கடவுளின் வலைப் பதிவு

ஏதாச்சும் காமெடி கீமெடி பண்ணி ரெம்ப நாளாச்சு. அதனால கடவுள் தமிழ் வலைப்பதிவு ஒண்ண ஆரம்பிச்சார்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை. தடித்த எழுத்தில் இருப்பது பதிவின் தலைப்பு அப்புறம் பதிவின் சாரம்.

ஜீரோ ரூபாயை காணிக்கை பெட்டியில் போடாதீர்கள்

பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஜீரோ ரூபாயை காணிக்கை பெட்டிக்குள் போடவேண்டாம். பல போலீஸ்காரர்களும் அரசு அதிகாரிகளும் தாங்கள் வாங்கும் லஞ்சப் பணமான புதிய ஜீரோ ரூபாய் நோட்டுக்களை உண்டியலில் போடுகிறார்கள். இப்படிச் செய்பவர்களின் வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

ஆபாசப் பின்னூட்டமிடுபவரை சபிப்பது எப்படி?

வலைப்பதிவர் உதவி குழுவினர் வேண்டுகோளுக்கிணங்கி இந்தப் பதிவை எழுதுகிறேன். ஆபாசப் பின்னூட்டமிடுபவர்களை சபிப்பதற்கென்றே புதிய மந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பதிவின் கடைசிப் பகுதியில் காண்க. இந்த மந்திரத்தில் கெட்ட வார்த்தைகளை இருப்பதால் இதை மௌனமாகவே சொல்லவேண்டியது அவசியம்.

கேரளா என் சொந்த நாடா?

கேரள அரசின் சுற்றுலா துறை கேரளா என் சொந்த நாடு (God’s own country) என விளம்பரங்கள் வெளியிட்டு வருகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஓரிருமுறை அங்கே விஜயம் செய்திருக்கிறேனே தவிர அது என் சொந்த நாடு அல்ல. எனக்கு சொந்தமாய் நாடே இல்லை என்பதையும் பக்தர்களின் சில்மிஷத் தொந்தரவுகளால் நான் கோவில்களையும் வெக்கேட் பண்ணிவிட்டேன் என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

நாளைய செய்திகளை முந்தித் தருவது…

நாளை நடக்கவிருப்பதை இன்றே அறிந்துகொள்ள ‘சற்று கழிந்து’ எனும் புதிய வலைப்பதிவு உருவாக்கப்படவிருக்கிறது எபதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

போலிகளை இனம் காணுவது எப்படி?

பதிவுலகப் போலிகளைப் போலவே ஆன்மீகப் போலிகளின் அட்டகாசம் தாங்கவில்லை. போலி சாமியார்களின் பட்டியலுடன் கூடிய பதிவு.

இராமர் பாலத்தை நான்தான் கட்டினேன்

இராமர் பாலம் இயற்கையில் இருப்பது என்கிறார்கள் நாத்திகர்கள். இயற்கையே நான் உருவாக்கியதாக இருக்கும்போது இராமர் பாலம் மட்டும் நான் கட்டியதில்லையா?

நாளை உலகம் அழிந்து போகும்

நாளை உலகம் அழிந்து போகும்படி எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்திய நேரம் 3:30க்கு இது நிகழும்.

நாளை உலகம் அழிந்துபோகும் – விளக்கம்

நேற்று போட்ட நாளை உலகம் அழிந்துபோகும் பதிவை நகைச்சுவை வகையில் சேர்க்க மறந்துவிட்டேன். மேலும் ஸ்மைலியும் போட மறந்துவிட்டேன். இதற்கிடையில் மாரடைப்பில் இறந்தவர்களிடமும், மனம் பேதலித்தவர்களிடமும் மன்னிப்பை கோருகிறேன். உலகம் அழியப் போகிறது என எண்ணி கண்டபடி பதிவிட்டவர்கள் பதிவுகளை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பதிவுக்கு ஹிட் கவுண்டர் ஏகிறிவிட்டது என்பது சந்தோஷமான விஷயம். :) ஹ ஹ

பூங்காவில் என் கட்டுரைகள் ஏன் வருவதில்லை?

இந்தக் கேள்வி என்னை பலகாலம் சிந்திக்க வைத்தது. பின்னர்தான் புரிந்தது பூங்காவே இப்போது வெளிவரவில்லை என்று. பூங்கா விரைவில் வெளிவர பிரார்த்தனைகள் வந்தால் உடனடியாக பரிசீலிக்கப் படும்.

நான் நாத்திகன்.

அதிர்ச்சியாய் இருக்கிறதா? எனக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவு. சதா மக்கள் என்னைக் குறித்து புகழ்ச்சி செய்வதால் மட்டுமே என்னால் வாழ முடிகிறது. அவ்வளவு தூரம் எனக்கு தன்னம்பிக்கை கிடையாது. கடவுளாகிய எனக்கு தன்நம்பிக்கை யில்லையென்றால் நான் நாத்திகன்தானே?

டைனோசர் கால் எலும்பு சூப் – சமையல் குறிப்பு

சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சூப் எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம். ஒரு மீடியம் சைஸ் குகையில் மரங்களைப் பிடுங்கிப் போட்டு தீ மூட்ட வேண்டும் பிறகு…

கடவுளின் டிராஃப்ட் பட்டியல்

பதிவர் சந்திப்பு. நடக்கப் போவது என்ன?

சந்திப்பில் என்னைக் கண்டுகொள்ளாத பதிவர்கள்.

2013ல் 50ஆம் வாரத்தில் நான்தான் தமிழ்மண நட்சத்திரம்.

நான் கடவுள் – திரை விமர்சனம்

உலகத்தை உருவாக்குவது எப்படி பாகம் 1

உலகத்தை உருவாக்குவது எப்படி பாகம் 2

உலகத்தை உருவாக்குவது எப்படி பாகம் 3

சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் அதிக சம்பளம் வாங்குவது பாவமா?

இத ரசிச்சீங்கண்ணா இதையும் இரசிப்பீங்க..

Popularity: 8% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....27 மறுமொழிகள் to “கடவுளின் வலைப் பதிவு”

 1. ஹா ஹா ஹா பிரமாதம் போங்க. ரசிச்சேன். ரசிச்சேன். அதுலயும் அந்த நாளை உலகம் அழிந்து போகும்…ஆண்டவா…சற்று கழித்து :))))))))))))))))

 2. நன்றி ராகவன். :)
  இந்தப் பதிவ சரியா ஃபார்மாட் செய்ய முடியாமத் திணறிட்டேன். இப்பவும் முழுமையா ஒழுங்காக்க முடியல. கடவுள் செயல்தான் போல..:)

 3. //நான் நாத்திகன்.

  அதிர்ச்சியாய் இருக்கிறதா? எனக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவு. சதா மக்கள் என்னைக் குறித்து புகழ்ச்சி செய்வதால் மட்டுமே என்னால் வாழ முடிகிறது. அவ்வளவு தூரம் எனக்கு தன்னம்பிக்கை கிடையாது. கடவுளாகிய எனக்கு தன்நம்பிக்கை யில்லையென்றால் நான் நாத்திகன்தானே?
  //

  சிறில்

  கடவுளுக்கு தனக்கு மேல் ஒரு கடவுள் இருப்பதாக நம்பிக்கை இருக்காது…அப்போ அவர் நாத்திகர் தான்.
  :)

 4. ramachandranusha சொல்கிறார்:

  அது சரி, கடவுள் என்றால் எந்த கடவுள்? ஊரூ உலகத்துல மக்கள் தொகைக்கு இணையாக கடவுள்களும் இருக்கிறார்களே :-)

 5. ஜோ சொல்கிறார்:

  //இயற்கையே நான் உருவாக்கியதாக இருக்கும்போது இராமர் பாலம் மட்டும் நான் கட்டியதில்லையா?
  //

  :))

 6. Thamizhan சொல்கிறார்:

  என் பெயர் சொல்லி ஏமாற்றுபவர்கள் தான் நிறைய இருக்கிறார்கள்.என் பெயரைச் சொல்லாமலே நிறைய பேர் பலருக்கு உதவி செய்கிறார்கள்,அவர்கள் மீது தான் எனக்குப் பாசம் பொங்கும்!

 7. delphine சொல்கிறார்:

  :(… so sad!

 8. dharumi2 சொல்கிறார்:

  //பக்தர்களின் சில்மிஷத் தொந்தரவுகளால் நான் கோவில்களையும் வெக்கேட் பண்ணிவிட்டேன் ..//

  உலகத்தை விட்டே வெக்கேட் பண்ணிட்டதாக என்னிடம் ‘சற்றுமுன்’ வந்து சொல்லி விட்டுப் போனாரே .. !!

 9. பாலராஜன்கீதா சொல்கிறார்:

  இந்தப் பதிவு ஸமஸ்க்ருதத்தில் இருந்தால்தான் உண்மையான கடவுளின் பதிவு என்று நம்புவோம். பதிவு தமிழில் இருப்பதால் இது உண்மையான கடவுளின் பதிவுதானா என்று சந்தேகமாக உள்ளது.
  ;-)

 10. //கடவுளுக்கு தனக்கு மேல் ஒரு கடவுள் இருப்பதாக நம்பிக்கை இருக்காது…அப்போ அவர் நாத்திகர் தான்.//

  கோவி,
  இதத்தான் முதல்ல யோசிச்சேன். ஆனா அந்த தன்னம்பிக்கை ஜோக் கொஞ்சம் லாஜிக்கலா வந்திச்சு.
  :)

 11. //அது சரி, கடவுள் என்றால் எந்த கடவுள்? ஊரூ உலகத்துல மக்கள் தொகைக்கு இணையாக கடவுள்களும் இருக்கிறார்களே //

  உஷா,
  இத அவர் பதிவில் பின்னூட்டமிட்டு கேட்டுக் கொள்ளவும். ஏன்னா இட்லிவடையப் போல இவரும் ஒரே கடவுளா இல்ல கடவுள்களின் கூட்டுப் பதிவான்னு பல குழப்பம் இருக்குது.
  :)

 12. நன்றி ஜோ, தமிழன்.

 13. Delphine,
  not sure if you are serious or casual about your comment. If a man could appreciate sense of humor don’t you think God would?
  In fact God has more sense of humor than any of us. Why else would he be creating us?
  :)

 14. //உலகத்தை விட்டே வெக்கேட் பண்ணிட்டதாக என்னிடம் ‘சற்றுமுன்’ வந்து சொல்லி விட்டுப் போனாரே .. !!//

  அப்ப கடவுள் உலகத்துல இல்ல ஆனா வேறெங்கேயோ இருக்கார்னு நம்புறீங்க. தருமி சார், அப்படியாவது கடவுள நம்புனா சரி :)

 15. பாலராஜன்கீதா சார்,
  அவர் அவரோட பாஷையிலதான் எழுதுறாரு ஆனா படிக்கிறவங்களுக்கு அவங்கவங்க பாஷையில தெரியும்.
  :)

 16. இந்தப் பதிவப் பத்தி சில முக்கிய தகவல்கள கண்டுபிடிச்சேன்.

  1. போன வருஷம் இதே சமயத்துல (நவ. 3) சொர்க்கம் இலவசம் எழுதியிருக்கேன்

  2. போன வருஷமும் சொர்க்கம் இலவசத்துக்கு முந்தைய பதிவு 2006ன் அரிய கண்டுபிடிப்புக்கள பத்தியது.

  கடவுளே! கடவுளே!
  :)

 17. Kasi சொல்கிறார்:

  சிறில் இல்லை, இனி நீங்க பெரில்:-)

  நல்ல நகைச்சுவை, நல்ல கற்பனை, நல்ல மறுமொழிகள்!

 18. delphinevictoria சொல்கிறார்:

  O! Come on Alex!!! I just enjoyed. I do have a sense of humour,!!
  :)

 19. Bala Subra சொல்கிறார்:

  —இயற்கையே நான் உருவாக்கியதாக இருக்கும்போது இராமர் பாலம் மட்டும் நான் கட்டியதில்லையா?—

  —எனக்கு கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவு.—

  எல்லாமே பிரமாதம் என்றாலும் இவையிரண்டும் அருமை!

 20. நன்றி காசி.
  டெல்ஃபின் மேடம் மீண்டும் வந்து விளக்கியதற்கு நன்றி :)

  நன்றி பாபா. _/\_

 21. CVR சொல்கிறார்:

  Awesome!!
  total ROFL post!! :-D

 22. நன்றி சி.வி.ஆர் :)

 23. Sivakasi Srinivasan சொல்கிறார்:

  My apologies for writing in English. I dont know, why my ekalappai is not working in your webpage.

  Brand New Website. Looks same like your blog, Satrumun..

  The jokes made me to think twice.( dont ask me “Do you think? )

  I dont know half of the things in the poll. you should have given description of new things like “IPhone” :)

  All the best for http://www.Cyrilalex.com and advance wishes for http://www.satrukazinthu.com

  Sivakasi Srinivasan

 24. Srinivasan,
  Please read my previous post for details on items listed on the Poll regarding inventions. ( http://cyrilalex.com/?p=353 )

  Thanks for your wishes and compliments.

  //The jokes made me to think twice// :)

 25. சுந்தர் சொல்கிறார்:

  Fantastic.

 26. சீனு சொல்கிறார்:

  இட்லிவடை மாதிரி இருக்கு. சூப்பர்.

  //இதற்கிடையில் மாரடைப்பில் இறந்தவர்களிடமும், மனம் பேதலித்தவர்களிடமும் மன்னிப்பை கோருகிறேன்.//

  அப்டி போடுங்க.

 27. நன்றி சுந்தர்.

  நன்றி சீனு,
  //இட்லிவடை மாதிரி இருக்கு. சூப்பர்.//

  சாப்பாட்டத்தானே சொல்றீங்க?
  :)

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்