எனக்கு 4 மனைவிகள்

பணக்காரன் ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவனுக்கு நாலாமவள் மேல் கொள்ளை ஆசை. அவளை அலங்கரித்து அழகு பார்ப்பான், இனிய உணவளித்து உபசரிப்பான். அவளின் இச்சைகளை தீர்க்க இவன் தவறியதேயில்லை.

மூன்றாமவள் மீதும் அவன் அன்பு வைத்திருந்தான். அவள் தன்னுடன் இருப்பதில் பெருமை கொண்டான். தன் நண்பர்களுக்கு அவளை அறிமுகப்படுத்துவதில், அவளைக் கண்டு அவர்கள் மலைப்பதில் பெருமை கொள்வான். ஆயினும் எப்போதும் அவள் யாருடனும் போய்விடக் கூடும் எனும் பயம் அவனிடம் இருந்துகொண்டேயிருந்தது.

இரண்டாமவள் இவன்மீது பற்றுள்ளவளாயிருந்தாள். இவன் கவலைக்குள்ளாகையில் அவளிடம் ஆறுதல் கிடைத்தது. இவனின் நம்பிக்கைக்குரியவளாக அவள் இருந்தாள்.

முதல் மனைவியை பணக்காரன் கண்டுகொள்ளவேயில்லை. ஆயினும் அவள் அவன் மீது அதீத அன்பு வைத்திருந்தாள்.

ஒரு நாள் பணக்காரன் உடல் நலம் குறைந்து படுக்கையிலானான். மரணத்துக்குப் பின் தனிமையில் வாடுவோமே எனும் கவலை அவனுக்கு வந்தது.

தான் அதிகம் அன்புவைத்திருந்த நான்காம் மனைவியை அழைத்து ‘என் மரணத்துக்குப் பின் துணையாக என்னோடு வருவாயா?’ எனக் கேட்டான்.

அவளோ. ‘முடியவே முடியாது’ எனச் சொல்லிவிட்டாள்.

மூன்றாம் மனைவியோ, ‘முடியாது! உன் மரணத்துக்குப் பின் நான் வேறொருவரை மணக்கப் போகிறேன் என்றாள்’

இரண்டாமவள்,’நான் உன்னை கல்லரையில் இடும்வரை மட்டும் உன்னோடு இருக்க முடியும். அதற்குப் பின் முடியாது என்றாள்.’

முதலாம் மனைவியோ,’நான் உன்னோடு வரத் தயார் என்றாள்.’

அவன் அவளைப் பார்த்தான். அவளோ கவனிக்கப்படாமல் ஒல்லியாக அழகிழந்து வறியவளைப் போல காணப்பட்டாள்.

‘நான் எனக்கு இயன்றபோது உன்னை சரியாகக் கவனித்திருக்க வேண்டும்’ என கவலை கொண்டான்.

நமக்கெல்லாருக்குமே 4மனைவிகள் (அல்லது கணவன்கள் என எடுத்துக் கொள்ளவும்)

நான்காம் மனைவி நம் உடல். இறப்புக்குப் பின் அது நம்மோடு வருவதில்லை.
மூன்றாம் மனைவி நம் சொத்துக்கள். இறப்புக்குப் பின் வேறொருவரிடம் போய் சேர்கின்றன.
இரண்டாம் மனைவி நம் சொந்தங்கள். கல்லறைவரைதான் அவற்றின் துணை.
நாம் கவனிக்கத் தவறும் நம் முதல் மனைவி நம் ஆன்மா.

இணையத்தில் படித்த கதை. இன்னும் படிக்க http://www.indianchild.com (இப்பதான் பார்த்தேன். சில கதைகள் கிறீத்துவ பின்னணியில் சொல்லப்பட்டுள்ளன. You have been warned).

:)

Popularity: 21% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....32 மறுமொழிகள் to “எனக்கு 4 மனைவிகள்”

 1. thamizachi சொல்கிறார்:

  அலெக்ஸ்,

  நீங்களும் விவரம் தெரிந்த ஆளா தான் இருக்கிறீங்க! தலைப்புக்கு சொனனேன். சத்தியமா பதிவை படிக்கல.. உடனே பின்னூட்டம் போட தோன்றியதால்…

 2. //(அல்லது கணவன்கள் என எடுத்துக் கொள்ளவும்)//

  இதையும் முதல்லேயே பதிவில் போட்டுட்டேன்.. :)

 3. தலைப்பைப் பார்த்துவிட்டுதான் என்ன சேதி என்று பார்க்கவந்தேன் :-) ஆனால் நான் கதை முழுக்கப் படித்தேன். பொருள் அருமை.

 4. thamizachi சொல்கிறார்:

  அலெக்ஸ் என்ன கதை இது? அதுவும் உங்கள் தளத்தில் இப்படி ஒரு கதையா?

  இரண்டாமவள்,’நான் உன்னை கல்லரையில் இடும்வரை மட்டும் உன்னோடு இருக்க முடியும். அதற்குப் பின் முடியாது என்கிறாள்’ அவள் வாதம் தான் நியாயமானது. கணவன் சாகும் போது கூட துணை கேக்கின்றதா? இப்படித்தான் உடன்கட்டை ஏறுதல் இந்து மதத்தில் உருவானதோ? ஒரு வேளை தன் மரணத்திற்கு பின் தன் மனைவி வேறொருவனை மணந்துக் கொள்வாளோ என்ற சுயநலத்தால் ஆண்கள் செத்தால் பெண்களை கணவனின் உடலுடன் உயிருடன் எரிக்க வேண்டும் என்று அக்ரிமெண்ட் செய்திருப்பார்களோ?

 5. தமிழச்சி..
  கதையின் கடைசியில் உள்ளதைப் படிக்கவும். ஒரு உருவகத்துக்குத்தான் மனைவி என பயன்படுத்திருக்காங்க..

  மற்றபடி ஒரு இன்ஸ்பிரேஷனல் கதைதான்.

 6. ila சொல்கிறார்:

  நல்ல தொரு புனைவு. ஆமா இதுல எங்கே மதம், உடன் கட்டை எல்லாம் வந்துச்சு?

  வேற கண்ணோட்டமே இருக்காதா? உலகம் பெரிசுங்கோ..

 7. thamizachi சொல்கிறார்:

  /// ila on

  வேற கண்ணோட்டமே இருக்காதா? உலகம் பெரிசுங்கோ.. ///

  உலகம் பெரிசுதான் ஆனால் மனிதர்களின் சிந்தனை குறுகியதாக இருக்கின்றதே! நான் கற்பனை புணைவுகளை சொல்லவில்லை. இந்த கதையை படித்த போது என் சிந்தனை அந்த காலத்தில் இருந்த உடன்கட்டை ஏறுதல் சடங்கை ஆண்களின் மனோபாவத்துடன் ஓப்பிட்டு பார்க்கத் தூண்டியது. பார்வை ஓன்றென்றாலும் சிந்தனை வெவ்வேறு தானே தோழா?

 8. thamizachi சொல்கிறார்:

  ///கதையின் கடைசியில் உள்ளதைப் படிக்கவும். ஒரு உருவகத்துக்குத்தான் மனைவி என பயன்படுத்திருக்காங்க..///

  //(அல்லது கணவன்கள் என எடுத்துக் கொள்ளவும்)//

  ரொம்ப எச்சரிக்கையாகத் தான் செயல்படுகின்றீர்கள் Alex.

 9. //ரொம்ப எச்சரிக்கையாகத் தான் செயல்படுகின்றீர்கள் Alex.//

  :)

  நீங்கெல்லாம் இருக்கீங்கல்ல …

  பதிவு எழுதும்போதே நெருடலாத்தான் இருந்துச்சு. அதான் அதப் போட்டுட்டேன்.

 10. thamizachi சொல்கிறார்:

  /// சிறில் அலெக்ஸ்

  நீங்கெல்லாம் இருக்கீங்கல்ல …

  பதிவு எழுதும்போதே நெருடலாத்தான் இருந்துச்சு. அதான் அதப் போட்டுட்டேன். ///

  “நெருடல்” அழகான வார்த்தை. மனிதாபிமானம் நிறைந்தவர்களிடம் அடிக்கடி ஏற்படுவது! ஆனால் கண் முடித்தனமான பெண்ணீயம் பேசும் ஆளாக என்னை நினைத்துவிடாதீர்கள். பெண்கள் ஆபத்தானவர்கள். தாங்கள் சமூக ரீதியில் அடைய முடியாததையெல்லாம் திருட்டுத்தனமாக தீர்த்துக் கொள்வதால் நம் சமூகத்தில் பெணணுரிமை பேசுவது போலித்தனமாகி விட்டது என்ற கருத்து எனக்கு உண்டு.

 11. //பெண்கள் ஆபத்தானவர்கள். தாங்கள் சமூக ரீதியில் அடைய முடியாததையெல்லாம் திருட்டுத்தனமாக தீர்த்துக் கொள்வதால் நம் சமூகத்தில் பெணணுரிமை பேசுவது போலித்தனமாகி விட்டது என்ற கருத்து எனக்கு உண்டு.
  //

  இதை விளக்கி ஒரு பதிவு போடுங்களேன். எனக்குப் புரியவில்லை.

 12. thamizachi சொல்கிறார்:

  /// சிறில் அலெக்ஸ்

  இதை விளக்கி ஒரு பதிவு போடுங்களேன். எனக்குப் புரியவில்லை.///

  போட்டு இருக்கின்றேன் அலெக்ஸ்!

 13. Link please

 14. ila சொல்கிறார்:

  //ஆனால் கண் முடித்தனமான பெண்ணீயம் பேசும் ஆளாக என்னை நினைத்துவிடாதீர்கள்//
  இப்படி தெளிவா இரிந்துட்டா பிரச்சினையே இல்லீங்க. எதுக்கு எடுத்தாலூம் ஆண்களின் மீது குறை சொல்ற எந்த பொண்ணையும் யாருக்கு புடிக்காது.

 15. chinnappaiyan சொல்கிறார்:

  நல்லா இருக்குது கதை.
  கிருத்துவப் பிண்ணனியில் இருந்தா என்னங்கோ, நல்லது சொன்னா ஓகேதான்.

 16. நல்ல கதை, கருத்து சிறில்.

  பழைய கதைகள் அன்றைக்கான Value Systemகளை முன்வைத்து இன்றைக்கும் தேவையான சில கருத்துக்களை முன்வைக்கிறது. அந்த Values இன்றைக்கு பொருத்தமாய் இல்லை என்பதால் கருத்தையும் சேர்த்து நிராகரித்தால் நஷ்டம் நமக்குதான். எந்தப் பழைய கதையையுமே கூற முடியாது :-)

 17. சிறில் ஸார்,

  தலைப்பைப் பார்த்ததும் பயந்து போய்விட்டேன்..

  பதறியடித்து வந்து பார்த்தால்..

  நல்ல கதை.. தேவையான கதை.. அருமையான உருவகப்படுத்துதல்..

  படித்து முடித்த பிறகு ‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடுவரை பிள்ளை.. கடைசி வரை யாரோ’ என்ற கவியரசரின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன..

 18. சீனு சொல்கிறார்:

  தலைப்பை பார்த்து ‘அரசியல்’ பேசரீங்களோன்னு நெனச்சுட்டேன்…

 19. //கிருத்துவப் பிண்ணனியில் இருந்தா என்னங்கோ, நல்லது சொன்னா ஓகேதான்//

  உங்களுக்கு ஓகேண்ணா எனக்கும் ஓகே… இருந்தாலும் ‘அலர்ஜி’ வார்ணிங் குடுக்கிறது நல்லதில்லியா..

  :)

 20. இளா,
  படித்தேன் ரசித்தேன் பதித்தேன்

 21. உண்மைத் தமிழன்..
  பதறி அடித்தெல்லாம் வராதீங்க.. :)
  ஜாலியா வாங்க ஜாலியா போங்க :)

  மனுசன் ஒண்ண கட்டிகிட்டே படாத பாடு படுறான்..

  :)

 22. நல்ல பஞ்ச் சீனு :)

 23. ஏற்கனவே இந்தக் கதையைப் படித்திருந்தேன்; ஆனால் மறந்து போயிருந்தது. நல்ல கதை.

 24. கயல்விழி சொல்கிறார்:

  திரு சிறில் அலெக்ஸ்

  தலைப்பைப்பார்த்து பதறிப்போய் படித்தேன். நீங்கள் சொல்லும் கான்செப்ட் நன்றாக இருந்தாலும் அதற்காக உருவகபடுத்தி இருக்கும் “மனைவி” கேரக்டர்கள் நன்றாக இல்லை. நீங்கள் முன் ஜாக்கிரதையாக “கணவன்” என்று போட்டுவிட்டதாகவே இருக்கட்டும், இருந்தாலும் இந்த மொத்த கதையையும் எங்கெங்கு எல்லாம் “மனைவி” என்று வருகிறதோ அங்கெல்லாம் “கணவன்” என்று மாற்றி போட்டு படித்துப்பாருங்கள்(அப்படி ஒரு கதை எழுத யாருக்கும் மனம் வராது என்றாலும்). ஆபாசமாக இருக்கிறது இல்லையா? இது மட்டும் எப்படி சரியாகும்?

  இது என்னுடைய ஒப்பினியன், நெகடிவ் விமர்சனத்துக்கு மன்னிக்கவும்.

 25. கயல்விழி,
  உங்கள் கேள்வி சரியானதே. ஆயினும் இந்தக் கதைகளின் கருக்களை முன்வைத்து அது சொல்லப்பட்டிருக்கும் விதத்தை மன்னிக்கலாம். பழைய கதைகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் சரியில்லை என்பதால் அவை சொல்லும் கருத்துக்களை நிராகரித்துவிட முடியுமா? அவற்றை மாற்றிப் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு நமக்குத் திறன் இல்லையா என்ன? :)

 26. கயல்விழி சொல்கிறார்:

  //அவற்றை மாற்றிப் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு நமக்குத் திறன் இல்லையா என்ன?//

  இதற்கு பதிலாக வேறு Non offending உருவகங்களை உபயோகப்படுத்தும் அளவுக்கு உங்களுக்கு திறன் இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.

 27. //இதற்கு பதிலாக வேறு Non offending உருவகங்களை உபயோகப்படுத்தும் அளவுக்கு உங்களுக்கு திறன் இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.//

  சூப்பர். நச். பாயிண்ட். Point taken.

 28. கயல்விழி சொல்கிறார்:

  மிக்க நன்றி சிறில் அலெக்ஸ். :)

 29. shanker சொல்கிறார்:

  anbulla alex, neengal kooriya kadhai arumai..

 30. R.Arokiasamy சொல்கிறார்:

  idu pondra kadhaikalai veliyidavum . nantri mr alex

 31. R.Arokiasamy சொல்கிறார்:

  nantri mr.alex

 32. s.logananadhan சொல்கிறார்:

  nalla kathai itha yellam yaggerthu sir sudaringa yenakkum konjam sollunga sir

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்