ச்ச்சும்மா டைம் பாஸ் மச்சினிச்சி – வலைமுத்து கவிதை

உன் வலைப்பூவில் நான் பதிவா பின்னூட்டமா?
உன் பின்னூடங்களில் நான் உள்குத்தா வெளிகுத்தா?
உன் டெம்ப்ளேட்டில் நான் கருவியா காலியிடமா?
உன் கருத்துக்களில் நான் சூப்பரா சூனியமா?
உன் கவிதைகளில் நான் கவுஜையா கானாவா?
உன் ஸ்மைலிகளில் நான் :)ஆ :(ஆ?
உன் வாக்குகளில் நான் தம்ஸ் அப்பா தம்ஸ் டவுனா?
உன் திரட்டிகளில் நான் தமிழ்மணமா தேன்கூடா?
உன் வகைப்படுத்தலில் நான் பொதுவானவையா நகைச்சுவை/நையாண்டியா?
உன் குழுப் பதிவில் நான் அட்மினா(Admin) ஜஸ்ட் அட்மிட்டடா?(Just admitted)
பின்னூட்டுபவர்களில் நான் ஆனானியா அதர் ஆப்சனா?
உன் பெயர்களில் நான் உண்மையா புனைபெயரா?
உன் ப்ரொஃபைலில்(Profile) நான் நீயா போலியா?

உன் சைட் பாரில் பத்து சுட்டி
என் சைட் பாரில் பத்து சுட்டி
தூரத்தில் எவனோ தூன்னு துப்புறான்
இணையத்தின் வழியே எச்சிலையே அனுப்புறான்.சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்தார் பாஸ்டன் பாலா.
தலைப்பு உபயம் லக்கி லுக்கார்.

.

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....25 மறுமொழிகள் to “ச்ச்சும்மா டைம் பாஸ் மச்சினிச்சி – வலைமுத்து கவிதை”

 1. மணிகண்டன் சொல்கிறார்:

  என்னங்க ரொம்ப யோசிக்கிறீங்க போல?ஆப்பிசுல ஆணியெதுவும் இல்லையா?

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இத யோசிக்க எடுக்கிற டைம்ல பெருசா ஒண்ணும் ஆணி பிடுங்க முடியாது முடியாது..

  :))

  சும்மா வெளிய டீ ப்ரேக்ல யோசிச்சுட்டு தட்டச்ச ஆரம்பிக்கவேண்டியதுதான்..

  அதனாலத்தான் பாதிக்கு மிச்சம் அரைகுறையா வரும்..

  :))

 3. திரு சொல்கிறார்:

  //உன் திரட்டிகளில் நான் தமிழ்மணமா தேன்கூடா?//

  :) இதுல உள்குத்து எதுவும் இல்லியே?

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //
  :) இதுல உள்குத்து எதுவும் இல்லியே? //

  திரு,
  filterடா unfilterடா?

  :))

 5. செல்வன் சொல்கிறார்:

  Good one cyril alex.

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Thanks Selvan

 7. Anonymous சொல்கிறார்:

  :))))

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அனானி சார் …

  :))) தவிர்த்து ஏதாவது சொல்லியிருக்கக்கூடாதா?

 9. டாக்டர். முரளி மனோஹர் சொல்கிறார்:

  உன் ப்ரொஃபைலில் நான் நீயா போலியா.
  நல்லாருக்குங்கோ

 10. அருட்பெருங்கோ சொல்கிறார்:

  :))))

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி முரளி மனோஹர்.

  ஆனாலும் குறும்பு தாஸ்தி
  :))

 12. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  தமிழ்மணத்தில் எல்லோரும் ஒரு பதிவு போடும் போது நீங்க மட்டும் தான் டோண் டு வொரி ங்கிற மாதிரி ஒரு கலாய்தல் கவிதை போட்டு இருக்கிங்க !
  :)

 13. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  உன் வலைப்பூவில் நான் பதிவா பின்னூட்டமா?
  இமேஜ்

  உன் பின்னூடங்களில் நான் உள்குத்தா வெளிகுத்தா?
  வலிக்காதபோது – எல்லாம் ஒன்றுதான்!

  உன் டெம்ப்ளேட்டில் நான் கருவியா காலியிடமா?
  டைட்டில் பார்

  உன் கருத்துக்களில் நான் சூப்பரா சூனியமா?
  உன் காசில் என்றால் என்றால் சூப்பர்!

  உன் கவிதைகளில் நான் கவுஜையா கானாவா?
  புதுக் கவிதை!

  உன் ஸ்மைலிகளில் நான் :)ஆ :(ஆ?
  :)இ

  உன் வாக்குகளில் நான் தம்ஸ் அப்பா தம்ஸ் டவுனா?
  எலக்சன் கமிஷன் உத்தரவு தடுக்கிறது

  உன் திரட்டிகளில் நான் தமிழ்மணமா தேன்கூடா?
  டெக்னோகிராட்டி!

  உன் வகைப்படுத்தலில் நான் பொதுவானவையா நகைச்சுவை/நையாண்டியா?
  அனுபவம்!

  உன் குழுப் பதிவில் நான் அட்மினா(Admin) ஜஸ்ட் அட்மிட்டடா?(Just admitted)
  கேள்வி தவறு – என் கு.ப. என்றால் நான்தானே…ஹி..ஹி..!

  பின்னூட்டுபவர்களில் நான் ஆனானியா அதர் ஆப்சனா?
  ப்ளாக்கர்

  உன் பெயர்களில் நான் உண்மையா புனைப்பெயரா?
  surname!

  உன் ப்ரொஃபைலில்(Profile) நான் நீயா போலியா?
  கேள்வி தவறு – ஹி..ஹி….!

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கலக்கிட்டிங்க சுப்பையா சார்.

 15. Anonymous சொல்கிறார்:

  இந்த லைன்லையே எழுதிட்ட்டிருங்க. அப்புறம்
  நீங்க எஸ்வி சுப்பையாவா சூப்பரையாவா?
  சொதப்பலைய்யான்னு சொல்லப்போறானுங்க அய்யா

 16. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  “நீ சமையலறை என்றால் நான் உப்பா? சர்க்கரையா?” என்று கேட்டதற்கு, கேட்டவனுடைய மனைவி சொன்னாளாம்: “சபீனா
  (cleaning powder)

  - ஒரு பட்டி மன்றத்தில் கேட்டது.

 17. Madura சொல்கிறார்:

  நல்லாருக்கு கவி! :)

 18. செல்லி சொல்கிறார்:

  புதுப் பாணியில் ஒரு புதுக் கவிதை.
  என் கேள்விக் கென்ன பதில் என்கிறமாதிரி.
  பரவாயில்லியே, நல்லாத்தானிருக்கு.
  எங்க பிற்ஸ்பேன் முருங்கைக் காயையும் ஒருமுறை வந்து பாருங்கோ.

 19. Boston Bala சொல்கிறார்:

  உல்டா அருமை.

  உலகக் கோப்பை வரப் போகிறதாமே… அதற்கு ஒன்று எழுதுங்களேன். ‘விண்ணுக்கு மேலாடை’ (நாணல்) பாடலை கிரிக்கெட்டுக்கு மாற்ற நேயர் விருப்பம் வைக்கிறேன் : D

  Index of ./songs/_P.Susheela/: PS – naaNal – viNNukku mElAdai paruvamazhai mEgam.mp3

 20. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //புதுப் பாணியில் ஒரு புதுக் கவிதை.
  என் கேள்விக் கென்ன பதில் என்கிறமாதிரி.
  பரவாயில்லியே, நல்லாத்தானிருக்கு.
  எங்க பிற்ஸ்பேன் முருங்கைக் காயையும் ஒருமுறை வந்து பாருங்கோ.//

  நன்றி செல்லி நிச்சயமா வந்து பார்க்கிறேன்

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தல கிரிக்கட் பத்தி நிச்சயம் பாடலாம்.
  ஆனா நீங்க தந்தபாட்டு இப்பத்தான் முதல்தடவ கேகுறேன்.

  Any other choice?

 22. Boston Bala சொல்கிறார்:

  எந்தப் பாட்டு பொருத்தமா இருக்குமோ, அதை எடுத்துக்குங்க சிறில் :)

 23. தருமி சொல்கிறார்:

  டீ குடிக்கும் போது எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க’ப்பா!

 24. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தருமி சார்..
  டீ குடிக்கும்போது இன்னொண்ணையும் புடிக்கிறோமே?

 25. சுந்தர் / Sundar சொல்கிறார்:

  Super ,, Fantastic .. Excellent baalu … ( Cyril )

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்