- தேன்/cyrilalex.com - http://cyrilalex.com -

பூவானது மனம்

Posted By சிறில் அலெக்ஸ் On May 23, 2007 @ 8:12 pm In நகைச்சுவை,பதிவர்வட்டம்,பாடல் | 34 Comments

எச்சரிக்கை: இது ஒரு சுய தம்பட்டப் பதிவு

அன்புடன் [1] இணையக் குழுமத்தின் கவிதைப் போட்டியில் இசைக்கவிதை என வித்தியாசமான ஒரு பிரிவு இருந்தது. கவிதைக்கு மெட்டமைத்து பாடி அனுப்பவேண்டும். இதுதாண்டா சேலஞ்னு மானசீக குரு இளையராஜாவ நெனச்சுகிட்டே ஒரு பாட்டப் போட்டு அனுப்பினேன். இரண்டாம் பரிசும் வாங்கிட்டேன்.

பாடலுக்கு நம்ம இன்னொரு மானசீக குரு ஏ.ஆர்.ரெஹ்மான நெனச்சிகிட்டே பின்னணி இசை சேர்த்து, மானசீக பாடகர் குரு எஸ்பிபிபோல குரல் உள்ள ஒருத்தர பாட வச்சிருந்தா கொஞ்சம் முன்னேற்றம் தெரிஞ்சிருக்கும். (அட மானசீக குருக்களா.. எங்கிட்ட இருக்கிறது ரெண்டே ரெண்டு கட்ட வெரல்தான் அத கட் பண்ணிரமாட்டீங்களே?)

பாடல் போடணும்னு தோணியதுக்கு காரணம், கையில நேரமிருந்துச்சு, வீட்ல (அப்ப) யாருமே இல்ல, முக்கியமா கம்போஸ் பண்ணி போட்டிக்கு அனுப்புறது சிரமமான வேலை அதனால நிறையபேர் செய்யமாட்டாங்க. அப்ப இண்டர்நேஷனல் லா ஆப் நிகழ்தகவுப்படி வெற்றி வாய்ப்பு அதிகம்.

சரின்னு 2வது மாடி பால்கனிலேந்து யோசிச்சதுல ஒரு கவித வந்துச்சு. தனிமைய ஹீரோ எஞ்ஞாசாய் பண்ணுறப்ப பாடுறமாதிரி ஒரு பாட்டு. நம்ம நிழல்கள் ‘இது ஒரு பொன்மாலைப்பொழுது’ மாதிரி.

‘பூவானது மனம்,
வண்டாயிரம் வரும்,
தேனூறிடும் நிதம்’

முதல்ல மெட்டோட இதத்தான் போட்டேன். அடுத்த சில மணி நேரமா வேறெதுவும் தோணல. இதையே பாடினேன்.

மீண்டும் பால்கனி.

கீழே புல்வெளி. மெலிதாய் காற்று. மரங்கள் அசைய ஆரம்பித்தன. பறவைகள் பேச ஆரம்பித்தன. கவிதை பிறந்தது. (செம பில்ட் அப் மச்சி).

‘இயற்கையை பாடவே, இதயமும் பூக்குதே’ ஆரம்பிச்சேன்.

‘கடவுளின் சாயலா? – இயற்கை கனிமக் கூடலா?’ ம்ம்.. சரியில்ல
‘கடவுளின் சாயலா? – இயற்கை கவிதைக் கூடலா?’ ஓகே.

இன்னும் சில வரிகள்.

என்னுடைய ரெக்கார்டிங் தியேட்டருக்கு லேப் டாப்ப எடுத்துட்டு போய் ரெக்கார்ட் பண்ணினேன். அப்புறம் Flush பண்ணிட்டு வெளிய வந்துட்டேன். ஏன்னா நான் ரெக்கார்ட் பண்ணினது பாத்ரூம்ல வச்சி. அங்கதான் வெளி சத்தம் குறைவா கேக்கும்.

போட்டிக்கு பாடல் போய் இப்ப இரண்டாம் பரிசு பெற்றிருக்குது.

சும்மா சொல்லக்கூடாது போட்டியில மற்றபாடல்களெல்லாம் தூள். அருமையா மெட்டமைத்து, ப்ரொபஷனலா (பாத்ரூம் அல்லாத) ரெக்கார்டிங் செஞ்சு, இசை சேர்த்து கலக்கியிருந்தாங்க.

அன்புடன் போட்டி அறிவிப்புக்கள் ஒவ்வொண்ணா வருது. முதல்ல இயல் கவிதை மாலன் நடுவராயிருந்தார். இரண்டாவது ஒலிக்கவிதை. இதுல என் கவிதை இடம்பெறல. ஆனா குழப்பத்துல நான் வெற்றி பெறலண்ணு நினச்சு அன்புடன் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள கண்டபடி திட்டிட்டேன்…மானசீகமாத்தான்.

அன்புடன் ஒருங்கிணைப்பாளர்கள் சேதுக்கரசி, கவிஞர் புகாரி, ப்ரியன் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த வருடம் இன்னூம் தூள் கிளப்பிடலாம்(அந்த நேரம் நான் வீட்ல தனியா இருந்தா).

ஷங்கரின் சிவாஜிக்கு அடுத்த படமான ‘பதிவன்’ படத்துக்கு நாந்தான் இசையமைப்பாளர். (‘பதிவன்’ – The Post.)

இந்த பாட்டுக்கு இந்த பில்ட் அப் தேவையான்னு நீங்களே கேட்டு முடிவு பண்ணுங்க.

வர்ட்டா… ‘அவசரமா’ ரெக்கார்டிங் இருக்குது. ஹி ஹி ஹி.

poovanathu -comp [2]
poovanathu -comp.w… [2]
Hosted by eSnips [3]

பாடல் கேட்க மேலே சுட்டுங்க

பூவானது

இயற்கையைப் பாடவே
இதயமும் பூக்குதே
காலையில் புல்வெளி
கவலைகள் போக்குதே
மலை தரும் பாடங்கள் என்ன

மனிதனின் சிறுமையைச் சொல்ல
நதிகளின் பாடல்கள் என்ன
நயனமாய் ஆடுவதென்ன

கடவுளின் சாயலா – இயற்கை
கவிதைக் கூடலா
மலர்களும் பேசுமா – மனித
மனதைத் தீண்டுமா

பூவானது மனம்
வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் – பூவானது
0
துள்ளித் துள்ளி முயல்களும் சந்தோஷம் கொள்ளுதே

அள்ளி அள்ளி வாழ்க்கையைக் கொண்டாடச் சொல்லுதே
கள்ளிச்செடி வெட்டினால் கண்ணீரைச் சிந்துதே

வன்முறைகள் தேவையில்லை சொல்லாமல் சொல்லுதே
வானத்தில் ஏறிவரும் மேகங்களும்

யாருக்கும் தடையின்றி மழை பொழியும்

கடவுளின் சாயலா – இயற்கை
கவிதை கூடலா
மலர்களும் பேசுமா – மனித
மனதைத் தீண்டுமா
பூவானது மனம்

வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம் – பூவானது

புகாரியின் பாராட்டு

அன்பின் சிறில் அலெக்ஸ்,
கலக்கிட்டீங்க போங்க!
இயற்கையைப் போற்றும் இந்த அருமையான கவிதையையும் எழுதி மெட்டும் போட்டு அழகாய்ப் பாடியும் இருக்கிறீர்களே, அடடா!
பாட்டு ஓய்ந்தபின்னும் கேட்டுக்கிடக்கிறது என் செவி!
அன்புடனின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டதற்கு அன்புடனின் நன்றி.
மேலும் பல நல்ல கவிதைகள் படைத்து, இசையமைத்து, பாடலாய்ப் பாடி தமிழ்க் கவிதையுலகைச் சிறக்கச்செய்ய வாழ்த்துக்கள்
அன்புடன் புகாரி


நடுவர் இசைக்கவிஞர் இரமணன் மதிப்பீடு
1 பூவானது
கணப்பொழுதும் இடைவெளியின்றி இயற்கை சொல்லாமல் சொல்லிக் கொண்டேயிருக்கும் பாடங்களைக் கேட்குமாறு இந்தப் பாடல் பணிக்கிறது. சன்னமான சொற்கள்; பொருத்தமான மெட்டு; ‘கடவுளின் சாயலா? இயற்கை கவிதைக் கூடலா?’ என்பது இந்தப் பாடலின் ஜீவ வரி. இனிய கவிதை இது.
இயற்றியவரே மெட்டமைத்துப் பாடியிருக்கிறார். அவர், பாடகர் இல்லை என்று தோன்றினாலும், உணர்ச்சி, அவர் குரலைக் கேட்கும்படிச் செய்கிறது.

//அவர், பாடகர் இல்லை என்று தோன்றினாலும்,//
:(((

Popularity: 5% [? [4]]


Article printed from தேன்/cyrilalex.com: http://cyrilalex.com

URL to article: http://cyrilalex.com/?p=269

URLs in this post:

[1] அன்புடன்: http://groups.google.com/group/anbudan

[2] Image: http://www.esnips.com/doc/9cb6841b-2920-4e2e-b198-bc1d5859aa45/poovanathu--comp/?widget=documentIcon

[3] eSnips: http://www.esnips.com

[4] ?: http://alexking.org/projects/wordpress/popularity-contest