ஆத்தா நான் பீட்டாவுக்கு மாறிட்டேன்…

வயல் வரப்புல அரைக்கால் சட்டை போட்ட ஹீரோ கையில் ஒரே ஒரு சிலேட் மட்டும் உள்ளடக்கிய மஞ்சள் பையை உயர்த்தி சுத்தியபடியே ஓடி வருகிறார்..

போங்கையா பீட்டாவுக்கு மாறிட்டதச் சொல்ல ஏன் இந்த பில்ட் அப்.

சிலர் அதிக பதிவுகள் இருந்தால் மாறுவது கடினம் என்றிருந்தார்கள். என் பதிவுகளில் தேனில் மட்டும் 197 பதிவுகள் இருந்தன (ஆமமங்க விரைவில் டபுள் செஞ்சுரி) இன்னும் பல பதிவுகளையும் சேர்த்தால் எண்ணிக்கை 300 நெருங்கும். ஆனாலும் என்னால் எளிதில், 10 நிமிடங்களுக்குள்ளாகவே மாற முடிந்தது.

நான் ஏற்கனவே வைத்திருந்த பீட்டா கணக்கிற்கு மாறியதால் எளிதாயிருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

முயன்று பாருங்கள்.

முதலில் ஒரு பீட்டா(புதிய) ப்ளாகர் கணக்கை துவங்குங்கள். சோதனை வலைப்பதிவொன்றை துவங்குங்கள். சோதனைப் பதிவிடுங்கள். லாக் அவுட் செய்து வெளியேறுங்க்கள்.

பின்னர் Blogger.com ன் முகப்பில் Switch now எனும் பொத்தானை அழுத்தி கணக்கை மாற்றிக்கொள்ளவும்.

இருந்தாலும் ‘விதியாகப் பட்டது வலியது… அதை யாராலும் மாற்ற இயலாது’.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....4 மறுமொழிகள் to “ஆத்தா நான் பீட்டாவுக்கு மாறிட்டேன்…”

 1. கோவி.கண்ணன் [GK] சொல்கிறார்:

  ஜோதியில் கலந்தாச்சா ?
  நல்ல பயன்பாடுகள் இருக்கிறது…RSS Feed மற்றும் பல … எஞ்சாய் !

  இரட்டை சதம் போடப் போவதற்கு வாழ்த்துக்கள் !

 2. Anonymous சொல்கிறார்:

  நான் எனது தமிழ் வலைப்பதிவை பீட்டாவிற்கு மாற்றாமலே இருந்தேன். காரணம் தமிழ்மணத்தில் பதிய எதுவும் பிரச்சினையாக இருக்கும் என்று. ஆனால் நேற்று பலவந்தமாக நான் google-ஆல் பீட்டாவிற்கு மாற்றப்பட்டேன்:-) சந்தோசமான விசயம் என்ன என்றால், தமிழ்மணத்தில் பதிய எதுவும் பிரச்சினை இல்லை:-)

  http://internetbazaar.blogspot.com

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கண்ணன்,
  இன்னும் பலன்களை அனுபவிக்கத் துவங்கவில்லை. புதிய வார்ப்புருவுக்கு 200வ்வது பதிவுக்கப்புறம்தான் மாறப் போகிறேன்.

  வாழ்த்துக்கு நன்றி.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //சந்தோசமான விசயம் என்ன என்றால், தமிழ்மணத்தில் பதிய எதுவும் பிரச்சினை இல்லை:-)//
  பழைய டெம்ப்ளேட் வைத்திருந்தால் இதில் பிரச்சனை எதுவுமில்லை

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்