‘ஆதி’க்கு ஆஸ்க்கர்


ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு ஒரு படத்தை அனுப்புவதும் அதை நூறுகோடியே மிச்சம் மக்கள் எதிர்பார்ப்பதும், ஒலிம்பிக்கில் கிடைக்கும் வெண்கலம்போலேனும் ஒன்றும் கிடைக்காமல் போவதும் வாடிக்கை.

ஆஸ்கர் ஹாலிவுட் படங்களுக்கான விருது என்பதும், வெளிநாட்டுத் திரைப்படங்களுக்காக ஒரு விருது மட்டும் வழங்கப்படுகிறது என்பதும் நமக்குத் தெரிந்திருந்தாலும், சினிமா ரசிகர்களாகிய இந்தியர்களுக்கு ஆஸ்கர் மொகம் தீர்ந்தபாடில்லை. நம் தேசிய விருதின்மீது எச்சிவாரி உமிழும் நாம் ஆஸ்கர் கிடைக்காதா என ஜொள்ளுகிறோம். இதையும் பர்மா பஜாரில் கூறுபோட்டு ‘திருட்டு ஆஸ்கர்’ என விற்றால் ஒன்றிரண்டு வாங்கி வைக்கலாம் என நினப்பவர்களும் இருக்கலாம்.

ஆஸ்கர் விருது எப்படி வழங்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டால் நமது இந்த தீராத மோகம் கொஞ்சம் தணியலாம் என நினைக்கிறேன்.

Academy of Motion Picture Arts and Science எனும் சங்கம் 1927 ல் ஹாலிவுட்டில் நிறுவப்பட்டுள்ளது. திரைப்படம் சார்ந்த கலை மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான சங்கம் இது. இதில் ஹாலிவுட் திரைப்படத் துறையை சார்ந்த நடிப்பு மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மட்டுமே உறுப்பினர்கள், அதுவும் இந்தச் சங்கத்தின் அழைப்பின் பேரிலேயே (by Invitation), ஒருவர் இதன் உறுப்பினர் ஆக முடியும்.

இந்தக்குழுவில் உள்ள நடிகர்கள் சக நடிகர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்கள் தத்தம் தொழில் நுட்பத்தில் கவனிக்கத்தக்கவர்களையும் விருதுக்குத் தகுந்தவர் பட்டியலிட தெர்ந்தெடுக்கிரார்கள்(Nomination). ஆஸ்கரின், படத்தொகுப்பு, சிறந்த நடிக, இயக்குனர் போன்ற ஒவ்வொரு விருதுக்கும் 5 பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன.

இந்தப் பட்டியலிலிருந்து ச்ங்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பு முடிவின் பேரில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.

Feature Films, எனப்படும் ஜனரஞ்சகப் படங்களின் தேர்வுக்கு கீழ்கண்ட விதிகளும் விதிக்கப்படுகின்றன,

1. 40 நிமிடங்களுக்கு மேலானதாயிருக்கவேண்டும்

2. முதலில் திரையரங்கில் வெளியிடப்பட்டிருக்கவேண்டும்

3. 35மிமீ அல்லது 70 மிமீ அல்லட்து மென்(digital) வடிவத்தில் திரயிடப்பட்டிருக்கவேண்டும்

4. L.A (லாஸ் ஏஞ்ச்சல்ஸ் county) மாவட்டத்தில் ஒரு திரையரங்கில் கட்டனம் வசூலிக்கப்பட்டு குறந்தபட்சம் 7 நாட்களாவது தொடர்ந்து திரயிடப்பட்டிருக்கவேண்டும்.

செய்தி படங்களுக்கும் வெளிநாட்டு படங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தாது. வெளிநாட்டுப்படங்கள் ஆங்கில மொழிமாற்றக் குறிப்புகளுடன் அனுப்பப்படவேண்டும்.

தமது படங்களுக்காக தயாரிப்பாளர்கள் ஆதரவு தேடுவதும் (Lobbying) வழக்கம்.

அமெரிக்கர்களுக்கு இந்தியாவைப்பற்றி குறுகிய பார்வையே உள்ளது. (நமக்கும் இவர்களைப்பற்றிய குறுகிய பார்வையே உள்ளதென்பது வேறு பதிவுக்கான வாதம்). நம்மை ஒரு ஏழை நாடாக மட்டுமே இவர்கள் பார்க்கிறார்கள். சலாம் பாம்பே, பார்ன் இன்டு ப்ரொதல்ஸ் (Born into Brothels – சதை உழைப்புக்காக பிறந்தவர்கள்) போன்ற படங்களுக்கு ஆஸ்கர் அங்கீகாரம் இதனாலேயே.

இந்தியா மட்டுமல்ல பொதுவாக எந்த வெளிநாட்டுப்படமும் அந்தந்த நாட்டின் அவலங்களை இவர்களுக்கு கூறவேண்டும், அப்போதுதான் அமெரிக்கா எவ்வளவு நல்ல நாடு என்பது இவர்களுக்கு தெரிந்து, பூரிப்படைந்து விருது வழங்குவார்கள்.

சுட்டுப்போட்டாலும் நம் கலாச்சாரம் இவர்களுக்குப் புரிவதில்லை, அந்தப் புரிதலை இவர்களிடம் எதிர்பார்க்கக் கூடாது. எப்படி கானாவை ரசிக்கும் தன்மையை ஒரு பாகவதரிடமும், சுத்த கர்நாடக இசையை ரசிக்கும் தன்மையை ஒரு கனா பாடகரிடமும் எதிர்பார்க்க முடியாதோ அதே போலத்தான் நம் படங்களை ரசித்து, திறனாய்ந்து விருது வழங்கும் தன்மையை இவர்களிடம் எதிர்பார்க்க கூடாது. கானாவை ரசிக்கும் பாகவதர்களும் சங்கேதம் ரசிக்கும் குப்பத்தானும் நிச்சயம் இருக்கிறார்கள் அவர்கள் எத்தனைபேர் என்பது உங்களுக்கே தெரியும்.

இதையும் மீறி இவர்கள் தரும் விருதுகள் மேற்கத்திய எண்ணங்களை வெளிப்படுத்தும் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

தலைப்பில் சொல்லப்பட்டிருப்பதுபோல ஆதி படத்துக்கு ஆஸ்கர் வேணும்னா என்ன செய்யணும்? ‘ஆதி’யில் இதியா எப்படி ஒண்ணுந்தெரியாத நாடா இருந்துச்சு. எப்படி வெள்ளக்காரன் வந்து நமெக்கெல்லாம் பேண்ட் சர்ட் போட்டுவுட்டான்னு படம் எடுக்கணும். இதுல விஜையும் அஸினும் ஆதி மனித கெட்டப்புல ஒரு டான்ஸ் அப்புறம் பேண்ட் சட்ட போட்டுகினு ஒரு டான்ஸ். க்ளமாக்ஸ்ல கப்பலேறிப்போகும் வெள்ளக்காரனுக்கு பேண்ட், சர்ட் போட்ட விஜையும் அஸினும் சோகமா டாட்டா காமிக்கிறாங்க.

வணக்கம் போடுறதுக்குப் பதில் ‘அமெரிக்கா வாழ்க’ன்னு போட்டா போதும்.

நம்ம ஊர் தெசிய விருதுக்கு அரசியல் சாயம் பூசியாச்சு, பத்திரிகைகளின் விருதுகளப்பத்தி சொல்லவே வேண்டாம். வலப்பதிவாளர்கள் சேர்ந்து ஒரு ஓட்டெடுப்பு பண்ணலாம். நம்ம ஓட்டு போட்டோம்னு ஒரு நிம்மதியாவது இருக்கும்.

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....9 மறுமொழிகள் to “‘ஆதி’க்கு ஆஸ்க்கர்”

 1. Onanite சொல்கிறார்:

  Well I have no idea what you said in the article, but BUSH is a jerk, and cares nothing for anyoneone but his Xtian fanatics. Rock on bro…

  Onanite

 2. johan-paris சொல்கிறார்:

  Rathina surukamaka solledeenga, namma cinimakaranka purungukkuvanka enru nampureenkala?,m..um ,varusa varusam koddavi viduvanga.athu thanthalum onduthaan tharavidalum athuthan enru podudu kidappankala.illavee illa;Ivanga naama pakkap padameduthaalee pothum.Pappadamelle edukkiranka!!!
  johan -Paris

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  johan-paris சொன்னதன் தமிழாக்கம்…

  ரத்தின சுருக்கமா சொல்லிட்டீங, நம்ம சினிமகரன்க புரிஞ்ஜுக்குவன்க என்று நம்புரீன்களா?,ம்..உம் ,வருசா வருசம் கொட்டாவி விடுவாங.அது தந்தாலும் ஒன்றுதான் தராவிடலும் அதுதன் என்று (பொடுடு) கிடப்பான்களா.இல்லவே இல்ல;இவங நாம பாக்கப் படமெடுதாலே பொதும்.பப்படமெல்லெ எடுக்கிரன்க!!!
  (ஜொகன்) -பாரிஸ்

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Onanite- the article is not about Bush but about the Oscars. But I agree with what’s on the Pic.

 5. Boston Bala சொல்கிறார்:

  Right on the bull’s eye…

  This is a PG-13 rated comment :-)

  Americans love movies which tarnish Brits (of late more of French bashing movies might have picked up; “Lagaan” picking up a nomination was based on that :-?

  India never had nazi discrimination & associated impact. Probably if somebody takes a movie which puts Nethaaji in a bad light, then that might get a nod from the Academy.

  They also love under-age girls getting attracted (laid) to senile folks.

  So a winning combo (politically incorrect) would be 60 year old NSC Bose having illicit relationship with the burmese lass; the movie being the memoir of that lady escaping the Axis Powers ;-)

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Bala, you missed their recent crush on gay movies, (not that I am against it, lest Onanite curse me), may be an Indian gay movie will find their favour.

 7. Vignesh சொல்கிறார்:

  Good post Alex,

  We are very much obsessed with Oscar..

  Saddest part is here most people believe Oscar award is equivalent to Nobel prize for the entertainment industry .

  – Vignesh

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  விக்னெஷ், பாலா, ஜொஹன், உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

 9. G.Ragavan சொல்கிறார்:

  ஆஸ்கார் விருதா…ஆஸ்பிரின் மருந்தாங்குற மாதிரி இருக்கு இந்தப் பதிவு.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்