தேன்200:உடன்பிறப்பே…

கடிதம்

உடன்பிறப்பே,
இது எனது 200வது பதிவு. இப்போதுதான் 100போட்டு ஆடிக்கொண்டிருந்தேன் அதற்குள் 200 எகிறிவிட்டதை நினைக்க நினைக்க இருநூறு திருக்குறள்களை மனப்பாடம் செய்துவிட்ட பெருமை தோன்றுகிறது.

வலைப்பதிவராய் வெற்றிபெற்றிருக்கும் சிலரில் இந்த சிறிலும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

நீ இன்றி இது சாத்தியமா? எண்ணிப்பார். உனது (பின்)ஊட்டங்களை அள்ளித் தந்து என்னை மேலும் மேலும் எழுதச் செய்து உன்னையே நீ சோதனைக்குள்ளாக்கிகொள்ளும் அந்த துயரத்தை எண்ணிப்பார். இரவுபகலாய் விழித்திருந்து (பகலில் விழித்திருப்பது எனக்கு கஷ்டம்) நான் எழுதிய இந்தப் பதிவுகளை அன்றே நீ படிக்காதிருந்தால் இன்று 200 போட்டிருப்பேனா எண்ணிப்பார்.

தமிழா விழித்தெழு. கீபோர்ட்மேல் நீ தூங்கி விழுந்து www.xxxxxxxxxxxxxxxxx என கணினியில் தெரியுது பார். ‘தவறான’ தளத்துக்குச் செல்வதற்குமுன் விழித்தெழு.

உடன்பிறப்பே. என் பதிவுகளை படித்ததோடல்லாமல் சில நேரங்களில் நான் போட்டியில் வென்று ஈ புத்தகப் பரிசுகளை வாங்கவும் உதவினாய். உண்மையில் அவை ‘ஈ’ புத்தகங்களே. படிக்க நேரம் ஒதுக்காமல் ஈ ஆடிக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் தேனைப் படித்த நீ ஒரு தேனீ.

சில நேரங்களில் நான் தவறிழைத்தபோது எனை தட்டிக்கேட்டாயே உன் நேர்மையை பாராட்டுகிறேன். இடித்துரைப்பதே நட்பு. இடியாய் உரைப்பது இணைய நட்பு என்பதை செவ்வனே உணர்த்தினாய்.

காமெடி செய்தால் :) எனவும் கவலையைச் சொன்னால் :( எனவும் உன் முகபாவங்களைக் காட்டி மகிழ்வித்தாயே மறக்க முடியுமா? சிறிய புன்னகை செய்துவிட்டு LOL எனப் புழுகினாயே (புகழ்ந்தாயே) மறக்க முடியுமா? பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கே பின்னூட்டமிட்டாயே மறக்கமுடியுமா? என் பதிவுகளுக்கு இணைப்பைத் தந்தாயே மறக்கமுடியுமா? அல்ஸ்தைமர் வந்தபோதும் இந்த அன்பை மறவேன் மறவேன் எனச் சொல்லிக் கொள்கிறேன்.

இனிவரும் காலம் இனியகாலமாய் அமையட்டும். தொடர்ந்து தேனைப் பருகிவந்தால் உடல் நலம் கூடும் என்பது உனக்குத் தெரியாதா? (கூடவே லெமன் ஜூஸ் சேத்துகிட்டா இன்னும் நல்லது)

நான் 300 பதிவைத் தாண்டும்போதாவது நீ பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியிருப்பாய் என நம்புகிறேன். பதிவுகளைப் படித்து யாரும் திருந்துவதில்லை என்பதையும் நானே பதித்திருக்கிறேனே என எண்ணி வருந்துகிறேன்.

என்னை வாழ்த்திய நீ வாழ்க.
உன் குலம் வாழ்க.
உன் பதிவுகளில் பின்னூட்டம் செழிக்கட்டும்
உன் ஹிட் கவுண்டர் எகிறட்டும்
இணையம் இனியம் ஆகட்டும்
என்னை திட்டினாலும்
பின்னூட்ட எண்ணிக்கையை
உயர்த்தினாயே,
உடன்பிறப்பே!
‘வரப்புயர’ என்றாளே என் பாட்டி
நான் சொல்கிறேன்
மவுஸ் உயர
கீ போர்ட் உயர
மானிட்டர் உயர
என உயர உயர நீ நீடூழி வாழ்க.

(டிஸ்கி: யார் மனதும் புண்பட்டிருந்தால் மருத்துவரைப் பார்க்கவும்)

சீரியசா…
பதிவுலகில் என்னை அங்கீகரித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. வரும் பதிவுகளில் இந்த இருநூறு தந்த அனுபவங்களைப் பற்றி, நண்பர்களைப் பர்றி பகிர இருக்கிறேன். அவர்களும் தேனைப் பற்றி எழுத இருக்கிறார்கள். உங்கள் விமர்சனங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி cvalex at yahoo dot com

சிறப்பு நன்றி


நன்றி! நன்றி! நன்றி!

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....31 மறுமொழிகள் to “தேன்200:உடன்பிறப்பே…”

 1. சிவபாலன் சொல்கிறார்:

  சிறில்,

  200 க்கு வாழ்த்துகள்!!

  சீக்கிரமே 500 எட்ட டபுள் வாழ்த்துக்கள்!!

  நல்லா எழுதியிருக்கீங்க!! இரசித்து படித்தேன்!!

  “200 வது தேன்” மிகவும் சுவையாக இருக்கிறது!!

  நன்றி

 2. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்!

 3. வெற்றி சொல்கிறார்:

  சிறில்,
  வாழ்த்துக்கள்.
  நான் உங்களின் பல பதிவுகளைப் படித்துச் சுவைத்திருக்கிறேன். எந்தவொரு தனிநபரையும் தாக்காது மிகவும் கண்ணியமாக சொல்ல வரும் சங்கதியைத் தெட்டத் தெளிவாகச் சொல்வது என்பது உங்களுக்கு கைவந்த கலை என்பதை உங்கள் பதிவுகள் மூலம் நான் அறிந்திருக்கிறேன்.

  கிட்டடியில்[அண்மையில்] நீங்கள் தமிழ்வேதத்திற்கும் விளக்கவுரை எழுதத் தொடங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நானும் இப்போதுதான் குறளை மனப்பாடம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

  நீங்கள் இன்னும் பல பதிவுகள் எழுதி எம்மை மகிழ்விக்க தமிழன்னையைப் பிரார்த்திக்கிறேன்.

 4. நிர்மல் சொல்கிறார்:

  ;)

 5. வெட்டிப்பயல் சொல்கிறார்:

  200க்கு வாழ்த்துக்கள்!!!

 6. G.Ragavan சொல்கிறார்:

  ஒரு நூறு என்று சொல்லும் முன்னே
  இருநூறு எழுந்து
  முன் நூறு போட்டதை
  நான் நூறு கூட்டி
  ஐ நூறு கூடியதே
  இது அரு நூறுதான் என்று
  பாராட்டு எழு நூறு
  என் நூறோ? உன் நூறன்றோ!
  வாழ்க வளமுடன்!

 7. அருட்பெருங்கோ சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்…

  தொடர்ந்து எழுதி அடுத்த மைல் கல்லைத் தாண்டுங்கள்…

 8. கப்பி பய சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்!

 9. Boston Bala சொல்கிறார்:

  சூப்பர்!

  —அல்ஸ்தைமர் வந்தபோதும் இந்த அன்பை மறவேன் —

  : )

 10. துளசி கோபால் சொல்கிறார்:

  200க்கு வாழ்த்து(க்)கள்.

  அனைத்தையும் ரசித்’தேன்’.

  இது நிச்சயம் ‘புளுகு’ இல்லை.

  ( தனி மடல் பார்க்கவும். திட்டு எல்லாம் அங்கெ இருக்கு!)

 11. SurveySan சொல்கிறார்:

  வாழ்த்துக்கள். சூப்பர்.

  200 பதிவு எழுதணும்னா ரொம்ப வருஷமாகும்ல?

  ஹ்ம். வயசாவுது :(

 12. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  200க்கு வாழ்த்துகள் சிறில்.

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சிவபாலன். வாழ்த்துக்கும் இந்த பாராட்டுக்கும்.. எப்போதும் நீங்கள் தரும் பாராட்டுக்களுக்கும் நன்றி

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வெற்றி,
  கனிவான வார்த்தைகளுக்கு நன்றி.
  தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

  உங்கள் பின்னூட்டத்தை பின்பு பதிவில் பயன்படுத்த இருக்கிறேன்

  நன்றி.

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி நிர்மல், வெட்டிப்பயல்.
  அடிக்கடி ஊக்கம் தருபவர்களில் நீங்களும் அடக்கம் மிக்க நன்றி.

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இராகவன்
  ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தச் சொன்னால் நூறு இருநூறு என வரிசைப்படுத்துகிறீரே?

  ஓ! நீர் நூறுதடவ சொன்னா ஒருதடவ சொன்னதுமாதிரியா?

 17. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி கப்பி பய.

 18. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி பாபா.

 19. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  /200க்கு வாழ்த்து(க்)கள்.

  அனைத்தையும் ரசித்’தேன்’.

  இது நிச்சயம் ‘புளுகு’ இல்லை.

  ( தனி மடல் பார்க்கவும். திட்டு எல்லாம் அங்கெ இருக்கு!) //

  மிக்க நன்றி துளசி அக்கா.

  டீச்சர்கிட்ட திட்டுவாங்கலன்னா முன்னேற முடியுமா?

  :)

 20. பொன்ஸ்~~Poorna சொல்கிறார்:

  அதுக்குள்ள இருநூறு கண்டாச்சா!!! கலக்குங்க..
  நான் அம்பதாவது பதிவு போட்ட பொழுது தான் நீங்க நூறடிச்சீங்க.. இப்போ நான் நூத்தி முப்பதில் தயங்கி நின்றுகிட்டிருக்கேன்.. நீங்க இருநூறுக்கு வந்துட்டீங்க.. பயங்கர சுறுசுறுப்பான தேனீ தான் :)))

  சீக்கிரமே நானூறு காண வாழ்த்துக்கள்.. :)))

 21. தேவ் | Dev சொல்கிறார்:

  பார்ட்னர் வாழ்த்துக்கள் :)

 22. Mathuraiampathi சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்……

 23. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சர்வேசன்,
  வாழ்த்துக்கு நன்றி.

  //200 பதிவு எழுதணும்னா ரொம்ப வருஷமாகும்ல?

  ஹ்ம். வயசாவுது :( //

  அதெல்லாம் இல்லீங்க எனக்கு 1 வருஷம் 1 மாசந்தான் ஆச்சு.

  :)

 24. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பொன்ஸ்,
  //அதுக்குள்ள இருநூறு கண்டாச்சா!!! கலக்குங்க..
  நான் அம்பதாவது பதிவு போட்ட பொழுது தான் நீங்க நூறடிச்சீங்க.. இப்போ நான் நூத்தி முப்பதில் தயங்கி நின்றுகிட்டிருக்கேன்.. நீங்க இருநூறுக்கு வந்துட்டீங்க.. பயங்கர சுறுசுறுப்பான தேனீ தான் :)))
  //

  நன்றி நன்றி. யானையவிட தேனீ வேகமா ஓடணும்ல..

  //
  சீக்கிரமே நானூறு காண வாழ்த்துக்கள்.. :))) //
  டாங்ஸ்..

 25. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மதுரையம்பதி,
  முதல் முறையா வந்து வாழ்த்துறீங்க.. நன்றி.

  :)

 26. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இந்த வலைப்பதிவை படிப்பதில் தொழில்நுட்ப பிரச்சனையுள்ளதா?

 27. Vicky சொல்கிறார்:

  சிறில்,

  டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் :)

  அது சரி, blogger profileல் வயது: 250னு இருக்கிறதே. 200 பதிவையும் உங்க வயசு கூட கூட்டிகிட்டீங்களா :) (உங்க வயசை சரியா கூட்டிட்டேனா ;) )

 28. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //அது சரி, blogger profileல் வயது: 250னு இருக்கிறதே. 200 பதிவையும் உங்க வயசு கூட கூட்டிகிட்டீங்களா :) (உங்க வயசை சரியா கூட்டிட்டேனா ;) )
  //

  ரெம்பவே கூட்டிட்டீங்க.

  வாழ்த்துக்கு நன்றி..

 29. கால்கரி சிவா சொல்கிறார்:

  200க்கு வாழ்த்துக்கள். 1000 பதிவுகள் கண்ட அபூர்வ சிறில் அலெக்ஸ் எனப் பெயர் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

 30. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //200க்கு வாழ்த்துக்கள். 1000 பதிவுகள் கண்ட அபூர்வ சிறில் அலெக்ஸ் எனப் பெயர் வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் //

  நன்றி சிவா..
  இணையத்தில் கிடைத்த இனிய நண்பர்களில் நீங்களும் ஒருவர். நன்றி.

 31. சுந்தர் / Sundar சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில் !

  உங்கள் எழுத்துக்களில் இருக்கும் நடுநிலைமை பாரட்டுக்குரியது.
  உங்கள் எழுத்துக்கள் இணைய சமுதாயத்தை சிர்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை எனக்கு !

  வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்