சென்னை வருகிறேன் + நாகர்கோவில் சந்திப்பு

சரியாக இரண்டு வருடங்கள் கழித்து சென்னை வருகிறேன். வலப்பக்கத்தில் ஒரு Countdown ஓடுது பாருங்க. :))

மார்ச் 31 சென்னை வந்து சேர்கிறேன். ஒரு மாதம் விடுமுறை.

இயன்றவரை சென்னை பதிவுலக நண்பர்களை சந்தித்துவிட ஆசை. எப்படிப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏப்ரல் 14 துவங்கி வரும் வார இறுதியில் நாகர்கோவில் பகுதிக்கு உறவினர் வீட்டுக்குச் செல்கிறேன். நாகர்கோவில் பகுதி பதிவர்கள் சிலர் ஒரு பெரிய அளவு சந்திப்பை செய்யலாம் என நினைக்கிறோம். நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மாவட்ட பதிவாளர்கள் நாகர்கோவிலில் பதிவர் கூட்டத்துக்கு ஒப்புக்கொண்டால் ஒரு பெரிய அளவில் சந்திப்பை ஒருங்கிணைக்கலாம். நாகர்கோவில் இலக்கிய வட்டத்திற்கும், பொதுமக்களுக்கும் பதிவுலகை அறிமுகம் செய்யும் விதமாக பெரிதான கூட்டம் ஒன்றை செய்யலாம்.

இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தனிமடலில் தொடர்புகொள்ளவும். cvalex @ yahoo .com. இதை ஒருங்கிணைக்க விருப்பம் உள்ளவர்களும் தெரியப் படுத்துங்கள்.

சென்னை கவுண்ட்டவுன் நம்ம பாபா கவுண்ட்டவுனாட்டம் ஒடிக்கிட்டிருக்குது.
ஒரு வினாடிண்றது இவ்வளவு நேரமா? :)

.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....22 மறுமொழிகள் to “சென்னை வருகிறேன் + நாகர்கோவில் சந்திப்பு”

 1. ஜோ / Joe சொல்கிறார்:

  //நாகர்கோவில் பகுதி பதிவர்கள் சிலர் ஒரு பெரிய அளவு சந்திப்பை செய்யலாம் என நினைக்கிறோம். நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மாவட்ட பதிவாளர்கள் நாகர்கோவிலில் பதிவர் கூட்டத்துக்கு ஒப்புக்கொண்டால் ஒரு பெரிய அளவில் சந்திப்பை ஒருங்கிணைக்கலாம். நாகர்கோவில் இலக்கிய வட்டத்திற்கும், பொதுமக்களுக்கும் பதிவுலகை அறிமுகம் செய்யும் விதமாக பெரிதான கூட்டம் ஒன்றை செய்யலாம்.//

  நல்ல முயற்சி சிறில் என்னுடைய வாழ்த்துக்கள்.

 2. மணிகண்டன் சொல்கிறார்:

  இந்தியப்பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் சிறில்!

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி ஜோ.

 4. தேவ் | Dev சொல்கிறார்:

  Welcome to Chennai Partner :-)

 5. G.Ragavan சொல்கிறார்:

  பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துகள். அந்த சமயத்தில் சென்னை வர முயல்கிறேன்.

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி மணிகண்டன்.
  :)

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தேவ்ம்
  சென்னையிலதான் இருக்கீங்களா?
  சந்திப்போம்.
  :)

 8. சிவபாலன் சொல்கிறார்:

  சிறில்,

  வாழ்த்துக்கள்!!

  கலக்குங்க.. Enjoy!!

  Have nice Trip!!

 9. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சி.பா. நன்றி

 10. Boston Bala சொல்கிறார்:

  நானும் அந்த சமயத்தில் சென்னையில் இருப்பேன்! சந்திக்கலாமா?

 11. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  பாபா,
  நிஜமாவா? சந்திக்கலாமே.
  :)

 12. வடுவூர் குமார் சொல்கிறார்:

  அப்படியே ஒரு தடவை சிங்கை வந்து போகிறது.

 13. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  வடுவூர்.. அழைப்புக்கு நன்றி… சிங்கை வருவது இப்ப சாத்தியமில்ல..
  அடுத்தமுறை பாக்கலாம்.

 14. appaavi சொல்கிறார்:

  Welcome to Bengalooru and Nagercoil :-)

 15. செந்தழல் ரவி சொல்கிறார்:

  பெங்களூரு வரும்போது என் தொலைபெசியில் அழையுங்க, ஒரு மினி சந்திப்பு நடத்தலாம்…

 16. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ரவி,
  நான் பெங்களூர் வரத் திட்டம் இப்போதில்லை. திட்டம் போட்டால் நிச்சயம் சொல்கிறேன்.
  Anyway I will call you. Even before comming there.
  :)

 17. சேதுக்கரசி சொல்கிறார்:

  எதிர்வினையல்லாத எதிர்வினை பார்த்தீங்கல்ல? :-)

 18. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //எதிர்வினையல்லாத எதிர்வினை பார்த்தீங்கல்ல? :-)

  //

  என்னதது?

 19. சேதுக்கரசி சொல்கிறார்:

  ஆனாலும் நம்மளையெல்லாம் இராம் அநியாயத்துக்குக் கிண்டல் விட்டிருக்காரு பாருங்க :-)
  http://raamcm.blogspot.com/2007/03/when-i-was-in-us.html

 20. ஜி சொல்கிறார்:

  அட.. நானும் இந்தியா போறேன். ஆனா, ஏப்ரல் 8 வரைக்கும்தான் நெல்லைல இருப்பேன். சென்னைக்கு முயற்சி பண்றேன் :)))

 21. இராம் சொல்கிறார்:

  //எதிர்வினையல்லாத எதிர்வினை பார்த்தீங்கல்ல? :-)

  //

  என்னதது? //

  கொடுத்த இணைப்பை துண்டிச்சுட்டு என்ன வேணுமின்னாலும் “என்னதது?” ன்னு கேக்கலாம் சாமியோவ்:)))

 22. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  இராம் .. இப்பதான் பாத்தேன்..
  இணைப்ப துண்டிக்கல.. இன்னும் இணைப்பு வரல.

  பதிவுக்கான பின்னூட்டம் அங்க போடுறேன்

  :))

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்