நச் கவிதைப் போட்டி முடிவு

சர்வேசன் கதையெழுதச் சொன்னார், நாம் கவிதை எழுதச் சொல்வோம் எனும் எண்ணத்தில் நச் கவிதை போட்டி அறிவித்திருந்தேன். ஆனால் 27 தரமான கவிதைகள் வந்து சேரும் என நினைக்கவேயில்லை.

பூக்களில் உறங்கும் மௌனங்கள் நல்ல தலைப்பாகப் பட்டது. இதை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு மக்கள் என்ன சிந்திக்கிரார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் இருந்தது. தனிமை, ஈழம், காதல், கைவிடப் பட்ட குழந்தைகள், முதிர் கன்னிகள் என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல சிந்தனைகளை கவிஞர்கள் அழகாக வெளிக் கொண்டு வந்துள்ளனர்.

எல்லா கவிதைகளிலும் ஏதேனும் புதுமை இருந்தது. நிலவு, பூக்கள் எல்லாம் நாம் பழகிப் போன உவமைகள். இருப்பினும் நம் கவிகள் புதிய பல கோணங்களில் கவிதைகளை எழுதியிருபது சிறப்பு.

இணையக் கவிகள் இப்படி (வயிற்றை) கலக்கிவிடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் போட்டியாளர்களிடமே முடிவை விட்டுவிடலாமென நினைத்தேன்.

ரெம்ப கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்த கவிதைகள்
மிகச் சிறந்தது(என நான் தேர்ந்தெடுத்தது): கண்மணி
Close second: அருட்பெருங்கோ, இராகவன் என்ற சரவணன் மு., PKS, சேவியர், VSK

கண்மணிக்கு மட்டும் பரிசு உண்டு. எல்லா கவிதைகளும் சிறப்பாயிருந்தன. வெறும் பேச்சுக்காக சொல்லவில்லை. அவற்றை படித்து மதிப்பிட ரெம்ப கடினமாயிருந்தது.

வாழ்த்துக்கள்.

கண்மணியின் கவிதை

பென்சில் கிறுக்கல் இல்லாத
புது வெள்ளைச் சுவர்கள்

கிழித்துப் போடப்படாத
நோட்டின் பக்கங்கள்

சிதறிக் கிடக்காத
விளையாட்டுப் பொருட்கள்

கலைத்துப் போடப்படாத
அலமாரி புத்தகங்கள்

கசக்கி எறியப்படாத
காகிதக் கப்பல்கள்

கால் உடையாத
பிளாஸ்டிக் நாற்காலி

மூக்கு நசுங்காத
கரடி பொம்மை

ரிப்பேர் ஆகாத
டி.வி.ரிமோட்

சொல்லாமல் சொல்லியது

பகிரப்படாத தனிமையின் வேதனையை !
புதிரான வாழ்வின் நிஜங்களை !!
பூக்களில் உறங்கும் மௌனங்களை !!!

Popularity: 9% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....15 மறுமொழிகள் to “நச் கவிதைப் போட்டி முடிவு”

 1. அருமையான தலைப்பொன்றைக் கொடுத்துப் பலரை எழுத வைத்து ஒரு அழகான கவிப்போட்டியை உருவாக்கியமைக்கு நன்றி.

  போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

 2. சேவியர் சொல்கிறார்:

  அப்பாடா… ஒரு வழியா முடிவை சொல்லிட்டீங்க. வெற்றி பெற்ற கண்மணிக்கு வாழ்த்துக்கள்.

 3. வெற்றி பெற்ற கண்மணிக்கு வாழ்த்துக்கள் :)

 4. Cheena ( சீனா) சொல்கிறார்:

  வெற்றி பெற்ற கண்மணிக்கு இதயங்கனிந்த நல் வாழ்த்துகள்

 5. கண்மணி சொல்கிறார்:

  நன்றி அலெக்ஸ் சார்.

  என்னால் நம்ப முடியலை.நிஜமா எனக்கு கவிதை எழுதத் தெரியாது.

  வார்த்தை ஜாலங்களும் சொல்லாடல்களும் தமிழின் அழகும் சேர்த்து ரசிக்கும்படியான கவிதையை பலர் எழுதும் போது மனசில் பட்டது அனுபவித்தது மட்டுமே எனக்குத் தெரிந்த மொழியில் கவிதை என்ற பேரில் என் வலைப் பதிவில் தந்து கொண்டிருந்தேன்.
  இதுவும் ஒரு உணரப் பட்ட வலி.பொதுவாக இப்படியொரு தனிமையை அனுபவிப்பர்களின் மனநிலையைத்தான் எளிய வார்த்தைகளில் தந்திருந்தேன்.கற்பனைகளின் அழகைவிட நிஜங்களின் நிதர்சனம் நன்கு உணரப் படும் என்பதே என் கவிதையின் வெற்றி..

  அனைவருக்கும் நன்றி.

  [அலெக்ஸ் சார்…..என்னை வச்சி காமெடி கீமடி பண்ணலையே அவ்வ்வ்வ்]

 6. சீனு சொல்கிறார்:

  அந்த வேற்றி பெற்ற கவிதையையாவது இங்கே போடலாமில்ல. (எங்க ஆபீசுல எல்லாம் நாங்க ஒழுங்கா வேலை பாக்கனுமின்னு blogspot.com-கு பீஸ் புடுங்கிட்டாங்க…)

 7. தென்றல் சொல்கிறார்:

  கண்மணிக்கு வாழ்த்துக்கள்.

 8. கண்மணியின் கவிதை நன்றாக இருக்கிறது.
  ஆங்கில வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

  நிலாரசிகனின் கவிதையும் பரிசுக்கான தகுதியுடன் இருந்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

  மற்ற நண்பர்கள் பலரின் கவிதை முயற்சிக்கு வாழ்த்துகள். சிறப்பாக முயற்சி செய்து எழுதியிருந்தார்கள்.

  இந்த போட்டியை நடத்தி பல கவிஞர்களை வெளிக்கொணர்ந்த நண்பர் சிறிலுக்கு பாராட்டுகள்.

 9. Surveysan சொல்கிறார்:

  mudinju pochaa? adadaa.
  room pottu yosichu ezhudhi anuppalaamnu nenachirundhen ;)

  congrats Kanmani!

 10. வாழ்த்துக்கள் கண்மணி

 11. கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும், பரிசு பெற்ற கண்மணிக்கும் வாழ்த்துக்கள்!

 12. கண்மணிக்கு எனது இனிய வாழ்த்துக்கள்…!

 13. வேதா சொல்கிறார்:

  முடிவு அறிவித்ததே இன்று தான் தெரிய வந்தது வெற்றி பெற்ற கண்மணி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் :)

 14. வெற்றி பெற்ற கண்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 15. கவிதை பிரியன் சொல்கிறார்:

  உங்கள் தளத்தை பார்வையிடும் போது இன்னொரு தளத்தையும் பார்வையிட நேரிட்டது…. அதிலும் “கவிதையின் வெற்றியும் போலி சாமியாரும்….” என்ற தலைப்பில் ஒரு ஆகம்… என்னை கிறங்கவைத்தது.

  அதை உங்கள் பார்வைக்கு தருகிறேன்
  http://jawid-raiz.blogspot.com/

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்