தேன்200: பாஸ்டன் பாலா

பாஸ்டன் பாலா நல்ல நண்பர். வித்தியாசமான பதிவர். நல்ல இன்ஸ்பிரேஷன். அப்பப்ப புரியாத புதிர். அவர் எனக்கு சோதனையா கேட்டிருக்கும் சில கேள்விகள் கீழே.

பாபா கேட்ட கேள்வி
1. தமிழகத்தில் அடுத்த தேர்தலில் (நாடாளுமன்றம் அல்லது சட்டசபை)விஜய்காந்த்தின் தேமுதிக + பா.ஜ.க. பெரும்பான்மை பிடிக்கும். அதிமுகஏற்கனவே பயப்படுகிறது. வைகோ தேசிய அளவில் ஆளுங்கட்சி எதுவோ, அதன் பின்வளைந்து கொடுப்பார். பா.ம.க.வும் பாலாறு, பாபா என்று முறுக்கிக் கொண்டுசமயம் பார்த்து வெளிநடப்பு நாடகத்தில் கலந்து கொள்ளும். விஜயகாந்த்முதலமைச்சர்: கனவா? நனவா? நடக்கப் போவதா? ஏன்?

கேட்க வந்த கேள்வி: தமிழ்நாடு பாலிட்டிக்ஸ் தெரியுமா?

கேட்டதுக்கு பதில்: வி. காந்த் புதியவர் என்பதால் வந்ததும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது (எனக்கு) அவரும் இப்ப மத்த அரசியல்வாதிகள் மாதிரி நடந்துக்கிறது வருத்தத்தை அளிக்கிறது. இருந்தாலும் அவருக்கு ஒரு வாய்ப்பு வரலாம் என்பதில் சந்தேகமில்லை.

கேட்க வந்ததுக்கு பதில்: ‘அரசியல் பேசாதீர்’

பதில் கேள்வி: தேர்தல் 2060 கதைகள் நியாபகம் இருக்குதா?

================================================

பாபா கேட்ட கேள்வி
2. இந்தியாவின் அனைத்து ஜனாதிபதிகளிலும், அப்துல் கலாம் மட்டுமே பதவியைசரிவர பயன்படுத்தவில்லை என்னும் குற்றச்சாட்டு சரியா? ஏதோ கொஞ்சமாய்மிரட்டிய ஜெயில் சிங், தன் உடம்பை பேணிக் கொண்ட சங்கர் தயாள் சர்மாபோன்றவர்கள் போல் இல்லாமல் குழந்தைகளை உற்சாகப்படுத்துவது மட்டுமே ‘முதல்குடிமகனின்’ முழு நேர வேலையா?

கேட்கவந்த கேள்வி: பால் தாக்கரே நல்லவரா கெட்டவரா?

கேட்டதுக்கு பதில்: ஒரு வித்தியாசத்துக்கு ஜனாதிபதி இன்ஸ்பையரிங்கா இருக்கிறது நல்லதுதானே. சேனைகளை உற்சாகப் படுத்துவதத விட குழந்தைகளை உற்சாகப்படுத்துவது சிறப்பான சேவை என்றே நினைக்கிறேன்.

கேட்கவந்ததுக்கு பதில்: ‘தெரியலியே’

பதில் கேள்வி: பால் தாக்ரே புளித்தால் என்ன ஆவார்?
==========================================

பாபா கேட்ட கேள்வி
3. க்ளிண்டனுக்குப் பிறகு பொருளாதாரம் வீழ்ச்சியான நேரத்தில் அரியணைஏறியவர் ஜார்ஜ் புஷ். பணவீக்கத்தை ஏற்றாமல், வேலையில்லாத்திண்டாட்டத்தைக் குறைத்து, திடீர் எதிரிகளை அவர்களின் கோட்டைக்கே சென்றுஎதிர் கொண்டிருக்கிறார். ஜனாதிபதி புஷ் வல்லவரா? முட்டாளா? கால் போனபோக்கில் அலைந்து நாட்டை செலுத்துபவரா?

கேட்கவந்த கேள்வி: அமெரிக்காவில் தொடர்ந்து இருக்கலாமா?

கேட்டதுக்கு பதில்: புஷ் முட்டாளாயிருப்பதில் வல்லவர்.

கேட்கவந்ததுக்கு பதில்: தாவீது ஆண்டாலும் கோலியாத் ஆண்டாலுமமென்அக்கொரு கவல இல்ல.

பதில் கேள்வி: பாஸ்டனில் குளிர் எப்படி? (புஷ் பத்தி கேள்விகேட்குமளவுக்கு ஒண்ணுமில்லாததால்)
==========================================

பாபா கேட்ட கேள்வி
4. இராக்கின் உள்நாட்டுக் குழப்பத்திற்கு இரு குழுக்களைக் காரணமாகசொல்கிறார்கள். பாதர் ப்ரிகேட்ஸ் மற்றும் மெஹ்தி படை. இரண்டுக்குமே இரான்போதிய அளவு பணம், படைக்கலம் தந்து உற்சாகப்படுத்தும் நிலையில், இராக்கைவிட்டு இந்த நொடியே அமெரிக்கா வெளிவருவது உத்தமமா? இரானையும் போட்டுத்தாக்குவது உசிதமா? இராக்கில் மட்டும் தற்போதைய துரத்தல் படலம் தொடரவேண்டுமா?

கேட்க வந்த கேள்வி: உலக அரசியல் தெரியுமா?

கேட்டதுக்கு பதில்: இராக்கின் இன்றைய நிலமைக்கு காரணம் அமெரிக்கா. அமெரிக்காவை மற்ற உலக நாடுகள் போருக்கு தார்மீகப் பொறுப்பேற்று வெளியேற்றவேண்டும். பின்னர் இராக்கை அமெரிக்க கூட்டு நாடுகள் தவிர்த்த உலக நாடுகள் சேர்ந்து ஸ்திரப் படுத்த வேண்டும்.

கேட்க வந்ததுக்கு பதில்: ஏதோ டீ கட பெஞ்ச்காரர்களுக்குத் தெரிந்த அளவுக்கு தெரியும்.

பதில் கேள்வி: மத்திய கிழக்கு நாட்டுக்கு வேலைக்குப் போவீங்களா?
==============================================

பாபா கேட்ட கேள்வி
5. நாளைக்கு சூப்பர் பௌல். உங்க அணி ஜெயிக்குமா? என்ன ஸ்கோர் இருக்கும்?

கேட்க வந்தது: விளையாட்டு பிடிக்குமா?

கேட்டதுக்கு பதில்: கரடிங்க வென்றா நமக்கு சந்தோஷந்தான் ஆனா எதிரணியில இந்தியர்களாமே.

கேட்க வந்ததுக்கு பதில் + பதில் கேள்வி: சூப்பர் பௌல்னா பெரிய பாத்திரம்னு அர்த்தமா?

கொசுறு: தாங்கள் ஏன் தற்கால நடப்புகளை அலசும் பதிவுகளில் பின்னூட்டம்மட்டும் கலக்கலாகக் கொடுத்து ஒதுங்கிவிட்டு, பதிவுகளாக எண்ணங்களைசேர்த்து வைப்பதில்லை?

பதிவுகள் எண்ணங்களை சேர்த்துவைக்க மட்டும் என்றால் பரவாயில்லை அதை வெளிப்படுத்தவும் செய்கின்றனவே.
:)

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “தேன்200: பாஸ்டன் பாலா”

 1. ஜி சொல்கிறார்:

  என்னதிது.. பாபா பவுண்டரி போட்டார்னா, நீங்க சிக்ஸரா அடிச்சிருக்கீங்க.. :))

 2. Boston Bala சொல்கிறார்:

  ஒவ்வொன்றும் ‘ஊத்தப்பா’ அடிக்கும் புத்தம்புதிய சிக்ஸர் பதில்.

  என்னடா கேள்வி கேக்கறே என்று போட்டுத் தாக்காமல், டீலில் விட்டதுக்கு நன்றி சிறில் :)

 3. துளசி கோபால் சொல்கிறார்:

  :-)))))

  பால் புளிச்சால் தயிர்

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜி,
  மொத்தத்துல ஸ்கோர் பண்ணிட்டோம்ல

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  துளசி அக்கா…
  சரியான பதிலைச் சொல்லி ஆயிரம் கிராம் தங்கம் வென்றிருக்கீங்க.

  :)))

  தங்கம்ல … செல்லம்லன்னு சொல்வோமே அந்த தங்கம்.
  :))

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்