உங்கள் தீர்ப்பு என்ன

இரவில் குடித்துவிட்டு தன் உயிர் நண்பனோடு காரில் வந்து கொண்டிருக்கிறார் ஒருவர். கவனம் சிதறி வண்டி தாறுமாறாக ஓடியதில் நண்பர் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டு, கார் அவர் மேல் ஏறியதில் இறந்து போகிறார். ஓட்டியவருக்கு 12 ஆண்டு கடுங்காவல் அளிக்கப்படுகிறது.

இவர் மனைவிக்கு வயது 39 ஒரே ஒரு குழந்தைதான் இருக்கிறது. இன்னுமொரு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.

இவர் கணவன் விடுதலையாகும்வரை காத்திருக்க முடியாததால் செயற்கைமுறையில் கணவனின் விந்தைக் கொண்டு கருத்தரிக்க அனுமதி தேடுகிறார்.

அமெரிக்காவில் கான்சஸ் மாநிலத்தில் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. “என் கணவந்தானே குற்றவாளி. என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்” என்பது இவரின் வாதம்.

நீங்கோ இன்னா நெனைக்கிறீங்கோ?

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....உங்கள் கருத்தை தெரிவிக்கவும்