தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும்

இது ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையல்ல என்பதை முதலில் குறிப்பிட்டுவிடுகிறேன்.

ஜாதி அமைப்பு இந்திய சமூகவியலின் ஒரு கெட்ட அடையாளமாகத் தோன்றுகிறது. இந்து மத மூலங்களிலிருந்து தோன்றினாலும் இன்று ஜாதி என்பது ஒரு சமூகம் சார்ந்த அமைப்பாகத்தான் இருக்கிறது. இந்துக்கள் மட்டும்தான் ஜாதி அமைப்பை பின்பற்றுகிறார்கள் என்பது உண்மையல்ல.

தமிழ் கிறித்துவர்கள் சாதீய அமைப்புகளுக்குட்பட்டே செயல்படுகிரார்கள். சாதாரண கிறித்துவர் முதல் கிறித்துவ மேலாண்மை அமைப்புகளும் ஜாதி அடிப்படையிலே நடைபெறுகின்றன.

கத்தோலிக்க கிறித்துவர்களின் கடைசி பிரதிநித்துவ குழுமம் ‘பங்கு’ என அழைக்கப்படுகிறது. ஒரு ஊரின் அல்லது சில சிறிய ஊர்களுக்குப் பொதுவான ஒரு கோவிலை மையமாக வைத்து அங்கு வாழும் கிறித்துவ மக்களின் பிரதிநிதிகள் சிலரோடு, அந்தக் கோவிலின் தலமை பாதிரியாரின் தலமையில் இயங்குவது ஒரு ‘பங்கு'(Parish).

பல பங்குகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு மறைமாவட்டம்(Diocese). சாதி அடிப்படையில், அண்மையில், சில மறைமாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கோட்டாற்று மறைமாவட்டம் மொத்த கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள
பங்குகளின் கூட்டமைப்பாக இருந்து வந்தது . நாடார்கள் அதிகமான பகுதிகளையும் கடற்கரை ஊர்களில் வாழும் பரவர், முக்குவர் எனும் மீனவர்களின் இனங்களையும் பிரித்து இரு மறைமாவட்டங்கள் உருவாக்கப்படுள்ளன. இதுபோலவே தூத்துக்குடியிலும் பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாதிரியார்கள்கூட தங்களுக்குள்ளே சாதி வேற்றுமை பாரட்டுவதாக பல செய்திகள் வந்துள்ளன. தங்களுக்குள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போது தலீத்துகளுக்கோ பிற சிறுபான்மை இனம் சார்ந்த பாதிரியார்களுக்கோ உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பது உண்மை.

இதையெல்லாம் எதிர்த்துக் கேட்பவர்கள் பல விதமான தொல்லைகளுக்கும் மேலிருப்பவர்களின் வெறுப்புக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

இதுபற்றி ரோமுக்கு பல முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன இருப்பினும் வழக்கம்போல ரோம் தன் பாதிரிமார்கள் எல்லோரையும் நல்லவர்கள் என்றே நம்பிக்கொண்டிருக்கிறது.

வேற்றுசாதியில் கிறித்துவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. இது நிச்சயம் மதம் சார்ந்த கொள்கை இல்லை, முற்றிலும் சமூக உளவியல் சார்ந்த முடிவு என்றாலும் இத்தகைய மனப்பாங்கை நீக்க கத்தோலிக்க குருமார்களும் மதமும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.

பல சமூகவியல் மாற்றங்களை கிறித்துவ மதம், கிறித்துவர்களிடத்தில் கொண்டுவந்துள்ளது என்பதும் அதற்கான பலமும் அமைப்பும் முற்றிலும் அதற்கு உள்ளது என்பதும் உண்மை. இருப்பினும் சாதி அமைப்புகளை எதிர்க்காமல் அவற்றை தத்தம் உபயோகத்துக்குள்ளாக்குகிறார்கள் கிறீத்துவர்களும், குருக்களும்.

கோவில்களில் தனித்தனியாக சாதிகளுக்கு இடம் ஒதுக்கும் வழக்கம் இன்னும் சில பங்குகளில் இருக்கிறது. இதில் சில சாதிக்காரர்களுக்கு இருக்கை வசதியும் செய்துதரப்படுகிறதாம்.

‘சாதி கிறித்துவர்கள்’ எனும் ஒரு பதம் இருப்பதே எனக்கு ஆச்சரியமாகப் படுகிறது.

‘விரியன் பாம்பு குட்டிகளே’ என இயேசு அன்று யூத மத தலைவர்களை திட்டினார்,’கடவுளின் கோவிலை வியாபாரக் கூடாரமாக்காதீர்கள்’ என்று சாட்டை கொண்டு கோவிலில் கூடியிருந்த வியாபாரிகளை விரட்டினார். இன்று இயேசு வந்தால் தன் பெயரில் பணம் சம்பாதிதுக் கொண்டும், மக்களை துண்டுபோட்டுக்கொண்டுமிருக்கும் சிலரை என்ன செய்வாரோ.

இயேசுவுக்குத்தான் வெளிச்சம்.

Popularity: 8% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....34 மறுமொழிகள் to “தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும்”

 1. ஜோ / Joe சொல்கிறார்:

  //இரு மறைமாவட்டங்கள் உருவாக்கப்படுள்ளன. //
  சிறில்,
  பேச்சு தானே இருந்தது..உருவாக்கப்பட்டு விட்டனவா?

 2. ஜோ / Joe சொல்கிறார்:

  //இன்று இயேசு வந்தால் தன் பெயரில் பணம் சம்பாதிதுக் கொண்டும், மக்களை துண்டுபோட்டுக்கொண்டுமிருக்கும் சிலரை என்ன செய்வாரோ//
  “வெளிவேடக்காரர்களே! உங்களுக்கு ஐயோ கேடு”-ன்னு அப்போ சொன்னதை திருப்பி சொல்லியிருப்பார்.

 3. திரு சொல்கிறார்:

  //சிறில்,
  பேச்சு தானே இருந்தது..உருவாக்கப்பட்டு விட்டனவா?//

  உருவாக்குவதற்கான எல்லா அடித்தள கட்டமைப்புகளும் அமைத்தாயிற்று என்று கேள்வி. இனி வாடிகனிலிருந்து இறுதி உத்தரவு மட்டும் வரவேண்டும். சாதி என்ற சமூக அவலத்தை பூசி புரள்கிறதுகளை என்னவென்று சொல்ல? ம்…ம்… மதங்களால் சாதி அமைப்பை மாற்ற முடியாது என்பதே உண்மை. அதை தான் தந்தை பெரியார் வலியுறுத்தினார்.

 4. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜோ,
  ‘உருவாக்கப்பட்டுள்ளன’ என்பது தவறான தகவல்தான். திரு சொல்வது போல எல்லா முயற்சிகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

  இதை நம் மக்கள் கூட எதிர்ப்பதாக தெரியவில்லை அது இன்னும் சங்கடம்.

  திரு,தகவலுக்கு நன்றி

 5. Thangamani சொல்கிறார்:

  சிறில்,

  சாதி, கிறிஸ்துவ சமூகத்தில் இருப்பதற்கும், கிறித்துவத்தில் இருப்பதற்கும் ஆழமான வேறுபாடு இருக்கிறது. மதச் சம்மதமில்லாத சமூக விரோதங்களுக்கு எதிராக சமூக மாற்றங்களை ஒரிரு தலைமுறைக்குள் உண்டாக்கிவிடவிடமுடியும். அதை மேற்கில் நான் காணுகிறோம். ஆனால் இந்து சமூகத்தில் சாதி சாஸ்திர அங்கீகாரம் கொண்டது மட்டுமல்லாமல் அதனால் பாதுகாக்கப்படுவதும் கூட. அத்னால் தான் 2000 வருடங்களாக சாதி இருக்கமுடிகிறது; அந்த சாஅஸ்திரங்களை கைவிட, தலைமுழுக மதத் தலைவர்கள் தயாராய் இல்லை என்பதுதான் பிரச்சனை.

 6. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  //தலைமுழுக மதத் தலைவர்கள் தயாராய் இல்லை என்பதுதான் பிரச்சனை. //

  இதேதான் கிறித்துவத்திலும்.

 7. வசந்தன்(Vasanthan) சொல்கிறார்:

  நல்ல பதிவு.
  ஈழத்திலும் கத்தோலிக்கத்தில் அடிமட்டப் பங்கில் சாதிப்பாகுபாடு கருதப்படுகிறது.
  பொதுவாக பங்குகள் கிராமத்தைக் கருத்திற்கொண்டே பிரிபடுகின்றன. ஒரு கிராமத்தில் சாதிக்கொரு கோயில் வந்துவிடும். ஆனால் எல்லாம் சேர்த்து ஒரு பங்குதான். ஒரே குருவானவர்தான்.
  சுழற்சி முறையில் திருப்பலிகள் நடைபெறும்.
  எனது இப்பதிவில் இதுபற்றி எழுதியிருக்கிறேன்.
  இன்று பிறப்பாலோ, தொழிலாலோ சாதியை இனங்காண முடியாத சந்தர்ப்பத்திலும் மதம்மூலமே சாதி இன்னும் வீச்சோடு பின்பற்றப்படுகிறது. ஒரு குழந்தைக்கு இவர் இன்ன சாதியென்று சொல்லிக்கொடுக்கப்படுவது மதம் மூலம்தான். “இன்ன கோயிலைச் சேர்ந்தவர்கள் இன்ன சாதி” என்றுதான் சொல்லித்தரப்படுகின்றனவே அன்றி, இன்ன தொழில் செய்பவர்கள் என்று சொல்லித்தர முடியாது. இது 15 வருடங்களின் முன் எனக்குச் சாதிகள் சொல்லித்தரப்பட்ட போதே வந்துவிட்டது. எனவேதான் மதங்களைக் கட்டுப்படுத்துவதையோ, சீர்படுத்துவதையோ (இன்னும் மிஞ்சிப்போனால் ஒழித்துக்கட்டுவதையோ) சிந்திக்காமல் சாதியொழிப்புப்பற்றிச் சிந்திக்க முடியாதென்பது என் கருத்து.

  மற்றும்படி சாதிக் கிருத்தவர்கள் என்ற பதமோ, குறிப்பிட்டோருக்கு இருக்கையொதுக்கும் வழக்கமோ நான் அங்கே கண்டதில்லை. கோயில்களைப் பொதுவாக்காமல் இருக்கும்வரைக்கும் கருத்தளவில் எந்த மாற்றம் வந்தாலும் சாதி குறித்த பார்வை இருந்துகொண்டேதான் இருக்கும். இப்போதுள்ள நிலையில் மேலாதிக்கங்களை நிறுத்தினாலே போதுமானதென்ற நிலைதான். அது பெருமளவு சாத்தியப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இவ்விடயத்தில் பங்குத் தந்தையரால் செய்யக்கூடிவை எவையுமில்லையென்றே நினைக்கிறேன். ஏனெனில் இது சமூகம் சார்ந்த சிக்கல். சிலர் வரையறைகளை மீறிச் செயற்பட்டுமிருக்கிறார்கள். என் கிராமத்திலிருந்த பங்குத்தந்தையின் 25 ஆவது யூபிலி வந்தது. சிறப்பாகக் கொண்டாடுவதாக ஏற்பாடு. ஆனால் பங்கின் முதன்மைக் கோயிலில்தான் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும். அந்தக் கோயிலில் பிற கோயிலைச் சேர்ந்தவர்கள் பூசைக்கு உதவவோ, திருப்பலிப் பாடகர் குழாமிற் பங்கேற்கவோ முடியாது. ஆனால் அக்குருவானவர் 3 கோயில்களையும் சேர்ந்தவர்களால் இத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென்று சொன்னார். உடனே சலசலப்பு. அப்படிச் செய்யமுடியாதென்று பெரும்பான்மை சொல்லிவிட்டது. அப்படியானால் இந்த யூபிலி தேவையில்லை என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார் பங்குத்தந்தை. பின் சில இழுத்தடிப்புக்களின் பின் 3 கோயிலையும் சேர்ந்த மக்களும் சேர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்கள். யாழ் மறைமாவட்டத்தில் இப்படி நடப்பது முதல்முறையென்று பேசிக்கொண்டார்கள். அது நடந்து சில நாட்களிலேயே ஊரை விட்டு இடம்பெயர வேண்டிவந்துவிட்டது.

  நிற்க, மதத்தலைவர்களைக் குற்றம் சொல்கிறீர்கள். ஆனால் அம்மதத்தலைவர்கள் யாரென்று அறிய ஆவல். என்னைப்பொறுத்தவரை வடக்குக் கிழக்கில் மேல்மட்டத்தைவிட கீழ்மட்டம் மேம்பட்டதும் ஒப்பீட்டளவில் முற்போக்கானதும்கூட. நான் சொல்வது மறைமாவட்டத்துக்குட்பட்ட கீழ்மட்டம். சகட்டுமேனிக்கு வத்திக்கானை பின்பற்றாமல் யதார்த்தமாகவும் விமர்சனப்பாங்கோடும் அணுகுவதாகவே என் கணிப்பு. கொழும்புக் கத்தோலிக்கத்துக்கும் வன்னிக் கத்தோலிக்கத்துக்குமுள்ள வித்தியாசம் என்று இதை எடுத்துக்கொள்ளலாம். பல நேரங்களில் வத்திக்கான் மீது விசனத்துடனும் நம்பிக்கையின்மையுடனும் அது இயங்குகிறது. பல குருவானவர்கள் விடுதலைப் போராட்டத்துடன் தம்மை நேரடியாகச் சம்பந்தப்படுத்தியுள்ளார்கள். சில குருவானவர்கள் சிறிலங்கா அரச படைகளாற் கொல்லப்பட்டுள்ளார்கள். (மன்னார் பஸ்தியாம்பிள்ளை அடிகளார்.) சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் அவர்களைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. (சிங்கராயர் அடிகளார்). மக்களுக்கான ஆயுதப்பயிற்சியின் தேவை பற்றியும், மக்கள் பங்களிப்புப் பற்றியும் அவர்கள் தெளிவான பார்வை கொண்டிருந்தார்கள். மக்களைத் தெளிவுபடுத்தியதோடு தாமே முன்மாதிரியாகச் செயற்பட்டார்கள். மேல் மட்டத்திலிருந்து வந்த அழுத்தங்களையும் மீறி அவர்கள் செயலாற்றுகிறார்கள். மக்களுக்கு எது தேவையோ அதைச் செய்கிறார்கள். இங்கே புலிகளுக்குச் சார்பாகச் செயற்படுவதைத்தான் நான் முற்போக்கு என்பதாக நினைக்க வேண்டாம். மேற்கத்தைய முதலாளித்துவ, ஏகாதிபத்தியக் கருத்தியலை அப்படியே பிரதிபண்ணிச் செயற்படும் வத்திக்கானினது கட்டளைகளையும் வழிமுறைகளையும் அப்படியே பின்பற்றாது தமக்கு எது தேவையோ அதைச் செய்கிறார்கள்.

  நவாலித் தேவாலயத்தில் குறைந்தது 130 பொதுமக்கள் ஒரேதடவையில் அரசபடையாற் படுகொலை செய்யப்பட்டதன் பின்பு பரவலான மாற்றம் வந்தது.

 8. முத்து(தமிழினி) சொல்கிறார்:

  சிறில்,

  தமிழ் கிறிஸ்துவர்களும் சாதியை பின்பற்றுகிறார்கள் என்பது இந்து மதத்தில் இருந்து இவர்களெல்லாம் மதம் மாறியதால் இது தொடர்கிறது.

  மேலே கண்ட தங்கமணியின் கருத்துப்படி கிறிஸ்தவத்தி்ல் இருப்பதற்கும் கிறிஸ்தவ சமூகத்தில் இருப்பதற்கும் வித்தயாசம் உண்டு.

 9. PONDHEEPANKAR சொல்கிறார்:

  jathi enbathu matham sarnthatalla.ithu oru samuha amaippu.ippoluthavatu purinthu kollungal

 10. Anonymous சொல்கிறார்:

  It is incorrect to say that Castes exist because of Hindu scriptures. The basic scriptures of Hinduism (Bhagdvad Gita, Upanishads) do not sanction castes. Jati comes from “Jan” which means birth. Basic Hindu scriptures do not distinguish people based on their birth. Bhagvad Gita talks only about varnas that are based on “Guna” and Karma” (not birth). In other words based on one’s predominant attitude and the work they do, one was classified into one of 4 divisions. Anyone that chooses to learn, teach and meditate and pray for the world without any expectations of personal gain is a Brahmin and hence is seen as superior (not the other way around). I don’t have any problem accepting such a person, if one such person exists today indeed, as superior to me. On the other hand most of us today fall probably into only one category- Vysya -or business people.

  Note that the two most-revered epics of Hinsuiam were both writen by the so-called “dalit” rishis. Valmigi who wrote Ramayana was a robber and Vyasa who wrote Mahabharatha was the son of a fisherwoman.

  It is also incorrect to say that caste system is not existing in other societies (the root word “casto” is a portughese word btw). Societal power struggles and the resultant power structure manifest in different ways in different socities. What do you think House of Lords in UK is and do you think anybody can become a member of House of Lords? Did you read the news item that an Afgan girl was punished recently by the local village council because she tried to marry out of her “caste”? Do you know that the far away Bedouin socities of Middle East have a “caste” system? And what about Slavery?

  I can cite from Bible paragraphs that condon slavery, would it then be correct to say that predominantly Christian societies are racist because they are Christian? Can we say that Christianity is the root of anti-semitism, the resultant Jewish holocaust and the ruthless annihilation of native Americans?

  There are aspects, in what was written thousands of years ago, that have lost their context and relevence in these days. Hinduism renews itself from within because- like the running water- it accomodates and assimilates changes. Caste oppressionis essentially wrong in Hindu spiritual terms, reason why core Hindu spiritual teachers from Ramanujar to RajaRam Mohan Roi, to Vivekanadha to Gandhiji, opposed caste-based oppressions. There are other religions intolerant of spiritual diversity and intent on imposing their version of theology; such religions that are intent on increasing headcounts and building power structures resist any changes from within or without; like stagnant water they then become breeding grounds of social diseases.

 11. திரு சொல்கிறார்:

  ஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா இங்கிலிபீசுல இந்துமதத்தின் சாதிஅடிமைத்தனத்தை சோத்துக்குள்ள அமுக்கி வைக்க…’சமுத்திரம்’ கடந்து வந்தாலும் இந்துமதம் அதன் வேதங்கள், சாத்திரங்கள் வழி சாதியை கட்டிக்காத்து அதன்மீது நின்று எக்காளமிடுவதை மறைக்கமுடியுமா என்ன? ராஜாராம்மோகன் ராய் என்ற சீர்திருத்த தலைவர் பட்டபாடும், அதன் பின்னர் வந்த சங்கராச்சாரி சாதிசனாதான தர்மத்தை கட்டிக்காக்க பாடுபட்டதும் எல்லோருக்கும் தெரிந்த கதை. காந்தி ஆகா இந்துமதத்துக்கு அவரு என்ன சீர்திருத்தம் செய்தாருங்கோ? அரிஜன் = கடவுளின் பிள்ளை ஆன கக்கூசு கழுவு, அவாள்கள் செய்யுற அட்டகாசம் கண்டுக்காதேன்னு கமுக்கமா இருந்ததுங்களா? ச்சீ…

  கிறித்தவர்கள் சாதியை பின்பற்றுவதற்கும் இந்துமதச் சாதி அடிமைத்தனத்திற்கும் வேறுபாடு அதிகம் என்பது தங்கமணி அவர்கள் சொல்வது போல மிக சரியே.

 12. Dharumi சொல்கிறார்:

  அனானிகளுக்குப் பதிலளிப்பதில்லை; பதிலளிக்கக்கூடாது என்றாலும் தவறான ஒரு கருத்தை விதைத்து விட்டுப் போவதால்…
  hi anony
  i question your statement: “core Hindu spiritual teachers from Ramanujar to RajaRam Mohan Roi, to Vivekanadha to Gandhiji, opposed caste-based oppressions

  it is becaucse i had this question in one of my very earlier posts.
  the following is a quote from Father of our Nation – it was shocking and painful when i read it first.
  To destroy the caste system and adopt the Western European social system means that Hindus must give up the principle of hereditary occupation which is the soul of the caste system. The hereditary principle is an eternal principle. To change it is to create disorder.”

 13. Dharumi சொல்கிறார்:

  சிறில்,
  முதலில் வந்த கிறித்துவ (மிஷனரிகள்)மதப் பரப்பாளர்கள் தென் மாவட்டங்களில் சாதியை மறுக்கத் தொடங்கிய போது, சாதி இந்துக்களாக இருந்து கிறித்துவர்களாக மாறியவர்கள் அதற்கு எதிர்ப்பு காண்பிக்கவே மதம் பரப்புதலா, சமூகச் சீர்திருத்தமா என்ற நிலையில் முதலாவதைத் தேர்ந்தெடுத்ததாக வரலாற்று நூலொன்றில் வாசித்தேன்.

  முதலில் கட்டிய கோவில்கள் சிலுவை வடிவில் கட்டப் பட்டதற்குக்கூட காரணம் ஒன்று சொல்லப்படுகிறது: உயர்சாதி புதுக் கிறித்துவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒன்றாய் இருந்து வழிபாடு செய்யத் தயாராக இல்லாததால்,பீடத்திற்கு முன்னே உள்ள பகுதி அவர்களுக்கும், side wings பகுதி தாழ்த்தப் பட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டதாம். சிலுவை வடிவு இல்லாத கோயில்களில் நடுவில் ஒரு சுவரே கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

  இப்போது நடுச்சுவர் மறைந்திருக்கலாம்; ஆனால் மனச்சுவர்கள் நீங்கிய பாடில்லை; நீங்கும் என்ற நிலைகூட இல்லை.

 14. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  தருமி,
  வருகைக்கும் தகவல்களுக்கு நன்றி, கேட்கவே நல்லாயில்ல.

  திரு,
  நன்றி.

 15. Anonymous சொல்கிறார்:

  Mr. Thiru, Do you realise that your response is nothing but mud-slinging and hot-air devoid of any material points? I gave pointed
  answers and if you have an intelligent response I am all ears. (And FYI, Gandhiji himself washed the “cuckoose” of all- including Harijans in his Ashram and even beat Kasturibhai when she refused to comply- please have your facts right before setting your finger on the keyboard). As for my inglipeesu and your Tamil, it is better to write in English than insult Thamizh with your kind of writing.

  Dharumi, “anony”galuku badhil solvadhillai endra thangal kolgaiyai vitukoduthu irangi vandhu enaku badhi ittamaiku nandri. (virtual ulagathil “anony’kum “dharumi”kkum enna verupaadu endru vilakinaal nalladhu). I know Gandhi was in support of Varnashram but opposed caste. But could you give me a reference where from you picked that quote of Gandhi please? As for caste oppressions in Christianity, I can cite loads of example TODAY in the ways dalits are discriminated in Christianity. These atrocities are highly pronounced in Southern districts where they have separate “Pangus” and Pangu thanthais (Parish head) openly indulge in caste politics. In Kerala and in Kodaikanal I have seen worse. Dalit converts can not come into same Church as the higher caste Christians and dalit converts even have separate burial grounds. It is utter moral dishonesty to try to cover it up by talking about hair-splitting differences between the shades of casteism in different religions.

  (Similar caste differences exist among Muslims also. Atleast they do not seem to wear the mask of Dalit liberators behind the ugly face of headhunters).

  Caste differences and dalit oppressions are seen in all religions in India, not just in Hinduism. Atleast in Hinduism there are many leaders and reformers – from all castes and hues- who have fought and are fighting against this. How many Christian (or Muslim) leaders you can cite – from all castes and hues within Christianity- that are publicly rallying people against this despicable practice within
  their religions? Contending about the degrees of oppression in Christianity is like rubbing salt to the wounds of those who keep suffering in silence. Conveniently shifting the blame to “Hinduism” serves only to brush under the carpet the real plight of dalit christians. (Talking about degree have you read Arundhati Roy’s “God of Small Things” based on her life? How the “small degree of caste oppression in Christianity” lead to death of a dalit is documented there). I am only echoing Siril’s correct observations about Caste-discrimation in Christian society and this practice being trans-religious phenomenon in Indic context and am heartened to see open blogs on such topics. Comparing how many were harassed in each religion, in what way and for what reason will serve political reasons and the data can be turned and twisted to suit one’s position- it will not do one weebit to alleviate the burdens of those that suffer.

  If you want to see a concrete example of a dalit upliftment movement that succeeded, take a look at SNDP in Kerala, started by Sri Narayana Guru for the upliftment of Eezhavas who, from a total abysmal state in a caste-ridden society, have emerged educationally, economically, and socially strong today and are intellectually elevated with a real sense of self-worth. Or take a look at the Ayyankali movement.

  Caste, like any birth-based discrimination, is an abomination on humans and should go. Bashing Hinduism only helps polarize the society, hides the real issue and helps play petty religious politics.

  I conclude with a couple points.

  1. Non Hindus in Indian subcontinent practice caste-based discrimination.
  2. Generational Hindus in other sub-continents (eg Bali, Madagaskar, South Africa) do not practice caste-based discriminations.

  It follows logically that Caste is more tied to the demography of a given place than to any particular religion. This understanding is
  important to really solve this issue. This understanding is not important if the motive is mud-slinging, hindu-bashing and hate-mongering.

 16. திரு சொல்கிறார்:

  //Anonymous said… Mr. Thiru, Do you realise that your response is nothing but mud-slinging and hot-air devoid of any material points? I gave pointed
  answers and if you have an intelligent response I am all ears. (And FYI, Gandhiji himself washed the “cuckoose” of all- including Harijans in his Ashram and even beat Kasturibhai when she refused to comply- please have your facts right before setting your finger on the keyboard).//

  உங்கள் கருத்துக்களில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால், ஒளிந்திருந்து வாலி போல தாக்குவதைவிட்டு, உண்மை பெயரில் வந்து கருத்துக்களை முன்வையுங்கள். பெயரிலியாக வருவது நாகரீகமற்ற செயல்.

  போகிற போக்கில் எதோ உண்மை உரைப்பதுபோல பிராமணீயத்தின் வர்ணாசிரம சாதி அடித்தளத்தின் மீது நின்று எக்காளமிடும் உங்கள் கவலை புரிகிறது. உங்களுக்கு மதத்தை காப்பாற்றவேண்டிய கட்டயம். அது மனிதனை கேவலமாக நடகும் இழிசெயலை மறைத்தாவது நடக்கவேன்டும். இது ஒன்றும் புதிதல்ல, இது நூற்றாண்டுகளாக நடைபெறுவது தான்.

  எனக்கு தட்டிய உங்களது கேள்விக்கு. உங்களது வார்தைகளில் பதில் இருக்கிறது. கீழே படியுங்கள்.

  // I know Gandhi was in support of Varnashram but opposed caste.//

  காந்தி கக்கூஸ் கழுவினால் என்ன? சட்டி பானை கழுவினால் என்ன? வர்ணாஸ்ரம கொள்கையை எதிர்க்காததால் காந்தி சாதி அமைப்பை கட்டிக்காத்தவர் தான். அந்த விதத்தில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு காந்தியின் புது பெயர் மாற்ரமும், கக்குஸ் கழுவும் செயல்களும் ஒருவிதத்திலும் உதவவில்லை. அடிமைப்படுத்திய தத்துவத்தை ஆதரிப்பது அடிமைகளை கொடுமையாளர்களுக்கு பலியிடுவது போன்றது தான். காந்தி அந்த பலியிடும் கொடுமையை இருந்து நன்றாகவே செய்திருக்கிறார் என்பது சரித்திர ஆய்வாளர்களால் எடுத்துரைக்கப்பட்ட உண்மை.

  வர்ணாஸ்ரம் என்பது என்ன? பிர்மனின் உடலில் இருந்த நான்கு பிறப்பு உறுப்புகளிலிருந்து நான்கு வித மனிதர்கள் பிறந்ததாகவும், அவர்களுக்கிடையே உயர்வு தாழ்வை போதித்து சாதீய கட்டமைப்பை கட்டிக்காக்கிறது தானே! இந்த வர்ணாஸ்ரமம் தான் இந்து மதத்தின் அடித்தளமே! இந்த அடித்தளத்தை பெயர்த்தால் இந்துமதத்தின் இன்றைய கட்டமைப்புகள் சிதறும் என்பதும் உண்மை. அந்த விதத்தில் காந்தி ஒட்டுமொத்த விடுதலைக்காக பாடுபட்ட தலைவரில்லை. வர்ணாஸ்ரமத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்கமுடியாது. அது தான் வேதனையான உண்மை.

  கிறிஸ்தவர்களுக்கிடையே சாதிப்பழக்கம் ஒழியவில்லை என்பது உண்மை. அதை கண்டிக்கவேண்டியது, கழையப்படவேண்டியது என்பதில் யாருக்கும் மாறுபாடில்லை. (இதன் காரணகாரியங்களை தங்கமணி அவர்களது பின்னூட்டம் தெளிவாக சொல்கிறது).

  இந்துமத்தின் (scriptures and dogmas என கருதப்படுகிற) வேதங்களும், மனுசாத்திரம், புராணக்கதைகள், கிருஸ்ணன் அளித்ததாக கருதப்படுகிற கீதையிலும் சாதிக்கட்டமைப்பை கட்டிக்காக்கிற தத்துவங்கள் காணலாம். சாதி கட்டமைப்பை இஸ்லாம் மதத்தின் தத்துவங்களிலோ அல்லது கிறிஸ்தவ மதத்தின் தத்துவங்களிலோ இல்லை. மதம் என்பது அதன் தத்துவங்கள், கோட்பாடுகள், இறையியல் வழி செயல்படும். இந்துமத இறையியலும் தத்துவமும் கட்டிக்கக்கிற சாதி கட்டமைப்பை பூசிமொழுக முடியாது.

  எந்த மதத்தினர் சாதிச் சாக்கடையை தூக்கி பிடித்து கொண்டாடினாலும் மனிதன் என்றமுறையில் எதிர்ப்பது கடமை. கோவில் மணியாட்ட ஒரு சாதி, சாக்கடை அள்ள இன்னொரு சாதி என தேவையில்லை. பிறப்பில் அனைவரும் சமம். இல்லை, எல்லோரும் வேறுபட்டவர்கள் சமநிலையான மனித உரிமையற்றவர்கள் என்றால், உடலெல்லாம் பிறப்புறுப்பு உள்ள பிரம்மனை கூட்டி வரவேண்டியது தான். தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் முன் அவன் தான் முதல் குற்றவாளி. பிரம்மனின் பரிவாரங்கள் மனு முதல் சங்கரமடம் வரை அடுத்ததாக வருவார்கள்.

 17. Anonymous சொல்கிறார்:

  ஐயா திரு அவர்களே,

  திரு என்பது உங்கள் இயற்பெயரா?

  கருத்துக்கு எதிர்வாதம் செய்ய பெயர் தேவையில்லை. கருத்தை விட்டு விட்டு ஆளைத்திட்டும் சுதந்திரத்தைப் பறிப்பதனால் நீங்கள் “anonymous”-ஐ வெறுப்பதாகத் தோன்றுகிறது. “Ad-hominem” attacks-ஐ avoid செய்யத்தான் “Anonymous” என்ற பெயரை use செய்தேன். வேண்டுமானால் என் பெயரை “ருதி” என்று வைத்து கொள்ளுங்கள். சரிதானா?

  There is nothing new in what you wrote except more of the same anti-Hindu spew-outs.
  உங்கள் எழுத்திலிருந்து ஒன்று புரிகிறது. வர்ணாஸ்ரம், பிராமணீயம், சங்கரமடம் என்பது போன்ற உலர்ந்து போன திராவிடர் கழக வெறுப்பு வார்த்தைகளை வைத்துகொண்டு ஜல்லியடிக்கத்தெரிந்த அளவுக்கு, இந்து மத தத்துவங்கள் மட்டுமல்ல, இதிஹாசங்கள் மற்றும் புராணங்களைப் பற்றிய அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இல்லை என்பது நன்கு புரிகிறது (hint: வாலி, ப்ரஹ்மன் பற்றிய அபத்த பொழிவுகள்; ஆனால் இவை மட்டும் அல்ல, மேலும் பல அபத்தங்கள் உண்டு- ப்ரம்மனுக்கு 4 பிறப்பு உறுப்பாம்; ஒரு விஷயத்தில் அளவு மீறி obsession கொண்டால் இப்படித்தான் ஆகும் போல).
  இப்படியே போனால், slavery-i ஒழிக்க வேண்டுமா> கிறித்துவத்தை ஒழி. terrorism ஒழிக்க வேண்டுமா> இஸ்லாத்தை ஒழி என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்த attitudeதான் religious polarisation மற்றும் மத வெறிகளுக்குத் தீனி போடுகிறது.
  உஙகள் கருதுக்கள் RSS போன்ற இயக்கங்கள் பலம் அடையத்தான் உதவும்.

 18. அடைக்கல ராசா சொல்கிறார்:

  சாதி

  சாதியின் கொடுமையை, தீண்டாமையின் கோரப்பிடியை உணர்ந்து வாழ்ந்தவன் நான். கடந்த ஐந்து ஆண்டுகால குருத்துவ பணிவாழ்வில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே வாழ்ந்து அனுபவித்த சாதியை, ஈழத்தமிழர்களிடேயும் கண்டபோது மனம் வெறுத்துப் போனேன். ஆனால் சற்று ஆறுதலான விடயம் தீண்டாமை என்னும் கொடிய அரக்கனை இந்தியாவில் மட்டுமே காணலாம். இருப்பினும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் இங்கும் காணக்கூடியதாக உள்ளது.

  சில ஊர்களின் பெயர்களில் சாதி அடையாளம் காணப்படுவது சாதியத்தின் தொன்மையைக் குறிக்கும் என்று நினைக்கிறேன். உடையார்கட்டு, முதலியார்குளம், பறையனாலங்குளம் போன்ற ஊர்கள் தமிழீழத்தில் உண்டு. பெரும்பாலும் இரண்டு சாதிகள் இங்குள்ளன. ஒன்று பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் வேளாளர் சாதி. இந்துக்களிலும், கிறிஸ்தவர்களிலும் இவ்வகை சாதியினர் பெரும்பான்மையில் உள்ளனர். மற்றொன்று பரதவர். இந்தியாவிலிருந்து மீன் பிடி தொழிலுக்காக இலங்கையில் குடியேறியவர்களாக கருதப்படுபவர்கள். மன்னார் மாவட்டத்தில் பேசாலை, தாழ்வுபாடு, வங்காலை, அரிப்பு, முள்ளிக்குளம் போன்ற கடலோர கிராமங்களில் பரதவர்கள் அதிகமாக வாழ்வதைக் காணலாம்.

  இவர்களுடைய வாழ்க்கைமுறை, உணவு, சமய வாழ்வு அனைத்துமே தமிழ்நாட்டில் பரதவர்கள் அதிகம் வாழும் தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள மடு தேவாலயத்தின் மேல் கூரையை தூத்துக்குடியைச் சேர்ந்த திரு. குருஸ் மோத்தா என்னும் பரதவருடைய குழந்தைகள் நிதியுதவி செய்து அமைத்துக் கொடுத்துள்ளனர். தொழில் சார்ந்த வாணிபம், வர்த்தகம் மட்டுமல்லாமல் பெண் கொடுத்து பெண் எடுக்கும் குடும்ப உறவும் இந்திய தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இருந்திருக்கிறது.

  இங்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியில் பலரும் பொருளாதார முன்னேற்றம் கண்டு கல்வியில் மேன்மையடைந்து சாதிய ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறிவிட்டனர். சிலர் இன்னும் தங்களது குலத் தொழிலை செய்து சாதியின் பிடிக்குள் சிக்கி தவிக்கின்றனர்.

  “பிறப்பினால் ஒரு மனிதரை ஒரு சாதிக்குள் தள்ளிவிடும் சமூதாய அமைப்பானது காட்டுமிராண்டி தனமானது, ஒடுக்குமுறை நிறைந்தது. யாழ்ப்பாண சமூகத்தின் பொருளாதார சமூகவாழ்வில் இது பின்னிப் பிணைத்ததாயினும், சாதி அமைப்பானது மனித உழைப்புக்குக் கண்ணியமும், மரியாதையும் வழங்கும் நவீன சிந்தனைக்கு முரணானது….கடுமையாக உழைத்து, தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளத்தக்கதும், வளம் மிக்கதும், சமூக உற்பத்தி திறன் கொண்டதுமான ஒரு சமூகத்தை தாழ்ந்தது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது” என்று வெள்ளைக்காரத் தமிழ்ப்பெண் அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை நூலில் வினவுகிறார்.

  தமிழ்நாட்டைப் போன்று சாதியமைப்பு ஈழத்தில் இறுக்கமாக இல்லாது போனதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அவற்றில் பிரதானமாக நான் கருதும் விடயம் போர். போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் எல்லா மக்களும்; எல்லா இடங்களிலும் கூடிவாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக மடுமாதா தேவாலயத்தைச் சுற்றியிருந்த அகதிகள் முகாமில் பல இடங்களிலுமிருந்து வந்த பலதரப்பட்ட மக்கள் ஒன்றுகூடி வாழ்ந்துள்ளார்கள். கற்றவன், கல்லாதவன், உயர்சாதி, தாழ்ந்த சாதி, பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல், ஊர், நகரம், கிராமம் என்று இல்லாமல் எல்லோரும் ஓரிடத்தில் தங்க நேரிட்டுள்ளது. அதுபோலவே புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மத்தியிலும் பெரிதாக இந்த வித்தியாசங்களை காணமுடியாமல் போயிற்று. போரினால் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய நன்மை இதுவென நான் நம்புகிறேன். தமிழர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி வந்தமையினால் தங்களிடையே சாதிய உணர்வை மறந்துவிட்டனர்.

  இரண்டாவது விடயம், இங்கு காதல் திருமணங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவரையொருவர் அறிந்து, திருமணம் செய்து கொள்வதால் ஓரளவு சாதியின் இறுக்கம் இங்கு தகர்ந்துள்ளதாக எண்ணுகிறேன். 1994ம் ஆண்டு மே மாதம் தமிழ் நாட்டில் திருப்பத்தூரில் நாங்கள் நடத்திய இளையோர் மாநாட்டில் உரையாற்றிய திரு.தியாகு அவர்கள் இதே கருத்தை முன்வைத்தார்கள் என்பதை இப்போது நினைவுகூருகிறேன்.

  மூன்றாவதாக கல்வியும் சாதியின் இறுக்கத்தை பெருமளவில் தகர்த்துள்ளது. கல்வி கற்று நல்ல வேலைவாய்ப்பினை பெற்று பொருளாதார ரீதியில் மேன்மையடைந்த மக்கள், சாதியின் கொடுமையை உணர்ந்து அதை விலக்கியுள்ளனர். பிறப்பால் உயர்வு தாழ்வு என்பதை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மனிதர்களாக பிறந்த அனைவரும் சமம் என்ற கொள்கையே அனைவருக்கும் பொதுவானது.

  இருப்பினும் சாதிரீதியாக ஈழத்தமிழர்களிடையேயும் சில பிரச்சனைகள் எழுந்துள்ளன. இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்பணி. மேரி பஸ்ரியன் அவர்களின் வாழ்க்கையை தீபங்கள் எரிகின்றன என்ற நூலாக கொணர்ந்த திரு. நாவண்ணன் அவர்கள், அப்புத்தகத்தில் சாதி பிரச்சனையைக் குறிப்பிட்டுள்ளார்.

  “(யாழ்ப்பாணம்) இளவாலை புனித அன்னம்மாள் கோவிற் பங்கைச் சேர்ந்தவர் (அருட்பணி. மேரி பஸ்ரியன்) என்கிறபோது சமூகப் பிரச்சனை காரணமாகத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் (1971 – 1977) இன்னுமொரு சமூகத்துக்கு ஆலயத்தில் சமத்துவம் அளிக்க மாட்டோம் என்ற பிடிவாதத்தில் ஆலயக் கதவுகளைப் ப+ட்டிவைத்துச் சாதனை புரிந்தவர்களின் உயர்வகுப்பைச் சார்ந்தவர்”. இந்நிகழ்வு அருட்பணி. பஸ்ரியன் அவர்களை வெகுவாக பாதித்த ஒரு விடயம் என்பதனையும் திரு. நாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நிகழ்வைப் பற்றி அறிந்தபோது நான் தமிழ்நாட்டில் பணிசெய்த திண்டுக்கல் பெரிய கோயிலும் ஏறக்குறைய ஆறு மாதங்கள் (1995ம் ஆண்டு) சாதி பிரச்சனையால் மூடப்பட்டு கிடந்ததை நினைவு கூருகிறேன். தமிழ்நாட்டில் வேறு பல மாவட்டங்களிலும் இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளன என்பது வேதனைக்குரியது.

  மேலும் நான் யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பருத்தித்துறையில் அருகருகே இரண்டு கோயில்கள் இருவேறு சமூகத்தால் கட்டப்பட்டிருப்பதையும் பார்த்தேன். அதே போன்றதொரு நிலை மன்னார் மறைமாவட்டத்திலும் இருப்பதாக உணர்கிறேன். இந்நிகழ்வை நான் தூத்துக்குடி மறைமாவட்டம், மணப்பாடு என்ற பங்கோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். எனதருமை தந்தை கலாநிதி தே. ஜாண் அவர்கள் தென்தமிழகத்தில் கிறிஸ்தவம் என்ற தனது ஆராய்ச்சி நூலில் விரிவாக இதை ஆராய்ந்துள்ளார். இதில் இன்னும் வேதனையான விடயம் என்னவெனில் ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களிடையே பட்டம் என்ற ஒரு பிரிவினை ஏற்படுத்தி அதிலும் ஏற்றத்தாழ்வு பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிலும், இங்கும் காணப்படுகின்ற பரதவர் சாதியில் மட்டும் 63 உட்சாதி பிரிவுகள் உள்ளதாக அறிகிறோம். (கலாநிதி தே. ஜாண், தென்தமிழகத்தில் கிறிஸ்தவம், பக். 275) முள்ளிக்குளம் கிராமம் முழுவதும் ஒரே சாதி மக்கள் என்றாலும் அவர்களிடையே பட்டம் என்ற எட்டு பிரிவினையுண்டு. ஆகவேதான் காலம் காலமாக அச்சிறு கிராம மக்களிடையே உட்பகை இருந்து வந்துள்ளது. இடம்பெயர்ந்து 13 ஆண்டுகள் பல இடங்களிலும் வாழ்ந்து இன்று திரும்பி வந்துள்ள அவர்களிடையே இப்பிரிவினை, உட்பகை மாறாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.

  ஒரு நாள் நான் இங்கு ஆற்றிய ஞாயிறு திருப்பலியில் மறையுரையில் இதைப்பற்றி நான் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட கருத்து என்னவெனில், முள்ளிக்குளத்தில் ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சாதி அமைப்பில் வாழும் 140 குடும்பங்கள் மத்தியில் பிரிவினையும், பகையும் இருந்தால், இரண்டு மொழி, மூன்று இனங்கள், நான்கு மதங்கள், பல சாதி அமைப்பில் வாழும் கோடிக்கணக்கான இலங்கை மக்களிடையே பரஸ்பரம் நம்பிக்கை, ஒத்துழைப்பு, புரிந்துணர்வு, சமாதானம் ஏற்படுமா என்பது மிகப்பெரிய கேள்வி. ஒரு நாள் நிச்சயம் தமிழீழம் மலரும். அந்த தமிழீழத்திலும் தமிழர்கள் பிரிந்து தமக்குள்ளே பகைமையோடுதான் வாழ்வார்களா?

  “இனி உங்களிடையே யூதர் என்றும், கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை” (கலா 3:28) என்று முழங்கப்பட்ட திருச்சபையில் பிறப்பால், சமூக அந்தஸ்து ஏற்படுத்தி, பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கி, கிறிஸ்தவராக சான்று வாழ்க்கை வாழ்வது எப்படி? மேற்சொல்லப்பட்ட கருத்துக்கள் யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல, மாறாக போராடி நாம் பெறும் சுதந்திர வாழ்வில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடும், சமாதானத்துடனும் வாழ வழிவகுக்கப்பட வேண்டும் என்பதே என் நல்ல எண்ணம். சாதியம் ஒழிய வேண்டும். மனித மாண்பும், சமத்துவமும் மலர வேண்டும்.

 19. அடைக்கல ராசா சொல்கிறார்:

  Has Catholicism failed?

  An Italian court is tackling Jesus – and whether the Roman Catholic Church may be breaking the law by teaching that he existed 2,000 years ago. An ex-seminarian turned atheist has sued his batch mate – a priest in Italy. This was in news last week. Has Catholicism failed is a question often asked in the history and is still relevent today rejuvenate the failing spirits of the catholics.

  The church built on a good structured hierarchy is alien in a world of democracy. The Church built by the great emperor Constantine is still in place with a mass wealth and power among the majority of people in the world. The democratic voices within the church were choked with age-old doctrines and policies which are often irrelevent to the common people.

  It is taught that the leaders of the church are the works of the Holy Spirit. But in truth, is it not money power and caste politics which are the deciding factors for the election of the Church leaders. This is often a scandal for the non-christians who live among us. The back door entry into the powers of the Church can not be the works of the Holy Spirit. At least in Tamilnadu, the appointments within the church starting from the major superiors to the appointment of the non-teaching staff in our educational institutions are done along the caste factor and then we call it as the work of the Holy Spirit. I believe that that is the greatest sin – sin against the Holy Spirit.

  Though the church officially recognised the caste system in India in 17th centuary – “When India’s founding Constituent Assembly debated making concessions for Outcaste-Christians, Jerome D’Souza S.J., representing the Christians, rejected them, claiming there is no caste in Christianity. No caste in Christianity? “Not only has the Church failed to eradicate caste; it has accommodated itself to caste, charges Fr Antoniraj S.J. Caste-consciousness has been part of Catholicism as long as the Church has been in India.” “When priest-sympathesiers tried to help [the Dalits], they were disciplined. Fear dominated. Priests were afraid of caste-parishoners and bishops; bishops were afraid of caste reprisals.” (“Dalit Means Broken: Caste and Church in Southern India” By John Francis Izzo S.J. In America, [the journal], February 14, pp 11-14, 2005. )

  The early Christian community grew in numbers because they had everything in common and that there was no one in need. “Now the whole group of those who believed were of one heart and soul, and no one claimed private ownership of any possessions, but everything they owned was held in common. With great power the apostles gave their testimony to the resurrection of the Lord Jesus, and great grace was upon them all. There was not a needy person among them, for as many as owned lands or houses sold them and brought the proceeds of what was sold. They laid it at the apostles’ feet, and it was distributed to each as any had need”. (NRSV Acts 4:32-35)

  Can the low growth rate of Christianity be attributted to the individual material possession of the few in the church? When the vast majority of the Christians in India are poor and the low caste, can the church as a collective institution be rich? Though they have eyes, yet the leaders of the Church fail to see a real life contradiction in this. Although the church as an institution has done a lot to allieviete material poverty in India through its dolloing out policies, social service commissions, yet the church grew rich than its members. Did all the money collected in the name of the poor reach the real poor of the society or to those who preach about divine poverty? There are few ‘Priests of God’ in India who are richer than the diocese in which they work.

  Inhuman attitude of the American government against the victims of devastating storm Katerina, the beastly treatment against the Iraq prisoners of war, the failed war against terrorism in Iraq and Afganistan are all signs of diminishing faith in God by a government which was sworn in the name of God and by the people who were traditionaly faithful to God. Does God exist is the cry of the people in the third world developing countries in Africa, South Asia and south America and in the rest of the world where there is man made hunger, poverty, sickness? Will the Lord come to hear the cry of the people as He did with the Isrealites of the Old Testament, as announced by the prophets?

  Will the Church of God come to the rescue of its fellowmen from the bondages of war, state atrocities, casteism, power mongers within the church and world wide man made poverty? Only then the Church can truly say that God exists and it can be true witness to God in truth and in spirit.

 20. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  அடைக்கலராசா,
  அருமையான பின்னூட்டங்கள் இதை ஒரு பதிவாக்கலாமென்றிருக்கிறேன். நீங்களேகூட பதித்ருக்கலாம்.

  நன்றி.

 21. Anonymous சொல்கிறார்:

  //இரு மறைமாவட்டங்கள் உருவாக்கப்படுள்ளன. //

  ஆனால் அவை ஆலயங்களின் எண்ணிக்கை மற்றும் (கத்தோலிக்க) மக்கள் தொகை அடிப்படையில் நிர்வாக வசதிக்காகத்தான் உருவாக்கப் பட்டுள்ளதாக எனக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. சாதிப்பிரிவுகளுக்காகப் பிரிக்கப்படுமானால் அதைவிட கேவலம் இருக்கமுடியாது. விபரத்தை மீண்டும் விசாரித்து தெளிவுபடுத்தி எழுதுங்கள்!
  sunny joseph

 22. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  Sunny,
  நான் கேள்விஉ பட்டவரை மறைமாவட்ட பிரிப்பு சாதி அடிப்படையாகத்தான் தொன்றுகிறது. அதிகாரபூர்வமாக இது அறிவிக்கப்படவில்லையென்றாலும் உண்மை வெளிப்படையாகவே தெரிகிறது.

 23. அடைக்கல ராசா சொல்கிறார்:

  We made caste discrimination a crime. These
  could be considered some of the milestones of the Thamil Eelam judicial
  system. (E. Pararajasingham, Head of the LTTE Judicial Division, TamilNet
  30.10.2003)

 24. ஜோ / Joe சொல்கிறார்:

  சிறில்,
  கோட்டாறு ,குளச்சல் என இரு மறைமாவட்டங்களாக பிரிவதாக வைத்துக்கொள்வோம் .இது முழுதாக சாதிப் பிரிவு அல்ல .கடலோரப்பகுதிகள் குளச்சல் மறைமாவட்டமாகவும் ,மற்ற அனைத்து பகுதிகளும் கோட்டாறு மறைமாவட்டமென பிரிக்கப்படுகிறது .அப்படிப்பார்த்தால் கோட்டாறு மறைமாவட்டத்திலும் உள்நாட்டில் குடியேறிய கணிசமான மீனவர்கள் வருவார்கள் .என்னைப்பொறுத்தவரை இது சாதிப் பிரிவு என்பதை விட ,மீனவர் பகுதி ,மற்ற பகுதி என்றே பிரிக்கப்படுகிறது.மீனவரிலும் 2 சாதி இருப்பதை கவனத்தில் கொள்க.

 25. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  ஜோ,
  நீங்கள் கூறுவது இன்னும் மோசமாக உள்ளதில்லையா. இந்த மாதிரி பிரிவினைகள் புவியியல் ரீதியாக வரவேண்டியவை, அப்படிபார்த்தால் பள்ளம் கோட்டாறுக்கு அருகிலுள்ளது.

  கோட்டாறூ, தூத்துக்குடி இரண்டு மறைமாவட்டங்களும் பிரிவதையும் அதிலுள்ள பிரிவுக்கான தேர்ந்தெடுப்பு ஒரே மாதிரி இருப்பதையும் கவனிக்கவேண்டியுள்ளது.

  கடற்கரௌயில் இல்லாதவர்களுக்கு மீன்பிடிப்பவர்களெல்லாரூமே ஒரே சாதிதான் ஜோ.

  I am opposed to any division that’s based on any social status whatsoever.

 26. ஜோ / Joe சொல்கிறார்:

  சிறில்,
  எந்த வகையிலோ ,இந்த பிரிவுக்கு நான் எதிரி என்பதில் சந்தேகம் வேண்டாம் .அதே நேரத்தில் இது சாதிப் பிரிவினை என்பதை விட ,மீனவர் பங்குகள் ,பிற என்பதாக பிரிகின்றன என்பது தான் என் வாதம் .கோட்டாறு பங்கிலேயே மீனவ மக்கள் தான் அதிகம் என்பது தெரியும் தானே?

 27. Anonymous சொல்கிறார்:

  கோட்டாறு, முளகுமூடு என்பதாகத்தானே சொன்னார்கள்!
  திரித்துவபுரம் முளகுமூடு உள்ளிட்ட பிரதான பிரிவுகளை உள்ளடக்கி மாவட்டத்தை கிழக்கு மேற்காகப் பிரிப்பதாக தகவல்…

  sunny joseph

 28. ஜோ / Joe சொல்கிறார்:

  அனானி,
  நீங்கள் சொல்வது போல புவியியல் ரீதியில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டால் பெரிதாக தவறொன்றுமில்லை .கோட்டாறு மறைமாவட்டம் தமிழகத்திலேயே பரப்பளவில் சிறியதாக இருந்தாலும் ,கத்தோலிக்கர் எண்ணிக்கையில் பெரியது என நினைக்கிறேன்.

 29. சிவா சொல்கிறார்:

  சிறீல் அலெக்ஸ்! நான் இங்கே எதையும் குறை சொல்வதற்காக எழுதவில்லை (அதுக்கெல்லாம் அருகதை இல்லை :-)). மற்றபடி நான் டயோசிசன் மற்றும் மற்ற அமைப்புகளுக்கு நடக்கும் தேர்தல்களை பார்த்து மிரண்டிருக்கிறேன். அவ்வளவு போட்டி இருக்கிறது. மக்கள் அந்த பதவிகளுக்கு அடித்துக் கொள்வதை பார்த்தும் மிரண்டிருக்கிறேன். எல்லாமும் பணத்தை குறிவைத்தே ஆகிவிட்டது!! இனி இயேசு வந்து நீங்க சொல்ற மாதிரி சாட்டையால் அடிச்சி விளாசினா தான் சரி படும் போல ( ஐயா! இந்த அட்டூழியம் எல்லா மத்திலும் இருக்கு..அதனால நான் மதத்தை குறை சொல்லிட்டேன் என்று தப்பா எடுத்துக்காதீங்க :-))

 30. சிறில் அலெக்ஸ் சொல்கிறார்:

  சிவா,
  உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. சமகாலத்தில்யே மதத்தை இப்படி பலர் தம்வளிக்கு வளைக்கிரார்களே அப்படீன்னா இத்தனைகாலம் எத்தனையோபேர் வலைத்தும் நெளித்தும் வளர்ந்த இந்த மதங்களை நாம் ஏந்தான் தலையில் தூக்கிவைக்கிறோமோ தெரியவில்லை.

 31. PONDHEEPANKAR சொல்கிறார்:

  நமது நாட்டில் மட்டும்தான் ஜாதி இருக்கிறது என்று நினைக்காதீர்கள்.இதை விட மோசமான கொடுமைகள் எல்லா நாட்டிலும் நடக்கின்றன.இந்து மதத்திலாவது நந்தனார் கதை ராமனுசர் கதை பொன்றவை உள்ளன ஆனால் கிறிசுதவ மதம் இசுலாம் போன்றவற்றில் இதெல்லாம் இல்லை.

 32. vellayan சொல்கிறார்:

  differentiation between human is existing wll over the world, which i had seen in so many countries personally myself. Untouchablity between whites and blacks still you can see even in america,europe etc.,

 33. viru சொல்கிறார்:

  “differentiation between human is existing wll over the world, which i had seen in so many countries personally myself. Untouchablity between whites and blacks still you can see even in america,europe etc.,”

  i support ur opinion
  i had read that some american professors have written a book stating that human evolution had been faster in the last 10,000 years; hence, only white caucasians are superior to all other races in the world;

  but that has not been seconded by other scientists

 34. Jerold Jenifa சொல்கிறார்:

  Dear Sir

  Gandhi was supported caste system, he hated only untouchability. It is one of my research findings (E.V.Ramasamy and his Struggle against Caste System, M.Phil degree). If u want i ll give sources. But the Christianity supported the caste system was equal to play the role of Anti Christ. Ur Statement is not a Research article but its also correct

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்