- தேன்/cyrilalex.com - http://cyrilalex.com -

என் சமையலறையில்…

Posted By சிறில் அலெக்ஸ் On March 8, 2007 @ 4:11 pm In பொது | 2 Comments

ஒரு மாசம் ஒண்டிக்கட்டையா கழிக்கிறதே இத்தன கஷ்டமாயிருக்குதே…

என் சாப்பாடு சுவையா இருக்கணுங்கிறதுல நான் கவனாமாயிருப்பேன். பசி இல்லைன்னா இப்படித்தான், சுவையாயிருந்தாத்தான் சாப்பிடத் தோணும். ஹ்ம். கூடவே கொஞ்சம் ‘கொழுப்பும்’ சேர்ந்துட்டா? மனைவியோடு சண்டை, அது இல்லியா இது இல்லியான்னு டிமாண்ட்.

இப்ப ஒருமாதமா கண்டதையும், கார்ப்பெட்ல விழுந்ததையும் எடுத்து சாப்பிட்டதுல கொஞ்சம் ஞானோதையம் பிறந்திருக்கு. இனிமே டிமாண்ட்கள் விண்ணப்பமாகவும், ‘பரவாயில்லை’ என்பது பாராட்டுக்களாகவும் மாறும் என வாக்களிக்கிறேன்.

முந்தா நேத்து பரோட்டாவ கரிச்சிட்டேன், பால் எக்ஸ்பையர் ஆயிடுச்சு, ஆரஞ் ஜூஸ் ஒயினா(Wine) மாறிடுச்சு, சிப்செல்லாம் பொரிக்காத அப்பளமாயிடுச்சு, காலி’ப்ளவர்’ வாடிப் போச்சு என் சமையலறை மெஸ்(mess) ஆயிடுச்சுங்க. மெஸ்னா சாப்புடுற மெஸ் இல்ல சாப்பிட முடியாத மெஸ்(Messy).

வீட்டில இருக்கிற பெண்கள் 24மணி நேரமும் வேல செய்யுராங்க அதுவும் சீரியல் பாக்க பிடிக்காத பெண்கள் (என் மனைவிபோல). :) மகளிர்தினமும் அதுவுமா.. சில திருத்தங்கள் செய்யணும்னு ஆசைப்படுறேன்.

நான் ஒலி FMல சொன்ன மாதிரி, சமத்துவம், பெண்ணியம், அடிமைத்தனம் அது இதுன்னு என்ன பேசினாலும் அடிப்படையில மனிதனை மனிதனாய் பாக்கும் பண்பு வேணும். ‘அன்பு’ ஒன்றைத்தான் எல்லா மனிதனும் மனுஷியும் எதிர்பார்க்கிறாங்க. நம் பார்வையில் அன்பிருந்தா சமத்துவம் சகோதரத்தூவம் எல்லாமே வந்துரும்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

.

Popularity: 6% [? [1]]


Article printed from தேன்/cyrilalex.com: http://cyrilalex.com

URL to article: http://cyrilalex.com/?p=251

URLs in this post:

[1] ?: http://alexking.org/projects/wordpress/popularity-contest