தீபாவளி ரிலீஸ்

என்னங்க. தீபாவளி ரிலீஸ் எல்லாம் ஒவ்வொண்ணா பாத்துட்டே இருக்கீங்களா?

சற்றுமுன் குழுவும் ஒரு தீபாவளி ரிலீஸ் விட்டிருக்கு. இதுவரை விமர்சனங்களெல்லாம் நல்லாயிருக்குதுன்னு சொல்லுது. நீங்களும் ஒரு எட்டு போய் பாக்கலாம். பயன்படுத்தலாம்.

இணைய வரி விளம்பரங்கள் மூலம் பொருட்களை, சேவைகளை விற்பதுவும் வாங்குவதும் உலகளவில் பிரபலமாகி வருகிறது. இந்த சேவையை தமிழில் வழங்குவது சற்றுமுன் வரி விளம்பரம்.(சுட்டிகள் கீழே)

பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்கும் பழக்கம் நம்ம ஊர்ல இன்னும் பிரபலமாகவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதற்கென ஒரு வசதி இருந்தால் இந்தப் பழக்கம் உருவாவது மட்டுமல்ல பயன்படுத்தப் பட்ட பொருட்களுக்கு வெறும் பேரிச்சம்பழம்தான் கிடைக்கும் எனும் நிலை மாறலாம்

வரி விளம்பரங்களில் பொருட்களை விற்க வாங்க என மட்டுமல்லாமல் அறிவிப்புக்களையும் இடலாம். உதாரணமாய் உங்கள் கல்லூரி கருத்தரங்கம், விழாக்கள் குறித்த அறிவிப்புக்கள், பொதுமக்களுக்கான விழாக்கள், கூட்டங்கள் குறித்த அறிவிப்புக்கள், உங்கள் புத்தக வெளியீடு குறித்த அறிவிப்புக்கள் இன்னும் மக்களுக்கு போய் சேர வேண்டிய பொது அல்லது தனிப்பட்ட அறிவிப்புக்களும் வரவேற்கப்படுகின்றன.

உதவிகளுக்கான வேண்டுகோள்களும் வரவேற்கப்படுகின்றன. உதாரணமாய் வெளிநாடுகளுக்கு வயதானவர்களுக்கு பயணத்தில் உதவி தேவை போன்றவை.

தகவலைத் தெரிந்துகொள்ளும் கேள்விகளை இடலாம். உ.ம்: லண்டனில் தமிழ் புத்தகங்கள், வீடியோக்கள் எங்கு கிடைக்கும் போன்ற கேள்விகளை முன்வைக்கலாம்.

வரி விளம்பரத்தில் என்ன இடலாம் என ஒரு பட்டியல்

 • பழைய/புதிய பொருட்கள்/சேவைகள் விற்பது வாங்குவது
 • வீடு/மனைகள் விற்பது வாங்குவது
 • பொதுவான அறிவிப்புக்கள்
 • வலையுலக அறிவிப்புக்கள் (.ம்:புதிய தமிழ் தளம் துவக்கம்)
 • உதவி தேவை
 • தகவல் தேவை
 • அறை நண்பர் தேவை
 • வாடகை வீடுஇருப்பு/தேவைஇன்னும் என்னென்ன இடலாம் என பின்னூட்டத்தில் சொல்லவும்.

இந்த சேவை சற்றுமுன்னின் முயற்சி என்பதைவிட தமிழ் வலைப்பதிவுலகின் சாதனை என்றே சொல்வேன். இணைய வலையில் தமிழ் செழிக்காவிட்டால் இதுபோன்ற சேவைகளுக்கு இடம் ஏது.

இதை சரியாகப் பயன்படுத்தி சிறப்பு செய்ய சற்றுமுன் குழு சார்பில் வேண்டுகிறேன். பதிவர்களின் பங்களிப்பை இதில் முக்கியமாக எதிர்பார்க்கிறோம்.

உடனடியாகச் சென்று உங்கள் கணக்கை உருவாக்குங்கள். பயனர் கையேட்டை படியுங்கள் பயன்படுத்துங்கள்.

சற்றுமுன் வரி விளம்பரம் தளம் (http://satrumun.com/classifieds/)

பயனர் கையேடு

கணக்கை உருவாக்க

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....5 மறுமொழிகள் to “தீபாவளி ரிலீஸ்”

 1. என்னையா ஒரு மறுமொழியக் கூடக் காணோம்?
  :(

 2. inyan சொல்கிறார்:

  நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

 3. ila சொல்கிறார்:

  முயற்சிக்கு வாழ்த்துக்கள் சிறில். ஏற்கனவே வ.வா.ச சார்பில் ஆரம்பிக்கப்பட்டு பிறகு நிறுத்தப் பட்ட பகுதி இந்த விளம்பரப் பகுதிதான். காரணம் சரியான வரவேற்பு இல்லை. சுலேகா எல்லாம் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் தமிழார்வம் கொண்ட மக்கள் இதனை சிறப்புற பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 4. நன்றி இணையன் (இனியன்?)

 5. இளா,
  மக்கள் பயன்படுத்துவார்கள் எனும் நம்பிக்கையில்தான் நாங்கலும் ஆரம்பித்துள்ளோம். பார்ப்போம். பாராட்டுக்கு நன்றி

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்