செய்திகள் வாசிப்பது சிறில் அலெக்ஸ்

என் முதல் குரல் பதிவு. பிழைகளை பொறுக்கவும் (சொல் + கருத்து)
உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும் (எழுத்தில் ஹி ஹி)

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....42 மறுமொழிகள் to “செய்திகள் வாசிப்பது சிறில் அலெக்ஸ்”

 1. SurveySan சொல்கிறார்:

  ஒன்னியும் கேக்கலியேபா?

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஐஐயோ..

  எனக்கு நல்லா கேக்குதே..
  mute பண்ணியிருக்கீங்களா?

  சத்தமா வச்சு கேட்டுப்பாருங்க..
  பிரச்சனையா இருந்தா சொல்லுங்க

 3. Udhayakumar சொல்கிறார்:

  வீட்ல ஆள் இல்லன்னா சும்மா உக்கார முடியலை போல இருக்கு…

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  உதயகுமார்,
  உங்களுக்கு கேட்குதா?

  சரி .. வீட்ல யாருமே இல்ல ஒரு சந்திப்ப போடலாமா?

  உங்க இடத்துக்கு வரணும்னாலும் வர்றேன்.

  :)

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சிறில்,

  நல்ல முயற்சி. முதலில் எழுதி வைத்துக்கொண்டு படித்தால் கோர்வையாக வரும்
  என்றாலும், கருத்துக்களின் ஆற்றோட்ட வெளிப்பாட்டை, செந்தமிழில் பேச
  வேண்டிய கட்டாயம் (ஆசை?) குறைத்துவிடுகிறதுபோல் தோன்றுகிறது.

  பேச்சுத் தமிழில், இன்னொருவருடன் உரையாடல் போலச் செய்தால் இன்னும்
  எபக்டிவாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

  காவிரியின் தலைபோகும் பிரச்சினையை முரளி மனோகர் ஓவர்டேக் செய்ததில்
  எனக்கும் வருத்தமே. உங்கள் அலசலுடன் ஒத்துப்போகிறேன்.

  பெனாத்தல் சுரேஷ் தனிமடலில் அனுப்பிய பின்னூட்டம்

 6. Karthik Jayanth சொல்கிறார்:

  சிறில்,

  இந்த பதிவுக்கு கமெண்ட்டும் ஆடியோதான் சரியா இருக்கும்[your voice sounds little different to me. May be its been a long time since i spoke o you :)]

  //வீட்ல யாருமே இல்ல ஒரு சந்திப்ப போடலாமா?

  வலை பதிவர் மாநாடு ரீஜிஸ்ரர்டர்டு உணவான போண்டா கிடைக்குமா ;-)))))))))))

 7. Anonymous சொல்கிறார்:

  //Pandy! avarkaLe thanni party//
  naan rasiththa idam!lol! REduce English usage! It was hard to me in the begining. but soon you can do that.. like me!lol!

  All the best and i am happy that you will add more and more in future.

  anbudan
  OSAI Chella ( Voice Blogger!Lol!)
  http://osai.tamil.net

 8. உங்கள் நண்பன் சொல்கிறார்:

  சிறில் நல்லா கேக்குதுங்க! முழு செய்தியையும் கேட்டேன்.

  குரல்ல “இன்னும்” இளமையா தானுங்க இருக்குறீங்க!:))))

  தங்களின் தமிழ் ஆனால் உச்சரிப்பு சில நேரங்களில் BBC தமிழ் செய்தி வாசிப்பை நினைவுபடுத்துகின்றது!
  (BBC தமிழ் செய்தி போல இருக்குனு பெருமைப்படுறதா? இல்லை சாமானிய தமிழ் போல இல்லைனு வருத்தப் படுறதா?)

  எழுதி வைத்துப் போசும் போது தரம் இன்னும் உயரும் என்று எண்ணுகின்றேன்.

  முரளிமனோகர் பற்றிய தங்களின் கருத்துக்களில் நான் 100 % ஒத்துப்போகின்றேன்.

  சகஜமாக பேச முயற்சிக்கவும்( இது முதல் “வாசிப்பு” தானே இன்னும் நிறைய இருக்குல்ல அதுல சமாய்ச்சிடலாம் சிறில்)

  அன்புடன்…
  சரவணன்.

 9. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  சிறில்,
  போலி என்கவுண்டரை இதற்கு முன்பதிவில் செய்துவிட்டு… போலி என்கவுண்டருக்கு கண்டனமா ?
  :)))))))))

  விளம்பரம் இல்லாமால் 15 நிமிட செய்தி நல்லா இருந்தது. முதல் முயற்சி என்பதால் குறை சொல்ல ஒன்றும் இல்லை.
  :))))

  வலைப்பதிவுகள் ஒரு கண்ணோட்டம் வாரம் ஒருதடவை ஒலி பரப்புங்க !

  குரலில் அறிவிப்பாளருக்கான தெளிவும், வளமும் இருக்கிறது.

 10. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பெனாத்தல் சுரேஷ்,
  உங்க கருத்துக்களுக்கு நன்றி. அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் நல்ல பண்ணுவேங்கிற நம்பீகை இருக்கு. செல்லா சொல்றமாதிரி பழகினா சரியாப்போகும்.

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  KJ,
  போண்டா சந்திப்பெல்லாம் பழசு பர்கர் பீசான்னு ஜமாய்க்கலாம் வாங்க.

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஓசை செல்லா
  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் பாட்காஸ்ட் கேட்டிருகேன்.

  நிச்சயம் வரும் பதிவுகள் சிறப்பா வரும்னு நம்பிக்கையிருக்கு.

 13. மதுசூதனன் சொல்கிறார்:

  நான் கூட ஒரு பதிவு போட்டேனுங்க. டோண்டு வேற பேர்ல பின்னூட்டம் போட்டதைப் பத்தி பக்கம் பக்கமா எழுதும் நம்ம மக்கள், இதை எல்லாம் கவனிக்கவே இல்லை!

  காவிரி – அரசு என்ன செய்யப் போகிறது?

  மேல உள்ள சுட்டியை சொடுக்குங்க.

 14. dondu(#11168674346665545885) சொல்கிறார்:

  அகில இந்திய வெளியுறவு சேவையில் செய்திகள் ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்து படிக்கும் அனுபவம் பெற்றவன் என்று நான் எழுதுவதை நீங்கள் தவறாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

  1. முதலிலேயே எழுதி வைத்து சற்றே வேகமாகப் படிப்பது நலம்.
  2. இப்போதைக்கு நீங்கள் சத்தமாக மூச்சு வாங்குகிறீர்கள். மூச்சுக் கட்டுப்பாடு ப்ராக்டீஸ் செய்யவும்.
  3. செய்திகளை இரண்டு மூன்று முறை வாசித்துவிட்டு ஃபைனல் ரிகார்டிங் செய்ய ஆரம்பிக்கவும்.
  4. எங்கு தடுமாறினீர்கள் என்பதை பார்க்கவும் ரெகார்டிங்குகள் தேவை. அவற்றை கூர்ந்து கேட்டு, தடுமாறிய இடங்களில் மார்க் செய்து அடுத்த முறை தவிர்க்கவும்.
  5. ஆ, ம்ம் என்றெல்லாம் முனகாதீர்கள்.

  என்னைப் பற்றிய செய்திகள் வாசித்ததற்கு நன்றி. எனது தரப்பையும் குறிப்பிட்டிருக்கலாம். நான் செய்தது வெறும் புனைப்பெயர். என்னை பீடித்தவர் செய்தது கேரக்டர் அஸ்ஸாசினேஷன் என்பதையும் கோடி காட்டியிருக்கலாம். அப்படியும் எனது புனைப்பெயரின் கீழ் வெளியிட்ட பின்னூட்டங்கள் எனது வழமையான தரத்துடனேயே இருந்தன. இதை கோடி காட்டியிருந்தீர்கள், நன்றி

  நான் வருத்தம் தெரிவிக்காததற்கு காரணம் நான் ஒன்றும் தவறு செய்ததாக நினைக்கவில்லை என்பதே நிஜம்.

  மேலும் குடியே மூழ்கியது போலவும், நான் என்னவோ கொலையே செய்தது போலவும் ஓவர் பில்ட் அப்பும் டூ மச்தானே.

  பொதுவாக ஒரு நல்ல முயற்சி. இன்னும் மெருகேற்றுங்கள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 15. SK சொல்கிறார்:

  பாராட்டத்தக்க முதல் முயற்சி.

  சொல்ல வேண்டிய கருத்துகளை முறைப் படுத்தவில்லையோ என்ற உணர்வு ஏற்பட்டது.

  இதை செய்திகள் எனத் தலைப்பிட்டதால் ஏற்பட்ட எதிர்பார்ப்பினால் இதெல்லாம் குறையாகத் தெரிந்தது.

  “உங்களுடன் சில மணித்துளிகள்”னு போட்டிருந்தா, இயற்கையா இருந்திருக்கும்!

  வாழ்த்துகள்!

 16. ஜோ / Joe சொல்கிறார்:

  சிறில்,
  முழுவதும் கேட்டேன்..நல்ல முயற்சி!

  எழுத்தில் தெரியும் நிதானம் பேச்சிலும் தெரிகிறது .

  மற்ற மாநில பிரச்சனைகளில் தமிழக மக்களின் அணுகுமுறையைச் சொன்னீர்கள் .சரியாகவே இருந்தது .ஆனால் இப்போது யாரும் இந்த தீர்ப்பை வைத்து மற்றவர் எரிச்சல் படும் படி கொண்டாடி விடவில்லை என்று தான் நினைக்கிறேன்.

  டோண்டு விஷயத்தில் அவர் பல பெயரில் வந்தாலும் ஆபாசமாக எழுதவில்லை என்று சொல்லி எதை நிரூபிக்க முயல்கிறீர்கள்?

  ஒன்று நீ அவன் பக்கம் இல்லை என்பக்கம் என்று புஷ் தனத்தோடு தமிழ் பதிவர்களையே கூறு போட்டவர் இந்த டோண்டு .சிறு விமர்சனம் வைத்தால் கூட போலியின் ஆதரவாளன் என்று பலரை மனசாட்சியே இல்லாமல் முத்திரை குத்தியவர் அவர் .தயவு செய்து மேலோட்டமான உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.

  இந்த ஒலிப்பதிவு முயற்சி தொடரட்டும்.வாழ்த்துக்கள்!

 17. குமரன் (Kumaran) சொல்கிறார்:

  நல்ல முயற்சி சிறில். நல்ல குரலும். :-)

 18. Boston Bala சொல்கிறார்:

  மொத்தமாக நன்றாக இருந்தது சிறில். தொடரவும்.

  பிசிறு தட்டாத குரல். தொடர்ச்சியான இடையூறு இல்லாத பேச்சு. தோன்றியதை எதார்த்தமாக பகிரும் இயல்பு நிலை. மிகவும் சிறப்பு.

  சில எண்ணங்கள்:
  1. தமிழ்மணத்தில் யாரும் எழுதவில்லையே என்று குறைப்படும் தொனியில் எனக்கு சம்மதமில்லை. Peer pressure போல் மற்றவர்கள் ‘கருத்துவதை’ பிரதிபலிக்கும் குழாமாக சில சமயம் தமிழ்மணம் தென்பட்டாலும், உங்களைப் போல் நதியின் ஓட்டத்தை விட்டு விலகி வித்தியாசமாக முயற்சிப்பவர்கள் பெருக வேண்டும். ‘யாரும் பதிவு போடவில்லையே’ என்று அங்கலாய்ப்பதை விட, ‘நான் எழுதியிருக்கிறேன்’ என்பது மகிழ்ச்சியான விஷயம்.

  2. குஜராத் கலவரத்தை எதிர்த்தால் (அல்லது ஆதரித்தால்) வாக்காக மாறும். காஷ்மீர் இராணுவ செயல்பாடுகளை முன்னிறுத்தினால் கம்யூனிஸ்ட் (அவர்கள் கூட ஆட்சியில் பங்கு வகிக்கிறார்களே) பட்டம்தான் கிடைக்கும். இராக் சதாம் தூக்கிலிடுதலைக் கூட கண்டிக்க தமிழகத் தலைவர்களுக்கு நேரம் கிடைக்கிறது. பக்கத்து மாநிலம் கஷ்டப்பட்டால், கண்டுக்காமல் போவது வோட்டு அரசியல்.

  3. கல்யாண வீட்டுக்கு சென்ற திமுக அரசு, 99 இடங்களில் மறுதேர்தல் நடத்த வைத்ததும், தேர்தல் ஆணையரை மாற்ற அரசு பெரிய மனது செய்யுமா என்று நீதிபதி வினவவும் அதிகாரம் இல்லை என்று சொன்னது. கலைஞரும் ஆற்காட்டாரை மனமாரப் பாராட்டி மகிழ்ந்ததை வைகோ+ஜெஜெ கண்டித்தார்கள்.

  தினமணி செய்தி: Arcot Veerasamy criticises Madras HC judges – ‘Judges want to rule Tamil Nadu’ « Tamil News: “முதல்வரை விமர்சிக்க நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை: ஆர்க்காடு வீராசாமி கடும் தாக்கு”

  அதற்கு பதிலாகத்தான் அந்த ஜெஜெ விவகாரம்.

  அதெல்லாம் இருக்கட்டும். அந்த நகைக்கடை விளம்பரம் பார்த்தீங்களா?

 19. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  உங்கள் நண்பன்,
  கருத்துக்களுக்கு நன்றி. இன்னும் சிறப்பா செய்ய முயல்கிறேன்.

 20. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கண்ணன்,
  நன்றி. நிச்சயமா வலைப்பதிவுகளை அலசுவேன். இன்னைக்கு கேக்க மறந்திடாதீங்க.

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  டோண்டு சார்,
  உங்கள நம்பி ஏமாந்துட்டோம்னு சொல்றவங்கள மனசில வச்சாவது சில வார்த்தைகள சொல்லியிருக்கலாம்னு தோணுச்சு.

  உங்க டிப்ஸ்க்கு நன்றி நிச்சயம் கடைபிடிக்க முயல்கிறேன்.

  நன்றி

 22. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  SK,
  சரியா சொன்னீங்க. முழுதான முயற்சியா இது இல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

  இன்னைக்கு முயலலாம்.

  தலைப்பு கொஞ்சம் ஈர்ப்பாயிருக்கணும்னு வச்சேன். நீங்க சொல்றதும் சரிதான்.. ஏன்னா நான் வாசிக்கல.. சில குறிப்புக்கள வச்சிகிட்டு பேசினேன்.

 23. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பாராட்டுக்கு நன்றி ஜோ.

  //ஒன்று நீ அவன் பக்கம் இல்லை என்பக்கம் என்று புஷ் தனத்தோடு தமிழ் பதிவர்களையே கூறு போட்டவர் இந்த டோண்டு .சிறு விமர்சனம் வைத்தால் கூட போலியின் ஆதரவாளன் என்று பலரை மனசாட்சியே இல்லாமல் முத்திரை குத்தியவர் அவர் .தயவு செய்து மேலோட்டமான உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.//

  நிஜமாக இந்தப் பிண்ணணிகள் எனக்குத் தெரியாது. ‘மேலோட்டமான’ எனும் உங்கள் கருத்து சரியானதே.

 24. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தல பாபா,
  குறிப்புக்களை எடுத்துக்கொண்டேன். நிச்சயமா செயல்படுத்த முயல்கிறேன்.

  நகைக்கடை விளம்பரம் பாக்கலியே.
  டிவிஆர்ல பாக்கிறதால விளம்பரங்கள ஓட்டிவிடுவது வழக்கம். இன்னைக்கு பார்க்கிறேன்.

 25. SurveySan சொல்கிறார்:

  இப்ப கேக்குது. ஸ்டார்டிங் ட்ரபிளோ.

  நல்லா இருந்துது.

  1) எதப்பத்தி பேசரீங்கன்னு ஒரு ஹிண்ட் கொடுத்துடுங்க;
  2) எவ்ளோ நேரம் பேசரீங்கன்னும் சொல்லிடுங்க.
  3) எழுதி வாசிக்கர ஐடியா யாரோ கொடுத்திருக்காங்க – ஆனால், இப்படியே நேச்சுரலா இருக்கறது தான் சரி.
  4) ஒரு தீம் ம்யூசிக் நெட்ல சுட்டு, மொதல்லயும் முடிவுலயும் போடுங்க. ஒரு ட்ரேட்மார்க் மாதிரி இருக்கும்.
  5) போடரது போடரீங்க, வீடியோ ப்ளாகாவே போடலாமே? இப்பதான் எல்லாம் ஓசில முடியுமே?

 26. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சர்வேசன்,
  நன்றி.
  வீடியோ ப்ளாக் ஐடியாவும் இருக்குது. பாப்போம்.

  எனக்கு என்ன பயம்ணா என்னப் பாத்துட்டு அப்புறமா இந்தப்பக்கம் வராமப் போயிடுவாங்கன்னுதான்.

  :)

  தீம் ம்யூசிக் நல்ல ஐடியாதான்.. ஆடியோவ எடுத்து எடிட் செய்ய கொன்சம்டைம் தேவப் படும் மாற்று வழி இருக்குதான்னு பாக்கிறேன்.

 27. SurveySan சொல்கிறார்:

  //எனக்கு என்ன பயம்ணா என்னப் பாத்துட்டு அப்புறமா இந்தப்பக்கம் வராமப் போயிடுவாங்கன்னுதான்.
  //

  அதெல்லாம் கவலப்படாதீங்க. profile படம் பாத்துட்டு, நெஞ்ச எப்பவோ கல்லாக்கிக்கிட்டோம். immunity வந்தாச்சு. :))))))

 28. ஆதிபகவன் சொல்கிறார்:

  சிறில், நல்லாயிருந்தது. நல்ல முயற்சி.
  சில பரிந்துரைகள் (இந்த வார்த்தை சரியா!!!?)

  ஒரு குறிப்பிட்ட நேர எல்லை வைத்துக் கொள்ளுங்கள். (8-10 நிமிடம்).

  செய்திகள் என்ற தலைப்பை மாற்றி வேறு தலைப்பில் வாருங்கள்.

  ஒரு முக்கியமான கேள்வி!

  இதைத் தொடர்வீர்களா அல்லது மனைவி வந்ததும் அம்பேலா!!:))))

 29. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஆதிபகவன்,
  நன்றி.

  //இதைத் தொடர்வீர்களா அல்லது மனைவி வந்ததும் அம்பேலா!!:)))) //

  மனைவி வந்ததும் நிச்சயம் அம்பேல்..

  :))

 30. ஜி சொல்கிறார்:

  அருமை சிறில். நானும் ரெண்டு நாளா கேக்கணும்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆபிஸ்ல கேக்க மூடியாதில்ல…

  உங்க தோற்றத்துக்கும், குரலுக்கும் ரொம்ப வித்தியாசம். :))

  தொடர்ந்து அசத்துங்க…

 31. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி ஜி. தொடர்ந்து கலக்க முயற்சி செய்கிறேன்.

  :)

 32. வசந்தன்(Vasanthan) சொல்கிறார்:

  நல்ல தெளிவாகக் கேட்க முடிகிறது.
  ஆனால் வேகம் குறைந்த பேச்சு கொஞ்சம் சலிப்பூட்டுகிறது.

  உங்கள் கணினியிலேயே ஒலிப்பதிவு செய்து, திருத்தி, பின் தரவேற்றலாம். இரைச்சலைக் குறைக்கலாம்.
  ஒலிக்கோப்புக்களை சேமித்துவைத்துக் கொள்வதும் மிக முக்கியம்.
  இப்படியான இலவச சேவைகள் எப்போதும் இருக்குமென்று சொல்ல முடியாது.
  ஒருவருடத்தின்பின் இச்செயலி இயங்காவிட்டால் இருக்கும் கோப்பை இன்னோர் இடத்தில் தரவேற்றி இணைப்புக் கொடுத்துவிடலாம். நான் இரண்டொரு கோப்புக்களைத் தவறவிட்டுவிட்டு இப்போது மீள ஒலிப்பதிவு செய்து இணைப்புக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

  இவ்வகையான முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.
  ஆனால் எவ்வளவு பேருக்கு இது போய்ச்சேர்கிறது என்பது கேள்விக்குறி.
  நானும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சில குரற்பதிவுகள் இட்டுள்ளேன்.
  ஆனால் கேட்பதும் பின்னூட்டமிடுவதும் குறுகிய ஒருவட்டத்துள் மட்டும்தான் நிற்கிறது.

  அந்த வட்டத்தைத் தாண்டி முதன்முதல் என் குரற்பதிவுக்குப் பின்னூட்டமிட்டவர் நீங்கள்தான்.

 33. அரவிந்தன் நீலகண்டன் சொல்கிறார்:

  // கேரக்டர் அஸ்ஸாசினேஷன் //

  Mild word for a perverted abuse that is worse than physical abuse.

  டோ ண்டு செய்த தவறையும் போலி செய்த குற்றத்தையும் ஒரு தட்டில் வைத்து பேசும் சில பதிவர்கள் செய்வது நோய் பீடித்த மனதின் மிக மோசமான வெளிப்பாடு. (அதில் சிறில் இல்லை என்பது நிம்மதியான விசயம். எங்கூர்காரரு எப்பவும் டீசண்டுல மக்கா. உன்னை பாத்தா அப்படி தெரியலியேங்கிறியளா நான் எஸ்கேப்! )

 34. ☆ சிந்தாநதி சொல்கிறார்:

  அழகாக வந்திருக்கிறது. இப்போது தான் கேட்டேன்.

  நான் முக்கியமாக கவனித்தது குமரிக்கார்ரகளுக்கே உரிய உச்சரிப்பு எங்கேயாவது வருகிறதா என்று. அப்படி வரவில்லை. பொதுத்மிழில் பேசினீர்கள். பிபிசி வாசிப்பு போல என்பது சரிதான். வேகம் குறைவு என்பதாக சில நண்பர்கள் கூறியதைக் கேட்டேன். ஆனால் வேகம் அதிகமானாலும் சில நேரம் சொற்கள் புரிபடாமல் போகலாம். தொடரும் பதிவுகளில் சரளமான வேகம் தானாக வந்து விடும்.

  சாதாரணமான ஆங்கில சொற்கள் இடையிடையே வருவதை (மிக்க்குறைவு தான் என்ற போதும்) தவிர்க்க முயற்சியுங்கள். மொழிபெயர்ப்பதில் சிக்கலுள்ள கடினமான சொற்கள் அப்படியே பயன்படுத்துவதில் தவறில்லை.

  குரல் பிசிறின்றி இருக்கிறது. மூச்சு ஒலி தவிர்க்கும் ஒலிப்பதிவு முறை பயன்படுத்துங்கள்.

 35. அருட்பெருங்கோ சொல்கிறார்:

  சிறில்

  கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!!

  காவிரிப் பிரச்சினையைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் கன்னடர்கள் வெறுப்படையும் அளவுக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லையே!!!

  இந்தவார ஜூ.வி.யில் கன்னட தலைவர் வாட்டள் நாகராஜின் பேட்டியை வாசித்தீர்களா?

  நாளைதான் தெரியும் பந்த் எப்படி நடக்கப் போகிறதென்று :(

 36. தூயா சொல்கிறார்:

  நல்லாயிருக்கு..:)

 37. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  /உங்கள் கணினியிலேயே ஒலிப்பதிவு செய்து, திருத்தி, பின் தரவேற்றலாம். இரைச்சலைக் குறைக்கலாம்.
  //

  என்ன சொல்றது வசந்தன்.. ஒரு நாள் 2 மணி நேரம் உட்கார்ந்து 5 நிமிடப் பேச்சை பதிவு செய்தேன்.. பாழாய்ப்போன மென்பொருள் கோளாறினால் முற்றும் அழைந்துவிட்டது.

  இனிமேல் இப்படிச் செய்யத்தான் உத்தேசம்.

  //அந்த வட்டத்தைத் தாண்டி முதன்முதல் என் குரற்பதிவுக்குப் பின்னூட்டமிட்டவர் நீங்கள்தான். //

  இதில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். உங்கள் பழைய வார்ப்புருவில் நான் பின்னூட்டியபொழுதெல்லாம் அது தவறான மின்னஞ்சல் முகவரி என திரும்பிவிட்டது.

  அந்த பகிடியை வெகுவாக ரசித்தேன்.

  :))

 38. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  டோண்டுவை கேரக்டர் அசாசினேசன் பண்ணுமளவுக்கு நான் தெரிந்துவைத்திருக்கவில்லை. அவரது கருத்துக்கள் பழமையானவை என்பதில் சந்தேகமே இல்லை.

  இது ஒரு குறையல்ல. நம்ம அம்மா அப்பாக்களிடம் ஏன் நம்மிடம்கூட இப்படி மாற்றமுடியாத பழமைவாதம் ஒட்டிக்கொள்கிறது. தலைமுறை மாறும்போது எல்லாம் தானாக மாறும்.

  இல்லைன்னா அழிக்கும் கடவுளுக்கு சிவன்னு மங்களகரமானப் பெயர் வைப்பாங்களா?

  //எங்கூர்காரரு எப்பவும் டீசண்டுல மக்கா. உன்னை பாத்தா அப்படி தெரியலியேங்கிறியளா நான் எஸ்கேப்!//

  :))

 39. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அருட்பெருங்கோ + ஜோ,
  தமிழ்நாட்டில் பெரிதாய் கொண்டாட்டமில்லை என்பதும், தமிழ்நாடும் சில குறைகளுக்காக மேல்முறையீடு செய்யப்போகிறது என்றும் பின்னர் தெரிந்துகொண்டேன்.

  ஜீ.வி படிக்கல. படிக்கிறதில்ல.

  இன்றைக்கு கொஞ்சம் சகஜ நிலை இருக்குதுன்னு சொன்னாங்க மகிழ்ச்சி.

 40. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சிந்தாநதி,
  பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து செய்ய முயல்கிறேன். வீட்ல சும்மாத்தானே இருக்கேன்.

  கன்னியாகுமரிக்காரர்களிடம் பேசும்போது தானாகவே வந்துவிடும் உச்சரிப்பு.

  அடுத்த குரல் பதிவுக்கு நல்ல தலைப்பு தந்துள்ளீர்கள் உச்சரிப்பு.

  :))

  ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுவது எனக்கு கொஞ்சம் கடினம்.. முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.
  உரையாடல்போல இருந்தா நல்லாவரும் கேட்க எளிதாகவும் வலையுலகுக்கு உகந்ததாகவும் இருக்கும்.

 41. ரவிசங்கர் சொல்கிறார்:

  குரல் நல்லா இருக்கு, சிறில். அமெரிக்கால இருக்கனால் தமிழ்ப் பேச்சுப் பழக்கம் குறைஞ்சிடுச்சா? நிறைய திணறுறீங்க. ஒரு வேளை பதிவு நேரத்தை குறைப்பதும் உதவலாம். நல்ல தமிழ் பேசணுங்கிற உந்துதல் – வார்த்தைகள் கிடைக்காத தடுமாற்றம் – இது இரண்டுக்கும் இடைல இல்லாம, நல்ல தமிழா பேச்சுத் தமிழான்னு முடிவு பண்ணி நீங்க பேசலாம். பதிவின் தொடக்கத்தில் முன்னோட்டம் கொடுக்கிறதும் நல்லது.

  தொடர்ந்து செய்தி தர வாழ்த்துக்கள்

 42. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி ரவிஷங்கர்.
  நீங்க சொல்றமாதிரி.. பேச்சுத்தமிழ் என முடிவெடுத்திருக்கேன்,

  ஆனா தொடர்ந்து செய்திகளாத் தருவதில்லை என முடிவெடுத்திருக்கேன்..

  பாப்போம்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்