சற்றுமுன் உள்ளூர் செய்திகள்

சற்றுமுன் Feb 15 அன்று ஒரு வருட பிறந்த நாளை கொண்டாடியது. அதை முன்னிட்டு சற்றுமுன் உள்ளூர் செய்திகள் எனும் புது சேவையை உருவாக்கியுள்ளோம்.

இது நீங்கள் வசிக்கும் இடத்தில் நிகழும், உருவாகும் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளம். இங்கே யார் வேண்டுமானாலும் ஒரு படிவத்தை பயன்படுத்தி செய்திகளை அனுப்ப முடியும். மட்டுறுத்தலுக்குப் பின் செய்தி வெளியிடப்படும். இந்த சேவை குறித்து உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்.

மிக எளிய முறையில் பயன்படுத்த ஏதுவானது.

சற்றுமுன் ஒரு வருட முடிவுக்கு பதிவுலகிலிருந்து அவ்வளவாக ஊக்கமில்லையோ எனத் தோன்றியது. சற்றுமுன் ஒரு தனித்தளமாய் இயங்கியபோதும் அது ஒரு வலைப்பதிவு என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவே மற்ற வலைப்பதிவுகளைப்போலவே சற்றுமுன் குழுவிற்கும் ஊக்கங்கள் தேவை. (எப்படியெல்லாம் பின்னூட்டம் கேக்கவேண்டியிருக்குப்பா).

வேர்ட்பிரஸ் மென்பொருளில் இயங்கும் தனித் தளங்களில் பின்னூட்ட மின்னஞ்சல் முகவரி கட்டாயம் தேவை என்றாலும் anony@anony.com போன்ற மின்னஞ்சலைத் தந்து பின்னூட்டமிட முடியும். பலர் ஊட்டுவது வழக்கம்.

என்னுடைய www.cyrilalex.com தளத்தில் பின்னூட்டமிட தற்போது மின்னஞ்சல் அவசியமில்லை.

ஒரு வருட நிறைவு பதிவு

சற்றுமுன் உள்ளூர் செய்திகள் தளம்

=============

Popularity: 6% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....உங்கள் கருத்தை தெரிவிக்கவும்