பாடல் பிறந்த கதை

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவராஜனின் ‘பாடல்’ தொகுப்பை வெகுவாக இரசித்தேன். அப்போதே அவர் மின்னஞ்சலுக்கு ஒரு மடலைப் போட்டு வைத்தேன். ‘பாடல் எழுதி கிழிக்க எங்கிட்ட வாங்க..வாங்க ..வாங்க’.

அப்புறமா என்னோட சொந்த கம்போசிஷன் ‘பூவானது மனம்’ அவருக்கு அனுப்பி வைத்தேன். பாராட்டினார்.

சில மாதங்கள் கழித்து track ENCLOSED என ஒரு மடல் வந்தது. கூடவே பாடலின் பின்னணி குறித்த ஒரு சில வார்த்தைகள்.

the song is about missing close friends in life.

time flies, as I moved away from home, I get old and move on with stages life, but often my mind thinks about old friends and they way we used to meet and talk, What a life it was, do i miss it ?

at the same time i love my family too, i cannot be without them, but with all this in my , i want to just spend another day back from my life with my close child hood friends.

ஏதோ நானே எனக்கு எழுதிக் கொள்ளும் ஒரு மடலைப் போல. ஊரை விட்டு வெளியில் செல்லும்போது நாம் விட்டுச் செல்பவையில் முக்கியமானவை நம் பால்ய நினைவுகள், முக்கியமானவர்கள் நம் நண்பர்கள். நம் நெருங்கிய உறவுகளோடு நமக்கு எப்படியும் தொடர்பு இருக்கும் ஆனால் நெருங்கிய நண்பர்களோடு நேரம் செலவழிப்பது ஊரில் மட்டுமே சாத்தியம்.

ஸ்ரீகாந்தின் மடலில் எனக்கான இன்ஸ்பிரேஷன் i want to just spend another day back from my life with my close child hood friends என்பதிலிருந்து கிடைத்தது.

மெலடியை கேட்டதும் வந்த வரிகள்…

தொடுத்து வைத்தப் பாடல் ஒன்றை
தொலைவிருந்து பாடுகின்றேன்
அடுத்து இல்லை நீயும் தோழா
நினைவுகளைத் தேடுகிறேன்

என் மனைவிக்கு பிடித்திருந்தது. மெட்டோடு ஒத்துப் போனது. எனக்கு கொஞ்சம் பழைய வார்த்தகளாய் தெரிந்தது. தொடர்ந்து சில வரிகள்.

நியாபகங்களில் வாழும்
நட்பிலே சுகம் தேடும்
ஆயிரம் கனாக் காலம்
ஆறுதல்கள் கூறிடும்

இது மெட்டோடு அப்படியே ஒத்துப் போகவில்லை ஆனால் மெட்டை கொஞ்சம் வளைத்தால் பாடலாம். ஏதோ கிரியேட்டிவ் லைசன்ஸ்னு சொல்வாங்களே அது போல மெட்டை கொஞ்சம் வளைத்திருந்தேன். இதோடு பல்லவி முடிந்தது.

முதல் சரணம் இப்படி எழுதினேன்.

திறந்தவெளி பள்ளிக்கூடம்
தினம் படித்த திண்ணைப்பாடம்
நினைவில் வந்து கதைகள் கூறும்
இளமை கோகிலம்

சேரன் சைக்கிளில் போய்க் கொண்டே பாடும் பாடல் வரி போல இருந்தது. எனக்கு பிடித்திருந்தது.

பசங்க விளையாடப் போனா. ஏண்டா இப்டி விளையாடி நேரத்த வீணடிக்கிற என திட்டாத அப்பா அம்மா இல்ல. ஆனால் இளமை முழுவதும் படித்து விட்டு பின்பு வேலைக்கு அலைந்து ரிட்டையர் ஆன பிறகுதான் நம்மால் வாழ்க்கையை அனுபவிக்க இயலும் என்கிற கருத்தோடு எனக்கு ஒப்பில்லை. இன்று பின்னோக்குகையில் நாம் விளையாடிய நேரங்கள்தான் சிறந்த நினைவுகளாயிருக்கும். எனவே அடுத்த வரி…

விளையாடிய நேரங்களெல்லாம்
வீணேயெனச் சொல்வது பொய்யே

அப்புறமா எதிர்பார்ப்புகளோடான ஒரு முடிவு.

ஒருநாள் வரலாம் தோழா
விளையாடிடலாம் தோழா

Nostalgiaவிற்கு கேள்விகளில் முடிப்பது நல்லாயிருக்கும் அதனால…

பிரிவில் சுகம் கனவுகள் தானா?

இத ஸ்ரீகாந்துக்கு அனுப்பி வச்சேன் அவரு ஆடிப் போயிருப்பாரு. இந்தக் காலத்துலேயும் எடுத்து, தொடுத்து, அடுத்துண்ணு பாட்டெழுதுறவன் இருக்கானா ‘டைனோசர்’.

‘சரணம் நல்லாயிருக்கு ஆனா பல்லவிய மாத்தணும்’னு மடல்.

ரெம்ப நேரம் யோசிக்க வச்சிட்டாரு. சேட்டில் உரையாடினோம். திடீர்னு வந்தது ஒரு புது பல்லவி.

தனித்திருக்கும் நேரம் எல்லாம்
இனித்திருக்கும் நியாபகங்கள்
மறக்கவில்லை நட்பின் ஈரம்
இளவயது நினைவலைகள்

‘அப்படி போடு அரிவாள’ ஸ்ரீகாந்த்.

‘:)’ நான்.

அப்புறம் என்ன எழுதுறது. வீட்டுக்கு வெளியே வந்தேன். குளிர் காலத்துல இலையெல்லாம் உதிர்த்திட்டு நிர்வாணமாய் ஒரு மரம் நின்னிட்டிருந்துச்சு (நான் இருப்பது சிகாகோவில்). என்னதான் இலையுதிர் காலம் குறித்து நம் இலக்கியங்களில், சினிமா பாட்டில் இருந்தாலும் அதை இத்தனை நேரடியாக பார்த்துணர்வது புதுமையான அனுபவம். எனக்கு அது தத்துவார்த்தமானதும் கூட.

ஒரு மரம் தான் வாழ வேண்டி தன் வாழ்வாதரமான இலைகளைக் களைகிறதென்பது சாதாரண விஷயமா? மீண்டும் துளிரும் எனும் நம்பிக்கையின் உச்ச கட்ட வெளிப்பாடு அது. வந்து விழுந்தது அடுத்த வரிகள்.

இலைகள் உதிரும் ஒரு பருவம்
கடந்தபின் மீண்டும் மலரும்
இலை உதிரும் காலம் எல்லாம்
நினைவுகளின் ஊர்வலங்கள்
இளவயதின் நியாபகங்கள்.

or

உலா போகும் நியாபகங்கள்
இளவயதின் நினைவலைகள்

ஸ்ரீகாந்திற்கு முழுதும் பிடிபடவில்லை. விளக்கினேன், ‘அதாவது.. நண்பர்கள் இல்லாத காலம் இலை உதிர் காலம். எப்படி இலை மீண்டும் துளிரும் என நம்பிக்கை மரத்துக்கு இருக்கோ அதுபோல நண்பர்களை சந்திப்பேன் எனும் நம்பிக்கை….’

‘அதென்ன இலை உதிரும் காலமெல்லாம் …’

‘in the meanwhile.. அப்படி இலை/நண்பர்களை உதிர்த்து நான் நிற்கும் போதெல்லாம் நினைவுகளின் ஊர்வலங்கள்.’

புது பல்லவி தயார்.

‘திறந்தவெளி பள்ளிக்கூடம்
தினம் படித்த திண்ணைப்பாடம் – ரெம்ப க்ளீஷே’ ஸ்ரீகாந்த்.

நான் இந்தப் பாடலில் இதுவரை எழுதியதிலேயே சிறப்பான வரிகள்னு நினைத்திருந்தேன். ஆனால் அவர் சுட்டிய போது அது உண்மை என்றே பட்டது. கொஞ்சம் பழைய சாயல். கொஞ்சமில்ல நிறைய.

இன்னொரு விஷயம் ஸ்ரீகாந்த் சொன்னார். ‘சரணத்தின் முதல் வரில நாம முழு பாடல்ல சொல்ல வர்ற கருத்தையும் ஆணி அடிக்கிறமாதிரி சொல்லிரணும்’.

இங்க நான் ரெம்பவே தடுமாறிட்டேன். இந்த வரிகள் சூப்பர் என நானே முடிவு செய்ததால புது வரிகளை யோசிக்கவே முடியல. ரெம்ப கஷ்டப் பட்டு மாத்தினேன்.

பதினாறில் பழகிய காலம்
அழியாது தொலைவில் சென்றாலும்
நினைவில் வந்து கதைகள் கூறும்
இளமை கோகிலம்

ம் Approved. அடுத்த வரிகளில் எந்த மாற்றமும் இல்லை.

அடுத்த சோதனை இரண்டாம் சரணம். என் நண்பர்களை நினைத்துக் கொண்டேன்.

வாழ்க்கை தடுமாறிடும் பயணம்
வழிகள் சொல்ல நண்பர்கள் வேண்டும்
புரிதல் கொண்ட புன்னகை போதும்
காலம் ஓடிடும் or கால்கள் ஓடிடும்

‘அதென்ன புரிதல் கொண்ட புன்னகை?’ ஸ்ரீகாந்த்

‘Smile with Understanding’ நான். ஆங்கிலத்தில் அப்படி ஒன்று இருக்குதாண்ணே தெரியல.

ஸ்ரீகாந்த் மடலிலிருந்து ஒரு வரி at the same time i love my family too, i cannot be without them… இதை முன்வைத்து அடுத்த வரிகள்.

உறவாயிரம் சேர்ந்த போதும்
உரையாடிட நண்பர்கள் வேண்டும்

அப்புறமா முதல் சரணத்தைப் போலவே..

ஒரு நாள் வரலாம் அன்றும்
உரையாடிடலாம் மீண்டும்.
பிரிவில் சுகம் கனவுகள் தானா?

‘ரிப்பீட் ஆகுதே.’ ஸ்ரீகாந்த்

‘வயதாகிடலாம் நட்பின்
குணம் மாறிடுமா மீண்டும்
உலகை மறந்து இரசித்திருப்போமா?’அல்லது

இளமை ஓர் தவம் நட்பின்
இனிமையே வரம் (or) இனிமை ஓர் வரம் – மீண்டும்
உலகை மறந்து இரசித்திருப்போமா? (நிலமை (கவலை) மறந்து இரசித்திருப்போமா?).’
நான்

அப்படா பாட்டு முடிஞ்சு போச்சு. அப்புறம் என்ன நடந்தது என்பதை பாடல் வெளியிடும்போது நீங்களே கேட்டுக்கலாம்.

இதிலிருந்து நான் கற்றுக்கொண்டதென்ன? ஒரு பாடலை சும்மா வெறும் வார்த்தைகளைக் கொண்டு நிரப்பிவிட முடியாது. பாடல் எழுதுவது கவிதை எழுதுவதை விட சிரமமானது.

துண்டு துண்டா போட்ட பாடலின் முழு லிரிக்ஸ் கீழே.

தனித்திருக்கும் நேரம் எல்லாம்
இனித்திருக்கும் நியாபகங்கள்
மறக்கவில்லை நட்பின் ஈரம்
இளவயது நினைவலைகள்

இலைகள் உதிரும் ஒரு பருவம்
கடந்தபின் மீண்டும் மலரும்
இலை உதிரும் காலம் எல்லாம்
நினைவுகளின் ஊர்வலங்கள்
இளவயதின் நியாபகங்கள்.

1.
பதினாறில் பழகிய காலம்
அழியாது தொலைவில் சென்றாலும்
நினைவில் வந்து கதைகள் கூறும்
இளமை கோகிலம்

விளையாடிய நேரங்களெல்லாம்
வீணேயெனச் சொல்வது பொய்யே
ஒருநாள் வரலாம் அன்றும்
விளையாடிடலாம் மீண்டும்
பிரிவில் சுகம் கனவுகள் தானா?

2.
வாழ்க்கை தடுமாறிடும் பயணம்
வழிகள் சொல்ல நண்பர்கள் வேண்டும்
புரிதல் கொண்ட புன்னகை போதும்
கால்கள் ஓடிடும்

உறவாயிரம் சேர்ந்த போதும்
உரையாடிட நண்பர்கள் வேண்டும்
வயதாகிடலாம் நட்பின்
குணம் மாறிடுமா மீண்டும்
உலகை மறந்து இரசித்திருப்போமா?

==========

யான் பெற்ற இன்பம் பெற இங்கே செல்லவும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Popularity: 11% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....14 மறுமொழிகள் to “பாடல் பிறந்த கதை”

 1. Surveysan சொல்கிறார்:

  beauty.
  இன்றுமுதல் நீவீர் கவிக்கோ.சிறில் என்று அழைக்கப்படுவீராக. :)

  பி.கு:
  எனக்கு பிடிக்காத ஒரே வரி
  “இளமை கோகிலம்”

  மத்ததெல்லாம் நல்லா வந்திருக்கு.

  தொடர்ந்து கலக்கவும்.

 2. நல்லா இருக்கு சிறில். ஆமா, இசைவடிவம் எங்கே?

 3. சர்வே,
  நன்றி.

  அதென்ன புலிக்கேசிக்கு வழங்குவது போல பட்டப் பெயர்களை வாறி வாறி வழங்குறீங்க.

  //பி.கு:
  எனக்கு பிடிக்காத ஒரே வரி
  “இளமை கோகிலம்”//

  எனக்கும் ஸ்ரீகாந்துக்கும் இது ரெம்ப பிடித்திருந்தது. மெட்டோடு அதிகம் ஒட்டிப்போன வரி.

 4. சேது,
  இசை வடிவம் விரைவில் வெளி வரும். அப்ப இன்னொரு பதிவு போடுவோம்ல.

  :)

 5. இளா சொல்கிறார்:

  எனக்கு இலையுதிர் காலம் பற்றி எழுதியிருக்கும் வரிகள் பிடிச்சு இருக்குங்க..

 6. நன்றி இளா. எனக்கும் பிடித்திருந்தது.

 7. Sridhar Narayanan சொல்கிறார்:

  வாவ். பாடலும் அதை பதிவு செய்த விதமும் அருமை. :-)

  நீங்கள் சிகாகோவா? நான் அங்கே சிறிது காலம் இருந்தேன். Schaumberg பக்கம் Elk Grove பக்கம். முன்னமே தெரிந்திருந்தால் தொலைபேசியிருந்திருக்கலாம் :-)

 8. நன்றி ஸ்ரீதர்,
  அடுத்த முறை இங்க வந்தால் சொல்லுங்க.

 9. Balaji சொல்கிறார்:

  கலக்கல்!!!

 10. […] பாடல் பிறந்த கதை – முந்தையப் பதிவு […]

 11. dharumi சொல்கிறார்:

  எம்புட்டு திறமையைத்தான் உள்ள வச்சிருக்கீங்க’பா! பார்க்க பார்க்க, படிக்க படிக்க ஆச்சரியமா இருக்கே..

  ரொம்ப சந்தோஷமுங்க.

 12. நன்றி தருமி சார்,
  கொஞ்சம் தைரியத்தோட நம்மால முடியும் என முயன்று பார்க்க வேண்டியதுதான். முயற்சி செய்யலைண்ணா நம்மால முடியுமா முடியாதான்ணே தெரியாமப் போயிடலாம்.

  திறந்த மனதுடன், தைரியத்தோடு முயல்வதுதான் ‘திறமையின்’ ரகசியம். :)

 13. ஆகா… ஒரு கவிஞன் உதயமாகிறான்… :) மரியாதையில்லாம றான்னு சொன்னதுக்குக் கோவிச்சுக்கிறாதீங்க :) இதெல்லாம் கவிதைல ஜகஜம்.

  ஒரு பாடலை உருவாக்குவது என்பது மிகக் கடினம். அதைச் சிறந்த வகையில் உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. பாடல்ல அது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்லத் தோணலை. ஏன்னா பாட்டு எழுதுறதே ஒரு முயற்சி. அதப் பாராட்டுறதுதான் சரின்னு தோணுது.

 14. ஜிரா,
  நன்றி. பின்னூட்டங்களில் வ்எறும் பாராட்ட மட்டும் சொல்லிட்டுப் போனா எப்டி. என்னத் தோணுதோ அதச் சொல்லிடணும். அதுவும் நமக்குள்ள இதெல்லாம்:)
  ச்சும்மா போட்டுத்தாக்குங்க.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்