தமிழ்நாட்டில் கட்சி துவங்குகிறார் டோனி ப்ளேர்

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி ப்ளேர் தமிழகத்தில் புதிய கட்சி ஒன்றை துவங்கவுள்ளார். திராவிட, மக்கள், முன்னேற்ற, காமராஜ், ராணி எலிசபெத், அண்ணா, இராஜாஜி, பெரியார், சிவாஜி, வடிவேலு, புலி, சிறுத்தை, கரடி, சிங்க்கம் போன்ற வார்த்தைகளைக் கொண்டு தன் புதிய கட்சிக்கு பெயர் ஒன்ரை தயாரிக்கச் சொல்லி இதுவரை குறைந்தது மூன்று புத்தகங்களையாவது வெளியிட்டுள்ள கவிஞர்களிடம் கேட்டுள்ளார்.

இது போல ஜாலியா, பொய்யான சிலசமயம் உள்குத்துக்களோடான செய்திகளை ஆங்கிலத்தில் தருகிற தளம் The onion.

இதுபோல விளையாட்டாய் பொய் செய்திகளை தமிழில் தர ஒரு குழு பதிவை ஆரம்பிக்கலாமென நினைக்கிறேன். யாராவது ஆர்வமாயிருக்குறீங்களா?

நகைச்சுவையால் சமூகப் பார்வையை உருவாக்க இயலுமா? இதுதான் இந்த முயற்சியின் அடித்தளம்.

Popularity: 4% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....9 மறுமொழிகள் to “தமிழ்நாட்டில் கட்சி துவங்குகிறார் டோனி ப்ளேர்”

 1. கோவி.கண்ணன் சொல்கிறார்:

  //இதுபோல விளையாட்டாய் பொய் செய்திகளை தமிழில் தர ஒரு குழு பதிவை ஆரம்பிக்கலாமென நினைக்கிறேன். யாராவது ஆர்வமாயிருக்குறீங்களா?//

  பல பதிவுகளில் சீரியஸ் ஆகவே பொய் செய்தி தான் இருக்கு…நீங்க வெளையாட்டுக்கு தானே ஆரம்பிக்கப் போறிங்க ? நடத்துங்க !

  ஐஸ்வர்யா – அபிஷேக் ஜோடிக்கு இரட்டை குழந்தை பிறக்கப் போகிறதாமே ?

  தெரியுமா ?
  :))

 2. உண்மைத் தமிழன்(03027376146007401490) சொல்கிறார்:

  துக்ளக் சோவையும் ப்ரெண்டா சேத்துக்கங்க சொல்லுங்க சார். நல்லா அரசியல் ஆலோசனை தருவார்!

 3. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  கோவியாரே.. ஐசுக்கு ரெட்டைக்குழந்தை அருமையான ஆனியன் செய்தி..

  கட்டாயம் சேருங்க..

  விரைவில் புழுக ஆரம்பிக்கலாம்..

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  உண்மைத் தமிழன் உங்க பின்னூட்டம் டோனி ப்ளேருக்குன்னு நினைக்குறேன்.

  :))

 5. Anonymous சொல்கிறார்:

  தமிங்கில முன்னேற்றக் கழகம்

  உடல் லண்டனுக்கு உயிர் தமிழ்னாட்டிற்கு என கர்ச்சனை செய்யும் வெள்ளைச் சிங்கமே!! களம்காண வா!! நாங்கள் பேசும் தமிழே தமிங்கிலம் தானே! கள் இறக்க தடை போட்டோமே தவிர, சீமைச் சரக்கிற்கு தடை போட்டோமா? இல்லையே!! இப்போதாவது புரிகிறதா நாங்கள் தமிங்கில விசிறிகள் என!!

  ” தமிங்கில முன்னேற்றக் கழகம்” என உன் கட்சிக்கு பெயர் சூட்டிப் பெருமைப் படுகின்றோம்.

  புள்ளிராஜா

 6. யோசிப்பவர் சொல்கிறார்:

  சிறில்! நா வாரேன்! நா வாரேன் இந்த வெளையாட்டுக்கு.

  ஆனால் செய்திகளை முந்தி தெரிந்து கொள்ளும் ஆர்வம் கெடையாதே எனக்கு. செய்திய யாராவது வந்து என் காதை திறந்து சொன்னால்தான் கேட்கிற வழக்கம் நமக்கு. இது ஒன்னுதான் நம்ம குவாலிஃபிக்கேஷனுக்கு இடைஞ்சலாயிருக்கு!!!

 7. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  யோசிப்பவர்.
  இதுல எழுத செய்திகள படிக்கத் தேவையேயில்ல
  :)

  விபரம் விரைவில் சொல்றேன்

 8. Anonymous சொல்கிறார்:

  super

 9. selva சொல்கிறார்:

  veera velai illaiay

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்