முட்டம் புத்தகம் பதிவர்கள் பார்வையில்

புத்தகம் போட முடிவு செய்ததுமே முதலில் முடிவு செய்தது சக பதிவர்களின் கருத்தோடு அவர்களின் பதிவுக்கு இணைப்பு சேர்த்து புத்தகம் வர வேண்டும் என்பதுதான்.

அப்படி சில பதிவர்களிடம் கேட்ட போது ஆசிப், ஜோ, துளசி அக்கா ஆகியோர் அன்புடன் எழுதிய முன்னுரைகள் புத்தகத்தில் பதிவாகியுள்ளன. மற்ற சிலர் எழுதியவை விடுபட்டுப் போயின. இந்த தவறுக்கு முற்றிலும் பொறுப்பேற்று அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த பதிப்பு வந்தால் அதில் சேர்க்க எண்ணம்.

என்னை ஊக்குவிக்கும் நண்பர்களில் முதன்மையானவர் பாஸ்டன் பாலா . சில நேரங்களில் கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்து தள்ளிவிடுவார். அப்படி அவர் எழுதியது தமிழோவியத்தில் வந்துள்ளது.

தமிழோவியம் கணேஷ் சந்திரா எழுதிய முன்னுரை.

ஏய்.. ஏய்… கத்தலுக்கு நடுவில் ஓர் மென்மையான ‘அழகி’ வெளிவந்தது போல், தமிழ் வலைப்பதிவில் இருக்கும் துவேஷம், தனிநபர் தாக்குதல் மற்றும் சண்டைகளுக்கு நடுவில் மென்மையாய் மலர்ந்தது முட்டம் வலைப்பதிவு.

பாரதிராஜா 20 வருடங்களுக்கு முன்பு முட்டத்தின் அழகை படமாக்கினார், சிறில் பதிவாக்கினார்.

சிறிலின் எழுத்துக்களை சில மின்னிதழ்களிலும், போட்டிகளிலும் படித்திருக்கிறேன். சொல்ல வந்ததை சுருக்கமாகவும், நிறைவாகவும் எழுதக்கூடியவர். முட்டம் மக்களின் நடைமுறை வாழ்க்கை, ஊரின் இயற்கை அழகு மற்றும் அங்கே சொல்லப்படும் ‘கட்டுக்’ கதைகள் பற்றி எளிமையாய் விவரிக்கிறார். இவரது பேச்சில் இருக்கும் நாகரீகம் இவரது எழுத்துக்களிலும் உண்டு.

கணிணி பொறியாளராக முழு நேர பணி, இணையத்தில் கதை, கட்டுரைகள் எழுதி பழகி இப்போது இவரது எழுத்து அச்சில் புத்தகமாய் வர இருக்கிறது.
ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அதுதானே பேரின்பம் ! சிறிலுக்கு இது மேலும் தொடர வாழ்த்துக்கள்.

கணேஷ் சந்திரா
www.tamiloviam.com

நம்ம கோ. இராகவனின் முன்னுரை

அறிமுகப் படுத்துனா…தெரிஞ்சவங்க…சொந்தக்காரங்க… நண்பர்கள்னு அறிமுகப் படுத்துவாங்க. ஊர்ப்பாசம் உள்ளவங்க அவங்க ஊர்கள அறிமுகப்படுத்துவாங்க. நம்ம சிறில் அவரோட ஊரை எந்த அளவுக்கு ரசிச்சிருந்தாருன்னா …அந்த ஊரோட அலைகளையும்…அந்த அலைகள் மோதும் பாறைகளையும்… அந்தப் பாறைகள் உதிர்ந்த மணல்மேடுகளையும் அறிமுகப்படுத்துறாருங்க. படிக்கத் தொடங்கும் போது முட்டம் அவரோட ஊர்னு தோணும். படிச்சு முடிச்சப்புறமா அது நம்ம ஊர்னு தோணும். இதை விடச் சிறப்பா தன்னோட ஊரை யாரும் அறிமுகப்படுத்த முடியுமா என்ன!!!!

அன்புடன்
கோ. இராகவன்(ஜிரா

புத்தகத்தை படித்த பதிவரல்லலதவரின் கருத்து இங்கே.

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....9 மறுமொழிகள் to “முட்டம் புத்தகம் பதிவர்கள் பார்வையில்”

 1. கால்கரிசிவா சொல்கிறார்:

  உங்களின் முட்டம் புக் வெளிவந்துவிட்ட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

 2. ஜோ சொல்கிறார்:

  சிறில்,
  நீண்ட விடுமுறையிலிருந்ததால் இப்போது தான் அறிய முடிகிறது .என் மனம் நிறைந்த வாழ்த்துக்ஞ0் தாருங்கள்.

 3. raajaachandrasekar சொல்கிறார்:

  syril
  i bought your book.will write you my feedback.pls visit my poem site.regards.raajaachandrasekar

 4. test

 5. செ.ச.செந்தில்நாதன் சொல்கிறார்:

  சிறில் அலெக்சின் முட்டம் புத்தகத்தை வெளியிட்ட ஆழி பதிப்பகத்தின் பதிப்பாளர் என்கிற முறையில் அதில் நேர்ந்த விடுபடல்களுக்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எல்லாவற்றையும் அனுப்பினார்தான். கடைசிநேர அவசரத்தில் நான்தான் கோட்டைவிட்டுவிட்டேன். அடுத்தப் பதிப்பில் சேர்த்துக்கொள்ளலாம். நூல் வேண்டும் எனில் aazhibooks@gmail.com க்கு மடலிடுங்கள். நன்றி.

 6. s.balasubramani சொல்கிறார்:

  Dear cyril

  proceeding to kaniyakumari muttam by second week for technical studies on submerged structures at kadiapattinam area.
  intrested to gift your book to the people , whoever i am going to meet.

  Entire project is based on our remote senisng methods with the help of hypothis and ancient texts on your regions

  best wishes for your wonderful mission

  s.balasubramani
  Bhubaneswar Orissa
  Historical Links Research Foundation

 7. s.balasubramani சொல்கிறார்:

  Dear cyril

  proceeding to kaniyakumari muttam by second week for technical studies on submerged structures at kadiapattinam area.
  intrested to gift your book to the people , whoever i am going to meet at muttam area.

  Entire project is based on our remote senisng methods with the help of hypothis and ancient texts on your regions

  best wishes for your wonderful mission

  s.balasubramani
  Bhubaneswar Orissa
  Historical Links Research Foundation

 8. s.balasubramani சொல்கிறார்:

  Dear cyril

  proceeding to kaniyakumari muttam by second week for technical studies on submerged structures at kadiapattinam area.
  intrested to gift your book to the people , whoever i am going to meet at muttam area.

  Entire project is based on our remote senisng methods with the help of hypothis and ancient texts on your regions

  best wishes for your wonderful mission

  s.balasubramani
  Bhubaneswar Orissa
  Historical Links Research Foundation

 9. செ.ச.செந்தில்நாதன் சொல்கிறார்:

  Dear Balasubraman,

  Its very interesting. Shall I have your email id or phone number. I would like to talk to you. My id is zsenthil@gmail.com

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்