ஸ்ரீசாந்த் அடிக்காத சிக்சர்

சரியாக இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் ஒரு கிரிக்கட் போட்டியை முழுதாக நேற்று பார்த்தேன். 50″ ப்ளாஸ்மா டிவியிலும் இந்திய க்ரிக்கட் பழையமாதிரிதான் தெரிந்தது.

இப்படி ஒரு மேட்ச்சை தோற்பது நம்ம மக்களுக்குத்தான் சாத்தியம். கமண்ட்ரி மட்டும் இல்லாமல் போயிருந்தால் மிட் நைட் மசாலாவுக்கு மாறியிருப்பொம். அதுவும் சிவராமகிரிஷ்ணன், பந்தை சுழற்றுவதைவிட நாக்கை நன்றாகவே சுழற்றுகிறார்.

இரண்டு ஓவர்களே இருக்கும் நிலையில் ஒரு கமெண்ட் விட்டார். “இனி (விளையாட்டின்) எல்லா முடிவுகளும் சாத்தியம். 1. இலங்கை ஜெயிப்பது 2. இந்தியா ஜெயிப்பது. 3. சமமாவது” (All results are possible now. Srilanka may win, India may win or it may be a tie). இந்த சாத்தியங்கள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே இல்லையா? விளையாட்டில் இது மூன்றைத் தவிர வேறென்ன சாத்தியங்கள்? மழை வராததைச் சொல்லுகிறாரோ என்னவோ.

இன்னுமொன்று எல்லா வர்ணணையாளர்களும் போதுவாக பயன்படுத்துவது, “Every run counts from now on”, அப்ப இதுக்கு முன்னால எடுத்த ரன் எல்லாம் எச்சில் போட்டு அழிச்சிருவாங்களா?

நம்ம வர்ணணையாளர்கள் செய்யும் இன்னொரு காமெடி என்னண்ணா ஒவ்வொரு ஷாட்டும் பேட்ஸ்மேனும், ஒவ்வொரு பாலையும் அந்த பௌலரும் ஏதோ பயங்கரமா ப்ளான் பண்ணி ஆடுற மாதிரி சொல்றது. உதாரணத்துக்கு ஒரு தடிமனான வெளிப்புற விளிம்பு ஆகுதுன்னு வையுங்க. (திரும்ப படிச்சுப் பாருங்க புரியும்). என்ன அழகா அத அடிச்சார்னு சொல்வாங்க. (Thick outside edge). உண்மையில் பேட்ஸ்மேன் தடுமாறியிருப்பார். பாதி ஓடுனதுக்கப்புறம்தான் பந்து எங்க போனதுன்னு அவருக்கே தெரியும் ஆனா ‘என்ன அழகா பந்த திசைதிருப்பி வழிகாட்டினார்’னு வர்ணிப்பாங்க.

அப்பீலுக்கு அவுட் குடுத்தா கட்டம் போட்டு காட்டி அவுட் இல்லன்னு நம்பவைப்பாங்க குடுக்கலேன்னா அவுட்டுன்னு நம்பவைப்பாங்க.

தேவையில்லாம அம்புக்குறியும் வட்டமும் போட்டு ஃபீல்ட் பொசிசன் சொல்லுவாங்க.

இதுகளக் கேட்டு கேட்டு கமெண்ட்ரிக்கு கமெண்ட் அடிச்சிட்டு எப்படியும் கெலிச்சுடலாம்னு இருக்கும்போது…

பேசாம ஒரிஜினல் ப்ளான்படி கேசினோவுக்கே போயிருந்திருக்கலாம். அங்கேயாவது The house always winsனு நமக்குத் தெரியும்.

இதுல புதுசா பவர்ப்ளே(Powerplay)ன்னு ஒண்ணு. நானும் ஏதோ பந்த சும்மா தூக்கிபோட்டு பேட்ஸ்மேன் four, sixனு அடிச்சுத் தள்றதுதான் ‘பவர்’ ப்ளேன்னு நெனச்சேன். அம்பயர் பெருசா வட்டம் போடும்போதே எனக்குத் தோணியிருக்கணும் அதுல ஒண்ணூமிலேன்னு.

இலங்கை வேகப் பந்து வீச்சாளர் ஒருத்தர் மாங்கா அடிக்கிறமாதிரி போடுறாரு. தலையெல்லாம் டை அடிச்சுகிட்டு வந்தாரே அவர்தான். இவருடைய ஆர்ம் அக்சன் பத்தி யாரும் கமெண்ட் அடிக்கல. ஏன்னா கை வளஞ்சிருக்குன்னு சொல்லி இலங்கைகாரங்க தப்பிச்சுக்குவாங்கன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குதுபோல.

கடேசி பந்து கொஞ்சம் wide ஆகப் போச்சுதாம். ஸ்ரீசாந்த் அம்பையர்கிட்ட ‘அம்மா காக்கா சாக்லேட்ட தூக்கிட்டுபோச்சுன்னு’ சொல்ற கொழந்த மாதிரி கேக்கிறாரு. அம்பையருக்கு அவசரமா சூசூ போகணுமோ அல்லது இவன் எங்க சிக்ஸ் அடிக்கப் போறான்னு நெனச்சாரோ என்னவோ போடா ஜோட்டான்னுட்டாரு (ஸ்பெல்லிங் கரெக்டா?)

ஸ்ரீசாந்த் அடிக்காமல்போன அந்த சிக்சரால் ஒரு இரவின் விழிப்பு வீணாப் போச்சு. இலங்கை டீம் தளராமல் விளையாடினர். They deserve it man! (or woman!).

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....30 மறுமொழிகள் to “ஸ்ரீசாந்த் அடிக்காத சிக்சர்”

 1. பினாத்தல் சுரேஷ் சொல்கிறார்:

  கலக்கல் பதிவு சிறில்.

  எனக்கும் இந்தக் கமெண்டரி கூத்து தொந்தரவு தாங்க முடியாது:-)

  ஒரு முறை ரவி சாஸ்திரி இன்னிங்ஸ் ப்ரேக்லே சொன்னாரு:

  Windies have scored 243

  அப்புறம் ஒரு 5 செக்ண்டு மௌனம் – அப்புறமா

  that means india has to score 244 to win..

  யோவ்.. 1 இன் த மைண்ட் 243 இன் த பிங்கர்ஸாய்யா போட்டுகிட்டிருந்தே இவ்ளோ நேரம்னு வீட்ட்லே ஒரே கூத்து:-))

  தவிர இவங்களோட ரெகுலர் க்ளீஷேக்கள்:

  1. a run a ball from here will take them to..
  2. the game is evenly poised..
  3. he is scoring at will (மத்தவங்க என்ன வேணாம்கறாங்களா?)

  ரொம்ப நாள் புலம்பலைக்கொட்ட ஒரு பதிவு, அதுக்கு நன்றி.

 2. ஜோ / Joe சொல்கிறார்:

  //நம்ம வர்ணணையாளர்கள் செய்யும் இன்னொரு காமெடி என்னண்ணா ஒவ்வொரு ஷாட்டும் பேட்ஸ்மேனும், ஒவ்வொரு பாலையும் அந்த பௌலரும் ஏதோ பயங்கரமா ப்ளான் பண்ணி ஆடுற மாதிரி சொல்றது.//

  சரியா சொன்னீங்க !

  வர்ணனையாளனுங்க கொடுமை இப்படிண்ணா ,குடுட்டாம் போக்குல ஜெயிச்ச அணி கேப்டன் வந்து அவங்க பிளான் ஒர்க் அவுட் ஆனது பத்தி உடுவார் பாருங்க ஒரு பீலா!

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சுரேஷ்.. உங்க லிஸ்ட்டும் கலக்கல்.. கூடவே

  they still have a lot more play left.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //வர்ணனையாளனுங்க கொடுமை இப்படிண்ணா ,குடுட்டாம் போக்குல ஜெயிச்ச அணி கேப்டன் வந்து அவங்க பிளான் ஒர்க் அவுட் ஆனது பத்தி உடுவார் பாருங்க ஒரு பீலா! //

  குருட்டாம் போக்கு.. எங்க ஊர்ல சொல்றதுயா… புரியுதா உங்களுக்கெல்லாம். :)

  சரியா சொன்னீங்க ஜோ.
  ஆனா இந்த மேட்ச பொறுத்தவரைக்கும் இலங்கையின் முயற்சி பாராட்டத்தக்க்கது.

 5. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  கிரிக்கெட் பார்த்து நொந்து போனதுக்கு உங்க பதிவு ஒரு ஆறுதல்!

  வேறென்ன சிரிச்சிகிட்டேன்!

 6. மோகினிகள் கழகம் சொல்கிறார்:

  ஐ! பெனாத்தலார் இங்கதான் இருக்காரா? நாங்க அவரை தேடிகிட்டிருக்கோம்!

  //யோவ்.. 1 இன் த மைண்ட் 243 இன் த பிங்கர்ஸாய்யா போட்டுகிட்டிருந்தே இவ்ளோ நேரம்னு வீட்ட்லே ஒரே கூத்து:-))
  //

  பின்னே! கணக்குல எதுவும் தப்பு வந்துடக் கூடாதுல்ல! பெரிய பொறுப்புல இருக்கிறவங்க அப்படித்தான் நிதானமா கணக்கு போட்டு சொல்லுவாங்க!

 7. Radha Sriram சொல்கிறார்:

  சிரில்,

  ஹர்ஷா பொக்லெ கமெந்ட்ட்ரி கேட்டது இல்லையா?எனக்கு பிடித்த வர்ணணையாளர்!!one of the best !!
  stastics சொல்லி ஒரு வழி பண்ணிடுவார்!

 8. தருமி சொல்கிறார்:

  //எனக்கும் இந்தக் கமெண்டரி கூத்து தொந்தரவு தாங்க முடியாது//

  இதில ஒரு சின்ன மாற்றம்: எனக்கும் இந்தக் கிரிக்கெட் தொந்தரவு தாங்க முடியலைங்க…

 9. பினாத்தல் சுரேஷ் சொல்கிறார்:

  ஹாய் மோகினீஸ்.. நான் எங்கே போனேன்.. இங்கேயே வலைப்பக்கம்தான் இருக்கேன்.

  கவலைப்படாதீங்க, வீராச்சாமி பாக்கறதா ஒரு ப்ளான். பாத்துட்டு வந்து உங்களுக்கு ஒரு படையல் வைச்சுடறேன்.. ஓக்கே?

  ஜோ, சரியா சொன்னீங்க! அஸாருதீனோட பேவரைட் மேட்ச் முடிவு வசனம்:

  Our batsman didnt bat well.. our bowlers didnt bowl well.. ரொம்ப ஒரே மாதிரி இருக்கேன்னு feel பண்ணுவாரோ என்னமோ.. our fielders didnt field well at all

  ஜெயிச்சுட்டா எல்லாத் தப்பையும் மறந்துபோயிடுவாங்க:-)

 10. மோகினிகள் கழகம் சொல்கிறார்:

  //கவலைப்படாதீங்க, வீராச்சாமி பாக்கறதா ஒரு ப்ளான். பாத்துட்டு வந்து உங்களுக்கு ஒரு படையல் வைச்சுடறேன்.. ஓக்கே?
  //

  படையலா! எங்களோடவே ஐக்கியமாகப் போறீங்கன்னு சொல்லுங்க!

 11. இராம் சொல்கிறார்:

  //இதில ஒரு சின்ன மாற்றம்: எனக்கும் இந்தக் கிரிக்கெட் தொந்தரவு தாங்க முடியலைங்க…/

  இப்பிடி ஒட்டுமொத்தமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோபத்தை தூண்டிய தருமி ஐயா’வே கண்டிக்கிறோம்..

  இப்படிக்கு,
  இந்திய அணி ஜெயிக்கும் என கனவு காணும் லூஸ்களின் மன்றம்,
  இந்தியா,
  உலகம்,
  பால்வெளி.

 12. SurveySan சொல்கிறார்:

  தக்காளி, வெங்காயம், உருள வாங்கலியா?

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சர்வே.. எப்ப டெட்லைன்?
  மறந்துட்டேன். முயற்சி செய்வேன்.

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இராம்
  //இந்திய அணி ஜெயிக்கும் என கனவு காணும் லூஸ்களின் மன்றம்,//

  பொய்களை நம்புபவர்கள் லூஸ்கள் அல்ல. லூஸ்கள் குணமாக வாய்ப்பிருக்கிறது.

  :)

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ராதா,
  அவர் கொஞ்சம் ப்ரொஃபஷனல் கமெண்டேட்டர். ப்ரொஃபஷனல் கிரிக்கட் ப்ளேயர் இல்லை என்பது இவரது சிறப்பு.

 16. மோகன்தாஸ் சொல்கிறார்:

  //இரண்டு ஓவர்களே இருக்கும் நிலையில் ஒரு கமெண்ட் விட்டார். “இனி (விளையாட்டின்) எல்லா முடிவுகளும் சாத்தியம். 1. இலங்கை ஜெயிப்பது 2. இந்தியா ஜெயிப்பது. 3. சமமாவது” (All results are possible now. Srilanka may win, India may win or it may be a tie). இந்த சாத்தியங்கள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே இல்லையா? விளையாட்டில் இது மூன்றைத் தவிர வேறென்ன சாத்தியங்கள்? மழை வராததைச் சொல்லுகிறாரோ என்னவோ.//

  ஒரு போட்டியின் தொடக்கத்தில் இரண்டு அணிகளும் வெற்றி வாய்ப்பை சரி சமமாகப் பெற்றிருப்பதில்லை. எப்படியென்றால் உதாரணத்திற்கு ஜிம்பாபேயையும் ஆஸ்திரேலியாவையும் எடுத்துக்கொள்வோமாயின் இந்த உதாரணம் சரியாகப் புரியும். ஆனால் கடேசி இரண்டு ஓவர்களில் பன்னிரெண்டு ரன்கள் எடுத்தால் ஜிம்பாபே வெற்றி என்றால் சிவராமக்கிருஷ்ணன் சொன்னது உண்மையில்லையா.

  இது சொல்லப்போனால் உதாரணத்திற்கு இது எல்லா போட்டிகளுக்கும் பொறுந்தும், போட்டி ஆரம்பிக்கும் முன்னரே யார் ஜெயிப்பார்கள் யார் தோற்பார்கள் என்பது பெரும்பாலும் நடுநிலையாளர்களுக்கு தெரிந்திருக்கும். யாராவது ஒருவர் அன்டர்டாகாகத் தான் இருப்பார்கள். பர்சன்டேஜ் தான் மாறுபடும் இல்லையா 50 – 50 ரொம்பவும் கஷ்டமான ஒரு வாய்ப்புதான்.

  //இன்னுமொன்று எல்லா வர்ணணையாளர்களும் போதுவாக பயன்படுத்துவது, “Every run counts from now on”, அப்ப இதுக்கு முன்னால எடுத்த ரன் எல்லாம் எச்சில் போட்டு அழிச்சிருவாங்களா?
  //

  ஒரு போட்டியின் ஆரம்ப ஓவர்களில் ரன் அடிப்பதற்கும் ஸ்லாக் ஓவர்களில் ரன் அடிப்பதற்கும் நிச்சயமாய் வித்தியாசம் உண்டு. பெரும்பாலும் நீங்கள் சொன்ன டெர்ம், ஸ்லாக் ஓவர்களில் சொல்லப்படுவது. அந்தச் சமயங்களில் எக்ஸ்டரா ரன் கொடுக்கும் பொழுது சொல்லப்படுவது. வைட், நோ பால், ஒன்றிற்கு இரண்டு ரன்கள் எடுக்கும் பொழுது சொல்வது.

  அந்தச் சமயத்தில் ஒரு ரன் அப்படி வீணாய்ப்போவதைப் பற்றி வரும் டெர்ம் அது.

 17. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மோகன்தாஸ்,
  ஒரு சுவைபட சொல்லத்தான் இப்படி எழுதியிருக்கிறேன். இதன் அர்த்தங்கள் நிச்சயம் புரிகிறது.

  இத நகைச்சுவையில் வகைப்படுத்தியிருக்கவேண்டியது.. கீழ லேபிள்ல குடுத்திருக்கேன்.

  சும்மா கேட்டு நேரடியா பொருள் எடுத்தா கொஞசம் சுவையா இருந்துச்சு. அதான்.மேட்ச் முழுவதும் இதத்தான் செஞ்சுட்டீருந்தேன்.

  இவ்வளவு சிரமப்பட்டு விளக்கம் தந்ததற்கு நன்றி.

 18. SurveySan சொல்கிறார்:

  //சர்வே.. எப்ப டெட்லைன்?
  மறந்துட்டேன். முயற்சி செய்வேன். //

  மறந்துட்டீங்களா? ஓ,நேத்து CNN பாக்கலியா? கீழ ticker ஓடிருக்குமே? “சர்வேசன் போட்டி புகைப்படம் அனுப்ப கடைசி நாள் ஞாயிறு 11:59 pm ist” :)

  பொறுமையா அனுப்புங்க. பிரியாணி சாப்ட மப்பு எப்ப தெளியுதோ, அப்பதான் வாக்கெடுப்பு பதிவு போடுவேன்.. சாயங்காலத்துக்குள்ள அனுப்புங்க :)

 19. படியாதவன் சொல்கிறார்:

  ஆஹா, நீங்க சொல்லுறதப் பாத்தால், இலங்கை அணியில சர்ச்சைக்குள்ளாகும் அனைவரும் இப்படி காரணம் சொல்லித்தப்பி விடுவார்கள் என்கிற தொனி தெரிகிறதே?
  முரளியையும் அப்பிடித்தான் சொல்லுவியளோ?
  அவயளையெல்லாம் பரிசோதிச்சு அனுமதிச்சவை என்ன பேயன்கள் எண்டுறியளோ?
  மலிங்கவிடம் தவறிருப்பின் வெள்ளைத்தோல் நடுவர்கள் இதுவரை சும்மா இருக்கப் போவதில்லை.
  எனக்கும் சந்தேகமுண்டு அவரின் கை வளைவின் அளவு குறித்து.. ஆனால் அனுமதிக்கிறார்களே?
  அக்தர் கூட கையை விசுக்குவதுபோலத்தானே வீசுகிறார்?

 20. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  படியாதவன்,
  சும்மா ஜோக்குக்குத்தான் அப்படிச் சொன்னேன்.

  ஆனா இவரின் ஆக்ஷன் கொஞ்சமல்ல நிறையவே வித்யாசமாக இருக்கிறது.

  பதிவை நகைச்சுவை பிரிவில் சேர்த்திருக்கவேண்டும். கீழே லேபிளில் நகைச்சுவை போட்டிருக்கேன்.

  இலங்கை ஆட்கள், முரளிபற்றி எந்தவிதமான தாழ்ந்த அபிப்ப்ராயமும் எனக்கில்லை.

 21. ஆதிபகவன் சொல்கிறார்:

  இந்திய அணி தோற்க்கும்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லியாக வேண்டுமே. இந்தமுறை பந்து வீச்சாளர் கை வளைந்திருக்கிறது என்று சொல்லிவிடலாம். அடுத்த முறை தோற்க்கும் போது பந்து வீச்சாளர் தலைக்கு டை அடித்திருக்கிறார் என்று ஒரு புதிய காரணம் சொல்லலாம்.

  இந்திய அணியிலுள்ள எல்லோருமே திறமையானவர்கள்தான். ஆனால் ஒரு பிரச்சினை. ஒரு மேட்ச்சில் ஒருவர் நன்றாக விளையாடினால் அடுத்தவர் சொதப்பிவிடுவார்.

  கிரவுண்டில் ஒழுங்காக விளையாடாத வீரர்கள் எல்லாம் காமெண்ட்ரியில் வெளுத்து வாங்குகிறார்கள்.

 22. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஆதிபகவன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  //இந்திய அணி தோற்க்கும்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லியாக வேண்டுமே. இந்தமுறை பந்து வீச்சாளர் கை வளைந்திருக்கிறது என்று சொல்லிவிடலாம். அடுத்த முறை தோற்க்கும் போது பந்து வீச்சாளர் தலைக்கு டை அடித்திருக்கிறார் என்று ஒரு புதிய காரணம் சொல்லலாம்.
  //

  இந்தப் பந்துவீச்சாளர்தான் அதிகம் ரன் தந்தார். இவரால் இந்தியா தோற்றது என சொல்ல வரல.

  //இந்திய அணியிலுள்ள எல்லோருமே திறமையானவர்கள்தான். ஆனால் ஒரு பிரச்சினை. ஒரு மேட்ச்சில் ஒருவர் நன்றாக விளையாடினால் அடுத்தவர் சொதப்பிவிடுவார்.
  //

  இது உண்மையாகவே தோன்றுது.

  //கிரவுண்டில் ஒழுங்காக விளையாடாத வீரர்கள் எல்லாம் காமெண்ட்ரியில் வெளுத்து வாங்குகிறார்கள். //

  நான் பாத்த சானலில் இப்டி இல்ல. ஆனா பல கமெண்டேட்டர்கள் இதச் செய்றாங்க.

  கருத்துக்களுக்கு நன்றி ஆதிபகவன்.

 23. ஆதிபகவன் சொல்கிறார்:

  //இந்தப் பந்துவீச்சாளர்தான் அதிகம் ரன் தந்தார். இவரால் இந்தியா தோற்றது என சொல்ல வரல.//

  ரன்களை இலக்கு வைத்துதானே வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறோம். ஆகையால் தோல்வியின் முழுப் பொறுப்பும் பேட்ஸ்மனையே சாருகிறது!!!!!

  இத்தனை விக்கட் எடுத்தால்தான் வெற்றி என்று விதிமுறைகளை மாற்றிவிட்டால் அதன் பிறகு பந்து வீச்சாளரின் தலைதான் உருளும்!

 24. Sridhar Venkat சொல்கிறார்:

  :-))) நல்ல சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.

  //கடேசி பந்து கொஞ்சம் wide ஆகப் போச்சுதாம். ஸ்ரீசாந்த் அம்பையர்கிட்ட ‘அம்மா காக்கா சாக்லேட்ட தூக்கிட்டுபோச்சுன்னு’ சொல்ற கொழந்த மாதிரி கேக்கிறாரு. அம்பையருக்கு அவசரமா சூசூ போகணுமோ அல்லது இவன் எங்க சிக்ஸ் அடிக்கப் போறான்னு நெனச்சாரோ என்னவோ போடா ஜோட்டான்னுட்டாரு (ஸ்பெல்லிங் கரெக்டா?)
  //

  அந்த பந்தை ஆர்வமிகுதியால் ஸ்ரீசாந்த் தொட்டுவிட்டார். அதனால் அது wide கிடையாது.

  இங்குதான் ஜெயசூர்யாவின் presence of mind அருமையாக வேலை செய்திருக்கிறது. கடைசி பந்தில் எப்படியும் 6 ரன்கள் தேவை. அதனால் wide-ஆக போட்டார். ஸ்ரீசாந்த் அதை விட்டிருந்தால் நமக்கு ஒரு ரன் மட்டும் இன்னொரு பந்து கிடைத்திருக்கும். ஆனால் அப்படி விடுவதற்கான வாய்ப்புகள் குறைவே. அடித்து ஆட வேண்டும் என்று முன்முடிவோடு இறங்கியிருக்கின்றார்.

  quite brilliant but simple thought from ஜெயசூர்யா.

  ஏனோ ஷார்ஜாவில் சேத்தன் சர்மா கடைசி பந்தாக full-toss போட்டதும் அதை மியாந்தத் சிக்ஸர் அடித்ததும் மனதில் வந்து கொஞ்சம் கஷ்டப்பட வைத்தது.

 25. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி ஸ்ரீதர் வெங்கட்.
  எனக்கும் நண்பர்கள் ஸ்ரீசாந்த் இதுக்கு முனாடி எங்கேயோ சிக்சர் அடிச்சிருக்கார்னு சொல்லி நம்பிக்கைய வளர்த்திட்டாங்க

 26. G.Ragavan சொல்கிறார்:

  நேற்று நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கு மேட்ச் நடந்து கொண்டிருந்தது. வாயை வெச்சுக்கிட்டு சும்மாயிருந்திருக்கக் கூடாது. மேட்சா…இன்னைக்கு இந்தியா மேச்சில் தோத்துப் போகும்னு சொன்னேன். ஒடனே டெண்டுல்கர் அவுட். எல்லாரும் அப்படி ஒரு மொற மொறச்சாங்க. அப்புறம் பாத்தா கடைசியில இந்தியா கிரிக்கெட்டில் தோத்துப் போச். எல்லாரும் சேந்து குமுறுனாங்க பாருங்க……….ம்ம்ம்ம்…ஒன்னும் சொல்லக்கூடாது.

 27. மணிகண்டன் சொல்கிறார்:

  சிலசமயம், ஆட்டத்தை விட கமெண்டரி சுவாரஸ்யமா இருக்குங்க.ஷேன் வார்ன் பந்துல பாசித் அலி அவுட்டானப்ப வர்ணனையாளர் சொன்னது (பேர் ஞாபகமில்லை)

  He has done him between his legs !!

 28. கார்த்திக் பிரபு சொல்கிறார்:

  கடேசி பந்து கொஞ்சம் wide ஆகப் போச்சுதாம். ஸ்ரீசாந்த் அம்பையர்கிட்ட ‘அம்மா காக்கா சாக்லேட்ட தூக்கிட்டுபோச்சுன்னு’ சொல்ற கொழந்த மாதிரி கேக்கிறாரு. அம்பையருக்கு அவசரமா சூசூ போகணுமோ அல்லது இவன் எங்க சிக்ஸ் அடிக்கப் போறான்னு நெனச்சாரோ என்னவோ போடா ஜோட்டான்னுட்டாரு (ஸ்பெல்லிங் கரெக்டா?)
  //

  இந்த பேராவை ரசித்து படித்தேன் ..எனக்கு பிடித்த பதிவுகளில் ஒன்று பா இது..இன்னும் கொஞ்சன் கமென்ட்ரீஸ் சொல்லி அதையும் ஓட்டிருக்கலாம்..

  இந்த பதிவு எல்லா ஐ டி கம்பெனி மெயில்களில் பார்வேர்டா பரவினால் அதற்கு நான் பொறுப்பல்ல ஹி ஹி

 29. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மணி நிச்சயமா நீங்க சொல்ற மாதிரியான கமெண்ட்ரிகள் இருக்குது. சிவராம க்ரிஷ்ணனும் அவ்வளவு மோசமில்ல. சொல்லப்போனா நம்ம மோகன் தாஸ் சொல்ற மாதிரி அவர் சொல்ற எல்லாத்துக்கும் அர்த்தம் இருக்குது. ஆனாலும் வெளிப்படையா பாக்கும்போது சில்லியா தெரியுது.

 30. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ரெம்ப நன்றி கார்த்திக். நானும் ஐ.டி லதான் இருக்கேன்.

  அப்படியே வலைப்பதிவாளர்களுக்கு விளம்பரம் கெடச்சா சரி.

  :))

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்