- தேன்/cyrilalex.com - http://cyrilalex.com -

தேன்கூடு கல்யாண்

Posted By சிறில் அலெக்ஸ் On February 12, 2007 @ 3:25 am In கவிதை,அஞ்சலி,அறிவிப்பு | 13 Comments

எத்தனையோ மனநிலைகளில் பல பதிவுகளும் இட்டிருக்கிறேன் இப்படி சோகத்தோடு எதையும் எழுதியதில்லை. ஒரு இளைஞன், அதுவும் சாதிக்கப் பிறந்த, சாதித்துக் காட்டிய, பிறர் சாதிக்க வழிவகுத்த ஒரு இளைஞன் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார்.

தேன் உண்ணத் தந்துவிட்டு
தேனீக்கள் பறந்துவிடும்

மழைநீரைப் பொழிந்துவிட்டு
மேகங்கள் கலையும்

பாதைக்கு வழிகாட்டி
பகலவனும் மறையும்

சுடர் ஏற்றி வைத்தவர்
சுடராகி நிற்கிறார்

இணையம் தந்த இனிய நண்பர்.

இனி எங்கே தேடுவது
இந்த ராஜாத் தேனீயை

தனக்குச் சாவில்லை
எனும்
கர்வத்தில்தான் கடவுள்
மரணத்தை அளிக்கிறான்போலும்.

கொல்லக் கிறுக்கர்கள் ஆயிரம் இருக்க
கொண்டுபோனதேன் எங்கள் நண்பரை?
செல்லாக் காசுகள் தெருவெங்கும் கிடக்க
தங்கக் காசுகள் மறைவதும் ஏன்?

இணைய நட்பை பிரிவதிலேயே
இத்தனை சோகமென்றால்
இனிய தந்தையை
வாழ்க்கைத் துணையை பிரிவதென்பது?

சொல்ல வார்த்தையில்லை.
என் கண்ணீருக்குத் தடைபோடவே
இந்தக் கவிதை.

மனம் கேட்கலைங்க. இந்த இளம் வயதில் இந்த சாதனையாளரை மரணம் கவ்விக்கொண்டது மாபெரும் சோகம். என்னோடு குறுகிய காலம் மின்னஞ்சல் தொடர்புவைத்திருந்தார். ஒருபோதும் தேன்கூட்டை உருவாக்கியவர், நிர்வகிப்பவர் என்கிற கர்வம் துளியும் தென்பட்டதில்லை அவரது வார்த்தைகளில். அவரின் கருத்துக்களையும் ஒரு suggestionஆக வைப்பாரே தவிர திணிப்பதில்லை. நான், என் கொள்கை என ஈகோவில் ஆடிக்கொண்டிருக்கும் பல இணைய ஆளுமைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்டவர்.

ஐயோ கொடுமைங்க.

கடவுளை நம்புறவங்க வேண்டிக்கங்க, நம்பாதவங்க அடுத்தவங்க நம்புகிற கடவுளிடம் வேண்டிக்குங்க, இறந்தவருக்காகவும் அவரை நம்பி இருந்தவர்களுக்காகவும்.

1.ரியாத் தமிழ்ச்சங்கம் [1]
2.சந்திரமதி கந்தசாமி [2]
3.துளசிகோபால் [3]
4.நாமக்கல் சிபி [4]
5.தமிழ்மணம் [5]
6.சிந்தாநதி [6]
7.முத்தமிழ்மன்றம் [7]
8. மா. சிவகுமார் [8]
9. யெஸ். பாலபாரதி [9]

Popularity: 4% [? [10]]


Article printed from தேன்/cyrilalex.com: http://cyrilalex.com

URL to article: http://cyrilalex.com/?p=223

URLs in this post:

[1] ரியாத் தமிழ்ச்சங்கம்: http://groups.yahoo.com/group/riyadhtamilsangam/message/1168

[2] சந்திரமதி கந்தசாமி: http://mathy.kandasamy.net/musings/2007/02/11/638

[3] துளசிகோபால்: http://thulasidhalam.blogspot.com/2007/02/blog-post_12.html

[4] நாமக்கல் சிபி: http://pithatralgal.blogspot.com/2007/02/192.html

[5] தமிழ்மணம்: http://blog.thamizmanam.com/archives/84

[6] சிந்தாநதி: http://valai.blogspirit.com/archive/2007/02/11/kalyan.html

[7] முத்தமிழ்மன்றம்: http://www.muthamilmantram.com/showthread.php?t=18585

[8] 8. மா. சிவகுமார்: http://masivakumar.blogspot.com/2007/02/blog-post_12.html

[9] 9. யெஸ். பாலபாரதி: http://balabharathi.blogspot.com/2007/02/blog-post_12.html

[10] ?: http://alexking.org/projects/wordpress/popularity-contest