் A மாந்தவன்!

  4. எந்தத் தளத்துக்குச் சென்றாலும் அத்தளத்தின் 1000000 ஆவது விருந்தாளியாக அமையும் அதிர்ஷ்டசாலி A மாந்தவன்!

  5. இவருக்கு உதவி செய்ய ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். இவர் செய்ய வேண்டியதெல்லாம் “just sign here” மட்டும்தான்.

  பெனாத்தலாரின் தனிமடல்.

 20. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //இந்த ஆளு நம்ம புரட்சிதலைவர் பாட்டெல்லாம் கேக்குறது இல்ல போல இருக்கே. //

  \பு/ தலைவர் இப்ப இருந்தா இணைய ஏமாற்றத்தபத்தி பாடியிருப்பாரோ?

  ஈ-மாற்றாதே ஈ-மாற்றாதே..
  ;)

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சந்தோஷ் _/\_

 22. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  யோகன்
  என்ன என்னை எடுக்கச் சொல்றீங்க அப்புறம் நம்ம A மாந்தவன் (ந் சைலண்ட்) எங்க போவார்?

  இவங்கள பத்தி கம்ப்ளெயிண்ட்கூடப் பண்ணலாமா?

 23. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜெயஸ்ரீ நன்றி…

 24. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  உண்மை தருமிசார்..
  புதுசா கணக்கு துவங்குனாலும் கண்டு பிடிச்சு மெயில் அனுப்புறாரே.. நல்லவர்தான்.

  :)

 25. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //A’மாந்தவன் என்பது என்ன உங்கள் புனைப் பெயரா – மிஸ்டர் சிறில்? //

  சுப்பையா சார்.. ஏங்க இப்படி கால வார்றீங்க..

 26. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ராகவன்.. சீரியசா பாக்கும்போது இணையத்துல அடிவாங்கியவங்க பலபேர். பொதுவா இணையம் ஒரு பொழுதுபோக்கு விஷயமா ஆயிட்டு வருது அதிலும் கெட்ட எண்ணத்தோட செயல்படும் பயனாளர்கள் அதிகமாயிருக்கிறாங்க.

  மக்களும் அதையே (உள்ளுக்குள்?) ரசிக்கிறாங்க.
  நம்ம வலைப்பதிவுகளே பெரிய உதாரணம்.

 27. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //படிக்க படிக்க ஒவ்வொருத்தனா ஞாபகம் வந்துட்டாங்க! நல்லா ரசிச்சி படிச்சேன். :)) //

  தம்பி .. அதுல ஒருத்தர் நீங்க இல்லியே?

  சரி A மாத்துனவங்க நியாபகத்துக்கு வந்தாங்களா A மாந்தவங்க நியாபகத்துக்கு வந்தாங்களா?

 28. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சுந்தர்,
  ஏங்க கணக்கெல்லாம் போட்டு பயம் காட்டுறீங்க?

  2001ல உங்களுக்கா எந்த மெயிலப் பத்தி ஃபோன்பண்ணேன்னு சொல்லலியே..?

  :)

 29. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //1. துல்லியமான வருங்காலத்தைக்காட்டும் ராசிபலன்களுக்கு போன் செய்து பல முறை பயன் பெற்றவர் நண்பர் A மாந்தவன்.

  2. படித்த 5 நிமிடங்களில் முக்கியமான மின்னஞ்சல்களை 20 பேர் வரை Forward செய்து “your life will improve drastically” ஆனவர் தோழர் A மாந்தவன்.

  3. அவருடைய தாம்பத்திய வாழ்க்கை நல்லபடி அமைய தினமும் 5 மெயிலாவது அனுப்பும் தியாகதீப நண்பர்களைப்பெற்ற பாக்கியவான் A மாந்தவன்!

  4. எந்தத் தளத்துக்குச் சென்றாலும் அத்தளத்தின் 1000000 ஆவது விருந்தாளியாக அமையும் அதிர்ஷ்டசாலி A மாந்தவன்!

  5. இவருக்கு உதவி செய்ய ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். இவர் செய்ய வேண்டியதெல்லாம் “just sign here” மட்டும்தான்.//

  :) இன்னும் லிஸ்ட் பெரிதாயிருக்கும்..

  நான் இந்த பதிவ எழுதும்போது என் SPAM மெயில்களின் எண்ணிக்கை 1000க்கும் மேல.

  :)

 30. மிதக்கும் வெளி சொல்கிறார்:

  தல நீங்க அப்பாவியா, கில்லாடியா? அந்த டிரெஸ் போடாத… செய்வியா,செய்வியான்னு கேட்டுட்டு எல்லாத்தையும் செஞ்சுட்டீங்களே, வாழ்ந்திட்டீங்க போங்க. (சொல்லிக்காட்டுறியா என் வெண்டர் ந்னு மட்டும் கேட்டுடாதீங்க)

 31. SK சொல்கிறார்:

  பின்றீங்களெ சாமி இப்படி!

  சும்மா ஜொலிக்கிறீங்க!

  இந்த மடலைப் பார்த்ததும், இதை அப்படியே இன்னும் ஒரு பத்து பதிவருக்கு அனுப்பினால், உங்கள் பின்னூட்ட வாழ்வு வளம் பெறும்!

  இதைச் செய்யவில்லை என்றால், பின்னூட்டமே வராமல் ரொபக் கஷ்டப்படுவீர்கள்!

  :)))))))) !!!

 32. வெங்கட்ராமன் சொல்கிறார்:

  ஒரு நட்சத்திரம் சிரிக்கிறது..ஹிஹி
  சிரிக்க வைக்கிறது
  :-))

  கிச்சு கிச்சு வருதுங்க

 33. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //தல நீங்க அப்பாவியா, கில்லாடியா? அந்த டிரெஸ் போடாத… செய்வியா,செய்வியான்னு கேட்டுட்டு எல்லாத்தையும் செஞ்சுட்டீங்களே, வாழ்ந்திட்டீங்க போங்க. (சொல்லிக்காட்டுறியா என் வெண்டர் ந்னு மட்டும் கேட்டுடாதீங்க)//

  அடப் பாவமே நான் A. பாவிங்க.
  :)

 34. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //பின்றீங்களெ சாமி இப்படி!

  சும்மா ஜொலிக்கிறீங்க!//

  நன்றி SK.

  //இந்த மடலைப் பார்த்ததும், இதை அப்படியே இன்னும் ஒரு பத்து பதிவருக்கு அனுப்பினால், உங்கள் பின்னூட்ட வாழ்வு வளம் பெறும்!//

  ஆகா. நீங்களுமா?

  //இதைச் செய்யவில்லை என்றால், பின்னூட்டமே வராமல் ரொபக் கஷ்டப்படுவீர்கள்!//

  இப்பமட்டும் என்ன வாழுது :)

 35. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ஒரு நட்சத்திரம் சிரிக்கிறது..ஹிஹி
  சிரிக்க வைக்கிறது
  :-))//
  இதையே ரெண்டுபேரு சொல்லிட்டீங்க பார்த்திபான் டையலாக் மாதிரி இருக்குது?

  //கிச்சு கிச்சு வருதுங்க //

  ரெம்ப நன்றிங்க வெங்கட்ராமன்.

 36. சேதுக்கரசி சொல்கிறார்:

  ஏமாந்தவன் கதை சூப்பர் (ந் சைலண்டு மாதிரி ஏ கூடத்தான் சைலெண்டுங்கோவ்)

 37. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ஏமாந்தவன் கதை சூப்பர் //
  நன்றி :)

  //(ந் சைலண்டு மாதிரி ஏ கூடத்தான் சைலெண்டுங்கோவ்) //

  அதென்ன ஏ சைலண்ட்?

 38. சேதுக்கரசி சொல்கிறார்:

  ஏமாந்தவன் – இதில் ஏ சைலண்டு, ந் சைலண்டு என்றால் மாதவன் என்று வருமே, அதைச் சொன்னேன் (உஸ்ஸ் அப்பாடா)

 39. Anonymous சொல்கிறார்:

  :))))))

  மெயில் மட்டுமா?
  இந்த செல்போன் நம்பரையும் கண்டுபுடிச்சு இவங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியல!!!

 40. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //:))))))

  மெயில் மட்டுமா?
  இந்த செல்போன் நம்பரையும் கண்டுபுடிச்சு இவங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியல!!!//

  ஆமாங்க.. ஆனா கால் செண்டர் பசங்களுக்கும் வேல வேண்டாமா?

  :)

 41. Boston Bala சொல்கிறார்:

  LOL :)))

 42. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பாபா..
  நன்றி.
  :)

 43. சேதுக்கரசி சொல்கிறார்:

  “ஏமாந்தவன்” – புரிஞ்சிடுச்சு தானே? :-) (சும்மா ஒரு அக்கறைல தான் கேட்டேன் :-))

 44. Saravanan vivekanandan சொல்கிறார்:

  சிரில்,

  2006 ல எழுதின பதிவு, இன்றைக்கும் எவ்வளவு relevant அ இருக்கு. சாக வரம் பெற்ற எழுத்து என்பது இதுதானோ?

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்