‘வார்த்தையில்லாமலே பாஷை உண்டாகலாம்’

‘மொழி’. வாவ்.

தமிழ் திரையுலகம் இயக்குனர் இமயங்களையும், மலைகளையும் கடந்து வெகுதொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது என என்னை நம்பவைத்த இன்னுமொரு படம் ‘மொழி’.

பின்னிரவில் தூங்கிய அசதியோடு, இப்படி ஒரு ‘சோகமான’ படத்துக்குப் போகிறோமே என சலித்துக்கொண்டேன். படம் துவங்கியதிலிருந்து வீடு வந்து இதை எழுதிக்கொண்டிருக்கும்வரை ஏதோ மூளையை சலவை செய்து வைத்ததுபோல ஒரு புத்துணர்ச்சி. படம் சோகமா? இருக்கலாம் இந்தப் படத்தில் வரும் பாத்திரங்களைப்போல நாம் மகிழ்ச்சியா இருக்கிறோமா என எண்ணினால் நிச்சயம் சோகம் வரலாம்.

அழுத்தமான ஒரு கதைக்கு எதார்த்தமான, கதையோடு இழையோடும் இரசிக்கத்தக்க நகைச்சுவையோடு கூடிய காட்சியமைப்பை செய்வித்து பாத்திரங்களை வாழவிட்டிருக்கிறார் இயக்குனர் ராதாமோகன்.

அமெரிக்காவில் USA என ஒரு தொலைக்காட்சி சேனல் உண்டு . அவங்களோட விளம்பரக் குறிப்பா ‘Characters Welcome’ எனச் சொல்வாங்க. ‘(வித்தியாசமான)கதாபாத்திரங்களை வரவேர்க்கிறோம்’ எனப் பொருள் கொள்ளலாம். அந்த சேனலில் வரும் நிகழ்ச்சிகள்பல வித்தியாசமான பாத்திரங்களை முன்வைத்திருக்கும்.

‘மொழி’, ‘Characters Welcome’.

தமிழ் சினிமாக்களில் எளிதில் பார்த்துவிட இயலாத பாத்திரங்களை படைத்திருக்கிறார்கள்.

உலகையே அன்பொழுகப் பார்க்கும் ஹீரோ. முன்னாலெல்லாம் Angry young man ஹீரோக்கள பாக்கலாம். இப்போ well balanced young man தான் ஹீரோ(நான் போக்கிரி இன்னும் பாக்கல :). இந்தப் படத்து ஹீரோவும் அப்படித்தான்.

ஹீரோவ விடுங்க அவரவிட அவரது நண்பர் ரெம்ப சூப்பர். எப்போதும் சிரித்துக்கொண்டே, சிரிப்பூட்டிக்கொண்டே. பொதுவாக பலரும் சீரியசா எடுத்துக்கிற விஷயங்கள கொஞ்சம் சிரிப்பு கலந்த பார்வையில் எடுத்துக்கிறதுல கெட்டிக்காரர்.

காது கேளாத, வாய் பேச இயலாத ஹீரோயின். ஆனா இவரது இயலாமை இதுவல்ல. உடலின் இயலாமையை அவர் வென்றுவிட்டார். அது ஒரு பொருட்டே அல்ல. எல்லா உடற்திறனும் கொண்டவர்கள் சாதித்திராததையெல்லாம் இவள் சாதித்திருக்கிறாள். ஆனால் சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு அனுபவம் இவள் மனதை ஊனமாக்கிவிடுகிறது.

ஹீரோயினின் நண்பி. இவரின் பாத்திரம் ரெம்ப இயல்பா படைக்கப்பட்டிருக்குது. இவரின் வாழ்வில் ஏற்படும் ஒரு திருப்பம் கதாநாயகிக்கு மனமாற்றத்துக்கு வழிவகுக்குது.

இந்த நாலுபேரும் முக்கிய பாத்திரங்கள். இன்னும், கடுகடுப்பான காலனி செக்ரட்டரி, அவர் மகன் சாப்பாட்டு பிரியன், ஹீரோவை ஒருதலையா காதலிக்கும் காலணிப் பெண், 1984லேயே மனது உறைந்துபோன ஒரு மன நோயாளி பேராசிரியர்(டி.வி புகழ் பாஸ்கர்), ஹீரோவிடம் பூ விற்க வரும் வாய்பேச இயலாத, காது கேளாத சிறுமி இன்னும் பல பாத்திரங்கள் திரையில் மிளிர்கின்றன. Characters Welcome.

அன்னியர்களோடு நாம் கொள்ளும் உறவுகளில் அதிகபட்ச ஆழமானது என்ன? காதல்? திருமணம்? ஒரு மாற்று சிந்தனையாக சோதித்துப் பாருங்கள், நம் உறவுகள் அனைவருமே அன்னியர்கள்தான். இப்போதில்லை என்றாலும் ஒரு காலத்தில நமக்கு அன்னியர்களாய்த்தானிருந்திருக்கிறார்கள், நம் பெற்றோர்கள் உட்பட. ஆக நம் உறவுகள் எல்லாமே அன்னியர்கள், இதே பார்வையை கொஞ்சம் திருப்பினால் அன்னியர்கள் எல்லாருமே நம் உறவினர்களாயிருவாங்க. இதுபோன்ற சிந்தனையில் பின்னப்பட்டிருக்கும் உறவு வலைகளில் பாத்திரங்கள் பரிமளிக்கின்றன. அன்னியர்கள் என்பதைவிட, நாம் இன்னும் நண்பர்களாகாதவர்கள் என்பதே பொருத்தமானதாயிருக்கும்.

நிச்சயம் பார்க்கவேண்டிய படம் ‘மொழி’. சோகமான படமல்ல இது. காட்சிக்கு காட்சி இயக்குனரின் brilliance தெரிகிறது. கடைசியில் வரும் பாடல் கொஞ்சம் சோர்வையளித்தாலும் படத்தின் மற்ற நல்ல அம்சங்களுக்காக இதை மன்னிக்கலாம்.

குறிப்பிடத்தக்கவகையில் வசனம் எழுதியவரை பாராட்டாமல் இருக்கமுடியாது. அருமையான வசனங்கள். பின்னணி இசையிலும், சில பாடல்களிலும் முத்திரை பதிக்கிறார் வித்யாசாகர். திடீரென கவனித்தேன் பின்னணியில் அழகிய ஜாஸ் இசை அளித்திருந்தார். வைரமுத்துவின் வரிகளில் ‘காற்றின் மொழி’ பாடல் மிகவும் அருமை.

இதுவரை நீங்கள் தமிழ் படமே பாத்திருந்ததில்லையென்றாலும் இந்தப் படத்த பார்க்காம இருக்காதீங்க. I highly recommend it. இந்தப் படத்த தவறா விளம்பரம் செய்யுறாங்கன்னு படுது. விளம்பரத்த பார்த்துட்டு சோகமான படம்னு நினச்சுட்டேன்.

சிகாகோவில் ரஜினி படத்துக்கு அடுத்ததாக அரங்கு நிறைந்து, அடுத்த காட்சிக்காக காத்திருந்து படம் பார்த்த மக்கள் கூட்டத்தை முதன் முதலில் பார்க்கிறேன்.

படம் முடிந்ததும் கைதட்டினேன், எல்லோரும் தொடர்ந்தனர்.

‘வார்த்தயில்லாமலே பாஷை உண்டாகலாம்’. இது இசைக்கும் காதலுக்கும் மிகவும் பொருந்தும். மொழியில் இந்த இரண்டுமே அழகாக கையாளப்பட்டிருக்கின்றன.

இயக்குனருக்கும் குழுவுக்கும் வாழ்த்துக்கள். இப்படி ஒரு படத்தை தயாரித்து மிகவும் வித்தியாசமான நடிப்பில் ஒளிர்ந்திருக்கும் ப்ரகாஷ் ராஜுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். ஜோ, இத்தனை வருடம் நடித்ததின் பலன் மொத்தமும் இந்தப்படத்தில் தெரிகிறது.

‘மொழி’, பேசாம போய் பாருங்க (pun intended).

.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....23 மறுமொழிகள் to “‘வார்த்தையில்லாமலே பாஷை உண்டாகலாம்’”

 1. -L-L-D-a-s-u சொல்கிறார்:

  வெயில் , பருத்தி வீரன் , மொழி .. தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம் திரும்புது போலிருக்கே.. சிவாஜி வந்து கேடு விளைவிக்காமல் இருக்கணும் ..

  சிறில்.. நல்ல விமர்சனம். பேசாமல் போய் மொழி் பார்க்கணும்

 2. தேவ் | Dev சொல்கிறார்:

  பார்ட்னர் நல்ல விம்ர்சனம் உங்க ரெகமண்டேஷனை ஏத்துக்குறேன் :)

 3. ஜோ / Joe சொல்கிறார்:

  நன்றி சிறில்!
  விரைவில் பார்க்க இருக்கிறேன் .ஆனால் மொழி சோகப்படம் இல்லைன்னு எனக்கு முன்னாலே தெரியும் .

  தொடர்ந்து தரமான படங்களை (பொய் சொதப்பிருச்சு) தரும் பிரகாஷ் ராஜ் பாராட்டுக்குரியவர்.

  அப்புறம் மறந்தும் போக்கிரி பாக்காதீங்க பிளீஸ்.

 4. யோசிப்பவர் சொல்கிறார்:

  //முன்னாலெல்லாம் Angry young man ஹீரோக்கள பாக்கலாம். இப்போ well balanced young man தான் ஹீரோ(நான் போக்கிரி இன்னும் பாக்கல). //

  நீங்கள் தமிழ் சினிமா அதிகமாக பார்ப்பதில்லை என்று நினைக்கிறேன். இப்பவும் 95% தமிழ் படங்களில் Angry young man ஹீரோ. ரொம்பவும் Rareஆகத்தான் இது போன்ற ஹீரோவை(மொழி) பார்க்க முடிகிறது!!;)

  //குறிப்பிடத்தக்கவகையில் வசனம் எழுதியவரை பாராட்டாமல் இருக்கமுடியாது. அருமையான வசனங்கள்.//
  வசனம் – விஜி.

  கடைசிவரை படத்தின் கதையை சொல்லாமலேயே விமர்சனத்தை எழுதியிருக்கிறீர்கள், அந்த கால கல்கி விமர்சங்களின் தரத்தில்!!!

  நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை. நூறாவது நாளுக்குள் பார்த்து விடுவேன் என்று நம்புகிறேன்!!;)

 5. தருமி சொல்கிறார்:

  //தமிழ் திரையுலகம் இயக்குனர் இமயங்களையும், மலைகளையும் கடந்து வெகுதொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது//
  “நச்”

  //படம் முடிந்ததும் கைதட்டினேன், எல்லோரும் தொடர்ந்தனர். //
  இதற்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் “ஓ” !

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  போய் பாருங்க தாசு.
  ரெம்ப நல்லாயிருக்கு படம்

 7. பினாத்தல் சுரேஷ் சொல்கிறார்:

  வீராச்சாமியே பாக்க முடிவு பண்ணியிருக்க ஆளு நான்.. மொழியையா விட்டுடுவேன்.. என்ன சோகம்னா, எங்க ஊரு தியேட்டர் இப்போதான் பச்சைக்கிளி முத்துச்சரம் வரைக்கும் வந்திருக்கு. மொழி, பருத்திவீரன் வந்த உடனே போன் பண்ணச்சொல்லி தியேட்டர் ஸ்டாப் கிட்டேயே அக்ரீமெண்ட் போட்டாச்சு. உங்க விமர்சனம் படிச்சதும் ஆர்வம் இன்னும் அதிகமாயிடுச்சி.

  தாஸு – சிவாஜி வந்து கேடு விளைவிக்காம இருக்கணும் – ஆமென்!

  சிறில் – அழகிய தீயே & பொன்னியின் செல்வன் பாக்கலையா? இயக்குநர் ராதாமோகன் தரமான நகைச்சுவையிலே கலக்குவார்.

 8. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி தேவ். கலக்குங்க..

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜோ,
  //அப்புறம் மறந்தும் போக்கிரி பாக்காதீங்க பிளீஸ். //

  நன்றி.
  :))

 10. Radha Sriram சொல்கிறார்:

  நல்ல விமர்சனம் சிரில். படத்த பார்க்கணும்கர ஆர்வத்த தூண்டர மாதிரி
  இருந்தது விமர்சனம்.

  நான் இன்னும் வெய்யிலே பாக்கல…..ஆனா queue la போட்டு வச்சுக்கரேன்.

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  யோசிப்பவர்.. பாராட்டுக்கு ரெம்ப நன்றி. கதைய சொல்லிட்டா எப்படி? சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துவதே என் எண்ணம், கெடுப்பதல்ல.

  :))

  //நான் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை. நூறாவது நாளுக்குள் பார்த்து விடுவேன் என்று நம்புகிறேன்!!;)//

  சீக்கிரம் பார்த்துடுங்க. நல்ல படமெல்லாம் 100நாள் ஓடாது. :))
  (இது ஓடும்)

 12. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தருமி சார்.
  ரெம்ப நன்றி. படம் பாத்துட்டீங்களா?

 13. Shakthi சொல்கிறார்:

  நல்ல விமர்சனம்..பாக்க நாங்க ரெடி ஆனா இங்க வருமானு தெரியல.
  பருத்திவீரனும்,லீயும் நல்லா இருக்காம்.கேள்விபட்டேன்.

 14. கார்த்திக் பிரபு சொல்கிறார்:

  nalla pdam sir nanum nethu than parthane ..good post

 15. Bee'morgan சொல்கிறார்:

  vimarsanam miga nandrai irunthathu.. parattukkal.

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  மொழி வந்ததும்ம்போய் பாருங்க சுரேஷ். அழகிய தீயே பார்த்தேன்…

  கலக்கல் டைரக்டர். We are proud.

  :))

 17. மணிகண்டன் சொல்கிறார்:

  நல்ல விமர்சனம் சிறில்.

  பேசாம போய் பார்க்கிறேன் :)

 18. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ராதா, ஷக்தி,
  பாராட்டுக்கு நன்றி.

 19. Vasantham சொல்கிறார்:

  நல்ல விமர்சனம், சிறில்!

  எப்ப பார்க்க போகி ன் -னு தெரியல?
  திருட்டு VCD/DVD, internet-ல பார்க்க பிடிக்கலை!

 20. சேவியர் சொல்கிறார்:

  ரொம்ப நாளைக்கு அப்புறம் நானும் ரசிச்சுப் பார்த்த படம் மொழி. உங்கள் விமர்சனம் நல்லாயிருக்கு சிறில்

 21. அரவிந்தன் நீலகண்டன் சொல்கிறார்:

  nice writing – Cyril
  great acting – jothika
  good entertainment movie

 22. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கார்த்திக் பிரபு நன்றி சார்.
  :))

 23. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வசந்தம், சேவியர், அரவிந்த் நன்றிகள்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்