2007ன் சிறந்த கண்டுபிடிப்புக்கள்

டைம் பத்திரிகை 2007ன் தலைசிறந்த கண்டுபிடிப்புக்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளது. எனக்குப் பிடித்த சில.

இந்த வருடத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக ஐஃபோன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அட! நம்ம ஃபோன். தொலைபேசி என்றொரு சாதாரண உபகரணம் இன்று பல்பயன் உபகரணமாகிவிட்டது. ஐஃபோன் கையடக்க எந்திரங்களின்  அதிமுக்கிய முன்நகர்வு.  ஐஃபோனின் முதல் சில பயனர்களில் நானும் ஒருவன் என்கிற வகையில் மகிழ்ச்சியென்றாலும், பட்டியலில் இடம்பெற்றுள்ள பல கண்டுபிடிப்புக்களை காண்கையில் ஐஃபோன் ஒரு சிறிய படிக்கல்லாகவே தோன்றுகிறது.

 • காற்று(சுழல் விசை) மற்றும் சூரிய ஒளியின் சக்தியால் மட்டுமே இயங்கக் கூடிய சிற்றுந்து
 • நகர்வலம் வர மின்விசை சிற்றுந்து
 • வெறும் காற்றில் ஓடக் கூடிய சிற்றுந்து. இந்தியாவின் டாட்டா மோட்டார் உதவியுடன் உருவாக்கப்படுகிறது
 • களைகளை புகைப்பட நுட்பத்தின் மூலம் கண்டறிந்து களையும் எந்திர மனிதன்
 • காது கேளாதவர்கள் திரைப்படங்களைக் காண்பதற்கு வசதியாக ஏற்கனவே Closed Captioning  எனும் வசதி இருக்கிறது. இந்தக் கண்ணாடி இதை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்கிறது.
 • விளையாட்டு வீரருக்கு தலையில் அடிபட்ட விதத்தை துல்லியமாக கண்டறிந்து இணையம் மூலம் மருத்துவர்களுக்கு தெரிவிக்கும் தலைக்கவசம்
 • தானியங்கி காசாளரைப்போல (ATM) தானியங்கி புத்தக வினியோக எந்திரம். உங்களுக்குத் தேவையான புத்தகத்தை சுடச்சுட அச்சடித்து வண்ண அட்டையோடு தருகிறது.
 • தலையணைக்குள் சூரிய உதயத்தை கொண்டுவந்து எழுப்பிவிடும் துயிலெழுப்பி.
 • சர்க்கரை நீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்கலன்கள். அச்சடித்த காகிதத்தில் அச்சை மறைக்கடித்து மீண்டும் வெள்ளைக்காகிதமாக்கும் நுட்பம்
 • பாக்டீரியாவின் உதவிகொண்டு மண்ணரிப்பை தடுக்கும் யுக்தி.
 • நீரினால் சுவரெழுப்பி வண்ண ஒளிக்காட்சிகளை உருவாக்கும் நுட்பம்
 • வளையும் தன்மைகொண்ட மின்னணுத் திரைகள்.
 • அதிக வளையும் தன்மைகொண்ட ஒளிகடத்தும் இழைகள்
 • 150 டாலர் மடிக் கணினி.
 • இரத்த வகை மாற்றும் கருவி
 • ‘சிவாஜி’ புகழ் சி.பி.ஆர் செய்ய உதவும் கையுறை.
 • சூரிய ஒளியிலிருந்து கையடக்கச் செயலிகளுக்கு மின்சாரம் பெற்றுத்தரும் கைப்பை . eclipsesolargear.com; solio.com; hymini.com
 • தவளையின் உட்பாகங்களை அதை வெட்டாமலே காண்பிக்கும் நிறமற்ற (transparent) தோலுடைய தவளைகள்.

2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள்/உருவாக்கங்கள்

Popularity: 8% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....4 மறுமொழிகள் to “2007ன் சிறந்த கண்டுபிடிப்புக்கள்”

 1. yaathirigan சொல்கிறார்:

  the last one is an Invention ?!?! whew !!!!

 2. எனக்கும் மிகவும் பிடித்த கண்ட்டுபிடிப்பு அந்த ஆய்வுத் தவளை. ஹிரோஷிமா அறிவியல் வல்லுநர்களின் கண்டுபிடிப்பு.

 3. உங்களுக்குப் பிடித்தவற்றை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். இல்லை வலப்பக்கப் பட்டையில் உள்ள கருத்துக்கணிப்பில் பதிக்கலாம்.

 4. manohar சொல்கிறார்:

  Nice post. I liked the frog.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்