முதன் முதலாக வலைப்பதிவு புத்தகமாகிறது

Coverமுதன் முதலாக  வலைப்பதிவு ஒன்று அப்படியே புத்தக வடிவில் வெளிவருகிறது. இந்த வருட புத்தகக் கண்காட்சியில் அலைகள் பாறைகள் மணல் மேடுகள் வெளியாகி விற்பனைக்கு வருகிறது.

இரண்டு வருடம் நான் வலையில் எழுதி வருகிறேன் ஆனால் நான் எழுதிய ஒன்றைக் கூட என் வீட்டார் இதுவரை படித்ததில்லை. ஏனென்றால் வலை அவர்களுக்கு பரிச்சயமான தளம் அல்ல.

எழுத்து பரவலாவதற்கு அச்சு உரிய ஊடகம். ஆழி பதிப்பகத்தார் வலைப் பதிவுகளை புத்தகங்களாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வருடத்தில் முதல் முயற்சியாக மா. சிவகுமாரின் பொருளாதாரப் பதிவுகள் வெளி வர இருந்தன. பின்னர் நானும் இணைந்து கொண்டேன். மா.சி யின் தொகுப்பு வெளியாவது தாமதமாவதால் இப்போது என் புத்தகம் மட்டுமே வெளியாகிறது.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் முன்னுரையுடன், சக வலைப் பதிவாளர்கள் எழுதியிருக்கும் ‘பின்னூட்ட சைஸ்’ முன்னுரைகளோடும், முட்டத்தின் புகைப்படங்களோடும் அலைகள் பாறைகள் மணல்மேடுகள் இந்த வருட புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கிறது.

ஜனவரி 6ம் தேதி ஆழி தன் புத்தகத் தொகுப்பை வெளியிடுகிறது. இந்த வெளியீட்டு விழாவிற்குச் சென்று வலைப் பதிவர்கள் தங்களை பதிப்பகத்தாருக்கு அறிமுகப் படுத்திக் கொண்டு தங்கள் புத்தகத் திட்டங்களை தெரிவிக்கலாம். (தொடர்புக்கு செந்தில் 99401 47473 or aazhibooks@gmail.com )

புத்தக அறிமுக விழா விபரம்

நேரம்: 06-01-2008 ஞாயிறு மாலை 5:30

இடம்:
டான் போஸ்கோ ஹால்,
சிட்டாடல்(சிகா)
45, லேன்டர்ன்ஸ் ரோடு,
(ஈகா தியேட்டர் அருகில், டெய்லர்ஸ் சாலை திருப்பத்தில்)
கீழ்ப்பாக்கம், சென்னை

ஆழி வலைப் பதிவர்களின் எழுத்தை அச்சாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது.

என்னை எப்போதும் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அலைகளில் தோய்ந்த சில நினைவுகளை மையிட்டுப் பொறித்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இதில் சக வலைப்பதிவாளர்கள், வலை வாசகர்களின் பங்கு அபாரமானது. என் எழுத்துக்கு இடம் கொடுத்து வரும் திண்ணை, தமிழோவியம் இணையயைதழ் ஆசிரியர்களின் ஊக்கமும் முக்கியமானது. களம் அமைத்துத் தந்த திரட்டிகளின் பங்கு குறிப்பிடத் தக்கது.

நன்றியுடன் அனைவரையும் நினைவுகூறுகிறேன்.

புத்தகம் குறித்த விமர்சனங்களை வரவேற்கிறேன்.

 புத்தக வெளியீட்டு விழாவிற்கு அன்புடன் அழைக்கிறேன்.

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

invitation_with price
Hosted by eSnips

முழு அழைப்பிதழும் இங்கே

Popularity: 12% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....63 மறுமொழிகள் to “முதன் முதலாக வலைப்பதிவு புத்தகமாகிறது”

 1. சிறில்,
  மிக்க மகிழ்ச்சி.

  வாழ்த்துக்கள் !!!

 2. Kasi சொல்கிறார்:

  Best wishes, Cyril.

 3. வாழ்த்துக்கள் சிறில்.

 4. ஆகா, சும்மா கலக்கறீங்க போங்க! வாழ்த்துக்கள்! (என் வலைப்பதிவையும் யாராவது புத்தகமா போடுவாங்கன்னா சொல்லுங்க ;-) )

 5. தஞ்சாவூரான் சொல்கிறார்:

  Cyril,

  vaazththukkal….romba nalla vishayam!

 6. குழலி சொல்கிறார்:

  வாழ்த்துகள் சிறில்

 7. Vicky சொல்கிறார்:

  கலக்கறீங்க அலெக்ஸ்… வாழ்த்துக்கள் :)

 8. மாஹிர் சொல்கிறார்:

  மிக்க மகிழ்ச்சி…
  வாழ்த்துக்கள்…

  வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்…

 9. CVR சொல்கிறார்:

  வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி இது!
  வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :-)

 10. senshe சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ்… தமிழ் வலைப்பதிவர்களுக்கு மிக நல்ல தருணங்கள் பல வகைகளில் கூடி வருகின்றன.. விரைவில் புத்தக ஆசிரியராகவும் மாற இருக்கும் அண்ணன் மா.சி. அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  ஷார்ஜாவிலிருந்து

  சென்ஷி

 11. enRenRum anbudan BALA சொல்கிறார்:

  சிறில்,
  மிக்க மகிழ்ச்சி.

  வாழ்த்துக்கள் !!!

 12. Balaji சொல்கிறார்:

  சூப்பர் செய்தி. பாராட்டுகள். அடுத்த புத்தகத்திற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

 13. prakash சொல்கிறார்:

  அடி தூள்!!!!. கேக்கவே சந்தோஷமாக இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை நேரம் கிடைக்கும் பட்சத்தில் அவசியம் விழாவுக்குச் செல்கிறேன்.

 14. S.Prem Prakash சொல்கிறார்:

  Congrats…..good to integrate books and the web writings,
  this will initiate a new trend.

 15. PK Sivakumar சொல்கிறார்:

  சிறில், ஏற்கனவே எழுதியிருந்தது போல வாழ்த்துகள். மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் “முதன் முதலாக வலைப்பதிவு ஒன்று அப்படியே புத்தக வடிவில் வெளிவருகிறது.” என்ற வரியில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. வலைப்பதிவில் எழுதியவை ஏற்கனவே புத்தகமாக வந்திருக்கின்றன. என் கட்டுரைத் தொகுதிகூட வலைப்பதிவு கட்டுரைகளின் தொகுப்புதான். மொத்த வலைப்பதிவையும் புத்தகமாகப் போடுவது இது முதல்முறை என்று சொல்கிறீர்களா? மொத்தத்தையும் போடுவதற்கும் வலைப்பதிவிலிருந்து தேர்ந்தெடுத்துப் போடுவதற்கும் எனக்குப் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆதலால், இந்த “முதல்முதலாக” என்பதை எல்லாம் விமர்சகர்கள் சொல்லும்படி விட்டுவிட்டு, புத்தகமாக வெளிவருகிற தருணத்தைக் கொண்டாடுங்கள். அன்புடன், பி.கே. சிவகுமார்

 16. LLD சொல்கிறார்:

  கலக்கறீங்க.வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ

 17. இராம் சொல்கிறார்:

  சிறில்,

  மனமார்ந்த வாழ்த்துக்கள்…… :)

 18. விருபா சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் அலெக்ஸ்.

  முத்தக வெளியீட்டுத் தகவல் இங்கு பதியப்பட்டுள்ளது.

  உங்கள் புத்தகம் பற்றிய தகவல் எமது இன்றைய பதிவில் ஆறாவது புத்தகமாக உள்ளது. ஆனால் முட்டம் அட்டைப் படங்கள் முட்டிக்கொள்கின்றன. இன்று மாலை 6 மணிக்கு ஆழி பதிப்பகத்தார் தந்த படங்கள் இவை.

 19. Radha சொல்கிறார்:

  ரொம்ப சந்தோஷமா இருக்கு சிரில்…..வாழ்த்துக்கள்

 20. வாழ்த்துக்கள் சிறில்!

 21. வாழ்த்துகள் :))

 22. வெட்டிப்பயல் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் தல…

 23. பத்மா சொல்கிறார்:

  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சிறில்.

 24. பெத்தராயுடு சொல்கிறார்:

  மனமார்ந்த வாழ்த்துகள்!!!

 25. சிறில் அண்ணாச்சி, மனமார்ந்த வாழ்த்துக்கள்!
  வலைப்பதிவுலகில் இது போன்ற நிகழ்வுகள் தான் பல பதிவர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும்!
  அப்படிப் பார்த்தால் இது நம் அனைவருக்குமே மகிழ்ச்சியான செய்தி தான்!

  விழா நடக்கும் இடமான சிகா, எனக்கு மிகவும் பரிச்சயமான இடம்! தொன் போஸ்கோ பள்ளிக்கு ஆஸ்தான பப்ளிஷரே சிகா தான்! :-)

  //எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் முன்னுரையுடன்//
  சூப்பர்!

  //சக வலைப் பதிவாளர்கள் எழுதியிருக்கும் ‘பின்னூட்ட சைஸ்’ முன்னுரைகளோடும்//

  யாரு யாரு பின்னூட்டம்-னும் சொல்லுங்க அண்ணாச்சி! :-)

 26. மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

 27. மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

 28. மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. சகபதிவர் ஒருவரின் உழைப்பின் விளைவு என்று அறிந்து மகிழ்ச்சி. இன்னும் பல புத்தகங்கள் எழுத என்னுடைய வாழ்த்துகள்.

 29. malainaadaan சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்.

 30. Kappi சொல்கிறார்:

  vaazhthukkal cyril :)

 31. வாழ்த்துக்கள். புத்தக வெளியீட்டு விழாவில் நீங்களும் இருப்பீர்களா? :-))))

  அன்புடன்
  லக்கிலுக்

 32. மணியன் சொல்கிறார்:

  மிக்க மகிழ்ச்சியான செய்தியை இன்றுதான் பார்த்தேன். மேலும் பல படைப்புக்கள் அச்சில்வர மனமார்ந்த வாழ்த்துக்கள் !!

 33. பாச மலர் சொல்கிறார்:

  வாழ்த்துகள்…மேலும் புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

 34. Surveysan சொல்கிறார்:

  Hats off!

  Great job.

 35. வேதா சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் :)

 36. ramachandranusha சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்! ஆழி பதிப்பகம் வெளியிடும் முட்டம். பெயர் பொருத்தம் அருமை !
  நாவல் எந்தமட்டில் இருக்கிறது?

 37. இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சிறில்!!!!!!

 38. dharumi சொல்கிறார்:

  ஒரு சோம்பேறியின் (புரியுதுல்ல..?)
  வாழ்த்துக்கள்.

 39. M.K.Kumar சொல்கிறார்:

  வாழ்த்துகள்! மென்மேலும் பயணிக்க வாழ்த்துகிறேன்.

  அன்பன்
  எம்.கே.

 40. மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

 41. sridhar சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்

 42. சிறில்

  உங்களின் இந்தத் தொடரை வாசித்தபோதே நான் நூலுருவில் வரவேண்டிய சகல தகுதியையும் கொண்டிருக்கின்றது என்றே நினைத்தேன், நினைப்பு மெய்ப்பட்டது, வாழ்த்துக்கள்

 43. chanackyan சொல்கிறார்:

  சிறில் அண்ணாச்சி.. வலைப்பதிவு தனது அடுத்தக் கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது உங்கள் மூலமாக.. ‘முதல் மரியாதை’ பெறும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..

 44. […] முதன் முதலாக வலைப்பதிவு புத்தகமாகிற… […]

 45. நண்பரே,

  வாழ்த்துக்கள்.

 46. Mathangi சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ்

 47. manggai007 சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்…மகிழ்ச்சி

 48. […] முட்டம் – அலைகள் பாறைகள் மணல்மேடுகள்: சிறில் […]

 49. […] நீங்க ரெடியா என்கிறார் சிறில். […]

 50. […] இதில் முட்டம் என்ற நூல் சிறில் அலெக்ஸின் வலைப்பதிவுகளின் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றிய சிறில் அலெக்ஸின் பதிவு … […]

 51. இலவச ஈபுக் எப்போது ரிலிஸ் ஆகுது ?
  :)))))))

 52. Sivakasi Srinivasan சொல்கிறார்:

  கலக்கிபுட்டீங்க அலெக்ஸ் !!!!
  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  சிவகாசி சீனிவாசன்

 53. வாழ்த்துகள் சிறில். நீங்கள் மேலும் சிகரங்கள் தொட வேண்டும்.

 54. தென்றல் சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சிறில்!

  ஒரு கிறிஸ்மஸ் திருவிழாவுக்கு மற்றும் நண்பரின் தங்கை கல்யாணத்திற்கு முட்டம் வந்துள்ளேன்… அருமையான… மறக்கமுடியாத அனுபவங்கள்!

  அந்த அனுபவங்களை உங்கள் மூலம் படித்தபொழுது மீண்டும் முட்டம் செல்ல வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது.

 55. வாழ்த்துக்கள் சிறில்.

 56. சிறில்

  பாராட்டுகள். மேன்மேலும் பல மைல் கற்களைக் கடக்க வாழ்த்துகள்.

 57. Raghavan சொல்கிறார்:

  //கலக்கறீங்க.வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ//

  ரிப்பீட்ட்டேய்…. :)

 58. Cheena ( சீனா) சொல்கிறார்:

  நல்வாழ்த்துகள் நண்பரே – புத்தக வடிவில் வெளி வருவது பாராட்டத்தக்கது. பதிப்பகத்தாருக்கும் பாராட்டுகள்

 59. வாழ்த்துக்கள். :)

 60. வாழ்த்துக்கள். :)

 61. Prabhu சொல்கிறார்:

  அலைகள் பாறைகள் மணல்மேடுகள் நான் விரும்பி படித்த உங்கள் பதிவு, வாழ்த்துகள்.

 62. Kokilavani Karthikeyan சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்! இந்தியா சென்றவுடன் வாங்கி விடுகிறேன்!

 63. சக வலைப்பதிவனாக சந்தோஷமடைகின்றேன். வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்