- தேன்/cyrilalex.com - http://cyrilalex.com -

நிருபர் ஆகலாம் வாங்க

Posted By சிறில் அலெக்ஸ் On February 27, 2007 @ 4:13 am In தகவல்,இணையம் | 9 Comments

உங்கள் ஊரில் சுற்றும் நடக்கும் நிகழ்ச்சிகளை, உருவாகும் செய்திகளை உலகுக்கு எடுத்துச் சொல்ல ஒரு புதிய சேவை இணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை செய்திருப்பது நம் நண்பர் ஒருவர். Desizip.com [1] எனும் தளம் உங்களை உங்கள் பகுதிக்கு நிருபராக செயல்பட வசதி செய்கிறது. இந்தியர்களை Desi(தேசி) என்பது வழக்கம் அதுபோல பின்(Pin) கோட் ஜிப்(Zip) எனப் படுகிறது.

தளம் இயங்கும் முறை இதுதான். உங்கள் பின்கோட்டைத் தந்து உங்கள் ஏரியாவினை உங்களுக்கென பதிவு செய்துகொள்ளுங்கள். அப்புறம் என்ன உங்கள் ஏரியாவுக்கு நீங்கதான் ரிப்போர்ட்டர். So simple. (மேலும் விபரங்களுக்கு இங்க க்ளிக் செய்யுங்க. [2])

உங்கள் ஏரியாவில் வரிவிளம்பரங்களை (Classifieds)சேகரித்து இணையத்தில் சேர்க்கவும் வசதிகள் உள்ளன. இதன்மூலம் வரும் வருமானத்தை உங்களோடு DesiZip.com [1] பங்கிட்டுக்கொள்ளும்.

உங்கள் ஊரில் நடக்கவிருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள், விழாக்கள் பற்றிய அறிவுப்புக்கள் என பலவித செய்திகளையும் முறைப்படுத்தி பதிக்க இயலும்.

இதுபோன்ற முயற்சிகள் கிழக்கு ஆசிய நாடுகளில் பலத்த வெற்றி பெற்றுள்ளன. சாமான்யர்கள் நிருபர்களாய் செயல்பபடும்போது பல கோணங்களில் சிறு சிறு செய்திகளும் உடனுக்குடன் உலகைப்போய் சேர்கிறது.

So, ரெடியா?

போய் உங்க பின் கோடுக்கு ஒரு துண்டப் போட்டுவையுங்க.

மேலும் விபரங்களுக்கு இங்க க்ளிக் செய்யுங்க. [2]

Popularity: 7% [? [3]]


Article printed from தேன்/cyrilalex.com: http://cyrilalex.com

URL to article: http://cyrilalex.com/?p=242

URLs in this post:

[1] Desizip.com: http://desizip.com

[2] மேலும் விபரங்களுக்கு இங்க க்ளிக் செய்யுங்க.: http://desizip.com/asp/D_Bus_Plan.asp

[3] ?: http://alexking.org/projects/wordpress/popularity-contest