கள்ளன் போலீஸ் (நம்மால முடிஞ்ச நச் கதை)

“சத்தம் போடாம அறைய விட்டு வெளிய வாங்க?” கையில் துப்பாக்கியுடன் பேங் மேனேஜரை மிரட்டி அழைத்தான் அந்த லுங்கி கட்டிய ஆள்.

‘சிட்டிக்குள்ள இருக்கிற பேங்க்ல மாடு வாங்க லோன் கேட்டு வந்தப்பவே தோணியிருக்கணும்’ பேங்க் மேனேஜர் தன்னை நொந்துகொண்டே வெளியே வந்தார். கேஷ் கவுண்டரில் ஒருவனும் வங்கி வாசலில் ஒருவனுமாக துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தனர்.

“லாக்கர்ல இருக்கிற நகை, வங்கியில இருக்கிற காசு அத்தனையும் இந்த வெள்ளப் பையில போட்டு மூட்ட கட்டுங்க.”

மேனேஜர் ஜப்பானில் புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோவைப் போல செயல் பட்டுக் கொண்டிருந்தார். கிளார்க் ராமானுஜம் விசும்பிக் கொண்டிருந்தது அவருக்கு எரிச்சலூட்டியது.

உலக வரலாற்றிலேயே மிக எளிதாய் நடந்துவிட்ட வங்கிக் கொள்ளை இதுதான் என்பது போல எல்லாம் நடந்துகொண்டிருந்தது. மூவரும் வெள்ளை மூட்டையை எடுத்துக் கொண்டு கதவருகே வந்தனர்.

மேனேஜர் இதெல்லாம் ஏதோ கனவுக்குள் நின்றுகொண்டிருப்பது போல நின்றுகொண்டிருதார்.

திடீரென கதவைத் தள்ளிக் கொண்டு மூன்று போலீஸ்காரர்கள் வந்தனர். கொள்ளையர்களை துப்பாக்கி முனையில் வளைத்துப் பிடித்தனர்.

வங்கி ஊளியர்களெல்லாம் ஆளாளுக்கு சத்தம் போடத் துவங்கினர். இன்ஸ்பெக்டர் பளார் என ஒருவனை அறைந்தார். “ராஸ்கல்ஸ்!”

கொள்ளையர்களுடனும், சாட்சி மூட்டையுடனும் போலிஸ் ஜீப் கிளம்பி பதட்டம் அடங்க அரை மணி நேரத்திற்கு மேலாகியது.

“நம்மாளு யாரு போலிசக் கூப்பிட்டது?” இராமானுஜம் கேட்டார்.

எல்லோரும் அமைதியாய் விழித்துக்கொண்டிருக்கையில் ‘நிஜ’ போலிஸ் உள்ளே நுழைந்தது.

Popularity: 18% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....18 மறுமொழிகள் to “கள்ளன் போலீஸ் (நம்மால முடிஞ்ச நச் கதை)”

 1. Surveysan சொல்கிறார்:

  :) நச் factor கம்மியாதான் இருக்கு.
  இன்னும் நல்லா யோசிச்சு இன்னொண்ணு எழுதலாம். வீக்-எண்ட், எப்படியும் குளிர்ல, வீட்டுக்குள்ளதான ஒக்காரணும்? ;)

 2. சிறில், புரியுறாப்புலயும் இருக்கு. சரியாப் புரியாத மாதிரியும் இருக்கு. எல்லாம் கூட்டுக்களவாணிங்கன்னு சொல்ல வர்ரீங்க. அதான?

 3. Survey,
  Will try my best. Ithu oru chinna breakls yosichathu.

  Thanks for the feedback.

 4. those who came as police are also part of the gang.
  :(

 5. கதை கொஞ்சம் ரொம்ப சின்னதா செஞ்சுட்டீங்களே. என்னமோ கொஞ்சம் குறையிற மாதிரி இருக்கு. கொஞ்சம் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை செய்யலாமோ!

 6. ஒரு சின்ன போஸ்ட் ப்ரொடக்க்சன் கடைசில செஞ்சிருக்கேன்.

 7. //என்னமோ கொஞ்சம் குறையிற மாதிரி இருக்கு//
  சர்வே சொன்ன நச் ஃபேக்டர்தான்..
  :))

 8. இது நம்ம தமிழ்பட ஸ்டைலா இருக்கே அலக்ஸ் அண்ணாச்சி…கொஞ்சம் ஹாலிவுட் ரேஞ்சுல கொல்லியிருக்கலாம்

 9. Mangalore Siva சொல்கிறார்:

  Present Sir

 10. நண்பரே !! கதை நன்றாகத்தானிருக்கிறது – திருப்பமெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது

 11. மின்மடல் வழியே பாஸ்டன் பாலா

  அருமை :)

  (ஏதோ டிராமா, ரிகர்சல் என்று சப் ஆகுமோ என்று நம்பிக்கையாக படித்தேன் ;)

  (Somehow the site keeps rejecting my comments :)

 12. […] கள்ளன் போலீஸ் (நம்மால முடிஞ்ச நச் கதை)… […]

 13. //நண்பரே !! கதை நன்றாகத்தானிருக்கிறது – திருப்பமெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது//

  நன்றி சீனா.

 14. […] சிறில் அலெக்ஸ் – கள்ளன் போலீஸ் கொஞ்சம் எதிர் பார்த்த கதை தான் – நச் குறைவு – ஆனால் எழுதிய விதம் நன்றாக இருந்தது – பரவாயில்லை – கள்ளன் போலிஸ் – பழைய திருடன் […]

 15. senshe சொல்கிறார்:

  எதிர்பார்த்த பாக்யராஜ் பாணி முடிவு… ஆனாலும் நடை சூப்பர் :))

 16. ramji சொல்கிறார்:

  very nice story,

 17. […] கதைகள் கதை10:கள்ளன் போலீஸ் சத்தம் போடாம […]

 18. Parthasarathi சொல்கிறார்:

  அட நல்லா தான் இருக்கு. இந்த கதைக்கு என்ன குறைச்சல்.
  மிக நேர்த்தியாக கொண்டு வந்துள்ளீர்.
  வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்