மணிகண்டன் கேள்விகளுக்கு என் பதில்

மணிகண்டன் கிரிக்கட் கேள்விகளக் கேட்டு ஒரு பதிவு போட்டிருக்கார்…பின்னூட்டமாய் நான் அளித்த பதில்கள்.

எல்லாமே சரியான விடைகள்.

1. டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் அடித்த வீரர் யார்?
அந்த மேட்சின் மேன் ஆஃப் த மாட்ச்

2. முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி எந்த நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
ஜெயிச்ச டீமுக்கும் இந்தியாவுக்கும் அல்லது
அமிர்கான் டீமுக்கும் ஆங்கிலேயர் டீமுக்கும்

3. எத்தனை விதமான முறைகளில் ஒரு பேட்ஸ்மெனை அவுட்டாக்க முடியும்?
ஒரே வழிதான் அவர விளையாட வைக்கணும். விளையாடாத பேட்ஸ்மேன் அவுட் ஆக மாட்டார்

4. முதல் ஒரு நாள் போட்டியின் முதல் பந்தை வீசியவர் யார்?
ஓப்பனிங் பௌலர்

5. ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை தொடர்ந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் யார்?தொடர்ந்து நல்லா ஆடியவர்

6. தொடர்ந்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் யார்?
டெஸ்ட் போட்டி அதிகமா ஆடறவங்க ‘வீரர்’ இல்ல

7. 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தான் மொத்தமாக அடித்த ரன்களை விட அதிக விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் யார்?
அட இந்தியராத்தான் இருக்கணும்

8. இம்மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே ஒரு விக்கெட் விழுந்தது? இச்சாதனையை படைத்த ஒரே மைதானம் இதுதான். எந்த மைதானம்?
சரியா மெயிண்டைன் பண்ணாத மைதானம்

9. மூன்றாவது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர் யார்?
ஓடத் தெரியாதவர்

10. ‘Obstructing the Field’ என்ற முறையில் அவுட்டான முதல் வீரர் யார்?
தடி மாடு

எப்டி நம்ம க்ரிக்கட் அறிவு?

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....20 மறுமொழிகள் to “மணிகண்டன் கேள்விகளுக்கு என் பதில்”

 1. மணிகண்டன் சொல்கிறார்:

  இதுல டாப் 10வது பதில் தான்..நல்லாத்தான் யோசிக்கிறீங்க :)

 2. மணிகண்டன் சொல்கிறார்:

  7வது சரிதாங்க.. அவர் ஒரு இந்தியர் தான்.

  நம்மாளுங்கள தவிர வேற யாரு இப்படியெல்லாம் கலக்கமுடியும் :)

 3. SK சொல்கிறார்:

  ஹாஹஹஹஹஹஹ்ஹா

  அபாரம்!

 4. SurveySan சொல்கிறார்:

  என் அளவுக்குதான் உங்களுக்கும் க்ரிக்கெட் அறிவு போல :)

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மணிகண்டன்,
  //இதுல டாப் 10வது பதில் தான்..நல்லாத்தான் யோசிக்கிறீங்க :) //

  நன்றி.

  நானும் திரும்ப 10 படிக்கும்போது சிரிச்சிட்டேன். guess it came naturally.

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  SK,
  //ஹாஹஹஹஹஹஹ்ஹா

  அபாரம்! //

  அப்ப நாந்தான் மேன் அஃப் த மேட்ச்.

  :)

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  /என் அளவுக்குதான் உங்களுக்கும் க்ரிக்கெட் அறிவு போல :) //

  ஆமாங்க ஆமா.

  :))

  அப்ப நாமெல்லாம் ஒரே டீம்.

 8. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  அங்க நான் முக்கி முக்கி பதில் சொல்லிக்கிட்டு இருந்தா இங்க ஜாலியா பதிவு போட்டு பட்டையைக் கிளப்பறீரே.

  உம்ம 10ஆவது கேள்விக்கு நம்ம இன்சமாம் வந்து பாட்டை (bat) சுழட்டப் போறாரு பார்த்து!

  என் பேவரேட் 3ஆவது பதில்தான்!

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கொத்ஸ்,
  நானும் பாத்தேன் அங்க நீங்க முக்கினத.

  சில நேரங்கள்ல அடக்கமுடியல.

  இன்ஸமாமா? பேட்ட சுழட்டினா பாட்டில் அடிக்க வேண்டியதுதான்.
  :))

 10. இலவசக்கொத்தனார் சொல்கிறார்:

  பாட்டைச் சுழட்டினா பாட்டில் அடிப்பீரா? அப்போ பாலை எறிந்தால் பாலாபிஷேகமா? ஹிஹிஹி. :))

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஐ..
  இன்சமாம் பால் வீச மாட்டாரே?

  அக்தர் பேட்ட காமிக்கும்போது இன்சி பால் போட்டாலும் போடுவாரு.

  அதுசரி பாட்டில்னா எப்பவுமே அந்த நினைவுதான் வருமா?
  :))

 12. Boston Bala சொல்கிறார்:

  :-)))

  ரொம்ப ரசித்தேன்

 13. ரவிசங்கர் சொல்கிறார்:

  படிச்சேன்..சிரிச்சேன் ;)

 14. நண்பன் சொல்கிறார்:

  Good.

  Howizzzatன்னு கூவ ஒரு பத்து பேரையும் வச்சுக்கிட்டீங்கன்னா, ஒரு நல்ல டீம் உண்டாகிடும்…

 15. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி பாபா.

 16. பத்மா அர்விந்த் சொல்கிறார்:

  உங்க ஆபீஸ்ல ஒரு வேலை கிடைக்குமா? நல்ல சந்தோஷமான மூடுல இருக்கீங்க.

 17. மு.கார்த்திகேயன் சொல்கிறார்:

  அநியாய லொள்ளுங்க உங்களுக்கு சிறில்!

  ஆனா..உண்மையிலே எல்லாமே சரியான விடைகள் தான்.. எப்படி இப்படி எல்லாம்!

 18. Simulation சொல்கிறார்:

  ;)))))) ரசித்தேன்.

  3. எத்தனை விதமான முறைகளில் ஒரு பேட்ஸ்மெனை அவுட்டாக்க முடியும்?

  ஒரே வழிதான் அவர விளையாட வைக்கணும். விளையாடாத பேட்ஸ்மேன் அவுட் ஆக மாட்டார்

  தவறான விடை: முந்தைய ஆட்டக்காரர் அவுட் ஆன 3 நிமிடங்களுக்குள், பேட் செய்ய அடுத்தவர் வர வேண்டும். இல்லையென்றால் அவர் ஆடாமலே அவுட். எனவே விளையாடாத பேட்ஸ்மேனையும் அவுட் செய்ய முடியும்.

  - சிமுலேஷன்

 19. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //உங்க ஆபீஸ்ல ஒரு வேலை கிடைக்குமா? நல்ல சந்தோஷமான மூடுல இருக்கீங்க.//

  இந்தக் கேள்விய நான் பல பதிவர்கள்கிட்ட கேட்டிருக்கேன்…

  சரி எங்க ஆபீஸ்ல எனக்கே வேலையில்லையே அப்புறம் உங்களுக்கு எங்க.. :)

  சந்தோஷமான மூடப் பத்தி என் சம்சாரத்துட்ட சொல்லிராதீங்க.
  :))

 20. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சிமுலேஷன்,

  ஆகா ஒரு கேள்வி தப்பாயிடுச்சா

  :)))

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்