தகாத வார்த்தைகள்

என்ன ஆயிடுச்சுன்னு எல்லாரும் இப்டி காலிலே சிறுநீர் கொட்டின மாதிரி துடிக்கிறீங்க?

யோனி, ஆண்குறி என்பவை கெட்ட வார்த்தைகளா? அவை கெட்டதைச் செய்யும் உடலுறுப்புக்களா?

இவற்றை தகுந்த இடங்களில் தாராளமாகப் பயன்படுத்தலாம். இன்றைய தமிழ் இலக்கியத்தில் அந்தரங்கங்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. இது வரவேற்கத் தகுந்த பழக்கம்தான். அந்தரங்கங்களை மறைத்து வைத்துவிட்டதாலேயே அங்கு குற்றங்கள் மிக அதிகமாக நடக்கின்றன. ஏனெனில் அக்குற்றங்களை எளிதில் வெளியில் சொல்ல முடியவில்லை.

கொங்கை, முலை எனும் வார்த்தைகள் நம் பழம் இலக்கியங்களில் தாராளமாகப் பயன்படுத்தப் படுகின்றன. செக்ஸ் என்பதே மோசமானது என்று எப்போது ஆனது?

பருத்த முலைகளின் கனம் தாங்காமல் ஒடிந்து போகும் இடையைக் கொண்டவளே எனக் கடவுளைப் புகழ்ந்தெழுதிய மொழி தமிழ். ஏதோ வெள்ளை ஆடை அணிந்த சில சாமியார்கள் செய்த சதியால் உலகம் காமத்தை பாவம் எனப் பார்க்க ஆரம்பித்தது. நம் கலாச்சார வரலாற்றில் காமமும் அது சார்ந்த கலைச் சொற்களும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்றும் யோனி, முலை, ஆண்குறி எனும் வார்த்தைகள் பரவலாக எழுத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் என்ன தவறிருக்க முடியும்? காமம் நம் வாழ்வின் ஒரு பகுதி. அதன் தாக்கம் நம் சராசரி செயல்களிலும் சிந்தனைகளிலும் நிறைந்திருக்கிறது.

அந்தரங்கங்களை வெளிப்படுத்தப் பழகிக்கொள்ளுங்கள். யோனி, முலை, ஆண்குறி எனப் பேசிப் பழக்கப்படுங்கள். இவற்றை பயன்படுத்த இயலாவிட்டால் நம் வாழ்வின் முக்கியதொரு அங்கமான காமத்தையும், நம் சிந்தனை செயல்களில் அதன் மீதான தாக்கமும் பதியப்படாமலே போகும் அபாயம் உள்ளது.

மூடி மறைக்கும் கலாச்சாரத்தால் இன்று ஒரு கணவன் மனைவிக்கிடையேகூட சாதாரணமாக காமம் பேசப்படுவதில்லை? ஒரு தந்தை தன் பிள்ளைக்கு பாலியல் சொல்லித் தரமுடியவில்லை. ஏன் பள்ளிகளிலேயே இவை அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு குழந்தைக்கு ‘wrong touch’ என சொல்லித் தரவேண்டியுள்ளது. அப்படி ஒரு குழந்தைக்கு நேரும் காமக் கொடுஞ்செயலை அது தன் பெற்றோரிடமே சொல்லத் தயங்குவது எதனால்? சினிமாவில் தொப்புளைக் காட்டி ஆடும் நடிகையாலா அல்லது அப்போது ஏதோ இடி விழுந்தது போல ரிமோட்டடத் தேடி பரபரப்பாக சேனலை மாற்றும் பெற்றோர்களாலா? அதற்காக மிட்நைட் மசாலா குடும்பத்தோடு பாருங்கள் எனச் சொல்லவில்லை. அப்படி காட்சிகளை மாற்றும்போது அது குறித்த பய உணர்வை ஏற்படுத்தாதவாறு செய்யவேண்டும் என்கிறேன். பல குழப்பங்களுடனேயே காமத்தை, அந்தரங்கத்தை நாம் அணுகுகிறோம்.

திரட்டிகளில் காண்பிப்பதால் இத்தகைய சொற்களை பயன்படுத்த வேண்டாம் எனும் ஒரு கருத்து இருக்கிறது. இது எந்தவகை நுண்ணரசியலோ தெரியவில்லை.

பதிவுகளில் இருக்கும் பல கருத்துக்களும் பொதுக்கருத்துக்களல்ல. பதிவென்பது தனிமனிதனின் கருத்துக்களம். பொதுக்கருத்துக்களை உடைத்தெறிவதே பதிவுகளின் உள்ளார்ந்த நோக்கமாயிருக்கும். வடிகட்ட ஆரம்பித்தால் எதுவுமே எழுத முடியாது.

ஒரு திரட்டி ஒரு பதிவுக்கு எத்தனை எதிர்ப்புகள் வருகிறது என்பதைப் பார்த்து அதை திரட்டுவதா வேண்டாமா என முடிவு செய்ய முற்படுமானால் அது திணிப்பு போலவே தெரிகிறது. ஒரு வலையிதழுக்கும் திரட்டிக்கும் உள்ள வேறுபாடுகள் இங்கே மழுங்க ஆரம்பிக்கின்றன.

இங்கே திரட்டிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு பதிவர் தன் பதிவொன்றை திரட்டிக்கு அனுப்ப வேண்டாம் என முடிவு செய்வாராயின் அதைச் செய்ய தற்போது எந்த வசதியும் இல்லை.(இருந்தால் எனக்குத் தெரியவில்லை) அப்படி ஒரு வசதியை செய்து தர முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

‘அந்தரங்க வார்த்தைகளை’ தேவைக்கேற்ப பயன்படுத்த தவறாதீர்கள். அப்படி வார்த்தைகளை பயன்படுத்தி பொது வார்த்தைகளாக அவற்றை கொண்டு வர இயலும். முதலில் கொஞ்சம் அருவருப்பு தோன்றலாம். ஏனென்றால் நாம் அப்படி வளர்க்கப்பட்டுவிட்டோம். ஒன்றிரண்டு முறை பேசிப் பழகினால் எல்லாம் சரியாகிவிடும்.

பதிவுலகில் நுழைந்தபோது இங்கு வந்துகொண்டிருந்த சாதி குறித்த பதிவுகளை படித்து எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. ஏனெனில் சாதியின் அதீத தாக்கமின்றி வளர்ந்தவன் நான். ஆனால் அவற்றை படிக்கப் படிக்க பழகிப்போனது. பார்ப்பனீயம் என ஒருவர் குறிப்பிடுவது சாதியை முன்வைத்து அல்ல எனப் புரிகிறது. யோனி, ஆண்குறி என ஒருவர் எழுதுவதுவும் அந்த உறுப்புக்களை நேரடியாகக் குறியிட்டும் அல்ல எனப் புரிந்து கொள்ளவும்.

இடக்கரடக்கல்(Euphemism) என்பது சில நேரங்களில் போலித்தனத்திற்கான இடக்கரடக்கல் சொல்லாகப்படுகிறது. வன்புணர்வு எனும் சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு கற்பழிப்பு எனும் சொல் தரும் பாதிப்பை வன்புணர்வு எனும் சொல் தரவில்லை. அந்தக் கொடூரச் செயலின் தாக்கத்தை வன்புணர்வு எனும் வார்த்தை சரியாக வெளிப்படுத்தவில்லை. ‘கொடும்புணர்வு’ என்பது இன்னும் சிறப்பாகப் படுகிறது. வன்மை எனும் சொல் நாம் பரவலாகப் பயன்படுத்துவதில்லை. ‘கற்பு’ என்பதின் அரசியலைத் தவிர்க்க வன்புணர்வு உருவானதாய் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கொடும்புணர்வு என்பதே பாலியல் பலாத்காரத்திற்கான சரியான மாற்றுச் சொல்லாக இருக்கும்.

பாலுறுப்புக்களை முன்வைத்தே பெண்ணியம் பேச இயலுமா எனும் கேள்வியும் எழலாம். சில சொந்தங்களுக்கப்பாற்பட்ட ஆண் பெண் உறவுகள் பாலியல் அடிப்படையில் மதிப்பிட இயலும். பெண், தன்னை அடிமைப் படுத்தும் ஆணினம் தன்னிடம் வேண்டுவது காமம் மட்டுமே என உணர்ந்தாளானால் அதை தவறென சொல்வதற்கில்லை. அப்படிப்பட்ட உணர்வுகள் எழுவதற்கான சூழல்கள் பல உள்ளன. அவற்றை பொதுவில் பேசுவது தவறல்ல.

எனக்கு நன்கு தெரிந்த ‘அந்தக்கால’ ஆண் ஒருவர் பெண்களைப்பற்றிப் பேசும்போது ‘சேலை வழியா ஒண்ணுக்குப் போற பொம்பள அவளுக்கென்ன தெரியும்?’ என்பார். அதாவது ஒரு ஆணால் சிறுநீரை குறி பார்த்து அடிக்க இயலுமாம். அதில் அவருக்குப் பெருமையாம். பெண்களுக்கெதிரான கட்டமைப்பில் பாலியல் பார்வைகள் இருக்கும்போது பெண்ணியத்துக்கு ஆதரவான பார்வையில் இருக்கக்கூடாதா?

தமிழச்சியை பொறுத்தவரையில் அவரது கொள்கைகளின் மீது பற்றுள்ளவராகவே தெரிகிறார். அவரது நம்பிக்கைகளிலிருந்தே அவரது எழுத்து பதிக்கப்படுகிறது. சில நேரங்களில் வெறுமனே ‘யோனி என்றால் என்ன?’ எனும் பதிவுகளை அவர் போடுவது யோனி எனும் வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவரை சாடும் சிலரை உறுத்துவதற்காகவே என நினைக்கிறேன். பாலுறுப்புக்களை முன்வைத்து அவர் போர்னோ(தமிழில் என்ன?) எதுவும் எழுதிவிடவில்லை.

பெண்ணடிமையின் அடிநாதமாய் காமம் விளங்குகிறது எனும் பார்வை மிகச் சரியானதே என்பதை ஆண்கள் கொஞ்சம் சுயசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம். இடக்கரடக்கல் கருதி வாழ்வின் அவலங்கள் எத்தனையோ பொதுவில் பதிக்கப்படாமல் போகின்றன. ‘பீ’ எனும் வார்த்தையை ஏற்றுக்கொள்ள கடினமாயிருந்தாலும், பீ அள்ளுபவனின் நிலையை அப்படிச் சொல்வதுதான் அவன் நிலையை நேரடியாகப் பதிவதாயிருக்கும். இதை பாதிக்கப்பட்டவன் பார்வையிலிருந்து நோக்கவும். அவனின் வார்த்தை நேரடியானது. தன் உணர்வுகளை அடுத்தவர் எரிச்சல்களுக்காக மூடி மறைக்கவேடிய தேவை அவனுக்கில்லை.

“சங்க காலத்தில் என்னென்ன இருந்தது என்பதைப்பற்றி ஐம்பதாண்டுகளாக ஆராய்ச்சி நடக்கிறது. இலக்கியக் குறிப்புகளை வைத்துப் பார்த்தால் பழந்தமிழனுக்கு ஆண்குறி இருந்தமைக்கான ஆதாரமே இல்லை.” – என்கிறார் ஜெயமோகன். அந்த நிலை நம் தலைமுறைக்கும் வேண்டாம். தைரியமாய் எழுதுங்கள். தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள். குஷ்புவுக்கு எதிரான கலாச்சாரக் காவலர்களின் போராட்டத்திற்கும் யோனி, ஆண்குறி போன்ற வார்த்தை பிரயோகங்களுக்கு எழும் எதிர்குரல்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் எனக்குத் தெரியவில்லை.

நண்பர் ஒருவர்,”தற்போது ‘தமிழ்மணத்தில்’ தாறுமாறான வார்த்தைகள் வருகின்றன.” என்றபோது நான் அவருக்குச் சொன்னது ஒன்றே ஒன்றுதான். “பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.”

Get used to it.

===========================================
பின்குறிப்பு: இந்தப் பதிவு எனக்கும் சேர்த்துதான். இந்த விஷயத்தில் நானும் இன்னும் கடக்கவேண்டிய தூரம் நிறைய உண்டு.
===========================================

Popularity: 32% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....45 மறுமொழிகள் to “தகாத வார்த்தைகள்”

 1. ரவுசு சொல்கிறார்:

  ஐயா !

  முலை ,கொங்கை,யோனி என்பவை இங்கு பாவிக்கப்படுதலில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை. தமிழ் இலக்கியங்களிலெல்லாம் அவை பாவிக்கப்பட்டிருக்கின்றனதான்.

  இங்கு அனைவரும் அறிந்த முலை ,ஆண்குறி,யோனி போன்றவற்றிற்கு வரைவிலக்கணம் எழுத முனைந்தமைக்கும் மேலும் அவற்றை மிக மலிவான விளம்பர உத்திகளுடன் யோனி ஒரு சாக்குப்பை போன்ற மனவக்கிரங்களின் வெளிப்பாட்டைக் காட்ட முற்பட்டதும் தான் எங்கள் ஆட்சேபணையை தூண்டியது.

  இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

 2. //முலை ,கொங்கை,யோனி என்பவை இங்கு பாவிக்கப்படுதலில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.//
  நடப்பதை பார்த்தால் அப்படி தெரியவில்லையே. “யாருக்கும்” என பொதுவாக சொல்லிவிட முடியவில்லை.

  உங்களுக்கு அந்த தெளிவு இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

 3. //இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.//
  இது எந்தக் கட்சியின் சார்பாக?
  :)

  உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடாகவே ஏற்றுக்கொள்கிறேன்.

  மலிவான விளம்பர யுக்தி செய்யாத பதிவர்கள் மிகக் குறைவு. அவை எல்லாவற்றிற்கும் இல்லாத எதிர்ப்பு இங்கே வருவது நெருடலாக இல்லையா?

 4. ரவுசு சொல்கிறார்:

  சிறில் !

  இவர்களின் எழுத்துக்கள் எவ்வகையில் இருந்தது என்பதையும் அவர்களுடைய கருத்தும் கவனமும் எதில் இருந்தது என்பதையும் எனது பதிவொன்றில் இனம் காட்டியிருக்கின்றேன்.

  ஒரு பெண்ணும் ஒரு ஆணும்
  ————————–

  நவீன எழுத்துலகப் பிரமாக்கள் பிரபஞ்சங்களையும் கடந்து எங்க்கேயோ போய்க் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குக்குக் கிடைத்த எழுத்துச் சுதந்திரம் வாழ்க. தங்கள் மன வக்கிரங்களில் விளைந்த புண்களைச் சொரிந்து கொள்ள பேனாக்களைத் தூக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

  எழுத்தை வித்து வயிறு வளர்த்த வியாபாரிகளுக்கு மத்தியில் கெளரவங்களுக்கு மத்தியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தங்கள் மன அரிப்புக்களை எழுதிக் கிழிக்க இவர்கள் களம் புகுந்திருக்கின்றார்கள்.

  இதில் ஆணென்ன பெண்ணென்ன சமநீதி கண்ட உலகத்தில். எல்லாம் முற்போக்கு எழுத்துகளே. பிரபஞ்சம் பற்றிய ஆத்ம விசாரணகள் போய் இஸங்களின் சாயங்களும் வெளுத்துப் போக மனிதாபிமானம் வற்றி விட்ட பூமியில் அதைப்பற்றிப் பேசுவதே வீண் வேலை என்பதை “புரிந்து கொண்டு” தங்கள் குறிகளையே கையில் பிடித்துக் கொண்டு ஒரு கையில் பேனாவையும் தங்கள் மன வக்கிரங்களில் இருந்து வடிந்த நிணங்களையும் கொண்டு இந்த எழுத்துச் சித்தர்கள் இங்கு வந்திருக்கின்றார்கள்.

  பட்டினியால் பரிதவித்து உயிர் துறக்கும் பலகர்களைப் பற்றியோ பக்கத்து நாட்டிலே இரத்தத்தில் தோய்ந்து உயிர் மூச்சை விட்டுத்தள்ளும் சோகங்கள் பற்றியோ தன் தோட்டத்தில் பன்னியாய் பெருகி அழுகும் பார்ப்பனர்கல் பற்றீயோ வடநாட்டுப் பனியாக்கள் பற்றி எது வித கவலைகளும் அற்று குனிந்து பார்த்துத் தம் குறியின் அழுக்குகளைப் பற்றி மட்டுமே எழுத்தத்துணிந்த நிண நாற்றத்துடன் இவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.

  தமிழ் மணத்தில் இப்போதெல்லாம் இந்த வகை நாற்றமே தூக்கலாகத் தெரிகின்றது. அது இவர்களின் எழுத்து சாதித்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  ஒழிவு மறைவாகப் பேசப்பட்ட இவ்வகை கருது பொருட்களெல்லாம் வெளிப்படையாகப் பேசப்பட்ட ஒரு காலம் பற்றி வருங்காலத் தமிழன் வாய் கிழியப் பேசும் ஒரு சாதனையை நாம் செய்துள்ளோம்.

  அனாமத்துக்களாகவும் அதிரடியாக அறிவித்துக்கொண்டும் வந்து வாழ்த்தி புளகாங்கிதம் அடையும் தன் தோல் ரோமத்தைச் சொரிந்து கொண்டு புணரப் போகும் ஒரு இரசிகர் கூட்டமும் இங்கு பெருகி வருகின்றது.

  காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதைப் போல புளக்கர்கள் மாறி வரும் இந்த ரெண்ட்டை மனசிருத்தி நீங்களும் மாறுவீர்களேயானால் நீங்களும் வருங்காலத்தில் ஒரு சார்லஸ் டிக்கின்ஸனாகவோ ஒரு புஸ்பா தங்கத்துரையாகவோ மகுடம் சூட்டிக் கொள்ளலாம் என்பத்தை மறந்து விடாதீர்கள்.

  எப்படியென்று கற்றுக் கொள்ள இத்துறையில் கலக்குக் கலக்கி வரும் இரு எழுத்தாளர்களின் சாம்பிள்கள் உங்கள் பார்வைக்காக…

  //பெண்:

  நவீன பெண் என்ன கேணச்சியா?சிறுநீர் கழிக்க மட்டும் ஒரு …சிறுதுளை போதுமெனக்கு…பெண்ணீயம் சொல்வதாக நீபாசாங்கு செய்யாதே தோழா
  நவீன யுத்திகளையோனிக்குள் திணிப்போம்…ஆண்குறியும் ஆணுறையும்பீய்த்து நாசமாக்கி போட//

  //ஆண்:

  வேலிதாண்டிய பசுக்களின்பாசியாறும் முனகலில்..புனிதப் பசுக்காவலர்களின்..கூட்டமது வன்புணர்கையில்..பெண்மயின் திரை கிழிகையில்..கதறுகிறேன் நான்

  ஆண்களின் கையிலேயே..இனி யோனிகளைப் படைத்துவிடு..சிறுநீர் கழிக்க மட்டும் ஒரு …சிறுதுளை போதுமெனக்கு
  //

 5. //பட்டினியால் பரிதவித்து உயிர் துறக்கும் பலகர்களைப் பற்றியோ பக்கத்து நாட்டிலே இரத்தத்தில் தோய்ந்து உயிர் மூச்சை விட்டுத்தள்ளும் சோகங்கள் பற்றியோ தன் தோட்டத்தில் பன்னியாய் பெருகி அழுகும் பார்ப்பனர்கல் பற்றீயோ வடநாட்டுப் பனியாக்கள் பற்றி எது வித கவலைகளும் அற்று குனிந்து பார்த்துத் தம் குறியின் அழுக்குகளைப் பற்றி மட்டுமே எழுத்தத்துணிந்த நிண நாற்றத்துடன் இவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.
  //
  பெண்ணியம் பேசுவது தேவையற்றதா? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மற்ற சமூக அவலங்களைப்போல இதுவும் ஒன்றில்லையா?

  உங்கள் மொழிபாவனை மட்டும் சரியானதா? ஒருவர் தன் கருத்தை வெளியிடுவது குறியிலிருந்து அழுக்கெடுப்பது என நீங்கல் வர்ணிக்கையில் ஒரு பெண் தன்யோனிக்குப் பூட்டுப் போடுவது எப்படி தவறான ஒப்பீடாக முடியும். நான் பதிவில் சொல்லியிரூப்பதுபோல காமம் பெண்ணடிமைத் தளத்தின் அடிநாதம் எனக் கொள்வதில் தவறில்லை. ஆண்கள் பெண்களை போகப் பொருட்களாக பார்ப்பதை விரும்பாத பெண் தன் பெண்ணுறுப்புக்கே பூட்டு போடுகிறாள். பட்டினி, ஏழ்மை, சாதியம், போர் மட்டுமே சமூக அவலங்கள் இல்லை.

  பெரியார் கர்ப்பப்பையை பூட்டச் சொன்னார் இவர்கள் யோனியையே மூடச் சொல்கிறார்கள். They have moved a step ahead of Periyar.

 6. ஜமாலன் சொல்கிறார்:

  நல்ல அலசல். சரியான தருணத்தில் இதனை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் கருத்துடன் எனக்கு மழு உடன்பாடு உண்டு. சகமனிதனை கூனிக் குறுக வைப்பதும் சமூக அவலங்களைக்கண்டு குறைந்நதபட்சம் மனத் துயரடையாத மன நிலையும் தனது சாதி தனது மதம் தனது இனம் தனது… தனது.. இப்படி எண்ணற்ற தனதுகளால் சகமனிதனை சாகடிப்பதும் ஆன கொடரங்களே ஆபாசமானவை மற்றவை எல்லாம் மனிதனை உய்விக்க வந்தவையே அவை யொனியா அல்லது லிங்கமா (ஆண்குறி) என்பதல்ல…

  மலிவான விளம்பர உத்தி என்பவர்களுக்கு… அதனை பார்ப்பதும் அங்கீகரிப்பதும் நாம்தான். அதற்காக எதிராக போராடுவது என்பது அதை தடைசெய்வதாகாது. அது மீண்டும் வேறு வடிவில் வரத்தான் செய்யும்.

  இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது விளம்பர உத்தி என்றால் அத நமது மன ஆரோக்கியம் தொடர்புடையதே? பதிப்பவரது அறிவையோ உணர்வையோ சார்ந்தது அல்ல.
  அன்புடன்
  ஜமாலன்

 7. ஜமாலன் சொல்கிறார்:

  நல்ல அலசல். சாழயான தருணத்தில் இதனை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் கருத்துடன் எனக்கு மழு உடன்பாடு உண்டு. சகமனிதனை கூனிக் குறுக வைப்பதும் சமூக அவலங்களைக்கண்டு குறைந்நதபட்சம் மனத் துயரடையாத மன நிலையும் தனது சாதி தனது மதம் தனது இனம் தனது… தனது.. இப்படி எண்ணற்ற தனதுகளால் சகமனிதனை சாகடிப்பதும் ஆன கொடரங்களே ஆபாசமானவை மற்றவை எல்லாம் மனிதனை உய்விக்க வந்தவையே அவை யொனியா அல்லது லிங்கமா (ஆண்குறி) என்பதல்ல…

  மலிவான விளம்பர உத்தி என்பவர்களுக்கு… அதனை பார்பப்பதும் அங்கீகரிப்பதும் நாம்தான். அதற்காக எதிராக போராடுவது என்பது அதை தடைசெய்வதாகாது. அது மீண்டும் வேறு வடிவில் வரத்தான் செய்யும்.

  இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது விளம்பர உத்தி என்றால் அத நமது மன ஆரோக்கியம் தொடர்புடையதே? பதிப்பவரது அறிவையோ உணர்வையோ சார்ந்தது அல்ல.
  அன்புடன்
  ஜமாலன்

 8. Cheena ( சீனா) சொல்கிறார்:

  நண்பரே !! ஒரு குழப்பத்தில் இருக்கிறேன். பதிவு, பதிவின் நோக்கம் புரிந்தாலும், பழக்கப் படுத்திக்கொள்ள இசைந்தாலும், ஏதோ ஒன்று தடுக்கிறது. இருக்கட்டும் – பார்க்கலாம்.

 9. சீனா,
  அது ஒன்றுமில்லை. கொஞ்ச நாள் கழித்து நம்ம வீட்டுக்கு வரும்போது ஒரு வீச்சம் அடிக்கும்.. கொஞ்ச நேரம்தான் .. அப்புறம் பழகிடும்.

  we have to start unlearning at times.

 10. ravishankar சொல்கிறார்:

  வழிமொழிகிறேன்.

 11. எனக்கு உடன்பாடில்லை.

  கையும் முகமும் போல் முலையும் யோனியும் ஆண்குறியும் மனித உறுப்புகள் தான். அதை மறைத்து வைப்பதால்தான் பிரச்னை. அதனால் திறந்து வைத்துக் கொண்டே நடக்கலாம்

  //அந்தரங்கங்களை மறைத்து வைத்துவிட்டதாலேயே அங்கு குற்றங்கள் மிக அதிகமாக நடக்கின்றன. ஏனெனில் அக்குற்றங்களை எளிதில் வெளியில் சொல்ல முடியவில்லை.//

  இரண்டுக்கும் ஏதும் வேறுபாடு உள்ளதா?

 12. சுல்தான்,
  முதலில் ‘தகாத வார்த்தைகளை’ பயன்படுத்தியதற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள். பின்னூட்டத்திற்கு நன்றி.

  முதலில் பிரச்சனை காம உறுப்புக்களை காண்பிப்பதைப் பற்றியோ, அவற்றை பயன்படுத்துவது பற்றியோ அல்ல. அப்படி ஒரு தோற்றம் இருக்குமாயின் தவறே. பதிவுகளில் நடக்கும் வொவாதங்களை நீங்கள் கவனிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

  //அந்தரங்கங்களை மறைத்து வைத்துவிட்டதாலேயே// என்பதற்கு முன்னால் நான் சொல்ல வருவது அந்தரங்கங்களை பேசுவது குறித்துதான்.

  அதை இப்படி வாசிக்கலாம் //அந்தரங்கங்களை சொல்லாமல் மறைத்து வைத்துவிட்டதாலேயே//

  மற்றபடி மனிதன் பாலுறுப்புக்களை பொதுவில் காண்பித்துச் சென்ற காலம் இருந்திருக்கும். அப்போது அவன் ஒரு குழந்தையைப் போலவே இருந்திருப்பானாயிருக்கும்.

  இது தகாத ‘வார்த்தைகள்’ ககுறித்த பதிவுதான். அந்தக் கட்டத்தை நீங்கள் தாண்டிவிட்டீர்கள் என்பதை உங்கள் பின்னூட்டத்த்லிருந்ட்டு தெரிந்து கொள்கிறேன்.
  :)

 13. அந்தரங்கத்தில் வைப்பதை அங்கேயே வைப்பதே சிறந்தது. பலபேர் வந்து போகும் அரங்கத்தில் அந்தரங்கத்தை எழுதுவதும், பல பேர் முன்னிலையில் அந்தரங்கங்களை திறந்து கொண்டு நடப்பதும் எனக்கு ஒன்றாகவே தெரிகிறது.

  அதை மறைத்து வைத்து, வேண்டுமென்பவர் அதைச் சரியான முறையில் தேடிப்பெற வேண்டுமென்பதே என் கருத்து நண்பர் சிறில். அவரவர்க்கு அவரவர் கருத்து. இந்த விடயத்தில் உங்கள் கருத்தோடு உடன்பாடில்லை.

  //முதலில் ‘தகாத வார்த்தைகளை’ பயன்படுத்தியதற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்.//
  இருப்பினும் அரங்கத்தில் நான் தவறான வார்த்தைகளை உபயோகித்தது தவறுதான்.

  //மனிதன் பாலுறுப்புக்களை பொதுவில் காண்பித்துச் சென்ற காலம் இருந்திருக்கும். அப்போது அவன் ஒரு குழந்தையைப் போலவே இருந்திருப்பானாயிருக்கும்.//
  இல்லை நண்பரே. மனித அறிவு சரிவர வளராமல் மிருகம் போல இருந்திருப்பானாயிருக்கும்.

 14. //அந்தரங்கத்தில் வைப்பதை அங்கேயே வைப்பதே சிறந்தது. பலபேர் வந்து போகும் அரங்கத்தில் அந்தரங்கத்தை எழுதுவதும், பல பேர் முன்னிலையில் அந்தரங்கங்களை திறந்து கொண்டு நடப்பதும் எனக்கு ஒன்றாகவே தெரிகிறது.//
  ம்.. புதிய தலைமுறையாவது இதிலிருந்து விடுதலை பெரட்டும்.

  //இல்லை நண்பரே. மனித அறிவு சரிவர வளராமல் மிருகம் போல இருந்திருப்பானாயிருக்கும்.//
  அதேதான். புதிதாய் பிறந்த குழந்த்யின் மூளையில் நம் மதிப்பீடுகள் ஏதும் தினிக்கப்படா நிலையில் நிலையில் அது ஒரு விலங்கு விலங்கு குட்டிதான்..

  //அதைச் சரியான முறையில் தேடிப்பெற வேண்டுமென்பதே //
  அப்படி என்னென்ன முறைகள் ஒரு சாமான்யனுக்கு இருக்கின்றன…?
  10 முதல் பதின்ம முடிவுக்குள்ளான வயதுடைய இளைஞர்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன?

 15. S. Sankarapandi சொல்கிறார்:

  சிறில் அலெக்ஸ், நீங்கள்தான் பதிவுகளில் நடக்கும் விவாதங்களை கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.அல்லது சரியான வழியில் புரிந்து கொள்ள (விரும்ப)வில்லையோ என நினைக்கிறேன்.

  இரண்டு விசயங்கள்:

  (1) யோனியையும், ஆண்குறியையும் பற்றியோ, அல்லது பாலியல் பிரச்னை அல்லது பாலியல் விவகாரங்கள் பற்றியோ பதிவுகளில் எழுதப் படாமலில்லை, தமிழ் மணத்தில் வராமலில்லை, எதிர்காலத்திலும் வராமல் இருக்கப் போவதுமில்லை. பிரச்னை இந்த வார்த்தைகளைப் பற்றியோ அல்லது அவற்றற அனுமதிக்கும் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றியோ அல்ல என்பது இங்கு இருக்கும் அனைவருக்கும் புரிந்திருக்கக் கூடும். அவ்வார்த்தைகள் பெண்ணடிமைத் தளைகளுக்கும், அல்லது வேறு எந்த வகையான ஒடுக்குமுறைக்கும் எதிரான கலகக் குரலாக ஒலிக்கும் பொழுது அவ்வார்த்தைகளுக்கு ஆதரவாகத்தான் (ஆம், கண்டு கொள்ளாமலல்ல, ஆதரவாகத்தான்) தமிழ்ப் பதிவுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதனால்தான் என் போன்றவர்களுக்கு இந்தப் பதிவுலகத்தின் மீதான நம்பிக்கையும், ஆர்வமுமே. ஆனால் அப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் கண்டுகொள்ளாமல் புனித பிம்பங்களாகத் திரிபவர்களில் சிலர் இப்பொழுது இவ்வார்த்தைகளின் சுதந்திரம் பறிக்கப் பட்டதாக திரிப்பவர்களாக மாறுவதுதான் வியப்பே!

  இங்கு பிரச்னை அவ்வார்த்தைகளல்ல. அவ்வார்த்தைகளுக்கு இருந்து வந்த “கலக வார்த்தைகள் அல்லது அறியாமையைக் களையும் வார்த்தைகள்” என்ற மரியாதையைப் போக்கி கருத்தாழமில்லாத வெறும் பரபரப்பையூட்டும் வகையில் திரும்பத் திரும்ப எரிச்சலூட்டும் வகையில், அதுவும் பலர் சுட்டிக் காட்டியபடி “குழந்தைகள் கூடப் பதிவெழுதும், படிக்கும்” ஒரு பொதுவெளியில் எழுதியதுதான் பிரச்னையே. இங்கும் கூட எந்த நோக்கத்துக்காக இந்த வார்த்தைகள் கண்டிப்பாகப் பயன் படுத்தப் படவேண்டும் என்று பகுத்தறிவாளர்களும், கலகக் காரர்களும் விரும்புவார்களோ அவற்றுக்கு நேர் எதிரான விளைவுகளையே உண்டு பண்ணும் என்ற பகுத்தறிவின்மை உணரப் படவேண்டும். இங்கு கருத்துச் சுதந்திரம் மறுக்கப் பட்டது என்பதை விட குழந்தைகளும் இயங்கும் பொது வெளியில் எப்பொழுதும் அவை மட்டுமே வந்து கொண்டிருக்க வேண்டாமே என்ற கட்டுப் பாடுதான். அதிகப்படியான வன்முறையோ, காமமோ, கெட்ட வார்த்தைகளோ உள்ள திரைப்படங்களை உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பார்ப்பது வேண்டுமானால் உங்கள் கருத்துரிமையாக இருக்கலாம். ஆனால் என்னுடைய கருத்துரிமையும் அப்படித்தான் இருக்க வேண்டும் நீங்கள் தீர்மானிக்க முடியாது.

  2. பெரியார் பகுத்தறிவு என்று சொன்னது அவருடைய கருத்துக்களுக்கும் கூடத்தான். பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது தள்ளி விடுங்கள் என்றுதான் குறிப்பிட்டார். எத்தனையோ விசயங்களை – பிள்ளையார் சிலை உடைப்பு, பாம்பு-பார்ப்பான் ஒப்பீடு, பெண்கள் ஆண்களைப் போல் உடை அணிவது, பிள்ளை பெறாமலிருப்பது என அவர் கலக அடையாளமாகச் சொன்னவற்றையெல்லாம் அவரே செய்துகொண்டிருக்க வில்லை. மக்கள் பகுத்தறிவதற்கு/சிந்திப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தவே அவர் முன் வைத்தவை. எனவே பெரியார் சொல்லி விட்டார், சதா அப்படியே செய்து கொண்டிருப்பேன் என்பது பகுத்தறிவின்மையே.

  நன்றி – சொ. சங்கரபாண்டி

  (குறிப்பு: இப்பின்னூட்டத்துக்கும், தமிழ்மணத்துக்கும் தொடர்புப் படுத்த வேண்டாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இங்கு தெரிவிக்கிறேன், விவாதிக்க விரும்புகிறேன்.)

 16. //அவ்வார்த்தைகளுக்கு இருந்து வந்த “கலக வார்த்தைகள் அல்லது அறியாமையைக் களையும் வார்த்தைகள்” என்ற மரியாதையைப் போக்கி கருத்தாழமில்லாத வெறும் பரபரப்பையூட்டும் வகையில் திரும்பத் திரும்ப எரிச்சலூட்டும் வகையில், அதுவும் பலர் சுட்டிக் காட்டியபடி “குழந்தைகள் கூடப் பதிவெழுதும், படிக்கும்” ஒரு பொதுவெளியில் எழுதியதுதான் பிரச்னையே. //
  தமிழச்சியின் உள் நோக்கங்களை நாம் எப்படி முடிவு செய்வது?
  She is running her campaign. அதில் அவருக்கு சரியான நம்பிக்கை இருந்தால் போதுமானது.

  திரும்பத் திரும்ப பயன்படுத்துவதில் பலருக்கும் எரிச்சல் எப்படி வருகிறது? ஏன் வருகிறது? ஏன் இந்த வார்த்தைகள் நமக்குப் பழக்கப்படவில்லை என்பது போன்ற கேள்விகளை முன்வைத்துதான் எழுதினேன்.

  பெண்ணியத்தை பொறுத்தவரை எதைப் பேசுவது, எதைச் செய்வது, எதை மூடிவைப்பது என்பதை பெண்களே முடிவு செய்யட்டுமே. For a change.

  தமிழ்மணத்தை குழந்தைகள் படிக்கிறார்கள் என்பது புது செய்தி. அவர்களுக்கென பக்கத்தை உருவாக்க வேண்டுகோள் வைக்கிறேன். அப்படி இல்லையென்றால் எல்லா பதிவர்களூக்கும் பொதுவாய் ஒரு அறிவிப்பை போட்டு குழந்தைகள் படிக்கிறார்கள் கவனமாய் எழுதவும் இல்லையேல் விலகிக்கொள்ளுங்கள் எனச் சொல்லவும்.

 17. அலெக்ஸ் ஸார், இக்கட்டுரையை எழுதியது தாங்கள்தானா..?

  முதல் முறையாக நீங்கள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறீர்கள்.

  வருந்துகிறேன்..

 18. அவ்வப்போது நானும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குவதுண்டு… உண்மையில் இந்த பதிவை எழுதியபின் எனக்குள் இருந்த சில மனத்தடைகளை உடைத்தெறிந்து விடுதலை பெற்ற உணர்வு பெற்றுள்ளேன். யாரெல்லாமோ ஏற்றி வைத்த சுமைகளை சுமந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொன்றாகக் களளந்ந்தால்தான் நாம் நாமாக, மனிதனாக முடியும் போல.

  அதிர்ச்சி நல்லது :)

 19. thamizachi சொல்கிறார்:

  சிறில் அலெக்ஸ்

  காலகாலமாக கடைப்பிடித்து வரும் மரபுகளைப்
  பற்றி பேசும் போது சமூகத்தில் முதலில் அதிர்ச்சியாகத்தானிருக்கிறது.
  பழமையை ஆராயாத மனோபாவமும், புதியதை ஏற்கத் தயங்கும்
  சிந்தனைகளும், சமூகத்தில் முரண்பட்ட கருத்துக்களை உற்பத்தி
  செய்து கொண்டேதானிக்கிறது.

  சக மனிதர்களும் எப்போதும் ஆபத்தானவர்களாகவே இருக்கிறார்கள்.
  இருந்தும் உலகம் புதியன நோக்கி சென்று கொண்டு தானிருக்கிறது.
  ஒரு காலத்தில் ஏற்பட்ட சிந்தனைகள் இன்று கேள்விக்குறிக்கப்படு
  கிறது. இன்றைய சிந்தனைகள் நாளைய மனிதனால் கேள்விக்குட்
  படுத்தும்.மனிதனின் அறிவும், சிந்திக்கும் திறனும் அப்படிப்பட்டது.
  மனப்பாடம் செய்து ஓப்புவிக்கும் கல்வி முறைகளும் இலக்கியச்
  சிந்தனைகளும் தமிழ்சமூதாயத்தில் அதிகமாகவும் அதற்கு மட்டுமே
  முன்னூரிமைக் கொடுத்துக் கொண்டும் இருப்பதால் மக்களுக்கு
  அறிவியல் அறிவு கிடைக்கமல் இருக்கிறது. ஒரு சமூகத்தில்
  அறிவியல் அறிவு பரந்து காணப்படும் போது அங்கே பகுத்துபார்த்து
  அறிந்து கொள்ளும் புரிதல் ஏற்படுகிறது. நம் சமூகத்தில் மாறுபட்ட
  கருத்துக்களை எடுத்துச் செல்லும் போது வரும் எதிர்புக்களுக்காக
  போராட வேண்டியிருக்கிறது.

 20. ravishankar சொல்கிறார்:

  //“கலக வார்த்தைகள் அல்லது அறியாமையைக் களையும் வார்த்தைகள்” என்ற மரியாதையைப் போக்கி கருத்தாழமில்லாத வெறும் பரபரப்பையூட்டும் வகையில் திரும்பத் திரும்ப எரிச்சலூட்டும் வகையில், அதுவும் பலர் சுட்டிக் காட்டியபடி “குழந்தைகள் கூடப் பதிவெழுதும், படிக்கும்” ஒரு பொதுவெளியில் எழுதியதுதான் பிரச்னையே.//

  சங்கரபாண்டி – தமிழ்ப்பதிவுகளில் கணிசமாக வீதம் பதிவுகள் ஏதோ ஒரு காரணத்துக்காக ஏதோ ஒரு சாராருக்கு எரிச்சல் ஊட்டக்கூடியவை தான். அவை எல்லாவற்றையும் மட்டுறுத்த இயலுமா?

  என் கண்களில் பட்ட பதிவுகளில் தமிழச்சி எழுதிய பதிவுகளைக் காட்டிலும் அவரைக் கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்றும், அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்றும், சந்தடி சாக்கில் hit countஐ ஏற்றிக் கொள்ளப் பார்த்த பதிவுகள் தான் மிகுதி. இவர்கள் குறித்து என்ன நிலைப்பாடு எடுப்பது? தமிழச்சியை மட்டும் தனியாகக் கட்டம் கட்டுவது சரி இல்லை.

  பரபரப்புக்காகவும் கருத்தாழமில்லாமலும் இப்படி அவர் எழுதக்கூடாது என்று சொல்ல நாம் யார்? ஒருவேளை கருத்தாழமில்லாமல் பரபரப்புக்காக அப்படி எழுதினால் அது அவரது பெயருக்கும் பரப்ப விரும்பும் கொள்கைகளுக்கும் தான் இழப்பே தவிர நமக்கு அல்ல. கருத்தாழம், பரபரப்பு போன்ற அடிப்படைகளில் வடிகட்டினால் எத்தனை வீதம் தமிழ்ப்பதிவுகள் தேறும்? கருத்தாழம், பரபரப்பு போன்றவற்றுக்கான வரையறையும் அவற்றைச் செயற்படுத்தும் சிந்தனையாளர்களும் யார்?

  நான் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பதிவுகளை அறிமுகப்படுத்த விரும்பினால் http://arumbugal.blogspot.com போன்ற பதிவுகளை அறிமுகப்படுத்துவேனே தவிர எந்த ஒரு திரட்டித் தளத்தையும் அறிமுகப்படுத்த மாட்டேன். திரட்டித் தளங்களில் வரும் இடுகைகளில் கணிசமானவற்றைப் பெரியவர்களாலேயே புரிந்து கொள்ள, சகித்துக் கொள்ள இயலாத நிலை இருக்கும்போது எந்த நம்பிக்கையில் அவற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது? 15 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு இன்றைய தமிழ்ப்பதிவுகளின் உள்ளடக்கத்தை எந்த அளவு புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. இந்த இடத்தில் இத்தளங்களை அறிமுகப்படுத்தித் தரும் பெரியவர்களுக்குத் தான் கூடிய judgment இருக்க வேண்டும்.

  இந்தச் சொற்கள் மட்டும் தான் பிரச்சினையா? வாரக் கடைசி ஜொள்ளுப் பதிவுகளும் நடிகைகளின் அரை குறை படங்களைப் போட்டு வரும் பதிவுகளும் குழந்தைகளுக்கு உகந்தவை தானா? யோனி என்ற சொல்லைக் கூடப் புரிந்து கொள்ளாமல் புறந்தள்ளிப் போகும் குழந்தைகள் இருக்கலாம். ஆனால், இந்தப் படப் பதிவுகள் தெளிவாகக் குழந்தைகள் மனதைக் குழப்புமே? இவற்றைக் குறித்து என்ன நிலைப்பாடு எடுப்பது? child-friendly content என்றால் இந்தச் சொற்களைத் தாண்டி மட்டுறுத்த எத்தனையோ இருக்கிறது.

  குழந்தைகளுக்கு உகந்த தமிழ்த் தளங்கள் பெருக வேண்டும் என்பது தான் என் விழைவும். ஆனால், அப்படி விழையும் திரட்டிகள் பதிவுகளைச் சேர்த்துக் கொள்ளும் போதே – குழந்தைகளுக்கு உகந்த உள்ளடக்கம் கொண்ட இடுகைகள் மட்டுமே எழுதலாம் என்றும், குழந்தைகளுக்கு உகந்த இடுகைகள் என்றால் என்ன என்று வரையறையும் தர வேண்டும். சேர்த்து விட்டு, இடையில் ஒரு சிலரை மட்டும் கட்டம் கட்டி அறிவிப்பு தருவது சரி அல்ல.

  இதை எல்லாம் விட உடனடியாக நீங்கள் எளிதாகச் செயற்படுத்தக்கூடியது ஒன்று உண்டு:

  தமிழ்மணத்துக்கு அனுப்பி வைக்கையில் என்ன வகை, பூங்காவுக்கு அனுப்ப சம்மதமா என்று கேட்பது போல், இது child friendlyஆ என்றும் ஒரு check boxல் வைக்கலாம். இங்கு குழந்தைகளின் வயதுக்கான வரையறையாக 15 வயதை வைத்துக் கொள்ளலாம். இப்படி சம்மதம் தெரிவிக்கும் இடுகைகளை மட்டும் முகப்பில் காட்டலாம். வயது வந்தோருக்கான இடுகைகளைத் தனி ஒரு பக்கத்தில் காட்டலாம். சூடான இடுகைகள் போல். இந்த வகையில் ஒரு இடுகை குழந்தைகள் வாசிப்புக்கு உகந்ததா என்று அந்தந்த பதிவர்களே எளிதாகத் தீர்மானிக்கலாம். வயது வந்தோருக்கான சொற்கள், நடிகைகளின் அரை குறை படங்கள், வாரக் கடைசி ஜொள்ளுப்பதிவுகள், வன்முறைக் காட்சிகள், கோரக் காட்சிகள் நிறைந்த படங்கள் போன்றவற்றை இப்படி பதிவர்களே வடி கட்டி அனுப்பலாம். அப்படி குழந்தைக்கு உகந்தது என்று சொல்லிவிட்டு எடக்கு மடக்கான இடுகையைப் போட்டாலும் வாசகர்கள் தட்டிக் கேட்க ஒரு நியாயம் இருக்கும். பதிவர்களுக்கும் வயது வந்தோர்களுக்கான சிந்தனைகளை வெளிப்படுத்த ஒரு நியாயமான வாய்ப்பு கிடைக்கும். இடுகைகளை விலக்குவோம், திரட்டுவதை நிறுத்துவோம் என்று சொல்வதைக் காட்டிலும் இது அனைவருக்கும் ஏற்புடைய ஏற்பாடாக இருக்கலாம்.

 21. oruvan சொல்கிறார்:

  யோனியைப் பற்றி பேசுவது தவறா இல்லையா என்பதல்ல விவாதம். பெண்ணுரிமையில் யோனி சாம ச்சாரத்தை விட்டால் வேறு விடயமே இல்லையா? அதுவும் சுய விளம்பரத்திற்கு யோனியும் ஆண்குறியும் தானா கிடைத்தது?

  ஏன் நச்சென ஒரு படத்தையே போட்டால் மேலும் விளக்கமாக இருக்குமே! இந்தப் பதிவுகளைப் படிக்க விரும்பும் இளசுகளுக்கு உதவியாக இருக்குமே!

  எல்லோரும் கலவியில் ஈடுபடுகிறார்கள். அதை வெளிப்படையாக பொது இடத்தில் செய்தால் என்ன என்பதுதானே அக்காவின் விருப்பம்?

 22. இராம் சொல்கிறார்:

  //பருத்த முலைகளின் கனம் தாங்காமல் ஒடிந்து போகும் இடையைக் கொண்டவளே எனக் கடவுளைப் புகழ்ந்தெழுதிய மொழி தமிழ். ஏதோ வெள்ளை ஆடை அணிந்த சில சாமியார்கள் செய்த சதியால் உலகம் காமத்தை பாவம் எனப் பார்க்க ஆரம்பித்தது.//
  தடிக்காமல் போன எழுத்துக்களுக்கு அர்த்தம் நீங்கள் திராவிடத்தை உரசுவதாகவும்,
  தடித்த எழுத்துக்களுக்கு வந்தேரிகளின் முகம் சொன்னாதாய் அர்த்தம் கொண்ட தனிழ்மன மெடிஸ்கலின்ன் சந்தேகங்களை விளக்கி பதிவு போடுவீங்களா???? :)

 23. இராம் சொல்கிறார்:

  //தனிழ்மன மெடிஸ்கலின்ன் //

  தமிழ்மண மேட்டிஸ்களின்

  ஐயா,

  Preview’ன்னு பிளாக்கர்’லே ஏதோ ஒன்னு இருக்குமே??? இங்க எங்கயிருக்கு??

  //© 2007 http://www.cyrilalex.com | WordPressஆல் இயக்கப்படுகிறது | வார்ப்புரு வடிவமைப்பு:Bob | வார்ப்புரு மீள் வடிவமைப்பு: சிறில் அலெக்ஸ் //

  புரியல தயவு செய்து விளக்கவும்…©

 24. //பெண்ணுரிமையில் யோனி சாம ச்சாரத்தை விட்டால் வேறு விடயமே இல்லையா?//
  இல்லை என்றாலும் சரியாகத்தானிருக்கும். காமத்தின் அடிப்படையில் பெண்ணியம் பேசுவது அவசியமானதாகவே தெரிகிறது. பெண்ணியத்தில் பேசப்படும் சுதந்திரதில் காமத்திற்கு சம முக்கியத்துவம் இருக்கிறது. பாலுறுப்புக்களை இங்கே குறியீடுகளாகப் பார்க்க வேண்டும்.

  கர்ப்பப்பையை மூடிவிடுவது பெண்ணியப் போராட்ட முறை என ஏற்றுக்கொண்டால் பெண்குறியை மூடிவிடுவது அதற்கும் ஒருப்படி மேல்.

 25. காமம் பாவம் என்பது பரவலாய் நம்பப்பட்டது கிறீத்துவத்தை முன்வைத்தே. அதுவும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விக்டோரிய மதிப்பீடுகள் இந்தியாவில் நுழைந்துவிட்டன என நம்புகிறேன். வெள்ளை உடை அணிந்த சாமியார்கள் கிறீத்துவ பாத்ரியார்கள் என எடுத்துக் கொள்ளவும்.

  ஆரியம் திராவிடம் ஏன் பெண்ணியம் பேசும் அளவுக்கும் நான் பெரிய ஆளெல்லாம் இல்ல. நடக்கும் விவாதங்கள் குறித்த என் எண்ண ஓட்டத்தை பதிக்க விரும்பினேன். பதித்தேன். வலைப்பதிவென்பது அதற்காகத்தானே?
  :)

 26. thamizachi சொல்கிறார்:

  ///காமத்தின் அடிப்படையில் பெண்ணியம் பேசுவது
  அவசியமானதாகவே தெரிகிறது.///

  கண்டிப்பாக காமத்துடன் பெண்ணீயத்திற்கு சம்பந்தம் உண்டு.
  ஏனெனில் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் திணிக்கப்பட்டு
  சமூகத்தில் தன் சுயநலப்போக்கிற்காககவே ஆணியம்
  பெண்ணீயத்தை வக்கீர குணம் கொண்டு அடக்க முற்படுகிறது.
  தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியாதாக
  இருக்க வேண்டும் எண்ணம் தான் பெண்ணடிமைத்தனத்தை
  உருவாக்குகிறது.

  மேலும் அறிய
  http://thamizachi.blogspot.com/2008/02/d.html

 27. இராம்,
  இந்தத் தளம் WordPress மென்பொருளால் இயக்கப்படுகிறது. wordpress என்பது Blogger போன்ற சேவை மட்டுமல்ல. அது ஒரு இலவச கட்டற்ற மென்பொருள். அதை பதிவிறக்கி நம் தளத்தில் நிறுவி இயக்கலாம்.

  இந்தப் பதிவுக்கான Template Bob என்பவர் வடிவமைத்த வார்ப்புருவை அடிப்படையில் கொண்டு மறு வடிவமைக்கப்பட்டது(என்னால்).

  சற்றுமுன் வார்ப்புருவும் இதுபோலவே செய்யப்பட்டது. அதை செய்தவர்கள் ரவசங்கர்+சிந்தாநதி.

  WordPressல் preview இல்லைண்ணு நினைக்கிறேன்.

 28. thamizachi சொல்கிறார்:

  //காமம் பாவம் என்பது பரவலாய் நம்பப்பட்டது கிறீத்துவத்தை
  முன்வைத்தே. அதுவும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்
  விக்டோரியமதிப்பீடுகள் இந்தியாவில் நுழைந்துவிட்டன என
  நம்புகிறேன். வெள்ளை உடை அணிந்த சாமியார்கள் கிறீத்துவ
  பாத்ரியார்கள் என எடுத்துக் கொள்ளவும்.///

  காமம் பாபம் என அறிவுறுத்தபட்டது கிறிஸ்தவம் என்று மட்டும்
  கூறுவது தவறான வாதமாகும். எல்லா மதங்களுமே காமத்தை
  அருவருப்பான விஷயமாகவே மனிதனுக்கு அறிவுறுத்தி வந்தன.
  அதற்கு முக்கிய காரணம் மதவாதிகளால் மனிதர்களை தங்களுடைய
  கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கி ஆளவும், மனிதர்களுடைய
  அனைத்து சுதந்திரங்களையும் தன்னிச்சையாக செயல்படும் போக்கை
  தடுத்து நிறுத்தவும் கையாண்ட பலவழிகளில் ஓன்று தான் காமத்தை
  இழிவாக உருவகப்படுத்தியது. ஆனால் அரசனோ, உயர்ந்த
  ஜாதிக்காரர்களோ அல்லது சராசரி ஆணோ யதார்த்தங்களில்
  பொண்டாட்டியும் வப்பாட்டியுமாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.
  ஓரு காலத்தில் பல பெண்களை அனுபவிப்பதும் தனக்குயதாக பல
  பெண்கள் இருப்பதும் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது.
  பெயரளவில் மட்டுமே ஒழுக்கநெறிகள் அது, இது என்று
  பேசப்பட்டாலும் ஆணியமும், மதமும் பெண்களை இவ்விஷயத்தில்
  மட்டும் மிக எச்சரிக்கையாக வைத்திருந்தனர். அதற்காக பல
  காவியங்கள், கற்பு, புனிதம் என பெண்களை திருப்தி படுத்த முயன்றனர்.

 29. S. Sankarapandi சொல்கிறார்:

  //சிறில் அலெக்ஸ்: தமிழச்சியின் உள் நோக்கங்களை நாம் எப்படி முடிவு செய்வது?//
  //ravishankar: தமிழச்சியை மட்டும் தனியாகக் கட்டம் கட்டுவது சரி இல்லை.//

  சிறில், இரவி நீங்கள் இருவரும் குறிப்பிடுவது போல் தமிழச்சியின் இடுகைகளை முன்வைத்து மட்டும் நான் என் கருத்துக்களைச் சொல்லவில்லை. தமிழ்மணம் நீக்கியிருக்கும் இடுகைகளில் தமிழச்சியின் இடுகைகள் மட்டுமல்லாமல் வேறு சிலரின் இடுகைகளும் உள்ளடங்கும். தமிழச்சிக்காவது அவர் எழுதிய ஒரு சில இடுகைகளில் அவர் எடுத்துரைக்கும் கொள்கை ரீதியிலான நியாயங்கள் இருந்தன. மற்றவை வெறும் பரபரப்புக்காகவே எழுதப் பட்டவை என்று பதிவர்களே சுட்டிக் காட்டினர்.

  இவற்றை அவர்கள் ஏன் எழுதக் கூடாது என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர்கள் எழுதக் கூடாது என்று நான் சொல்லவில்லை. அவர்களது இடுகைகளில் தொடர்ந்து எழுதட்டும். படிக்க விருப்பமுள்ளவர்கள் படிக்கட்டும். அனைத்துத் தரப்பினரும் படிக்கும் பொதுவெளியில் தோன்றுவதில் (அவ்வப்பொழுது தேவை கருதித் தோன்றுவதில் அல்ல, எப்பொழுதும் தொடர்ந்து தோன்றுவதில் மட்டுமே) உள்ள பிரச்னையை, எதிர்விளைவைத்தான் சுட்டிக் காட்டியிருந்தேன். தமிழச்சியிடமும் எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை, அவரது இடுகைகள் வர வேண்டும். சமூக மாற்றம் விவாதத்தின் மூலமும், புரிந்துணர்வின் மூலமும் வரவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். தமிழ்மணம் நீக்கும் இடுகைகளைக் கூட அவர் தளத்துக்கு நேரடியாகச் சென்று படிப்பதில் எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை.

  ஆபாசப் படங்கள் வரும் இடுகைகளை என்ன செய்ய என்றீர்கள். அவையும் அடிக்கடி போடப் பட்டாலோ, தலைப்பில் கூவி விற்கப் பட்டாலோ வாசகர்கள் சுட்டிக்காட்டத்தான் செய்வார்கள். இரவிசங்கர் சொல்வது போல் தொழில் நுட்பரீதியில் இவற்றை அவரவர் விருப்பத்துக்குட்பட்டதாக மாற்ற முடியும். தமிழ் மணம் அதைச் செய்யும் என்றும் நம்புவோம். அதுவரையில் சில நேரங்களில் இப்படிப் பட்ட கட்டுப் பாட்டைத்தான் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இருவரும் பங்கு பெற்றுள்ள OPML திட்டத்தில் போலி டோண்டுவின் பதிவைச் ஏன் சேர்க்கவில்லையோ அது போலத்தான். போலி டோண்டுவின் பதிவையும், தமிழச்சியின் பதிவையும் ஒப்பிடுவதாக எண்ணி விடாதீர்கள். கருத்துச் சுதந்திரம் என்றால் போலி டோண்டுவுக்குக் கூடக் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்று வாதாடலாமில்லையா? கட்டற்ற கருத்துச் சுதந்திரம் என்றவொன்று எந்த சமூக வாழ்க்கையிலும் இருக்க முடியாது.

  எந்த ஒரு பொருளிலும் முடிவில்லாமல் தொடர்ந்து விவாதம் பண்ணிக் கொண்டிருக்கலாம்தான். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள எனக்குக் கால அவகாசமில்லை என்று கூறி முடிக்கிறேன்.

  நன்றி – சொ. சங்கரபாண்டி

 30. ravishankar சொல்கிறார்:

  சங்கரபாண்டி –

  தமிழச்சியின் இடுகைகள் தவிர இன்னும் சிலரது இடுகைகளும் நீக்கப்பட்டிருப்பது எனக்கு செய்தி. இது குறித்து தமிழ்மணம் ஒரு இடுகையிலோ அல்லது எங்கேனும் மறுமொழியிலோ தெரிவித்து இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். இது வரை தெரிவிக்காவிட்டால், அப்படி தெரிவித்தால் தமிழ்மணத்தின் செயற்பாடுகளை எளிதில் அனைவரும் அறிந்து கொள்ள இயலும்.

  தமிழ்மணம் இந்த விசயத்தில் நுட்ப ரீதியில் அணுகக்கூடும் என்று அறிய இயல்வது மகிழ்ச்சி. நன்றி.

  http://groups.google.com/group/tamil-blogs-open-opml/members பாருங்கள். சிறில் இந்த திறந்த opml திட்டத்தில் இது வரை இணைந்திருக்கவில்லை. அவரை விட்டுவிடுங்கள் :)

  போலி டோண்டுவின் பதிவு எது, அது திறந்த opmlல் இருக்கிறதா என்றே எனக்குத் தெரியாது. திறந்த opml திட்டம் ஒரு கூட்டு முயற்சி என்பதால் பலரும் அதில் இடுகைகளைச் சேர்த்து இருந்தார்கள். எந்த ஒரு பதிவையும் திட்டமிட்டுத் தணிக்கை செய்யவில்லை என்பதால் அதில் போலி டோண்டுவின் பதிவு சேர்க்கப்பட்டு நீக்கப்பட்டதாகவும் சொல்ல இயலாது. போலி டோண்டுவே இத்திட்டத்தில் சேர்ந்த தன் பதிவைச் சேர்த்துக் கொள்ளும் அளவுக்குத் திறந்த திட்டமாகத் தான் இருக்கிறது. திட்டத்தின் பயன்பாட்டு உரிமத்தின் படி எந்தப் பதிவை நீக்குவது என்பதைப் பயனர்கள் கையிலேயே விட்டிருக்கிறோம்.

 31. //தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியாதாக இருக்க வேண்டும் எண்ணம் தான்
  பெண்ணடிமைத்தனத்தை உருவாக்குகிறது.//
  தோழர் தமிழச்சி. இந்த மாதிரி ஒரு ஆண் எண்ணுவது தவறானதென்பதுதான் உங்களது எண்ணமா? இது பெண்ணடிமைத்தனமா? தம்மை முற்போக்காக எண்ணி கற்பப்பை சுதந்திரம் போன்ற கட்டற்ற சுதந்திரம் வேண்டுவதுதான் பெண்ணுரிமையா?

  அதிகமான பெண்கள் இந்த எண்ணம் கொண்டவர்கள்தானே. இதை அவர்கள் தங்கள் உரிமையாக பார்ப்பதினால் எத்தனை எத்தனை வழக்குகள் நீதிமன்றங்களில்!. அவ்வாறு பெண்கள் தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பது பிற்போக்குத்தனமா?

  மேலுள்ளதில் உங்கள் எண்ணம் என்ன சிறில்?

  எல்லா மதங்களுமே காமத்தை அருவருப்பான விஷயமாகவே மனிதனுக்கு அறிவுறுத்தி வந்தன.
  எல்லா மதமும் என்று எப்படிச் சொல்கிறீர்கள் தமிழச்சி.
  மனிதர்கள் இல்லற வாழ்க்கையை விட்டு விலகினால்தான் புனிதர்கள் ஆக முடியும் என்ற மதங்கள்தான் காமத்தை அருவருப்பாக பார்த்தன. இல்லற வாழ்க்கை வாழாதவனை கண்டிக்கும் மார்க்கம் அதை எப்படி அருவருப்பாக போதிக்கிறதென்று சொல்லுங்களேன்.
  ஆண்களுக்கு பெண்களிடம் உரிமையும் கடமையும் இருப்பது போல் பெண்களுக்கு ஆண்களிடம் உரிமையும் கடமையும் உண்டு என்பது இஸ்லாம்.

 32. சன்னாசி சொல்கிறார்:

  சிறில், சில நாளைக்கு முன்பு உங்களது இந்தப் பதிவைப் படித்தபோது எழுதவேண்டுமென்று நினைத்தது, விட்டுப்போய்விட்டது. முதலில், இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஒரு சின்ன விஷயம் பற்றி:

  //இடக்கரடக்கல் கருதி வாழ்வின் அவலங்கள் எத்தனையோ பொதுவில் பதிக்கப்படாமல் போகின்றன. ‘பீ’ எனும் வார்த்தையை ஏற்றுக்கொள்ள கடினமாயிருந்தாலும், பீ அள்ளுபவனின் நிலையை அப்படிச் சொல்வதுதான் அவன் நிலையை நேரடியாகப் பதிவதாயிருக்கும். இதை பாதிக்கப்பட்டவன் பார்வையிலிருந்து நோக்கவும். அவனின் வார்த்தை நேரடியானது. தன் உணர்வுகளை அடுத்தவர் எரிச்சல்களுக்காக மூடி மறைக்கவேடிய தேவை அவனுக்கில்லை.//

  //பின்குறிப்பு: இந்தப் பதிவு எனக்கும் சேர்த்துதான். இந்த விஷயத்தில் நானும் இன்னும் கடக்கவேண்டிய தூரம் நிறைய உண்டு.//

  என்றிருக்கிறீர்கள். பின்னாலே சொல்லியிருப்பது சரிதான். சிறிது தூரம் கடந்து வந்துதான் இருக்கிறீர்கள். பீ குறித்து எழுதுவது குறித்து – தலித் எழுத்தாளர்கள் இதைத்தான் செய்து வருகிறார்கள். இப்படி இருக்கையில், எழுதுவதற்கு பீ பண்ணிக்கறி குசு இதைத்தவிர வேறேதுமில்லையா என்று கேட்பவர்கள் போல, தலித் எழுத்தாளர்களெல்லாம் உடலில் பீ நாற்றத்தோடுதான் எழுதுகிறார்களா என்ற உங்கள் கேள்விக்கான பதிலையும், அவர்கள் ஏன் பீ நாற்றத்தோடு எழுதுவது போலத் தோன்றுகிறது என்ற கேள்விக்கான காரணத்தையும், காலப்போக்கில் உணர்ந்து தெளிந்திருப்பதாகத் தெரிகிறது, வாழ்த்துக்கள். இதேபோல இந்த ‘சகஜமற்ற வார்த்தைகள்’ குறித்த தெளிவும் அனைவருக்கும் ஏற்படுமென நம்புவோமாக.

 33. KARTHIKRAMAS சொல்கிறார்:

  சிறில்,

  சன்னாசி சுட்டிய பதிவுக்கு போனேன். பழைய இந்த பின்னூட்டம் கண்ணில்பட்டது.
  ஒரு வேளை நீங்கள் இதை வாசிக்காம‌ல் போயிருக்க‌லாம். உங்க‌ள் பார்வையில் மாற்ற‌ம் இருப்ப‌தாக‌ சொல்லியிருக்கிறீர்க‌ள்.என‌வே இங்கே.

  ==

  karthikramas has left a new comment on your post “பீயள்ள வருகிறார் சுஜாதா”:

  /தலித் எழுத்தாலர்களெல்லாம் இப்படி நாற்றத்தோடுதான் எழுதுகிறார்களா என்ன?/
  சிறிலின் கேள்வி எதிர்மறையாய் இருந்தாலும் அவருக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்.

  சிறில் பிரச்சினை தலித் எழுத்தளர் பீ அள்ளுகிறார்களா என்று கேட்பது மிகவும் சரியான வாதமாக இருந்தா, ‘ஏன் தலித் எழுத்தாளர்கள் என்றாலே பீதான் அள்ளவேண்டுமா? ‘ என்ற கேள்விக்கு எப்படி பதில் சொல்வீர்கள்? இன்னும் ஒரு படி மேலே போய், யாரெல்லாம் இப்படி கேள்வி கேட்பீர்கள் என்று எங்களுக்குத் தெரியும் என்றுகூட என்னால் சொல்லமுடியும்.

  அழகிய பெரியவனின் கட்டுரையின் உட்பொருள், தலித் எழுத்தாளர்களுக்கிடையே பொதுவாக இருக்கும் ஒரு நோக்கமாவது சுஜாதாவுக்கு கடுகளவாவது இருக்குமா? என்பதுதான். “தாம்பிராஸ் கூட்டத்தில்” ஒரு விதமாகப் பேசியவருக்கு, “தலித் ” எழுத்தாளராக காட்டிக்கொள்ளத் தேவை வந்திருப்பது உண்மையிலேயே வியப்பானது. அவரது செயல்பாடுகள் எந்த அளவுக்கு அதற்கு இடம் கொடுப்பவை என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.சுட்டியை இட்டமைக்கு நன்றி, இன்னும் முக்கியமான விசயங்களையும் டானியல் குறித்து எழுதியிருந்தார் அதையும் இட்டிருக்கலாம்.

 34. thamizachi சொல்கிறார்:

  //தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியாதாக இருக்க வேண்டும் எண்ணம் தான்
  பெண்ணடிமைத்தனத்தை உருவாக்குகிறது.//
  தோழர் தமிழச்சி. இந்த மாதிரி ஒரு ஆண் எண்ணுவது தவறானதென்பதுதான் உங்களது எண்ணமா? இது பெண்ணடிமைத்தனமா? தம்மை முற்போக்காக எண்ணி கற்பப்பை சுதந்திரம் போன்ற கட்டற்ற சுதந்திரம் வேண்டுவதுதான் பெண்ணுரிமையா?////

  தோழர் சுல்தான்
  தம்மை முற்போக்காக எண்ணி கற்ப்பை சுதந்திரம் போன்ற கட்டற்ற சுதந்திரம் வேண்டுவதுதான் பெண்ணூரிமை என்று சொல்லியிருக்கிறேனா? அதற்காக பெண்கள் தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பது பிற்போக்குத்தனமா? என்ற கேள்வியை விட பெண்ணின் ஒழுக்கத்திற்கு சமயம் விதிக்கின்ற கட்டுப்பாடுகளையும் அடக்கு முறைகளையும் தான் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். தன்னுடைய சந்ததி கலப்போ கலப்பில்லையோ அது பெண்ணீற்கு மட்டுமே தெரிந்த சங்கதி. ஒழுக்கமும் கட்டுப்பாடுகளும் பெண்களின் மனதில் சிந்தனையில் இருந்து வர வேண்டியவை. பெரியார் கூறியது போல உறை போட்டு (முக்காடு) மூடி வைக்க வேண்டிய ஜடமல்ல.

  முதலில் நீங்கள் இஸ்லாமியனாக இல்லாமல் மனிதனாக மேற்கொண்டு வாதத்தை தொடங்க விருப்பப்பட்டால் விவாதத்திற்கு நல்லது. இஸ்லாம்,அல்லா என்கீறீர்களே உங்களின் அல்லாவின் இந்த புனித வார்த்தைக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

  الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

  (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள். எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

 35. Joseph சொல்கிறார்:

  எப்படி சிரில் இப்படி அசத்துறிங்க, ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவு படித்தேன், ரொம்ப முன்னேரிட்டீங்க :)

 36. //தம்மை முற்போக்காக எண்ணி கற்ப்பை சுதந்திரம் போன்ற கட்டற்ற சுதந்திரம் வேண்டுவதுதான் பெண்ணூரிமை என்று சொல்லியிருக்கிறேனா?//
  நாங்கள் தப்பாக புரிந்து விட்டோமா? “தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியாதாக இருக்க வேண்டும் எண்ணம் தான் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்குகிறது” என்று சொல்வதன் மூலம் நீங்கள் சொல்ல வருவதுதான் என்ன என்று விளக்குங்களேன்.

  //முதலில் நீங்கள் இஸ்லாமியனாக இல்லாமல் மனிதனாக மேற்கொண்டு வாதத்தை தொடங்க விருப்பப்பட்டால் விவாதத்திற்கு நல்லது.//
  இங்கு நான் இஸ்லாத்தைப் பற்றி எதுவம் சொல்லவில்லையே. பொதுவில்தான் பேசியிருக்கிறென். சந்தேகமிருந்தால் என் பின்னூட்டங்களை திரும்பவும் வாசியுங்கள்.

  //இஸ்லாம்,அல்லா என்கீறீர்களே உங்களின் அல்லாவின் இந்த புனித வார்த்தைக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?//
  ‘நீங்கள் இப்படி செய்தது தவறு’ என்றால் ‘உங்கம்மா அதனால்தான் தீபாவளியன்று செத்தார்கள்’ என்று சொல்வது போல் இருக்கிறது.
  வெவ்வேறான விடயங்களுக்கு தனியாய் பதிவிட்டது போல் தனியாய் பதிவிடுங்கள். விருப்பமென்றால் எனக்கும் அறியத்தாருங்கள். அங்கே விவாதிப்போம்.

 37. thamizachi சொல்கிறார்:

  ////// சுல்தான் …….

  எல்லா மதமும் என்று எப்படிச் சொல்கிறீர்கள் தமிழச்சி.
  மனிதர்கள் இல்லற வாழ்க்கையை விட்டு விலகினால்தான் புனிதர்கள் ஆக முடியும் என்ற மதங்கள்தான் காமத்தை அருவருப்பாக பார்த்தன. இல்லற வாழ்க்கை வாழாதவனை கண்டிக்கும் மார்க்கம் அதை எப்படி அருவருப்பாக போதிக்கிறதென்று சொல்லுங்களேன்.
  ஆண்களுக்கு பெண்களிடம் உரிமையும் கடமையும் இருப்பது போல் பெண்களுக்கு ஆண்களிடம் உரிமையும் கடமையும் உண்டு என்பது இஸ்லாம்.////////

  இங்கு நான் இஸ்லாத்தைப் பற்றி எதுவம் சொல்லவில்லையே என்று நீங்கள் சொன்னதற்கு மேலே உள்ளவற்றை எடுத்துக் காட்டியிருக்கிறேன். இஸ்லாம் என்றால் எதைக் குறிப்பது?

  ////“தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியாதாக இருக்க வேண்டும் எண்ணம் தான் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்குகிறது” என்று சொல்வதன் மூலம் நீங்கள் சொல்ல வருவதுதான் என்ன என்று விளக்குங்களேன்.////

  ஓரே வரியில் சொல்லிவிடலாம். நீங்கள் யதார்த்தத்தை சற்று அலசி பாருங்கள். நமக்கு முன்னே பல எடுத்துக்காட்டுக்கள் உண்டு.

  ///‘நீங்கள் இப்படி செய்தது தவறு’ என்றால் ‘உங்கம்மா அதனால்தான் தீபாவளியன்று செத்தார்கள்’ என்று சொல்வது போல் இருக்கிறது.///

  நான் கேட்டது குரானின் புனித வார்த்தைகளுக்கு விளக்கங்கள்…. திபாவளி, அம்மா, மரணம், வேண்டாமே…

  ////வெவ்வேறான விடயங்களுக்கு தனியாய் பதிவிட்டது போல் தனியாய் பதிவிடுங்கள். விருப்பமென்றால் எனக்கும் அறியத்தாருங்கள். அங்கே விவாதிப்போம்.////

  நம் விவாதத்தை இங்கே தான் தொடங்கினோம். இங்கேயே தொடரலாம்…

  நன்றி

 38. //இங்கு நான் இஸ்லாத்தைப் பற்றி எதுவம் சொல்லவில்லையே என்று நீங்கள் சொன்னதற்கு மேலே உள்ளவற்றை எடுத்துக் காட்டியிருக்கிறேன்.//
  வேண்டுமென்றே தடித்த எழுத்துகளில் நான் எழுதியது. எல்லோருக்கும் புரிகிற மாதிரி, சரியாக, தெளிவாக சொல்லியுள்ளீர்கள். இதே போல் மற்றவற்றுக்கும் தெளிவான பதில் தாருங்கள்.

  நான் கேட்டது: ‘தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியாதாக இருக்க வேண்டும் எண்ணம் தான் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்குகிறது’ என்று சொல்வதன் மூலம் நீங்கள் சொல்ல வருவதுதான் என்ன என்று விளக்குங்களேன்.
  நீங்கள் சொன்னது: ஓரே வரியில் சொல்லிவிடலாம். நீங்கள் யதார்த்தத்தை சற்று அலசி பாருங்கள். நமக்கு முன்னே பல எடுத்துக்காட்டுக்கள் உண்டு.
  என்ன சொல்ல வருகிறீர்கள் அல்லது அதன் மூலம் எதை நீங்கள் விரும்புகறீர்கள் என்று தெளிவாகச் சொன்னால் விவாதம் தொடர ஏதுவாயிருக்கும்.

  //திபாவளி, அம்மா, மரணம், வேண்டாமே… //
  சரி. வேண்டாமென்று விட்டுடுவோம்.

  //நான் கேட்டது குரானின் புனித வார்த்தைகளுக்கு விளக்கங்கள்…. //
  இதற்கு நீண்ட விளக்கம் அளித்தால்தான் சரியாகப் புரியம். இது போன்ற கேள்விகள் நிறைய பேருக்கு இருப்பதால்.
  இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)இன்னும் ஒரிரு வாரத்துக்கள் என்னுடைய ‘அழைப்பு’ பதிவில் தனியான விளக்கம் அளிக்கிறேன்.

  //இஸ்லாம் என்றால் எதைக் குறிப்பது?//
  மனிதன் வாழ்வாங்கு வாழ, வாழும் வழி முறைகளைக் குறிப்பதுதான் இஸ்லாம்.

 39. thamizachi சொல்கிறார்:

  ///இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)இன்னும் ஒரிரு வாரத்துக்கள் என்னுடைய ‘அழைப்பு’ பதிவில் தனியான விளக்கம் அளிக்கிறேன். ///

  மிக்க நன்றி.

  //இஸ்லாம் என்றால் எதைக் குறிப்பது?//
  மனிதன் வாழ்வாங்கு வாழ, வாழும் வழி முறைகளைக் குறிப்பதுதான் இஸ்லாம்.

  இஸ்லாமியனை கேட்டால் குரான் உயர்ந்தது என்பான். கிறிஸ்தவனை கேட்டால் பைபிள் உயர்ந்தது என்பான். இந்துவைக் கேட்டால் பகவத் கீதையைக் கூறுவான் ஆக அவரவர் மதங்ககள் மட்டும் தான் அவர்களுக்கு உயர்ந்ததாக தெரிகிறது.அடுத்தவன் மதத்தை குறைகூறுகிறது. பகுத்தறிவாதி மூன்றுமே சரியில்லையென்பான். மதக் கருத்துக்களை தூக்கி குப்பையில் போட்டு விட்டு மனிதன் அறிவுன் மூலம் விடைக்காண முயல்கிறானோ அதுவரையில் இது போன்ற வாக்குவாதங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

  நன்றி

 40. ‘தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்குகிறது’ என்று சொல்வதன் மூலம் நீங்கள் சொல்ல வருவதுதான் என்ன என்று நான் கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம். வருமென்று ஏதிர்பார்க்கக் கூடாது என்பதும் தெரியும். பதிலிருந்தால்தானே சொல்வதற்கு.

  //பகுத்தறிவாதி மூன்றுமே சரியில்லையென்பான். மதக் கருத்துக்களை தூக்கி குப்பையில் போட்டு விட்டு மனிதன் அறிவுன் மூலம் விடைக்காண முயல்கிறானோ அதுவரையில் இது போன்ற வாக்குவாதங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.//
  என்னைப் பொருத்தவரை பகுத்தறிவுவாதி என்பவன் சுயமாய் சிந்திப்பவன். மற்றவர்களுடைய முடிவுகளை, சிந்தனைகளைப் பார்த்து அதிலேயும் சிந்திக்கப் புகுபவன்.
  இப்போது சிலர் குர்ஆனையோ, பைபிளையோ, பகவத்கீதையோ, எதையுமே படிக்காமல், அதற்கு சொல்லப்படும் விளக்கங்களை பார்க்காமலும், கேட்காமலும், தன்மானத் தலைவர் பெரியார் அந்த காலத்துக்கு தேவையானவற்றை சொன்னதைப் பிடித்துக் கொண்டு, அது இப்போது சரி வருமா என்று கூட சிந்திக்காமல், தம்மை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டு அலைவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. அவர்களை பெரியார் மதம் என்ற மதத்துக்காரர்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.
  ஏனெனில் மாலையிடுவதையும், மரியாதை செய்வதையும் அறியாத சிலைகளுக்கு (பெரியார் சிலை மட்டும் அறியுமோ!) அதையெல்லாம் செய்து, பெரியார் சொன்ன சிந்தனையையே அடகு வைத்து விட்டார்கள்.

  இஸ்லாத்தில் எல்லா கேள்விகளுக்கும் தெளிவான விடைகளுண்டு. கண்ணை மூடிக் கொண்ட சிலர் இஸ்லாம் இருண்டதாய் பிதற்றுகிறார்கள். பகுத்தறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள சுயமாய் சிந்திக்க முற்படுமாறு மக்களை அழைக்க வேண்டியதிருக்கிறது. இன்னொரு பெரியாரின் தேவை அவசியமாயிருக்கிறது.

 41. //‘தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்குகிறது’ //
  சுல்தான் இதன் மூலம் அவர் சொல்ல வருவது ‘கற்பை’ முன்வைத்த பெண்ணடக்கு முறைகளை. கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரமானதாய் இருக்கும் கட்டுப்பாடு எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் அவரின் வரிகள்.

 42. //கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரமானதாய் இருக்கும் கட்டுப்பாடு எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் அவரின் வரிகள்.//
  நீங்கள் அந்த மாதிரி புரிந்து கொண்டது சிறப்பானது சிறில்.
  எனினும் ஏன் அவ்வாறு புரிந்து கொள்ள முடியாது என்பதற்கும், சொல்லப்பட்ட விடயம் காலங்காலமாக இருபாலருக்குமாக உள்ள கட்டுப்பாடுதான் என நிறைய விவாதங்கள் அதில் தொக்கி நிற்கிறது.
  விவாதம் மிக நீண்டு விட்டதால் இத்துடன் நிறுத்துவோம்.
  தோழர் தமிழச்சி தேவையெனக் கேட்டால் பின் தனியாகத் தொடருவோம்.

 43. thamizachi சொல்கிறார்:

  ///‘தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்குகிறது’ என்று சொல்வதன் மூலம் நீங்கள் சொல்ல வருவதுதான் என்ன என்று நான் கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம். வருமென்று ஏதிர்பார்க்கக் கூடாது என்பதும் தெரியும். பதிலிருந்தால்தானே சொல்வதற்கு.///

  தோழர் சுல்தான்..
  இதிலேயே என் பதில் இருக்கிறதே…

  (தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்குகிறது’)

  ///சிலர் குர்ஆனையோ, பைபிளையோ, பகவத்கீதையோ, எதையுமே படிக்காமல், அதற்கு சொல்லப்படும் விளக்கங்களை பார்க்காமலும், கேட்காமலும், தன்மானத் தலைவர் பெரியார் அந்த காலத்துக்கு தேவையானவற்றை சொன்னதைப் பிடித்துக் கொண்டு, அது இப்போது சரி வருமா என்று கூட சிந்திக்காமல், தம்மை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டு அலைவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.///

  பகுத்தறிவு சிந்தனையை அந்த காலத்து சிந்தனை என்று சொல்லிக் கொண்டு இஸ்லாம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களே! அது எந்தக் காலத்தில் சொல்லப்பட்டது? பெரியார் இது தான் சரி நீங்கள் இதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்றோ எதையும் குறிப்பிட்டு சொல்லியதில்லை. சுயமாக சிந்தித்து செயல்படுங்கள் என்று தான் சொன்னார்.

  பெரியார் பற்றி யுனெஸ்கோ சொல்கிறது :

  பெரியார், புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை. அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் மட்டமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி…

  யுனெஸ்கோ 27-6-1970

  ///பெரியார் மதம் என்ற மதத்துக்காரர்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.
  ஏனெனில் மாலையிடுவதையும், மரியாதை செய்வதையும் அறியாத சிலைகளுக்கு (பெரியார் சிலை மட்டும் அறியுமோ!) அதையெல்லாம் செய்து, பெரியார் சொன்ன சிந்தனையையே அடகு வைத்து விட்டார்கள்.///

  தமிழ்நாட்டில் ஒருசிலர் செய்யும் கூத்துக்கு ஒட்டுமொத்த பெரியாரிஸ்டுக்களையும் உங்களால் எப்படி குறை சொல்ல முடிகிறது?

  மாலைக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

  தோழர் ஒருவர் தன் காலில் விழுந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் பெரியார்.
  (பெரியார் திரைப்படத்தில் இக்காட்சி உள்ளது)

  மாலைக்கும், பெரியாரையும் சம்பந்தப்படுத்தி பேசாதீர்கள். சிலையால் என்ன செய்ய முடியும்?

  ///இஸ்லாத்தில் எல்லா கேள்விகளுக்கும் தெளிவான விடைகளுண்டு///

  குரானில் இருப்பதை எடுத்துப் போட்டு கேள்வி கேட்கிறேன்.இதற்கு பதில் சொல்லுங்கள்.

  الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

  (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள். எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

  ///கண்ணை மூடிக் கொண்ட சிலர் இஸ்லாம் இருண்டதாய் பிதற்றுகிறார்கள்.///

  அது யார் என்று வாசகர்கள் முடிவு செய்யட்டும்.

  ///பகுத்தறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள சுயமாய் சிந்திக்க முற்படுமாறு மக்களை அழைக்க வேண்டியதிருக்கிறது.///

  அப்படியெல்லாம் நீங்கள் அழைத்துப்பாருங்கள் குரானுக்கும், பகவத் கீதைக்கும், பைபிளுக்கும்
  ஆப்பு தான்….

  ///பெரியாரின் தேவை அவசியமாயிருக்கிறது.///

  பெரியாரிடம் இருக்கும் சிறப்பு எது தெரியுமா? பெரியாரை குறை சொல்பவர்கள்கூட கடைசியில் தஐமாறிப் போய் இந்த சமூகத்திற்கு இன்னொரு பெரியார் வேண்டும் என்று சொல்வது தான். ஏனெனில் பெரியார் பகுத்து அறிவுகள் என்பதைத் தவிர வேறு எதையும் சொன்னதில்லை.

  (E.X)

  முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா? (குடிஅரசு.03.11.1929)

  பெண்ணைக் கொல்ல ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொல்லப் பெண்ணுக்கும் உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும். (கு.12.2.28.13.3)

  பெண்ணைக் கொல்ல ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொல்லப் பெண்ணுக்கும் உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும். (கு.12.2.28.13.3)

  பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும்கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும். (வி.14.2.61;1:பெ,செ.)

  கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும். (கு.8.1.28;15:1)

  பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது? (பெ.க.மு.தொ;134)

  பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை. (கு.1.3.36;11:3)

  சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ”ஆண்மை”க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ”ஆண்மை”க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி. (கு.12.8.28;10:2)

  பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான். கு.16.11.30;7)

 44. thamizachi சொல்கிறார்:

  //////////////////////////////
  சிறில் அலெக்ஸ் on 11.02.2008 at 19:32 (Reply)

  //‘தன்னுடைய சந்ததி கலப்பில்லாததாக தனக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் பெண்ணடிமைத்தனத்தை உருவாக்குகிறது’ //

  சுல்தான் இதன் மூலம் அவர் சொல்ல வருவது ‘கற்பை’ முன்வைத்த பெண்ணடக்கு முறைகளை. கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரமானதாய் இருக்கும் கட்டுப்பாடு எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் அவரின் வரிகள்.
  //////////////////////

  அதே தான்…

 45. thamizachi சொல்கிறார்:

  ////சுல்தான் on 12.02.2008 at 09:29 (Reply)

  //கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரமானதாய் இருக்கும் கட்டுப்பாடு எப்படி வந்தது என்பதற்கான விளக்கம் அவரின் வரிகள்.//
  நீங்கள் அந்த மாதிரி புரிந்து கொண்டது சிறப்பானது சிறில்.
  எனினும் ஏன் அவ்வாறு புரிந்து கொள்ள முடியாது என்பதற்கும், சொல்லப்பட்ட விடயம் காலங்காலமாக இருபாலருக்குமாக உள்ள கட்டுப்பாடுதான் என நிறைய விவாதங்கள் அதில் தொக்கி நிற்கிறது.
  விவாதம் மிக நீண்டு விட்டதால் இத்துடன் நிறுத்துவோம்.

  தோழர் தமிழச்சி தேவையெனக் கேட்டால் பின் தனியாகத் தொடருவோம்.///

  விவாதம் நீண்டு கொண்டே போவது தவறல்ல. நீங்களோ, அலெக்ஸ் அவர்களோ நாகரிகமாக, பண்பட்டவர்களாகவே உங்களுடைய கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  என்னை விமர்சித்தோ, கேவலப்படுத்தியோ அல்லது முகம் தெரியாத அனானிகளின் கருத்துக்களுக்கோ முக்கியத்துவம் கொடுத்ததில்லை. ஆனால் உங்களின் விவாதங்களில் கலந்து கொள்வது எனக்கு ஆரோக்கியமானதாக உணர்கிறேன். ஆகையால் தொடர்வோம் தோழர் சுல்தான்…

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்