கில்லி 365

கில்லி துவங்கி வருடம் ஒன்றாகிறதாம். (ஒன்றுதான?)

கில்லி அருமையான முயற்சி. புதுமையானதும்கூட. கில்லியின் பரிந்துரைகள் பல சுவாரஸ்யமானவை.

இப்பெல்லாம் சீரியசா ஒரு பதிவப் போட்டா கில்லி பரிந்துரைக்குமான்னு யோசிப்பேன். பின்னூட்டங்களை விடவும் கில்லி பரிந்துரையோ பூங்காவில் தேர்ந்தெடுப்போ பெரிய பரிசாய் எண்ணப்படும் என்றே நினைக்கிறேன்.

பரிந்துரைகளின் எண்ணிக்கைகள் வரவர குறைந்து போகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. இதை சரி செய்தால் மேலும் எங்காளால் பலன் பெறமுடியும்.

இன்னுமொரு குழு வலைப்பதிவுக்கு நேரடி சம்பந்தமில்லாததாயினும் தனது 5 வருட சேவையை பெருமிதத்துடன் நிறைவு செய்திருக்கிறது. தமிழோவியம் ஐந்து வருடம் இணையத்தில் சேவை புரிந்துள்ளது என்பதை நம்பவே முடியவில்லை. வாழ்த்துக்கள்.

தமிழோவியம் பல பதிவர்களுக்கும் பதிவுகளைத் தாண்டி எழுத வாய்ப்பளித்துள்ளது. இதில் நானும் ஒருவன் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும்.

கில்லி போன்றதொரு சேவையை பதிவர்களே தங்களுக்காக செய்துகொள்ளும் வசதி தேன்கூட்டின் பெட்டகத்தில் உள்ளது. இது வந்த புதிதில் பலரும் ஆர்வமாய் பயன்படுத்துவார்கள் என நினைத்தேன். பெட்டகத்தை ஒரு பரிந்துரை தளமாகவே பயன்படுத்த இயலும் என்பதையும் பெட்டகம் பற்றிய என் பதிவில் சொல்லியிருந்தேன். பதிவுகளில் நடக்கும் சண்டைகளை கவனிக்கும் அளவுக்கு நாம் புதிய முயற்சிகளை வரவேற்காமல் விட்டுவிடுகிறோமோ என வருத்தமே மிஞ்சுகிறது.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “கில்லி 365”

 1. வடுவூர் குமார் சொல்கிறார்:

  நீங்க சொன்ன பிறகு தான் “கில்லி” பற்றி தெரிந்துகொண்டேன்.நன்றி
  இன்னும் அதில் முழுகவில்லை,அதன் பிறகு தான் அதன் வீச்சைப்பற்றி கருத்து சொல்லமுடியும்.

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //நீங்க சொன்ன பிறகு தான் “கில்லி” பற்றி தெரிந்துகொண்டேன்//

  உண்மையாவா? ம்ம்ம் ஏதோ நம்மால ஆன விளம்ப்பரம்

  :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

«