(மூள) நட்சத்திரம்

இந்த வாரம் பாபா(Boston Balaji) விடுமுறையில் இருக்கிறதால வழக்கமா அவர் போடுறத நான் போடவேண்டியதாயிடுச்சு.

ஆமாங்க. நான்தாங்க இந்த வார தமிழோவிய சிறப்பாசிரியர். நட்சத்திர வாரம், கிறிஸ்துமஸ் சிறப்பிதழ்னு எழுதி எழுதி மூளைல சரக்கு தீந்து போச்சு. (அப்பாடா தலைப்ப ஜஸ்டிபை பண்ணியாச்சு).

இந்தவாரம் எல்லாத்தையும் நானே எழுதி போர் அடிக்காம நம்ம பதிவுலக நண்பர்கள் சிலரை எழுதக் கேட்டிருந்தேன்.

வெடி – பிரபு ராஜதுரை

எங்கள் வீட்டிலெல்லாம் கிறிஸ்மஸ் ஏற்பாடுகள் தீபாவளிக்கு முன்னரே
ஆரம்பித்து விடும். அம்மா அலுவலகத்தில் தீபாவளிக்கு முன்னரே கொடுக்கப்படும் போனஸ் மட்டும் காரணமில்லை. தீபாவளிக்கு கோ-ஆப்டெக்சில் துணி வாங்குவதற்காக அலுவலகத்தில் கிடைக்கும் வட்டியில்லாக் கடனும் ஒரு காரணம

கிறிஸ்மஸ் – வரலாரற்றுப் பார்வை – நிர்மல


கிருத்துவ மதத்தின் துவக்க காலத்தில் கிருஸ்மஸ் பண்டிகை
இல்லாதிருந்தது. பைபிளில் இயேசுவின் பிறந்த தினம் பற்றிய துல்லிய குறிப்புகள்
எதுவும் இல்லை. கி.பி நான்காம் நூற்றாண்டில் போப் முதலாம் ஜீலியஸ் காலத்தில்தான் கிருஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் துவக்கப்பட்டன.

பெற்றால்தான் அன்னையா? – கோ. இராகவன் (மயிலாரேதான்)

தொழுதால் வருவாய் விழுதாய்த் தொடர்வாய் – துயராம் பழுதைத் துடைப்பாய் உணர்வாய்,
உயிராய், எமதாய், நிறைவாய்

இயற்கை நின்று கொல்லும் – மதுமிதா


நெருப்புக் குஞ்சுநம் வசமிருந்தால் அணைத்துவிடலாம் இல்லையேல் நம்மை
அணைத்துவிடும் நெருப்பு

இலக்கிய விளக்கு – ஷைலஜா

கலைப்படைப்புகள் காலம் கடந்து நிற்கத் தக்க வகையில் உருவாக வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற நல்ல சமுதாயச் சூழ்நிலை உருவாக வேண்டும். ஒரு நாட்டில் விளைந்து வருகிற, உலவிவருகிற, ரசிக்கப்பட்டுவருகிற பெரும்பான்மையான புத்தகங்களைவைத்தே ஒரு சமுதாயத்தின் நாடியைபிடித்துப் பார்த்துவிட முடியும்.

விழாக்கால நல் வாழ்த்துக்கள் – சிறில் அலெக்ஸ்

நம் ஊர்களில் புகைபோக்கிகள் இல்லாததாலோ என்னவோ இங்கே கிறிஸ்மஸ்தாத்தா கொடுப்பவராக இல்லாமல் வாங்குபவராகவே வருகிறார். வீடு வீடாகச் சென்று கிடைக்கும் பண்டங்களை பங்கிடுவதும் காசு பிரிப்பதும் இங்கே கிறிஸ்மஸ்கால கொண்டாட்டங்களில் கலந்துவிட்டிருக்கும் வேடிக்கைகளில் ஒன்று.

இயேசு பிறந்த கதை – சிறில் அலெக்ஸ்

தூரத்தில் கிடை போட்டிருந்த மேய்ப்பர்களுக்குத் தூதுவன் ஒருவன்
தோன்றினான்.”அஞ்சாதீர் இதோ நற்செய்தி ஒன்றை உங்களுக்குத் தருகின்றேன் தாவீதின் நகரத்தில் இன்று இயேசுக் கிறீஸ்து பிறந்துள்ளார் துணியில் பொதியப்பட்டு முன்னணையில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தையைக் காண்பீர்கள்.” என்றார்.


இன்னும் சில சிறப்பான படைப்புக்களோடும் டாக்டர் ஐயாவின் சிறப்பு பேட்டியோடும் இந்த வார தமிழோவியம். காணத் தவறாதீர்கள்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....8 மறுமொழிகள் to “(மூள) நட்சத்திரம்”

 1. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  ஆகா அப்படியே ஆகட்டும்!
  அமெரிக்காவில் மளிகை, காய்கறி விலைகள் (டாலரில்தான்) – ஒரு ப்திவு போடுங்கள்!

 2. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  ஷைலஜாவின் பூனை கதை நன்றாக இருந்தது.

 3. ramachandranusha சொல்கிறார்:

  அது சரி, அந்த விஷயத்தைத் தூக்கி இங்க ஒரு பதிவா போட்டது சரியா சிறில் :-)

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ஆகா அப்படியே ஆகட்டும்!
  அமெரிக்காவில் மளிகை, காய்கறி விலைகள் (டாலரில்தான்) – ஒரு ப்திவு போடுங்கள்! //

  இது சுவாரஸ்யமான விஷயம்தான். இணையத்துல தேடினா விபரங்கள் கிடைக்கலாம். அப்புறமா ஒரு பதிவப் போடலாம்.

  :)

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //அது சரி, அந்த விஷயத்தைத் தூக்கி இங்க ஒரு பதிவா போட்டது சரியா சிறில் :-) //

  எந்த விஷயமுங்க? :)

  எல்லாம் ஒரு விளம்பரம்தான். பாபா இருந்திருந்தா அவரே பின்னியிருப்பாரு. ஏதோ என்னால முடிஞ்ச மைலேஜ்.

  அதான் மூள காலின்னு சொல்லிட்டேன்ல.. :)

 6. ஆரூரன் சொல்கிறார்:

  இது ஒரு முட்டாள்தனமான கேள்வியாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களின் தலைப்பின் கருத்தென்ன? மூளை நட்சத்திரமா? மூல நட்சத்திரமா அல்லது மூள நட்சத்திரமா? ஒரே குழப்பமாக இருக்கிறது. மூளை நட்சத்திரம் அதாவது உங்களின் மூளையில் இருந்து உதித்த நட்சத்திரம் அல்லது எண்ணமா? அல்லது சோதிட சாத்திரத்தில் கூறப்படும் மூல நட்சத்திரமா அல்லது மூள அதாவது தீயைப் போன்று மூண்டு, பற்றி எரியும் நட்சத்திரமா? ஒன்றும் விளங்குதில்லை.

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஆரூரான்,
  மூல நட்சத்திரம் என்பதை மூள நட்சத்திரமாகத் திரித்துள்ளேன்.
  மூள என்பது பேச்சுவழக்கு மூளை..

  மூளை + நட்சத்திரம்.

  :)

  என்னே ஒரு ஆராய்ச்சி.

  சரி பதிவுல இதப்பத்தி போட்டிருக்கேனே.. தலப்ப படிச்சே குழம்பிட்டீங்களா?

 8. Boston Bala சொல்கிறார்:

  நன்றி அண்ணாத்தே! : D

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்