‘நச்’ கவிதைப் போட்டி – அறிவிப்பு

சர்வேசனின் கதைப் போட்டி சூடாய் போய்க் கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு கவிதை தலைப்பைத் தந்தால் கவிஞர்கள் உச்சாகம் அடைவார்கள் என்பதனால்….

காலையில் மலையாளப் பாடல் ஒன்று கேட்டுக்கொண்டிருந்தேன் அதில் வந்த ஒரு வரிதான் ‘பூக்களில் உறங்கும் மௌனங்கள்’. இதுதான் தலைப்பு

போட்டிக்கு பரிசு? வலைப்பதிவர் ஒருவர் எழுதி விரைவில் வெளி வர இருக்கும் ஒரு புத்தகம்.

இதோ என் பங்குக்கு…

பூக்களில் உறங்கும் மௌனங்கள்

பார்வை மொழி பேசும் பதின்மக் காதலும்
பாசம் வழிந்தோடும் தாயின் அன்பும்
படுக்கை அறையின் ஸ்பரிச நிசப்தமும்
பச்சிளம் குழந்தையின் தூக்கத்துட் சிரிப்பும்
போர்கள் அடங்கிய ஊரின் காட்சியும்
மரணம் நிகழ்ந்த வீட்டின் இரவும்
மலையைத் தழுவும் மேகத்தின் மென்மையும்
இருண்ட கோவிலின் ஒற்றை தீபமுமாய்
பூக்களில் உறங்கும் மௌனங்கள்.

சட்ட திட்டங்கள்…
1. பூக்களில் உறங்கும் மௌனங்கள் – இந்த கருத்தை முன்வைத்த கவிதைகளாயிருக்கணும்.
2. பதினேழுபேர் கொண்ட நடுவரெல்லாம் இதுக்கு இல்ல. :) நான் மட்டும்தான். இத போட்டி என்று சொல்லாமல் கவிதை எழுத ஒரு ஊக்கம் எனலாம் (பதிவர்களுக்குத்தான் எத்தனை ஊக்கங்கள் Boost is the secret of our Posts)
3. பரிசு என்னண்ணு படிச்சிருப்பீங்க. இரண்டு மூன்று பரிசுகளும் வழங்கப்படலாம்..
4. கடைசி தேதி ஜனவரி 10, 2008. அதுக்கப்புறமும் எழுதலாம்… காசா பணமா?

ரெம்ப informal போட்டி இது.

இதுவரை ஒலித்த மௌனங்கள்
=============================
1. சிந்தாநதி
2. VSK
3. Dreamzz
4. குட்டி பிசாசு
5. செல்வி ஷங்கர்
6. SP.VR.சுப்பையா
7. வேதா
8. PKS
9. சக்தி
10. கண்மணி
11. சதிஷ்
12. திகழ்மிளிர்
13. எம்.ரிஷான் ஷெரீப்
14. அமிர்தன்
15. இப்னு ஹம்துன்
16. நிலாரசிகன்
17. சகாரா
18. நாடோடி இலக்கியன்
19. பிரேம்குமார்
20. சேவியர்
21. இப்னு ஹம்துன்
22. சேவியர்
23. இராகவன் என்ற சரவணன் மு.
24. ஷைலஜா
25. நம்பிக்கை பாண்டியன்
26. அருட்பெருங்கோ
27. நவன்

Popularity: 23% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....78 மறுமொழிகள் to “‘நச்’ கவிதைப் போட்டி – அறிவிப்பு”

 1. Shobi சொல்கிறார்:

  Unga kavithai nalla irukku

 2. நம்மளால கவிதை எழுதமுடியுதோ இல்லையோ நிச்சயம் பி.க. எனும் பூஸ்ட் தரமுடியும் :-)

 3. நன்றி ஷோபி.

  சேது.. அடிக்கடி வந்து பி.க போடவும் :)

 4. கவிதையாஆஆஆஆஆஆஆஆஆ….. ம்ம்ம்ம்…. ரொம்பக் கஷ்டமாச்சே…. நீங்க எழுதுனதே புரியலை. இதுல என்னத்த எழுதுறது. அறிவாளிகளுக்கு வழி விட்டு ஒதுங்கிக்கிறேன். :)

 5. //நீங்க எழுதுனதே புரியலை//

  ராகவன்.. புரியாத கவிதைகள் எழுதுர அளவுக்கு நான் இன்னும் கவிஞராகலைங்க. :)

 6. //அறிவாளிகளுக்கு வழி விட்டு ஒதுங்கிக்கிறேன். //
  ஆதெல்லாம் முடியாது மக்களுக்கு சிபாரிசு செய்யுங்க.. உங்க பதிவுல விளம்பரம் போடுங்க.

  :))

 7. Surveysan சொல்கிறார்:

  “பூக்களில் உறங்கும் மௌனங்கள்”

  தலைப்பு ரொம்ப sophisticatedஆ இருக்கே.
  நானெல்லாம் கவிதை எழுத முடியர மாதிரி சிம்பிளா வச்சிருக்கலாம்.

  :)

  இருந்தாலும், முயற்சி பண்ணுவேன் :)

 8. Survey .. there is nothing like sophisticated and all..please attempt.

  :)

 9. பூக்களில் உறங்கும் மெளனங்கள் – கவிதைஇ எழுதத் தூண்டும் வைர வரிகள். கவிஞர்களே !!! எழுதுங்கள் – படிக்கிறோம் – ரசிக்கிறோம் – அனுபவிக்கிறோம்.

 10. innum yaaraiyum kaanoom?

 11. ஆகா என்னையும் மதிச்சு கவிதை எழுத கூப்பிடுறீங்களே… நாங்க எல்லாம் கவுஜ எழுதுற கூட்டமாச்சே……

  இருந்தாலும் ஒரு ஹோட்டலே புக் பண்ணியாச்சும் யோசிக்கிறேன்…

  தலைப்பே மிக அழகு!

  அது சரி, யாரு எழுதின புத்தகம்??? ஏதாவது கொலசாமி எழுதுன கொலவெறி புத்தகம்னா இப்பவே சொல்லிடுங்க…. அப்பீட்ட்ட்ட்ட்டேய்

 12. //அது சரி, யாரு எழுதின புத்தகம்??? ஏதாவது கொலசாமி எழுதுன கொலவெறி புத்தகம்னா இப்பவே சொல்லிடுங்க…. அப்பீட்ட்ட்ட்ட்டேய்//

  I thought people would guess it ;)

 13. வேதா சொல்கிறார்:

  என்னையும் மதிச்சு கூப்பிட்டதுக்கு நன்றி. தலைப்பே கவித்துவமாக இருக்கிறது, நீங்க எழுதின கவிதையே ரொம்ப நல்லாயிருக்கே :) சரி கவிதையை எங்கே எழுதணும், என் வலைப்பக்கத்திலே எழுதி இங்கே தொடுப்பு கொடுக்கனுமா? கவிதையை அனுப்ப கடைசி தேதி இருக்கா? (நான் கொஞ்சம் சோம்பேறி அதான் ஹிஹி:))

 14. […] ‘நச்’ கவிதைப் போட்டி – அறிவிப்பு […]

 15. //அடிக்கடி வந்து பி.க போடவும்//

  எதுக்குங்க? அத வச்சு நுண்ணரசியல் பண்றதுக்கா? :))

 16. VSK சொல்கிறார்:

  எனது பதிவில் ஒரு கவிதை போட்டிக்காக இட்டிருக்கிறேன்!

  http://aaththigam.blogspot.com/2007/12/blog-post_20.html

  இதையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்க சாமி!
  :))

 17. Dreamz சொல்கிறார்:

  http://godshavespoken.blogspot.com/2007/12/blog-post_20.html

  ithaiyum serthikalame!

  nalla thalaipu. thalaipukaaga thaan seraren :D
  Dreamz.

 18. சகாரா சொல்கிறார்:

  உங்க கவிதை அழகு :)
  போட்டிக்கான கவிதையை எப்படி அனுப்பனும்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.

  – சகாரா.

 19. //உங்க கவிதை அழகு :)//
  நன்றி

  //போட்டிக்கான கவிதையை எப்படி அனுப்பனும்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.//
  படைப்புக்களை உங்கள் பதிவில் இட்டுவிட்டு இங்கே பின்னூட்டத்தில் சுட்டியைத் தாருங்கள்.

  பதிவர் இல்லையென்றால் இங்கே பின்னூட்டத்திலேயே கவிதையை இடலாம்.

 20. Rasikow சொல்கிறார்:

  டச் விட்டுப்போச்சே நண்பா…?:)
  சரி கண்டிப்பாக முயல்கின்றேன்…

 21. சீனா..
  //பூக்களில் உறங்கும் மெளனங்கள் – கவிதைஇ எழுதத் தூண்டும் வைர வரிகள். கவிஞர்களே !!! எழுதுங்கள் – படிக்கிறோம் – ரசிக்கிறோம் – அனுபவிக்கிறோம்.//

  சும்மா ஒரு கவிதைய எழுதுங்க .. நாங்களும் ரசிப்போம்ல? :)

 22. வேதா/பிரேம் குமார்,
  சீக்கிரமா கவுஜ எழுதுங்க :)

 23. Surveysan சொல்கிறார்:

  எவ்ளோ யோசிச்சும்ம் ஒரு ஸ்பார்க் வர மாட்டரதே.
  கவுஜயெல்லாம் அதா வரதுதான் போல :(

  முயற்சி தொடர்கிறது… :)

 24. நச் கவிதைப் போட்டிக்கு, இதோ என்னோட பங்களிப்பு!!

  http://yavanaththachchan.blogspot.com/2007/12/blog-post_22.html

 25. எனது ம.பா ஒரு கவிதை (??) எழுதி இருக்கிறார்.
  போட்டிக்காக !!!

  சுட்டி:

  http://pattarivumpaadamum.blogspot.com/2007/12/blog-post_22.html

 26. SP.VR.Subbiah சொல்கிறார்:

  எனது பதிவில் ஒரு கவிதை இட்டிருக்கிறேன் நண்பரே!
  சுட்டி இங்கே உள்ளது!
  http://devakottai.blogspot.com/2007/12/blog-post.html

 27. SP.VR.Subbiah சொல்கிறார்:

  பாக்களில் பூக்களில் பண்பட்ட நட்பில்
  தேக்கமான அழகு தேனாகும் – நோக்குக
  மணியான உண்மை,மறைந்திருக்கும் இனிமை
  மனிதன் அறியாத மெளனம்!
  – SP.VR.சுப்பையா

 28. நியாபகம் வச்சு வந்து கலக்கல் கவிதை தந்து மௌனம் கலைத்த சுப்பையா சாருக்கு நன்றி.

  சீனா + குட்டி பிசாசுவுக்கும் நன்றி

 29. senshe சொல்கிறார்:

  இன்னும் டைம் இருக்குதா..! இருந்தா நானும் டிரை செய்றேன் :))

  சிறில், உங்க கவிதையும் சூப்பர். மத்த கவிதைய எல்லாம் பொறுமையா படிக்கணும்.

  //என்னையும் மதிச்சு கூப்பிட்டதுக்கு நன்றி. தலைப்பே கவித்துவமாக இருக்கிறது, நீங்க எழுதின கவிதையே ரொம்ப நல்லாயிருக்கே சரி கவிதையை எங்கே எழுதணும், என் வலைப்பக்கத்திலே எழுதி இங்கே தொடுப்பு கொடுக்கனுமா? கவிதையை அனுப்ப கடைசி தேதி இருக்கா? (நான் கொஞ்சம் சோம்பேறி அதான் ஹிஹி:))//

  இதுக்கு மட்டும் ரிப்பீட்டே :))

  சென்ஷி

 30. கண்டபடி டைம் இருக்கு சென்ஷி. நிச்சயம் எழுதுங்க.

 31. வேதா சொல்கிறார்:

  நானும் எழுதிட்டேன் :) கவிதை இங்க இருக்கு.

 32. Sathish சொல்கிறார்:

  யார் வேண்டுமானாலும் கலந்துக்கலாமா?? என் பதிவேட்டிற்க்கு ஒருமுறை வருகை தாருங்களேன்!

 33. சதீஷ்,
  யார்ணா கலந்துக்கலாம்.. ஆட்டயில சேந்துக்குங்க … வாங்க.

 34. PK Sivakumar சொல்கிறார்:
 35. சக்தி சொல்கிறார்:

  நச் கவிதைப் போட்டிக்கு, இதோ என்னோட பங்களிப்பு!!

  http://snehamudansakthi.blogspot.com/2007/12/blog-post.html

 36. கண்மணி சொல்கிறார்:

  http://kouthami.blogspot.com/2007/12/blog-post_25.html

  என்னுடைய கவிதைக்கான உரல் கொடுத்திருக்கிறேன்.

 37. கண்மணி சொல்கிறார்:

  http://kouthami.blogspot.com/2007/12/blog-post_25.html
  என்னோட கவிதையின் உரல்

 38. Sathish சொல்கிறார்:

  என்னோட முயர்ச்சியையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க :)

 39. Sathish சொல்கிறார்:

  ‘link’ இங்க இருக்கு

 40. Sathish சொல்கிறார்:

  பிழைகள் எத்தனையோ அதற்கேற்ப பரிசு தொகையை வேண்டுமானால் குரைத்து கொள்ளுங்கள் :)

  திருத்தங்கள் செய்து விட்டேன்

 41. ஈழத்தின் வலி சுமக்கும் கவிதைகளையும் இத்தலைப்புக்காக எழுதலாமா நண்பரே…?

 42. Karthik S சொல்கிறார்:

  Thanks for stopping by Mr. Cyril. Let me try to take part.
  Happy New year. Take care.

 43. //ஈழத்தின் வலி சுமக்கும் கவிதைகளையும் இத்தலைப்புக்காக எழுதலாமா நண்பரே…?

  //

  கண்டிப்பா எழுதுங்க ஷெரிப்

 44. […] ‘நச்’ கவிதைப் போட்டி – அறிவிப்பு […]

 45. இது என்னுடைய பங்களிப்பு

  http://anpudan-thikalmillr.blogspot.com/2007/12/blog-post.html

 46. http://mrishanshareef.blogspot.com/2008/01/blog-post.html

  அன்பின் சிறில் அலெக்ஸ்,
  இத்துடன் போட்டிக்கான எனது கவிதையை இணைத்திருக்கிறேன்.
  போட்டிக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே..!
  நன்றிகள்…!

  என்றும் அன்புடன்,
  எம்.ரிஷான் ஷெரீப்

 47. Karthik S சொல்கிறார்:

  Here is my url. You can find mine. Thanks for the chance.

  http://justbloggingg.blogspot.com/

 48. Amirthan சொல்கிறார்:

  Dear Cyril,

  Great Job… My simple poem is available in the below link.

  amirthan.blogspot.com

  Regards
  Amirthan aka Lawrence.

 49. கீதா சொல்கிறார்:

  என்னுடைய பங்களிப்பு இதோ..

  http://geeths.info/archives/99

  முடிந்ததால் மற்றொரு சிந்தனையையும் எழுதி இணைக்கிறேன்

  அன்புடன்
  கீதா

 50. சிரில்,

  என்னுடைய கவிதையை (http://amirthan.blogspot.com) இணைத்ததிற்கு நன்றி.

  அமிர்தன்.

 51. பூக்களின் மவுனத்தை
  பெயர்த்துப் பார்த்தால்..
  வாசனையோடு
  வழங்குவதற்கு வாய்க்கலாம்
  பூநாகமோ
  பூகம்பமோ..
  புதையுண்ட படி!

  பூவென்பது புதிராவது
  அந்த மவுனத்தின்
  அர்த்த ஆழத்தில் தான்.
  அழகால் மவுனமா?
  மவுனமே அழகா?

  எந்தவனத்திலும் சொற்களின் கூச்சலே
  செல்லுபடியாகிக்கொண்டிருக்க..
  நந்தவனத்திலோ
  பூக்களின் மவுனம்தான்
  சொல்லும்படியாயிருக்கிறது!

  மனதின் காதுகளிலும்
  காதலின் மனங்களிலும்
  மொழிந்தபடி தான் இருக்கிறது பூ!
  ‘மவுனமாயிருந்தாலும்
  மலர்ந்தே இரு!’

  சாகும் வரைக்கும்
  சிரிப்பொன்றே
  சம்மதம் அதற்கு!

  (அப்பாடா! வைரமுத்து மாதிரி எழுதி எம்மா நாளாச்சு:-)))

 52. வலைப்பூவில் கட்டாயம் போட்டாகணுமா, என்ன?

 53. என்னுடைய பங்களிப்பு இதோ:

  http://nilaraseegan.blogspot.com/2008/01/blog-post_08.html

 54. சகாரா சொல்கிறார்:

  தங்களின் கவிதைப் போட்டிக்கு என் சிறிய பங்களிப்பு.

  சுட்டி கீழே.

  http://saharathendral.blogspot.com/2008/01/blog-post_5798.html

  – சகாரா

 55. கவிதைப் போட்டிக்கு எனது படைப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள், இதோ எனது கவிதை இங்கே:
  http://naadody.blogspot.com/2008/01/blog-post.html

 56. ம்ஹீம், இதொன்னும் வேலைக்கு ஆகலங்க…. ரொம்ப கொலவெறியோட சிந்திச்சும் இவ்ளோ தான் தலைவா எழுத முடிஞ்சது :(

  பூக்களில் உறங்கும் மௌனங்கள்
  http://premkumarpec.blogspot.com/2008/01/blog-post.html

 57. சேவியர் சொல்கிறார்:

  இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் பாஸ்…

  http://xavi.wordpress.com/2008/01/10/poo_mounam/

 58. நண்பரே, பின்னூட்டக் கவிதையையும் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. இருந்தாலும், மரபில் இன்னொன்று எழுதியுள்ளேன்-
  வலைப்பூவின் மெளனம் கலைத்து!

  http://ezuthovian.blogspot.com/2008/01/blog-post.html
  பார்த்துட்டு சொல்லுங்க!
  (முடிந்தால்,நீங்களே அதற்கு இங்கே இணைப்பு (ஹைப்பர்லிங்க்) கொடுத்துவிடுங்கள், எனக்குத் தெரியவில்லை!

 59. சேவியர் சொல்கிறார்:

  இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

  http://xavi.wordpress.com/2008/01/10/poo_mounam/

 60. சேவியர் சொல்கிறார்:

  இதோ இன்னோர் கவிதை :)

  இரண்டையும் படித்துப் பாருங்கள்

  http://xavi.wordpress.com/2008/01/10/secondpoem_pum/

 61. Raghavan சொல்கிறார்:

  நல்லதொரு தலைப்பு!

  என்னுடைய பங்களிப்பு இதோ இங்கே அலெக்ஸ்.

  http://kavithaikealungal.blogspot.com/2008/01/pookkalil-urangum-mounangal.html.

  உங்கள் வலைத்தளமும் நன்றாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.

  வாழ்த்துக்கள்!

  தோழமையுடன்,
  இராகவன் என்ற சரவணன் மு.

 62. ஷைலஜா சொல்கிறார்:

  அலெக்ஸ்!
  என் சிறு முயற்சி இதோ..
  ஷைலஜா

 63. நானும் கலந்துகொள்கிறேன் நண்பர்களே! என் கவிதை முயற்சி இதோ!
  http://npandian.blogspot.com/2008/01/httpcyrilalex.html

 64. இதையும் சேர்த்துக்கோங்கண்ணா :)

  http://blog.arutperungo.com/2008/01/blog-post_09.html

 65. எனது ஆக்கத்தையும் இத்துடன் இணைக்கின்றேன் நண்பரே.

  http://kalaiarasan.wordpress.com/2008/01/10/kalaimarthandam-280-kavithai-sleeping-silence-in-flowers/

 66. கீதா சொல்கிறார்:

  வணக்கம்

  இந்த மறுமொழியை நீங்கள் வெளியிட வேண்டாம்

  என்னுடைய பங்களிப்பான ஒரு கவிதை இங்கு இடம் பெறவில்லையே அதன் காரணம் மட்டும் தெரிவியுங்கள். ஒரு வேளை நீங்கள் அழைப்பு விடுத்திருந்தால் மட்டுமே பங்குபெற இயலுமா??

  அவ்வளவே

  நன்றி
  கீதா

 67. நவன் சொல்கிறார்:

  நானும் எனது கவிதை வலைப்பூவான பனித்துளிகள் இல் எனக்கான கவிதையைப் போட்டுட்டேன்.

  காலக்கெடு முடிஞ்சிருச்சா? :(

  சரி பரவாயில்லை. அதற்கான சுட்டி இங்கே –

  http://panithulligal.blogspot.com/2008/01/blog-post.html

 68. சேவியர் சொல்கிறார்:

  போட்டி அறிவிக்கிறது பெருசில்ல மாமே ..
  முடிவு அறிவிக்கிறது தான் …

 69. என்னாச்சு சிறில், இந்தப் பதிவ கண்டுக்குறதே இல்லை போல??

 70. Raghavan சொல்கிறார்:

  //என்னாச்சு சிறில், இந்தப் பதிவ கண்டுக்குறதே இல்லை போல??//

  ரிப்பீட்ட்டேய்.. நானும் பலதடவை வந்து பாத்தேனுங்ணா.. ஆனா ஏதும் சொல்லாமலேயே அப்பீட்டேய்….

 71. Cheena ( சீனா) சொல்கிறார்:

  நண்பரே !! 23 வது போட்டியாளர் இராகவன் என்ற சரவணன் – சுட்டி வேலை செய்ய வில்லை. கவனிக்கிறீர்களா

 72. Cheena ( சீனா) சொல்கிறார்:

  நண்பரே !! 23 வது போட்டியாளர் இராகவன் என்ற சரவணன் – சுட்டி வேலை செய்ய வில்லை. கவனிக்கிறீர்களா

 73. Raghavan சொல்கிறார்:

  நன்றி சீனா.. நானும் கவனித்தேன்.. கடைசியில் ஒரு ஒற்றுப்புள்ளி ஒட்டிக்கொண்டுள்ளது.

  காப்பி, பேஸ்ட் செய்யும் போது புள்ளியும் சேர்ந்து கொண்டு விட்டது என்று நினைக்கிறேன் :)

 74. Cheena ( சீனா) சொல்கிறார்:

  நன்றி ராகவன் தகவலுக்கு – தவறைச் சரி செய்யலாமே – தனி மடல் அனுப்புங்களேன்

 75. முடிவுகளை வரும் திங்கள் கிழமைக்குள் அறிவிக்க எண்ணியிருக்கிறேன். தாமதத்திற்கு வருந்துகிறேன்.

  ராகவனின் சுட்டி சரிசெய்யப்பட்டுள்ளது.

 76. Raghavan சொல்கிறார்:

  //முடிவுகளை வரும் திங்கள் கிழமைக்குள் அறிவிக்க எண்ணியிருக்கிறேன். //

  கலக்கல்..

  //ராகவனின் சுட்டி சரிசெய்யப்பட்டுள்ளது.//

  நன்றி :)

 77. Sathanga சொல்கிறார்:

  //4. கடைசி தேதி ஜனவரி 10, 2008. அதுக்கப்புறமும் எழுதலாம்… காசா பணமா?//

  அதானே ? இதோ என்னோட பதிவு.

  http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_18.html

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்