காதலர் தினம்

முத்தம்
==================================

காதல் அங்கீகார முத்திரை

வெட்கம் பலி கொடுக்கப்படும்
ஒரு வேள்வி

‘இச்’ எனும்
ஒரு மந்திரம்

ஹார்மோன் கச்சேரியின்
முதல் பாடல்

இதழ்களின் காதல்
வெளியீடு

காதலின் இதழ்
வெளியீடு

அந்த அம்புக் காயத்திற்கு
கைமருந்து

வார்த்தைகளுக்கு
முற்றுப்புள்ளி

தோல்வியே இல்லாத
விளையாட்டு

பல கவிதைகளுக்கு
ஆதாரம்

என் கன்னத்தில் நீ செய்யும்
மின் கெஞ்சல்

நீண்டதொரு பயணத்தின்
முதல் அடி

என் அத்தனை கேள்விகளுக்கும்
ஒரே பதில்

Popularity: 3% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....2 மறுமொழிகள் to “காதலர் தினம்”

 1. சிங். செயகுமார். சொல்கிறார்:

  காதல் படுத்தும்
  சாகச சேட்டை!
  வாசகன் என்னையும்
  வந்தடைந்ததே!
  வாழ்த்துக்கள் சிறில்!

 2. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  நன்றி சிங்.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்