இதுதாங்க இந்தியா

நான் கொஞ்சம் அதிகமா உணர்ச்சிவசப்படுபவன். இத இன்றைக்கு இன்னுமொருதடவ உறுதி செஞ்சுட்டேன். காலையிலெ எழுந்ததும் கண்ணீர்வரவழச்சிட்டார் நம்ம ஹரி.

அவர் பதிவுல ‘மிலே சுர் மேரா துமாரா’ பாடலின் குறும்படம் போட்டிருந்ததர். பாத்ததும் கண்கள் பனித்துவிட்டன. ஏனோ தெரியல ஒன்றைப் பிரிந்துவிட்டபின்தான் அதன் அருமை தெரிகிறது.

இந்திய கடைக்கு போயிருந்தேன். அங்க இருந்த செய்தித் தாழில் இந்தியாவில் எங்கேயோ பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆவதற்காக ஏதோ (கொஞ்சம் கொடுமையான) பழக்கத்த கடைபிடிக்கிறாங்க. அதைப் பார்த்துவிட்டு யாரோ வெட்கத்துடனே ‘ஸ்டுப்பிட்ஸ்’ன்னு சொல்ல நான் கொஞ்சம் சொல்லாடவேண்டியிருந்துச்சு. நான் இறுதியா சொல்லிட்டு வந்தது ‘இதுதாங்க இந்தியா. இதுதான் நாம. இவங்கதான் நம்ம மக்கள். இதுல எந்த மாற்றமும் இல்ல.’ அந்தக் கிண்டல் செய்தவர் ஒரு இந்தியர் என்பதால் சற்று கோபம் வந்தது, மத்தவங்களுக்கு நம்மைப் பற்றிய அறிவு இருக்கணும்ற அவசியமில்ல.

நான் மூடப் பழக்கங்களை வளர்க்கவேண்டும் எனச் சொல்ல வரல. நமக்கு மூடமாப் படுறது அத்தவருக்குத் தெய்வீகமாப் படுதே? நீங்க உணர்ந்ததுபோல அவரும் அதை மூடமாக உணரும் காலம் வரும். அதுவரைக்கும் அவரது நம்பிக்கைக்கு மதிப்பளிப்போம். கிண்டலாவோ கேலியாவோ கீழ்த்தரமாகவோ இவங்களப் பத்தி பேசவேண்டாமே.

இந்தமாதிரி ஒரு கலவை எந்த நாட்டிலேயும் இல்ல. மெல்டிங் பாட் எனச் சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா வரும் பிற கலாச்சார மக்கள் தங்கள் கலாச்சாரத்த அமெரிக்கனைஸ் பண்ணிக்கிறாங்க. மெல்ட் பண்ணித்தான் ஆகணும்.

மிக மோசமான மூடப் பழக்கங்களும் உன்னதமான உயர் தத்துவங்களும் ஒருசேர இருக்கிறது இங்கேதான். பலவேளைகளில் இவை மிக நெருக்கத்திலேயே இருக்கக் காணலாம்.

எத்தனை கலாச்சாரங்களை உள்ளடக்கியிருக்குது? எத்தனை மொழிகள்? எத்தனை விழாக்கள், கொண்டாட்டங்கள்? எத்தனை விதமான ஆடைகள் (இப்ப எல்லாமே ஜீன்ஸ் சுடிதார்தான்னு சொல்றீங்களா?)

இதுவே நமக்கு பாதகமாகவும் சில நேரங்களில் அமையுது. அழகாயிருக்கிறப் பூவைத்தான் பறிக்கிறோம். அதனால பூவுக்கு அழகு கூடாதா? நிச்சயமாயில்ல. ஊருக்குள்ள ஆயிரம் சண்டையிருக்கலாம் ஆனா வெளிய வந்துட்டீங்கனா நாமெல்லாம் இந்தியர்கள்தான்.

வேற்றுமையில் ஒற்றுமை வெறும் வார்த்தைகளில்ல. அவனப் பின்பற்றச் சொல்லு இவனப் பின்பற்றச் சொல்லுண்றதுக்குப் பதிலா நாம என்ன செய்யப்போறோண்றதுதான் முக்கியம்னு தோணுது.

கால்கரியார் சொல்றமாதிரி இந்தப் பதிவ, பாடல பார்த்ததற்கப்புறம் இந்தியா, இந்தியர் பற்றிய ஏதாவது ஒரு மனத்தடைய நீக்கினோமானால் அதுவே பெரிய விஷயம்.

இந்தப் பாடல் எத்தனை அழகா பதிவாக்கியிருக்காங்க. நம்ம கமல்கூட அழகா ஆக்ட் குடுத்திருக்காரு.

இந்த பாட்டக் கேட்டாவது காவிரித் தண்ணி தராவிட்டாலும் கர்நாடகாவில் வாழும் தமிழர்களோடு நட்பு பாராட்ட முன்வருவார்களா? முடங்கிக்கிடக்கும் தொழில்களும் போக்குவரத்தும் தொடர முயல்வவர்களா?

இசைந்தால்
நம் இருவரின் சுரமும் நமதாகும்
இசைவேறானாலும்
ஆழிசேர் ஆறுகள்
முகிலாய் மழையாய் பொழிவதுபோல்
இசை
நம் இசை


இசை எத்தனை அருமையான ஒப்பீடு. இசையின் வடிவங்கள் பல. எதுவானாலும் நம் ரசனைக்கேற்ப ரசிக்க முடிகிறது. ஒரு பொதுவான வரையறைக்குள் இயங்குவதால் இருவேறு வகையான இசைகளை இணைப்பது எளிது.

இன்னும் பேசிகிட்டேயிருக்கலாம்.. சரி கீழ இருக்கிற நாலு வீடியோக்களிலும் ஒரே பாடல்தான்ன் ஆனா வேறு விதங்கள்ளில் படமெடுக்கப் பட்டிருக்குது. பாருங்க. மனசுல வச்சுகுங்க…

“இசைந்தால் (சம்மதித்தால் அல்லது ஒன்றாகினால்)
நம் இருவரின் சுரமும் நமதாகும்.”

“மிலே சுர் மேரா துமாரா தோ சூரு பனே ஹமாரா.”

பாடல் கேட்கும்போது ஏதாவது மொழியோ ஆளோ வந்ததும் உங்க மனசுல நெருடலாத் தோணுச்சுனா பாஸ் போட்டுட்டு கண்ணமூடிக்கிட்டு ஜெய்ஹிந்த்தோ, ஐ லவ் இந்தியாவோ சொல்லிகிட்டு மீண்டும் பார்க்கவும்.

பதிவின் முதல் வரியப் படிச்சீங்கல்ல.


:)

(சாந்தமான சிரிப்புக்கும் இதே ஸ்மைலிதானா)

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....43 மறுமொழிகள் to “இதுதாங்க இந்தியா”

 1. Samudra சொல்கிறார்:

  தலைவா
  நான் நாடு கடத்தப்பட்டு நாட்கள் பத்து கூட ஆகவில்லை அதற்க்குள் நாட்டை நினைவுபடுத்திவிட்டீர்களே….ஹூம்ம்ம்.

  :(

 2. SP.VR.சுப்பையா சொல்கிறார்:

  //”இசைந்தால் (சம்மதித்தால் அல்லது ஒன்றாகினால்)
  நம் இருவரின் சுரமும் நமதாகும்.”//

  நிதர்சனமான் உண்மை!

 3. Vajra சொல்கிறார்:

  யோவ் சமுத்ரா, எங்கெய்யா போன ?

  என்னது, நாடு கடத்திட்டாய்ங்களா ? இப்ப வெமானமெல்லாம் கடத்துறத உட்டுட்டு நாட்டையே அப்புடியே கடத்திறாய்ங்களா ?

  அது சரி எந்த நாடு ?

  MIT பாட்டைப் போட்டீங்களா சிறில், அதை ஒரு நாள் நான் பதித்திருந்தேன் என்பதிவில் என்று நினைவு.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சமுத்ரா தலை,
  எங்க போயிருந்தீங்க இவ்வளவுநாளும்?

  எங்க இருக்கீங்க இப்ப?

 5. Anonymous சொல்கிறார்:

  காலையிலெ எழுந்ததும் கண்ணீர்வரவழச்சிட்டார் நம்ம ஹரி என்பவர் அ¾üÌ Óòø போஸ்ட் பண்ணியது இது

  உன் வலைப்பூவில் நான் பதிவா பின்னூட்டமா?
  உன் பின்னூடங்களில் நான் உள்குத்தா வெளிகுத்தா?
  உன் டெம்ப்ளேட்டில் நான் கருவியா காலியிடமா?
  உன் கருத்துக்களில் நான் சூப்பரா சூனியமா?
  உன் கவிதைகளில் நான் கவுஜையா கானாவா?
  உன் ஸ்மைலிகளில் நான் :)ஆ :(ஆ?
  உன் வாக்குகளில் நான் தம்ஸ் அப்பா தம்ஸ் டவுனா?
  உன் திரட்டிகளில் நான் தமிழ்மணமா தேன்கூடா?
  உன் வகைப்படுத்தலில் நான் பொதுவானவையா நகைச்சுவை/நையாண்டியா?
  உன் குழுப் பதிவில் நான் அட்மினா(Admin) ஜஸ்ட் அட்மிட்டடா?(Just admitted)
  பின்னூட்டுபவர்களில் நான் ஆனானியா அதர் ஆப்சனா?
  உன் பெயர்களில் நான் உண்மையா புனைபெயரா?
  உன் ப்ரொஃபைலில்(Profile) நான் நீயா போலியா?

  உன் சைட் பாரில் பத்து சுட்டி
  என் சைட் பாரில் பத்து சுட்டி
  தூரத்தில் எவனோ தூன்னு துப்புறான்
  இணையத்தின் வழியே எச்சிலையே அனுப்புறான்.

  கவலைதரும் விடயம்

  என்ன நடக்குது அங்கே?

  :-(

 6. Samudra சொல்கிறார்:

  வஜ்ரா,

  என்னையை நாடு கடத்தீடாங்கய்யா…
  அதான் இந்த பக்கம் தல காட்ட முடியல.

  செவனேன்னு இருந்தவனை புடிச்சு மாட்சிமைதாங்கிய மகாரானியார்
  ஆட்சி புரியும் லண்டன் மாநகருக்கு பார்சல் செஞ்சுட்டாங்க.

  இனிமே 15 மாசம் இங்க தான் குப்பை கொட்டனும்.

 7. Anonymous சொல்கிறார்:

  overemotional ஆனவர் நீங்களோன்னு படுதுங்க. எதுக்கெடுத்தாலும் extreme உணர்ச்சிவசப்படுவதேன்?

 8. Anonymous சொல்கிறார்:

  செவனேன்னு இருந்தவனை புடிச்சு மாட்சிமைதாங்கிய மகாரானியார்
  ஆட்சி புரியும் லண்டன் மாநகருக்கு பார்சல் செஞ்சுட்டாங்க.

  சூப்பர்டா மனெக் ஷா
  தேச ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாரடின்னு எங்க திராவிடக்கலைஞன் சொன்னது கரெட்டுதானுங்களே

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //overemotional ஆனவர் நீங்களோன்னு படுதுங்க. எதுக்கெடுத்தாலும் extreme உணர்ச்சிவசப்படுவதேன்? //

  கலைஞன்னாலே அப்படித்தானே?
  :)
  பொதுவா ஒரு விஷயம் கிடச்சுதுன்ன யோசிக்க ஆரம்பிச்சிடுவேன்.

  சரியான விஷயங்களுக்கு இமோஷன் பட்டுத்தானாகணும்.

  ஆனா நீங்க சொல்ற கவிதைல உ.வ படல.

 10. Samudra சொல்கிறார்:

  //சமுத்ரா தலை,
  எங்க போயிருந்தீங்க இவ்வளவுநாளும்?

  எங்க இருக்கீங்க இப்ப? //

  இனிமே நீ கோயம்புத்தூர்ல இருந்தா நீயும் உருப்பட மாட்ட ஊரையும் உருப்படவிட மாட்டேன்னு சொந்த ஊர்ல முடிவு பன்னி நம்மை ஆண்டு அழித்த ஆங்கிலேயர்களின் நாட்டுக்கே அனுப்பிட்டாங்க சிறில்.

  ஆம்லேட் போட கற்றுக்கொண்டு இருக்கும் அன்பன்,
  சமுத்ரா.

 11. ஜோ / Joe சொல்கிறார்:

  சிறில்,
  ஏற்கனவே தொலைக்காட்சியில் பல முறை பார்த்த அருமையான காட்சி இசைத் தொகுப்பு .பெருமிதம் வரவழைக்கும் ஒன்று .ஏற்கனவே பல முறை உணர்ச்சிவசப்பட்டு விட்டதால் இப்போது அந்த அளவுக்கு இல்லை.

 12. Anonymous சொல்கிறார்:

  ஏனுங்க ஸமுட்ரா
  கைல ஏகே 47 வெச்சு கழுத்த நெம்பியா பிளேன்ல ஏத்துனாங்க உங்களை? நாடு கடத்தினாங்கன்னு சவுண்டு வுடுறீங்க? நாங்க ஏதோ பாக்கிஸ்தான் பாடர்ல தோசப்பற்றோஒட தோச சுட்டுக்கிட்டே இருக்கீங்கன்னு ரோசிச்சோமுங்க. கோவிந்தா கோவிந்தராஜா!

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சமுத்ரா
  உங்களப் பத்தி சில பின்னூட்டங்கள் வருது வெளியிடவா?

  ரெம்ப மோசமில்ல.. நீங்க ‘பதில்’ தர விரும்பினால் போடுறேன்.

 14. Anonymous சொல்கிறார்:

  கலைஞனா? சிறில் நாங்க சிறில் அலெக்ஸ் பத்தி முட்டம் மூட்டையா பேசிக்கிட்டிருக்கோமுங்க. கலெஞர் எங்கேங்க இங்கே வந்தாரு?

  கம்பியூட்டர்ல அ, க ஊட்டவன்லாம் கலெஞராகும் காலமாங்க? கண்ராவி

 15. Anonymous சொல்கிறார்:

  சூப்பர் சிறில்
  பொழைச்சுக்குவீங்க. சமுத்ராவோட அவரோட ஸாகாபாடிங்களோட சகவாசம் கொறைஞ்சுடுமேன்னு நைட்வாட்ஸ்மேனா ஆடுறீங்க. சூப்பர்ங்க.

  ஆடுங்க ஆடுங்க. பாம்புக்கு வாலையும் பருந்துக்கு மூஞ்சியையும் காட்டிக்கிட்டே பொழச்சுடலாம் நெட்டுல. சூப்பர். ஏதோ நெட்ஸ்டார்ட்டிக்கு எகிறுதில்லே. அத கவனியுங்க. கீரிக்கும் பாம்புக்கும் சண்ட விடுங்க.

 16. Samudra சொல்கிறார்:

  ரிலீஸ் பன்னுங்க சிறில். இதுல என்ன இருக்கு…..நமக்கும் வார்ம் அப் ஆன மாதிரி இருக்கும். :)

 17. Anonymous சொல்கிறார்:

  அட தேவுடா! சிரிக்குறது எமோஷனே இல்லீங்களா ஒங்க டிக்சநரியிலே? பின்னே எந்த அவல நெனைச்சுக்கிட்டு உன் வலைப்பூவில் நான் பதிவா பின்னூட்டமா?
  உன் பின்னூடங்களில் நான் உள்குத்தா வெளிகுத்தா? இத எழுதுனீங்க? கொழம்பீட்டீடேங்க

 18. Samudra சொல்கிறார்:

  //சூப்பர்டா மனெக் ஷா
  தேச ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாரடின்னு எங்க திராவிடக்கலைஞன் சொன்னது கரெட்டுதானுங்களே //

  சத்தியமா தெரியலீங்க….

  என்னையை காசு செலவு பன்னி நாலு விஷயம் தெரிஞ்சுகிட்டுவந்து நாட்டுக்கு நல்லது பன்னுன்னு சொல்லி தான் அனுப்பியிரூக்காங்க. :))

 19. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //சூப்பர் சிறில்
  பொழைச்சுக்குவீங்க. சமுத்ராவோட அவரோட ஸாகாபாடிங்களோட சகவாசம் கொறைஞ்சுடுமேன்னு நைட்வாட்ஸ்மேனா ஆடுறீங்க. சூப்பர்ங்க.
  //
  எனக்கு யார்மேல வெறுப்புமில்ல குறிப்பிட்ட விருப்பும் இல்ல.

  ஒரே கேள்வி பதிவ படிச்சுடுத்தான் பின்னூட்டம் போடுறீங்களா?

  என்ன எழவுடா இது? ஒண்ணாயிருப்போம்னு பதிவப் போட்டாலும் இப்படியா?

  //ஆடுங்க ஆடுங்க. பாம்புக்கு வாலையும் பருந்துக்கு மூஞ்சியையும் காட்டிக்கிட்டே பொழச்சுடலாம் நெட்டுல.//
  சூப்பர் ஒப்பீடு. நான் எல்லாருக்கும் எல்லத்தையும் காமிக்கிறதில்ல. மூஞ்சியயும் வாலையும் ஆளாளுக்கு அப்பப்ப மாத்திக் காட்டிக்குவேன்.

  நின்ன எடத்துல நிக்க நான் ஒண்ணும் சிலை யில்லையே?

  //சூப்பர். ஏதோ நெட்ஸ்டார்ட்டிக்கு எகிறுதில்லே. அத கவனியுங்க. கீரிக்கும் பாம்புக்கும் சண்ட விடுங்க. //
  கொஞ்சம் பாப்பேன் ஓவராப் போனா off பண்ணிருவேன்.

 20. Samudra சொல்கிறார்:

  //சமுத்ராவோட அவரோட ஸாகாபாடிங்களோட சகவாசம் கொறைஞ்சுடுமேன்னு நைட்வாட்ஸ்மேனா ஆடுறீங்க. சூப்பர்ங்க. //

  ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் இந்தபக்கம் எட்டிபாக்குறேனுங்க.
  நம்மளை ஏன் சண்டைக்கு இழூக்கறீங்க ?

  அதுல பாவம் சிறிலுக்கு வேற கஷ்டம்.

  எங்கூட எதுவும் பஞ்சாயத்து இருந்தா தனியா வாங்க பைசல் பன்னிக்கலாம்… :)

 21. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சமுத்ரா என்ன திடீர்னு படத்த மாத்திட்டீங்க.

  அனானி நீங்க நேர்ல போயி அவர்கூட டிஷ்யூம் வச்சுகிங்க

  அவர் எப்படி நிக்கிறார் பாருங்க
  :)

 22. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //அட தேவுடா! சிரிக்குறது எமோஷனே இல்லீங்களா ஒங்க டிக்சநரியிலே? பின்னே எந்த அவல நெனைச்சுக்கிட்டு உன் வலைப்பூவில் நான் பதிவா பின்னூட்டமா?
  உன் பின்னூடங்களில் நான் உள்குத்தா வெளிகுத்தா? இத எழுதுனீங்க? கொழம்பீட்டீடேங்க //

  சரிதான்.. சண்ட போட்றதுக்குன்னே வந்திருக்கீங்க போலிருக்குது.

  அது நக்கலுங்க.. கிண்டல் நகைச்சுவை நையாண்டி.

  பதிவர் எழுதும் காதல் கவுஜைன்னு வச்சுக்கலாமா?

 23. Anonymous சொல்கிறார்:

  கொஞ்சம் பாப்பேன் ஓவராப் போனா off பண்ணிருவேன்.

  over emotion ஆவாதீங்க. பாவமா இருக்குங்க. நானே ஆஃப் பண்ணிடுறேன். ஆனா ஒரு வாக்கு தாங்க.

  உன் கவிதைகளில் நான் கவுஜையா கானாவா?
  உன் ஸ்மைலிகளில் நான் :)ஆ :(ஆ?

  இந்த விதத்துல எழுதிட்டு நகைச்சு வைன்னு நீங்க போஸ்டு பண்ணி அத பாத்து என்ன மாதிரி பன்னிங்க ஆஹா ஊகூன்னு காமென் சென்ஸே இல்லாம காமெண்டு போட வெக்காதீங்க. பிள்ளீஸ்.

 24. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அனானி,
  அந்த போஸ்ட் நிஜமா ஜாலியா எழுதினதுதான்..

  யாரையும் குறிவைத்து எழுதியதல்ல.
  நம்புங்க.

 25. Anonymous சொல்கிறார்:

  கவலைப்படாதீங்க சிறில். தமிழ்மணத்துக்கு வந்தோமா ரெண்டு மாதமா தூங்கமுன்னாடி யாரையாச்சும் நோகாம கலாய்ச்சாத்தான் ஆச்சுதுன்னு ஆகிடுச்சு நமக்கு. அவ்ளோதான். தமிழ்மணத்துல மேல யாரு பதிவு கெடக்குதோ யானை புகுந்து வெளயாடிடலாமான்னு ஒரு five min. சீரியசா எடுத்துக்காதீங்க. யானைன்னு சொன்னேனா யாரு யானை யாரு எடுத்து மாவுத்தம் பண்றதுன்னு வேற யாராச்சும் மிதிச்சுடப்போறாங்க.
  பல பனியும் பெற்று பல்கிடுங்க குளிரில் வாழ்க
  வர்றேனுங்க
  :)

 26. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அடப் பாவமே …
  சொல்லிட்டுச் செய்யுங்க அனானி..
  :))

 27. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  //இனிமே நீ கோயம்புத்தூர்ல இருந்தா நீயும் உருப்பட மாட்ட ஊரையும் உருப்படவிட மாட்டேன்னு சொந்த ஊர்ல முடிவு பன்னி நம்மை ஆண்டு அழித்த ஆங்கிலேயர்களின் நாட்டுக்கே அனுப்பிட்டாங்க சிறில்//

  சமுத்ரா! இந்தனை நாள் கோவையிலா இருந்தீங்க?

  நானும் ஒரு வருஷமா கோவைலதான் இருக்கிறேன்!

 28. Anonymous சொல்கிறார்:

  சமுத்ரா போய்டாருங்குற துணிவுல தலைய ஓட்டுக்கு வெளில தூக்கி சிபி செப்புறாரு. அவரு மகராணி HMS சேவைல 15 மாசம்ன்னுதான் சொல்லிருக்காரு. பர்மனண்ட் இல்லே. ஆமா. கபதார்

  :)

  அனானி பாவம் ஸ்மைலி போட்டாப் போச்சு

 29. SurveySan சொல்கிறார்:

  அருமை. புல்லரிக்க வைக்குது நம்ம மிலே சுர் மேரா துமாரா.

  தூர்தர்ஷன்ல அடிக்கடி போட்டு மெகா ஹிட் ஆக்கிட்டாங்க. மிகவும் தேவையான நல்ல விஷயம்.

  ஹ்ம். இப்ப நமீதா டேன்ஸ்தான் காட்டராங்க அடிக்கடி. உருப்படாம போக என்னென்ன செய்யணுமோ அத போட்டி போட்டுக்கிட்டு செய்யறாங்க.

  வெளீல இருக்கர நமக்கு இருக்கும் ‘இந்தியன் உணர்வு’ ஊர்ல இருக்கரவங்களுக்கு கம்மி ஆயிட்டே இருக்கோ?

 30. துளசி கோபால் சொல்கிறார்:

  நல்ல பதிவு.

 31. kannabiran, RAVI SHANKAR (KRS) சொல்கிறார்:

  //அந்தக் கிண்டல் செய்தவர் ஒரு இந்தியர் என்பதால் சற்று கோபம் வந்தது//

  உண்மை சிறில்!
  ஆனால் இயந்திர கதி வாழ்க்கையில், இது போன்று நம் சக இந்தியர் செய்யும் போது தான், நமக்கும் நினைவுகள் அதிகமாகக் கிளறிக் கொண்டு வருகிறது! அதற்காவது நன்றி சொல்ல வேண்டும்.

  //பாடல் கேட்கும்போது ஏதாவது மொழியோ ஆளோ வந்ததும் உங்க மனசுல நெருடலாத் தோணுச்சுனா பாஸ் போட்டுட்டு கண்ணமூடிக்கிட்டு ஜெய்ஹிந்த்தோ//

  அப்படியெல்லாம் மனசு நெருடறா மாதிரி எல்லாம் ஒண்ணுமே வரலை!
  இருப்பினும் ஜெய்ஹிந்த்!

  //எத்தனை விதமான ஆடைகள் (இப்ப எல்லாமே ஜீன்ஸ் சுடிதார்தான்னு சொல்றீங்களா?)//

  இல்லையில்லை! ஜீன்ஸிலேயே indianized jeans எல்லாம் வந்து விட்டதே! அதுவும் பெண்களுக்கு நம்மூர் எம்ப்ராய்டரி, ஆண்களுக்கு வெள்ளை ஜீன்ஸில் காலிலி பார்டர்…தொலைவில் இருந்து பார்க்க கரை வேட்டி போல இருக்கும்! அடுத்த தபா போகும் பொது ரெண்டு அள்ளிக்கிட்டு வாங்க!

 32. kannabiran, RAVI SHANKAR (KRS) சொல்கிறார்:

  //இசைவேறானாலும்
  ஆழிசேர் ஆறுகள்
  முகிலாய் மழையாய் பொழிவதுபோல்//

  இசை வேறானாலும் = திசை வேறானாலும் ????

 33. அரவிந்தன் நீலகண்டன் சொல்கிறார்:

  அருமையான பதிவு சிறில். பன்மையினைப் பேணுவோம். அதில் ஒரு விசயம் என்னவென்றால் நமது பன்மை பேணும் கலாச்சாரம்தான் நம்முடைய பெரிய வரப்பிரசாதம். அந்த கலாச்சார மதிப்பீடுகளை மட்டும் அழித்துவிட்டால் இந்த மண்ணி ஆயிரமாயிரம் போஸ்னியாக்களும் ஆப்கானிஸ்தான்களும் பிறக்கும். சில சக்திகள் விரும்புவதும் அதைதான். Monocuture of genes as well as mindsets என்றைக்குமே நல்லதல்ல. எனக்கு அந்த மிலே சுரில் மிகவும் பிடித்த வரிகள் ‘என்ற சுவரமும் நிங்களொட சுவரமும் ஒத்து சேர்ந்து நம்முட சுவரமாயி’ ஏனோ கேரளாக்காரர்கள் ஒரு யானையையும் ஒரு மனிதரையும் வைத்து கேரளச்சூழலையே கொண்டு வந்ததை ஒப்பிடுகையில் நம்ம தமிழ்நாடு கோட்டைவிட்டுவிட்டது அம்மாம் பெரிய நட்சத்திர அணியை வைத்துக்கொண்டு. அதிலும் கமலின் உயிரில்லாத அறிவு சீவிப்பார்வை அந்த அழகிய பாடல் தொகுப்புக்கே ஒரு திருஷ்டி பொட்டு.

 34. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //ஏற்கனவே பல முறை உணர்ச்சிவசப்பட்டு விட்டதால் இப்போது அந்த அளவுக்கு இல்லை.//

  நான் பாத்து கொஞ்ச வருஷம் ஆகுது. தூர்தர்ஷன் ரெம்ப தூர் போயிடுச்சு.

  :)

 35. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //வெளீல இருக்கர நமக்கு இருக்கும் ‘இந்தியன் உணர்வு’ ஊர்ல இருக்கரவங்களுக்கு கம்மி ஆயிட்டே இருக்கோ? //

  இருக்கலாம். சோலைக்குள்ள இருக்கிற பூவுக்கு சோலையின் அழகு தெரியாது..வெளியிருந்து பாக்கிறவுங்கலுக்குத்தான் அது தெரியும்..

  (எப்டி நம்ம உவமை?)

  அதேபோல வெளியிலிருந்து பாத்தா பூவும் அழகும்தான் தெரியும் கீழயிருக்கிற மண்னோ ப்உழுவோ தெரியாது.

  :))

 36. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி துளசி அக்கா.

  கண்ணபிரான் நீங்க சொல்றதும் சரிதான்.

  அடுத்தமுறையா? இந்தமுறையே அள்ளிட்டு வர்றேன்… கூடிய விரைவில் செல்ல இருக்கிறேன்

 37. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //எனக்கு அந்த மிலே சுரில் மிகவும் பிடித்த வரிகள் ‘என்ற சுவரமும் நிங்களொட சுவரமும் ஒத்து சேர்ந்து நம்முட சுவரமாயி’ ஏனோ கேரளாக்காரர்கள் ஒரு யானையையும் ஒரு மனிதரையும் வைத்து கேரளச்சூழலையே கொண்டு வந்ததை ஒப்பிடுகையில் நம்ம தமிழ்நாடு கோட்டைவிட்டுவிட்டது அம்மாம் பெரிய நட்சத்திர அணியை வைத்துக்கொண்டு. அதிலும் கமலின் உயிரில்லாத அறிவு சீவிப்பார்வை அந்த அழகிய பாடல் தொகுப்புக்கே ஒரு திருஷ்டி பொட்டு. //

  உண்மை அரவிந்தன். இந்தப் பாடல யாராவது மீண்டும் படமாக்கினா நல்லாயிருக்கும்.

  எனக்கும் கேரளா பாட்டு ரெம்ப பிடிக்கும். தமிழ் வரிகளை அடுத்து அதுதான் எனக்குப் புரியும்..

  எல்லாத்துக்கும் ஒரே அர்த்தந்த்தானேண்றீங்களா. அதுவும் சரிதான்.

  :)

 38. ஜோ / Joe சொல்கிறார்:

  // அதிலும் கமலின் உயிரில்லாத அறிவு சீவிப்பார்வை அந்த அழகிய பாடல் தொகுப்புக்கே ஒரு திருஷ்டி பொட்டு//
  நண்பர் அரவந்தன் நீலகண்டனின் கமல் வெறுப்பு புரிந்து கொள்ளக் கூடியதே!

 39. Anonymous சொல்கிறார்:

  //அதிலும் கமலின் உயிரில்லாத அறிவு சீவிப்பார்வை அந்த அழகிய பாடல் தொகுப்புக்கே ஒரு திருஷ்டி பொட்டு.//

  அரவிந்தன் நீலகண்டனுக்கு, அவர் பாஷையில் அந்தணரான கமல் தி.கவில் சேர்ந்ததும் ஜாதி அடையாளங்களை உதறியதும் நாத்திகராக இருப்பதும் பெரியாரைப் போற்றுவதும்தான் பெரிய பிரச்னைகள் – நடிப்பு குறித்து எந்த ஒரு விமர்சனமும் இருக்காது – ஆம், கமல் மீதான அவரது குரோதம் புரிந்துகொள்ளக்கூடியதே. ஹே ராம் படத்தையே, முஸ்லீம்களுக்கு காவடி தூக்கிய கமலஹாசன் என்று விமர்சித்தார் நீலகண்டன் – படத்தைப் பார்த்து தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு அசல் விமர்சனங்கள் எப்படி இருந்தன என்று தெரியும். தன் மனைவியைக் கற்பழித்த டெய்லரின் பெயரை அல்டாஃப் என்று முஸ்லீமாக வைத்து, முஸ்லீமால் மனைவி கற்பழிக்கப்பட்டதுடன் நவகாளி யாத்திரையை இணைத்து காந்தியைக் கொலைசெய்யப் புறப்படும் பிராமணன் என்று இந்துத்துவாவைத் தூக்கி நிறுத்துகிறார் என்று பெரும்பாலும் கமலை விமர்சித்தார்களே தவிர, முஸ்லீம்களுக்குக் காவடி தூக்குகிறார் என்று விமர்சித்த மாதிரித் தெரியவில்லை. நாசர் போன்ற திறமையான நடிகர்களை வளர்த்து விட்டதில் வேண்டுமானால் கமலஹாசன் முஸ்லீம்களுக்கு காவடி தூக்கியிருக்கலாம்! திரித்து எழுதுவதற்கும் ஒரு அளவு வேண்டும் ஐயா. ஹிட்லரின் சமூகசேவை என்று பாடப்புத்தகங்களில் வரலாற்றுத் திருத்தம் செய்யும் காட்டுமிராண்டிகளை, திரைப்படம் வெளியிட அனுமதி வாங்கவேண்டிய பால் தாக்கரே போன்ற ரவுடிகளை திருத்தவேண்டியது கமல்ஹாசன் யாருக்குக் காவடி தூக்குகிறார் என்பதைவிட முக்கியமானது. திரைப்படத்தில் பாடல்கள் என்று ஆண்டாள் என்று போட்டது ஒரு குறையா! ஆண்டாளை திரைப்படத்தில் கொண்டுவந்தால் ஆண்டாளின் புனிதம் குலைந்துவிடுமா. முதுகெலும்பற்ற கருணாநிதி டாவின்சி கோடை தடைசெய்தபோது, அதை அனுமதிக்கவேண்டும் என்ற கூப்பாட்டையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்து, அனைவருக்கும் அவரவருக்கேற்றவாறு முதுகெலும்பு காணாமல் போகிறது என்று எடுத்துக்கொள்வோம். வெகுஜனக் கலாச்சாரத்துக்கு ஆண்டாளைக் கொண்டுவருவதில் என்ன தவறிருக்கிறது. கோவிலில் கும்பிட்டுவிட்டு, அங்கேயோ திருவில்லிபுத்தூரின் குண்டும் குழியுமான பஸ் ஸ்டாண்டிலோ பால்கோவா வாங்கித் தின்றால் மட்டும் போதுமா. கமல் ஒரு தமிழன். தமிழச்சியான ஆண்டாளின் படைப்புக்களை உபயோகிக்க அரவிந்தன் நீலகண்டனுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அவ்வளவு உரிமை கமலுக்கும் இருக்கிறது. கமலஹாசனை ஒரு கூத்தாடிப் பயல் என்ற கீழ்த்தரப் பார்வை பார்க்கும் புனிதர் பார்வைதான் அரவிந்தன் நீலகண்டனுடையது. வேர்க்கடலை தின்றுகொண்டே எல்லா அரசியல்வாதியும் அயோக்கியந்தான் ஐயா என்று பஞ்சாயத்து பேசும் அரைவேக்காட்டுப் பார்வைகளுக்கு இது எந்தவிதத்திலும்குறைந்தது அல்ல.

 40. Radha Sriram சொல்கிறார்:

  சிரில்,

  ரொம்ப னாளைக்கு அப்பரம் கேட்டேன் .கண்ல தண்ணியே வந்துடுஷ்ஷு(oops how do i type “chu”)….காவச்கர் மழைல சிரிஷிட்டே ஓடுவாரே அது என்ன?? i think it will have all the sports personalities passing on the olympic torch?? do you remember??
  thanks cyril for posting this!!

 41. தேச பக்தன் சொல்கிறார்:

  //இதுதாங்க இந்தியா //

  என்னங்க இது? இப்படியா நம்ம இந்தியாவைக் காட்டிக் கொடுப்பது?

  :)))

 42. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //சிரில்,

  ரொம்ப னாளைக்கு அப்பரம் கேட்டேன் .கண்ல தண்ணியே வந்துடுஷ்ஷு(oops how do i type “chu”)….காவச்கர் மழைல சிரிஷிட்டே ஓடுவாரே அது என்ன?? i think it will have all the sports personalities passing on the olympic torch?? do you remember??
  thanks cyril for posting this!! //

  னாளைக்கு = ‘ந்’ க்கு w உபயோகிக்கவும்
  chu இல்லாம வெறும் cu பயன்படுத்தவும்.

  அந்த வீடியோ நினைவிருக்கு பாட்டு நினைவில்ல. அதுவும் நல்லாயிருக்கும்.

  சூப்பர் பாடல்கள்.

 43. Hari சொல்கிறார்:

  சிறில்,
  ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.

  அனானி என்ன சொல்றாருன்னு சுத்தமா புரியலை.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்