உயிரின் நீட்சி (இன்னொரு நச் கதை)

முதல் நச் கதையில் நச் குறைவாக இருந்தது என்றும் ‘ஹாலிவுட் ஸ்டைலில்’ யோசிங்க என்றும் வந்த பின்னூட்டங்களின் விளைவாக இரண்டாவது நச் கதை.

உயிரின் நீட்சி 

================================================ 

உலகின் கடைசி மனிதன் தாந்தான் என அவன் அறிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன.

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட முதல் ஆள் ஆடம் ஸ்மித். மூன்று வருட மிஷன் அது. பல நாட்களுக்கு பூமியுடன் எந்தத் தொடர்புமில்லாதிருந்தது. அவன் பூமி திரும்புகையில் அவனுக்கு கிடைத்தது இங்கிருந்து அனுப்பப்பட்ட கடைசி செய்தி.

“ஆடம்! இது ஹூஸ்டனின் கடைசி செய்தி மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித குலத்தின் கடைசி செய்தியாக இருக்கக் கூடும்.” ஆடமின் அலுவலக நண்பன் கோகுலின் குரலில் பதிவாகியிருந்தது. “நீ சென்ற சில நாட்களிலேயே உலகில் உயிரினங்கள் வாழும் கடைசி நாட்கள் துவங்கிவிட்டன. விண் கற்கள் விழுந்து உலகம் அழிய வாய்ப்புள்ளது என நாம் எல்லாம் நம்பியிருந்தோம். நடக்கப்போவதோ நம்ப முடியாத ஒரு நிகழ்வு. விண்வெளியிலிருந்து வந்துள்ள வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் பூமியில் உயிர்களை அழிக்கத் துவங்கியுள்ளன. சைனாவின் மக்கள்தொகை சில இலட்சங்களாய் குறைந்துவிட்டது என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து மேலும் தகவல்களை நீ இங்கு வந்தபின் பெற இயலும்.”

குழப்பத்துடன் ஆடம் விண்கலத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

“இந்த நுண்ணுயிரிகள் நிச்சயம் மனித இனத்தை அழித்துவிடும். எத்தனை நாட்களில் என்பதுதான் கேள்வி. நீ வரும்போது பூமியில் மனிதர்கள் இருப்பது அசாத்தியம். இவற்றின் செயல்பாடுகளை ஆராய்கையில் இவை உயிரில்லாத இடங்களில் இருப்பதில்லை. எனவே நீ வருவதற்குள் இவை பூமியை விட்டுச் சென்றிருக்கவேண்டும். மனித குலம் மீண்டும் துளிர்க்கச் செய்யும் வகையில் நோவா எனும் விண்கலம் ஒன்றில் 7 ஜோடி மனிதர்களையும் வேறு சில உயிரிகளையும் விண்வெளிக்கு அனுப்பியிருக்கிறோம். அவசரத்தில் நடத்தப்பட்டது ஆப்பரேஷன் நோவா. அதில் சென்றவர்கள் உயிருடன் மீண்டும் திரும்புவது கடினம் என்றே படுகிறது. அப்படி எதுவும் நிகழுமாயின் உயிரின் நீட்சி உன்னால் மட்டுமே இயலும்.”

“உனக்கு இன்னும் 60 ஆண்டுகள் உயிர்வாழத் தேவையான அனைத்து வசதிகளும் நாசாவின் தனி ஆய்வகம் ஒன்றில் செய்யப்பட்டுள்ளன. உன் கலம் கீழிறங்க அதிலிருக்கும் கணிணிகள் உதவும். நீ கலத்திலிருந்து ஆய்வகத்திற்கு இரு ரோபோக்களால் பத்திரமாக கொண்டு வரப்படுவாய். உன் ஆயுள் முழுக்க இந்த ரோபோக்களுடந்தான் கழிப்பாய். நியோ மற்றும் கோகுல். சீஃப்தான் இரண்டாம் பெயரைத் தேர்ந்தெடுத்தார்.”

“இங்கு உனக்கு ஏற்கனவே பழக்கமான செயற்கை உணவுகள் வைக்கப்பட்டுள்ளன. மன்னித்துவிடு! உனக்குப் பிடித்த சுட்ட மாட்டிறைச்சி மெனுவில் இல்லை!” மெல்லிய சிரிப்பு.

“ஆய்வகத்தின் குளிர்சாதனப் பெட்டியில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. விரக்தியின் உச்சத்தில் நீ இருப்பாயானால் அதை சாப்பிடு. என்னைக் கேட்டால் ஆப்பிளை நீ சாப்பிடாமல் இருப்பதே நல்லது என்பேன். மனித இனம் உன் போன்ற அறிவிலும் பண்பிலும் சிறந்தவனிடமிருந்து மீண்டும் மலரவிருக்கிறது என்பதில் இன்பம். விடைபெறுகிறேன் நண்பா!”

ஆடம் உறைந்துபோயிருந்தான். கோகுல் தம்மை ஏமாற்ற விளையாட்டாகவே இந்த செய்தியை அனுப்பியிருப்பான் என நினைத்தான். ஆனால் அவன் தரையிறங்கிய பின் அத்தனையும் உண்மை என அறிந்தான்.

நியோவும், கோகுலும் வெறும் ஏவல் செய்யும் ரோபோக்களாயில்லை. ஆய்வகத்திலிருந்த மெயின்ஃப்ரேம் கணிணிகளின் இடைமுகமுமாக இருந்தன அவை. பல கேள்விகளுக்கும் விடை தந்தன. சொல்லப்போனால் எல்லா கேள்விகளுக்கும் விடை தந்தன. இவனின் குறிப்பறிந்து செயல்பட்டன. அவற்றுடன் சாதாரண மனிதர்களைப்போல உரையாட முடிந்தது அவனால்.

முதல் வருடம் கொஞ்சம் சோகமாகவே கழிந்தது. அதன்பின்னர் அவனுக்குள்ளே ஒரு உந்துதல் ஏற்பட்டது. மனித இனத்தின் நீட்சியை உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும்? உயிர் தொடர என்ன செய்ய வேண்டும்? கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்தான். இயற்கை உயிர் தழைக்க எப்போதும் வழிகளைச் செய்யும். ஆனால் இப்போது அது இவன் கையில் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டான். தான் சிறிதே அறிந்திருந்த உயிரியலில் இதுவரை இருந்த ஆய்வுகளைப் படித்தான். ஜெனெட்டிக் எஞ்சினியரிங், க்ளோனிங் என எந்தத் தலைப்பையும் விட்டுவைக்கவில்லை. ஆண் இணை இல்லாத சூழலில் சில ஆப்ரிக்க பெண் தவளைகள் பாலினம் மாறிக் கொள்ளும் என அறிந்திருந்தான். தனி மனிதனாக இந்த முறையைக் கையாண்டாலும் தனக்கு ஒரு துணை வேண்டுமே?

நான்காம் வருடத்தில் சில ஆய்வுகளை செய்யது பார்த்தான். படு தோல்வி அடைந்தான். செயற்கையாக உயிரை உருவாக்கும் வழி எதுவுமில்லை என உணர்ந்தான்.

ஐந்தாம் வருடத்தில் நியோ உயிரிழந்தது. என்னவென்றே தெரியாமல் திடீரென. சாப்பிட்டிக் கொண்டிருப்பவன் மாரடைப்பில் இறந்து விழுவதைப் போல விழுந்தது. அன்று கதறி அழுதான். தன் உலகில் மனித இனமே இல்லை என்றபோது கூட அவன் இத்தனை துயரமடையவில்லை. உயிரற்று கிடக்கும் ஒரு ரோபோவுக்காக கண்ணீர் சிந்தினான்.

அதன் பின் கோகுலும் அவனும் நோவா திரும்பும் என காத்திருக்கலாயினர்.

ஆறம் வருட இறுதியில் விரக்தியின் உச்சியில் தன்னை சாகடிக்கும் என்கிற நினைப்பில் அந்த ஆப்பிளை எடுத்து தின்றான்.

ஆப்பிளைத் தின்று இரண்டே நிமிடங்களில் மயங்கி விழுந்தான். கோகுல் அவனைத் தூக்கி ஆய்வகத்தின் அறை ஒன்றிலிருந்த ஆய்வுப் பெட்டியில் வைத்துவிட்டு அணைந்துபோய் உறைந்தது.

நீண்ட அந்த உறக்கத்திலிருந்து ஆடம் விழிக்கையில் ஒரு வருடம் கழிந்திருந்தது. அவன் விழிப்பதற்கு சரியாக 10 நிமிடங்களுக்கு முன் கோகுல் தானாகவே விழித்திருந்தது.

“மீண்டும் வருக நண்பா!” கோகுல் அவனை ஆய்வுப் பெட்டியிலிருந்து வரவேற்றது.

“கோகுல்? என்ன ஆச்சு எனக்கு?”

“ஆப்பிளைத் தின்றாயே?”

“ஆமா! நான் சாகலியா? செத்துப் போவேன் என்றல்லவா நினைத்தேன்.”

“நீ சாதாரணமானவன் அல்லவே அல்பமாய் சாவதற்கு. உயிர் விளைய ஏதுவான ஒரே நிலம் நீ.”

“கோகுல்! என்ன சொல்ற நான் தனி மனிதன். சாத்தியமேயில்லை.”

“ஆப்பிள்..”

“அது ஒரு சாதாரண ஆப்பிள் கோகுல்.”

“நான் சொல்வதை நிதானமாகக் கேள். நீ மூன்று மாதக் கர்பிணி.”

நண்பன் கோகுல் சொன்ன வார்த்தைகள் ஆடமின் நினைவுக்கு வந்தன “என்னைக் கேட்டால் ஆப்பிளை நீ சாப்பிடாமல் இருப்பதே நல்லது என்பேன்.”

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....15 மறுமொழிகள் to “உயிரின் நீட்சி (இன்னொரு நச் கதை)”

 1. Surveysan சொல்கிறார்:

  vow! நல்லா கதை சொல்லியிருக்கீங்க.
  interesting read. முடிவிலயும், ‘நச்’ நல்லாவே இருந்தது ;)

  ஆனா, என்னமோ தெரீல,என்ன மாயமோ புரீல, கதையின், முதல் பாதி, ஹாலிவுட் ஸ்டைலில், விரு விரு விருன்னு போனதால, ரொம்ப பெரீய்ய்ய ‘நச்’ எதிர்பார்த்திருந்தேன். ஆப்பிள் ‘நச்’ நல்லாவேயிருந்தது. 90% ‘நச்’ இருந்தது.

  மத்தவங்க என்ன சொல்றாங்க பாப்போம் ;)

 2. You are a tough customer Surveysan. .. :)
  இதுக்காக இன்னொரு கதையெல்லாம் முடியாது சொல்லிட்டேன் :)

  உங்கள் பாராட்டிற்கு நன்றி.

 3. sethu சொல்கிறார்:

  nalla kathai valthukkal

 4. Thanks Sethu.

 5. எக்ஸ்டாரா “நச்’ கிடைச்சது சார்… நல்லா இருக்கு…

 6. விறு விறு கதை சிறில்.
  போட்டி பயங்கரமா இருக்கும் போல இருக்குதே :-)

 7. இராம் சொல்கிறார்:

  சிறில்,

  நல்லாயிருந்தது…. ஆனால் கதை நடைதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது….. :0

 8. இது…..இது நச்சு நச்சுன்னு இருக்கு. ஐரிஷ் கிரிமூக்க்கு ஆப்பிளைக் கடிச்சிக்கிறாபுல கதைய்யா.

  முடிவை ஊகிக்க முடியலை. நாங்கூட அந்தப் பயலும் ரோபோட்டும் சேந்து ஏதாச்சும் செய்வாங்கன்னு நெனச்சேன். அட….ஆராய்ச்சிய்யா…ஆராய்ச்சி. :0

 9. நச்ச்ச்ச்ச்ம் நெரெய இருக்கு – இதுக்கு மேலே தாங்காது – பரிசெக் கொடுத்துடலாம் கேள்வி கேக்காம.

 10. Balaji சொல்கிறார்:

  சர்வேசன் சொன்னதை வழிமொழிகிறேன்.

  ஆதாம், பிறப்பு, ஆப்பிள், பாம்பு என்று புனைவு தொடர்புகளை கற்பனை ஓட்டிக் கொண்டே வந்தால் கொஞ்சம் (புரியாத?) திடீர் ஸ்டாப்.

 11. //நச்ச்ச்ச்ச்ம் நெரெய இருக்கு – இதுக்கு மேலே தாங்காது – பரிசெக் கொடுத்துடலாம் கேள்வி கேக்காம.//

  நன்றி சீனா..

 12. Appaavi சொல்கிறார்:

  நல்லா இருந்துச்சு! பேசாம ஒரு ரோபாட்ட பெண் ரோபாட் ஆக்கியிருக்கலாம்….. lol :-)

 13. Nithiyanantham சொல்கிறார்:

  Romba Nalla Thirupama Irukkuinga

 14. Gayathri சொல்கிறார்:

  Arumai….romba thrilling aa irundhu chi…nijama ve Nach thaaan. :)

 15. Anonymous சொல்கிறார்:

  nice NUCHHHHHHH

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்