‘த’வுல ‘இ’ காண முடியுமாங்க?

ஆமாங்க! பொண்டாட்டி புள்ளைய இந்தியாவுக்கு வண்டியேத்தி விட்டுட்டு தனிமையில உக்காந்திருக்கேன்.

வரும் இரு மாதங்கள் கொஞ்சம் (உருப்படியா) எழுதுறதுல செலவிடலாம்னு நினைக்கிறேன்.

தேன்200 பதிவுகளில் மதிப்புக்குரிய நம் சக வலைப்பதிவாளர்கள் சிலர் என்னை நட்பு மழையில் நனைத்தெடுத்ததில் ஜலதோஷமே வந்திடுச்சு(கூடவே கொல்லும் சிகாகோ குளிரும் -25
-30ன்னு டிகிரி மைனஸ்ல எகிறிட்டிருக்கு). அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

இப்ப புரியுதா? 200 பதிவுகள் சீக்கிரம் போடணும்னா ஓசி பதிவுகள் போடத் தெரியணும்.

நண்பர்களே இன்னும் இரண்டு மாதங்கள் தனிமையில்… பதிவுகளை படிப்பதிலும் எழுத்திலும் கவனம் செய்யலாம் என இருக்கிறேன். (பாப்போம்).

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....12 மறுமொழிகள் to “‘த’வுல ‘இ’ காண முடியுமாங்க?”

 1. சேதுக்கரசி சொல்கிறார்:

  நோ தங்கமணி.. என்சாயா? :)

 2. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //இப்ப புரியுதா? 200 பதிவுகள் சீக்கிரம் போடணும்னா ஓசி பதிவுகள் போடத் தெரியணும்.
  //

  ஓசிப் பதிவு சரி… ஆனால் இந்த இடுகை ஒரு பதிவா ?
  :)

 3. மணிகண்டன் சொல்கிறார்:

  பொட்டியெல்லாம் கரெக்டா எடுத்துட்டு போயிட்டாங்களா?ஏன்னா நீங்க பாட்டுக்கு ஜாலியா ‘ஐ என் பொண்டாட்டி ஊருக்கு பொய்ட்டா’னு குதிக்க அவங்க வந்து நிக்கப்போறாங்க..

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  என்சாயா? நீங்கவேற.. நமக்கு தனிமைன்னா பிடிக்காதுங்க..
  தனியா தூங்க பயம்

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ஓசிப் பதிவு சரி… ஆனால் இந்த இடுகை ஒரு பதிவா ?//
  என் 200ன் சீக்ரட்ட கண்டுபிடிச்சிட்டீங்களே? குறும்பு.

  வலைப்பதிவுகள்னா இதுமாதிரி வெட்டி சேதிகளையும் சொல்லணுங்க

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மணிகண்டன்.
  கொஞ்சம் இருங்க போயி எங்கிட்ட இருக்கிறது என் பாஸ்போர்ட்டா அவங்களதான்னு பாத்துட்டு வர்றேன்.

 7. மணிகண்டன் சொல்கிறார்:

  //என்சாயா? நீங்கவேற.. நமக்கு தனிமைன்னா பிடிக்காதுங்க..
  தனியா தூங்க பயம்//

  எதுக்குங்க பயம்? துணைக்கு தான் நம்ம ஜானி வாக்கர்,கிறிஸ்டியன் ப்ரதர்ஸ் எல்லாம் இருக்கங்களே :)

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மணிகண்டன்,
  இப்பத்தான் துவங்கியிருக்கு கச்சேரி.

  :)

 9. மணிகண்டன் சொல்கிறார்:

  ம் கிளப்புங்கள்..

  அடிக்கிற அடியில் ‘Liquor Store’ காலியாக வேண்டாமோ.

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மணி,
  பொதாக்குடியண்றது வேற பதிவருங்க.

  :)

 11. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //மணிகண்டன் said…
  ம் கிளப்புங்கள்..

  அடிக்கிற அடியில் ‘Liquor Store’ காலியாக வேண்டாமோ.
  //

  ஆகா சிறில்
  இது வேறா ? நடத்துங்க எஞ்சாய் !
  :)

 12. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  ஒழுங்கு மரியாதையா என் எல்லாப் பதிவுகளுக்கும் வந்து இதுவரை இருக்கும் எல்லா இடுகைகளையும் படித்து குறைந்தது ஒரு பின்னூட்டமாவது இடுங்கள். சொல்லிட்டேன். ஆமாம்.

  ஹலோ. எங்கே ஓடறீங்க? ஊருக்குப் போனவங்களைக் கூட்டிக்கிட்டு வரவா? எதுக்குங்க செலவு? பேசாம என் பதிவுகளைப் படிச்சுப்போடுங்க. :-))

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்