பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் – 1.

நண்பர் சிந்தாநதி துவக்கி மொத்தம் 12 பதிவர்கள் எழுதி முடித்த தொடர்கதை ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’வைப் போல பாக்கெட் நாவல் ஸ்டைலில் ஒரு க்ரைம் தொடர் ஒன்றை ஆரம்பித்துவைக்கலாம் என்று இந்த முயற்சி. அடுத்து யார் தொடர்கிறார் என்பதை கீழ் சென்று பார்க்கவும்.

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் – அத்தியாயம் 1
————————————————————-

டப்.

சைலன்சர் மாட்டப்பட்ட துப்பாக்கி வெடித்தது.

சுரேஷ் ஒரு தேர்ந்த கொலைகாரனுக்குரிய லாவகத்துடன் துப்பாக்கியை துடைத்துப் போட்டான்.

‘ஷூட் அண்ட் த்ரோ’.

நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்து கீழே விழுந்துகிடந்த பெண்ணின் உடல் கடைசி முறை துடித்தது. முகத்தில் சில திசுக்கள் அதிர்ந்தன. கண்கள் இவனை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தன.

“பை பை மை டியர்.” மெலிதாகப் புன்னகைத்தான் சுரேஷ்.

“சுரேஷ் எக்சலண்ட்டா குறி வைக்கிறீங்க” துப்பாக்கி பயிற்சியாளர் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஜஸ்ட் ஒன் புல்லட்’ பெருமிதமடைந்தான்.

செல்ஃபோனில் யானியின் அடாஜியோ இன் சீ மைனர் மெலிதாகத் துவங்கி சப்தமானது.

“ஹலோ!”

“சார். உங்க டிக்கட் இன்னைக்கே கன்ஃபர்ம் ஆயிடுச்சு. யூ கேன் டேக் த ப்ளைட் டு நைட்”

‘தெரியும்டா மடையா! இணைய அறிவிலியே!’ மனதில் நினைத்தான்.

“அப்டீங்களா? ரெம்ப சந்தோஷம். எல்லாத்தையும் விட என் மனைவி ரெம்ப சந்தோஷப்படுவாங்க. ஐ கேன் யூஸ் மை டிக்கட் இல்லியா?”

“ஆமா சார். நோ ப்ராப்ளம்ஸ்.”

ஒரு மாத விடுமுறைக்குள் இது சாத்தியமாகுமென அவன் நினைத்திருக்கவில்லை. திரும்புகையில் அவள் நெற்றிப்பொட்டை ஈ மொய்த்துக்கொண்டிருந்தது.

‘இட்ஸ் டன்.’

சவுக்கு காட்டை விட்டு வெளியே மெயின் ரோட்டுக்கு நடந்து சென்று பஸ்ஸைப் பிடித்தான். வரும்போது இருவரும் வந்த மொபட் சாலையோரம் அனாதையாய் நின்றது.

ஒரு வருடத் திட்டம்.

துப்பாக்கி முப்பதாயிரம், துப்பாக்கி சுடப் பயிற்சி பதினைந்தாயிரம். அவளைக் கொன்றது ப்ரைஸ்லெஸ். எண்ணங்கள் ஒரு வருடத்திற்கு முந்திச் சென்றன.

அவளை முதலில் ஆர்குட்டில் சந்தித்தான். ஏதோ நடிகையின் படத்தைப் போட்டுத் தன்னை ஏமாற்றப்பார்க்கிறாள் என்றே நினைத்தான். அவளைப் பார்க்கும்வரை அந்த சந்தேகம் குறையவேயில்லை.

‘ஆம்பல்னா?’ கேள்வியில் துவங்கியது இணைய நட்பு.

‘தாமரையைப் போல ஒரு பூ’

‘வாவ். தமிழில் எத்தனை அழகான வார்த்தைகள்.’

‘ம்’

‘தாமரை கூட அழகான வார்த்தைதாங்க.’

‘ஆமா. இணையத்துல தமிழ் ஆராய்ச்சியா?’

‘ச்சும்ம இம்ப்ரெஸ் பண்ணலாம்ணு’.

உரையாடல் தொடர்ந்தது. ஒரு மணி நேரமாய், சில நாட்களாய், வாரக்கணக்கில் அவளோடு அளவளாவினான்.

‘இன்னைக்கு என்ன டிஃபன்?’ துவங்கி டாக்டர் செக் அப்பில் ஏற்படும் சங்கோஜங்கள் வரை வரையறையின்றி தொடர்ந்தன விவாதங்கள்.

‘இணைய நட்பு’ என சுரேஷ் நண்பர்களிடம் சொன்னான். ‘இணையக் காதல்’ என்றனர் அவர்கள். ‘இணையக் கள்ளக்காதல்’ என்றது அவன் மனம்.

மனைவியைப் பிரிந்து வெளிநாட்டில் வாழ்பவனுக்கு ஒரு மாற்றாக இருந்தது ஆம்பலின் நட்பு. அவளுக்காக கொலையும் செய்யலாம் என நினைத்திருந்தான்.

அதற்கான வாய்ப்பு அவளிடமிருந்தே மின்னஞ்சலில் வந்தது.

டியர் சுரேஷ்,

நான் சாகவேண்டும். உதவி தேவை.

அன்புடன்,
ஆம்பல்.

===============================
லக்கிலுக்கின் இரண்டாம் பாகம்

Popularity: 15% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....15 மறுமொழிகள் to “பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் – 1.”

 1. இன்னும் கதையை படிக்கவில்லை. ஆனாலும் தொடர ஆவல் :-))))

 2. இன்னும் கதையை படிக்கவில்லை. ஆனாலும் தொடர ஆவல் :-))

 3. கலக்குங்க லக்கி

 4. நன்றி நாளை காலை இந்திய நேரத்தில் போஸ்ட் செய்கிறேன்.

 5. நன்றி லக்கி. உங்க பதிவு பாத்தேன் நல்லாயிருக்குது.

 6. லக்கியின் இரண்டாம் பாகம்
  http://madippakkam.blogspot.com/2007/11/2.html

 7. ஆகா………….அருமையான தொடக்கம். மிகவும் நல்ல முயற்சி. இந்த முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துகள். அடுத்து லக்கியின் பக்கத்துக்கு ஓடுறேன்…….

 8. திவ்யா சொல்கிறார்:

  ஓஹோ, இது தொடரா…….அடுத்த பகுதி லக்கிலுக் பதிவுலியா? ஓ.கே.

  சிறில் நல்ல ஆரம்பம்…..வாழ்த்துக்கள்!!

 9. நான்காவது பாகம் இங்கெ…

  http://gragavan.blogspot.com/2007/11/4.html

 10. K.J. Jebastin சொல்கிறார்:

  Very nice starting. ‘இணையக் கள்ளக்காதல்’ என்றது அவன் மனம். selected nice words….

 11. இணையக் கள்ளக் காதல் – ஆம்பல் சுடப்பட்டது – திகிலூட்டும் கதை. தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

 12. பத்தாம் பாகம் இங்கே!

  http://madhavipanthal.blogspot.com/2008/01/10.html

 13. அண்ணாச்சி நீங்க முடிஞ்சீங்க, கதை ரிவர்ஸ் கியர்ல வருது! :-)
  மைனஸ் பத்தாம் பாகம் இங்கே!
  http://madhavipanthal.blogspot.com/2008/02/10.html

 14. krs,
  அத ஏன்யா நியாபகப்படுத்தி தொலைக்கிறீங்க.. சிவாஜி பாட்ட கேக்குறதேயில்ல இப்பெல்லாம் :)

 15. Anonymous சொல்கிறார்:

  gooooooooooood

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்