கவி தந்த விதை -5: உன்னைப் பார்த்த பின்பு

உன்னைப் பார்த்தபின்பு…

உன்னைப் பார்த்தபின்பு,
அத்தைப் பெண்கள் ராட்சஷியாயினர்.

முத்தச் சத்தம் மந்திரமானது
அப்பா திட்ட சிரிப்பு வந்தது
அம்மாவின் கோலம் கிறுக்கலானது
அண்ணியும் அண்ணனும் அன்னியராயினர்.
நண்பனின் கேலி வாழ்த்தாய்ப் போனது
நண்பிகளெல்லாம் தங்கைகளாயினர்.
அறத்துப்பாலும் ‘இன்பம்’ தந்தது
திறந்த விழிகளில் கனவுகள் தோன்றின
காக்கைச் சத்தம் பாடலானது
காகித மலர்களும் தேனைச் சொறிந்தன
கட்டில், மெத்தை கல்லறையானது
கனவும் நினைவும் ஒன்றாய்ப் போயின
கவிதைப் புத்தகம் நிரம்பி வழிந்தது
ஆயிரம் பென்சில்கள் உயிரை இழந்தன
குளியலறையில் சீட்டியடிக்கிறேன்
விடியும் பொழுதுதான் உறங்கப் போகிறேன்

அலையும் விழிகள் உனையேத் தேடும்
கலையும், பாட்டும் அற்பமாய்த் தோன்றும்
நிலவும் சிறுக்கும், இரவை வெறுக்கும்
உயிரை உனது உருவம் உறுத்தும்.

விதைத்தவர்: வைரமுத்து
வளர்த்தவர்: சிறில் அலெக்ஸ்

ஒலிFM ல் ஷைலஜா அவர்கள் கடந்த காதலர் தினமன்று வாசித்து வழங்கிய கவிதை.

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....6 மறுமொழிகள் to “கவி தந்த விதை -5: உன்னைப் பார்த்த பின்பு”

 1. சேதுக்கரசி சொல்கிறார்:

  உருகித் தள்ளிட்டீங்க போங்க!

  அப்புறம்.. சென்னை போக இன்னும் 2199 நாள்னு காட்டுது? (நான் சிகாகோ வந்திருக்கேன்… அதான் நீங்க இன்னும் இங்க தான் இருக்கீங்களான்னு பார்த்துட்டிருக்கேன்!)

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //அப்புறம்.. சென்னை போக இன்னும் 2199 நாள்னு காட்டுது?//
  இல்லியே
  எனக்கு 8 நாள்தான் காமிக்குது.

  சிகாகோவா.. வருக வருக. நான் இங்கதான் இருக்கிறேன்.

  எங்க இருக்கீங்க? தனிமடல் ஒண்ணு போடுங்க.

 3. சேதுக்கரசி சொல்கிறார்:

  ஓ.. இங்கே கணினிப் பிரச்சினை. விண்டோஸ் XP தான், ஆனா ஏன் ஒவ்வொரு முறை ரீபூட் பண்ணும்போதும் நாட்காட்டி 1/1/2001-க்குப் போயிடுதுன்னு தெரியலை… ஹாஹா :-D

 4. கார்த்திக் பிரபு சொல்கிறார்:

  அத்தைப் பெண்கள் ராட்சஷியாயினர்//

  namma kavidhai thalaipu pola iruku

 5. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஆமா கார்த்திக் அது உங்க வரிதான்.
  :)

 6. சேதுக்கரசி சொல்கிறார்:

  என்னது.. அந்த வரியைக் கார்த்திக் பிரபு டிரேட்மார்க் பண்ணிட்டாரா? :-)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்