இரு தவளைகள்

இரு தவளைகள் சென்றுகொண்டிருந்த வழியில் இருந்த ஆழக்குழியில் விழுந்தன.

இரண்டும் வெளியே வர கடுமையாக முயன்றுகொண்டிருந்தன. இதற்கிடையே பல தவளைகள் குழியின் மேல் கூடின. இருவரையும் பார்த்து ‘இதிலிருந்து வெளியே வர முடியாது? முயற்சியை கைவிடுங்கள் நிம்மதியாக செத்துவிடுங்கள்.’ எனக் கத்தின. முதல் தவளை இவர்கள் சொல்வதைக் கேட்டு கீழே விழுந்து இறந்தது.

இரண்டாம் தவளை மேலும் மேலும் முயற்சி செய்து ஒருவழியாக மேலே வந்தது.

அது மேலே வந்ததும் மேலிருந்த தவளைகளெல்லாம் ‘நாங்கள் சொன்னது உன் காதில் விழலியா?’ எனக் கேட்டன.

அந்தத் தவளையோ,’எனக்கு காது கேட்காது. மேலிருந்து வெளியே வர என்னை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி’ என்றது.

இந்தக் கதையிலிருந்து தெரிவதென்ன?

Popularity: 5% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....16 மறுமொழிகள் to “இரு தவளைகள்”

 1. நல்ல கதை.

  புரிஞ்சது.

  எனக்கும்தான் காது கேக்கறதில்லை இப்பெல்லாம்.

  இதை நீங்க ‘சொல்லி இருந்தா’ எனக்குக் கேட்டிருக்காது:-)))

 2. இப்படியெல்லாம் டெஸ்ட் வச்சீங்கன்னா நான் பெயில் ஆயிடுவேன்.. சொல்லிட்டேன் :(

 3. Balaji சொல்கிறார்:

  ‘வாலி’ படத்தின் அண்ணன் அஜீத் இந்தக் கதையை படிக்க தவறிவிட்டார். இல்லாவிட்டால் இன்னும் கடுமையாக முயன்றிருப்பார்

 4. Balaji சொல்கிறார்:

  காது கேட்காதது பிரச்சினையில்ல… கேட்காத மாதிரி காட்டிக்கறதுதான் பெருசு

 5. Balaji சொல்கிறார்:

  கூட்டத்தின் மொத்த அறிவை விட தனியாள் நிறைய சாதிக்கலாம்… எனவே, இனிமேல் அலுவல் மீட்டிங்குகளுக்கு செல்லக் கூடாது

 6. vsk சொல்கிறார்:

  //இந்தக் கதையிலிருந்து தெரிவதென்ன?//

  குடியை [ஊக்க மது] கைவிடேல்!:)))))))

 7. மொழிபெயர்ப்பு வேற்று மொழியிலிருந்து தாய்மொழிக்கு மட்டுமே செய்ய வேண்டும், எதிர் திசையில் அல்ல என்பதுதான் இப்போது எங்கள் துறையின் தாரகமந்திரம். அதன்படி நான் ஜெர்மன் அல்லது ஃபிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கலாம், அவ்வளவுதான்.

  ஆனால் இந்த மந்திரமெல்லாம் எனக்கு முதலில் யாரும் சொல்லவில்லை. நான் பாட்டுக்கு ஐ.டி.பி.எல். காலத்தில் ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு மொழிபெயர்த்து கொண்டிருந்தேன். இதனால் எனது ஃபிரெஞ்ச் ஆளுமை பலப்பட்டது. இதைப் பற்றி நான் எங்கள் ப்ரோஸ்.காம் தலைவாசலில் ஒரு மன்ற இடுகையில் வேடிக்கையாக குறிப்பிட்டேன், “நல்ல வேளையாக இது எனக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னால் காதில் விழவில்லை” என்று.

  உங்கள் தவளைக் கதை எனக்கு அதைத்தான் நினைவுபடுத்துகிறது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 8. chinnappaiyan சொல்கிறார்:

  நீங்க நிறைய கதைகள் படிக்கறீங்கன்னு புரியுது…:-)

 9. எனக்கு ஒரு பழைய ஜோக் ஞாபகம் வருது!

  புது கார் வாங்கின முதலாளி ரீப்பேர் ஆனதும் ட்ரைவர் கிட்ட சொன்னாராம் – டேய், உனக்கு இதைப்பத்தி ஒண்ணுமே தெரியாது, பாரின் மெக்கானிக்தான் வரணும் ரிப்பேர் பண்ண ன்னு

  ட்ரைவர் சொன்னானாம், அப்படியா முதலாளி, எனக்குத் தெரியாதுன்றது எனக்குத் தெரியாம போச்சே.. நானே பாத்து சரிபண்ணிட்டேனே ன்னானாம் :)

 10. உண்மைத்தமிழன் சொல்கிறார்:

  ஒரு பெருங்கதையாடலில் சொல்ல முடியாத விஷயத்தை சிறு கதையாடலின் மூலம் விளக்கி விடலாம். இந்தக் கதையும் அப்படித்தான்..

  நமக்குத் திறமை இருந்தால், அது இருப்பது நமக்கே தெரிய வந்தால், விமர்சனங்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் போய்க் கொண்டேயிருக்கலாம்.. வெற்றி நிச்சயம்தான்..

 11. சீனு சொல்கிறார்:

  //இந்தக் கதையிலிருந்து தெரிவதென்ன?//

  ரஜினி ஒரு மேடை பேச்சில் (சந்திரமுகி வெற்றி விழா?) சொன்னதை நீங்களும் கேட்டிருக்கீங்க…

 12. பாபா,
  இதெல்லாம் எங்கேர்ந்து பிடிக்கிறீங்க.. உங்கள வச்சிகிட்டு சிம்பிளா ஒரு கதை சொல்ல முடியல..

  பாட்டி வட சுட்ட கதையில உங்களுக்கு என்ன மாறல் சொல்லித் தந்தாங்களோ. ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க :)

 13. இது சூப்பர் VSK :)

 14. எல்லாருக்கும் சேர்த்து..

  இந்தக் கதையிலிருந்து மூணு விஷயங்கள் தெரிகின்றன.

  1. அடுத்தவன் சொல்லுறதக் கேட்டு முயற்சிய கைவிடாதே

  2. அடுத்தவன் முயற்சி செய்யும்போது (மேலிருந்து) டிஸ்கரேஜ் பண்ணாத.

  3. காது கேட்காத தவளைகளும் உண்டு.

 15. //ரஜினி ஒரு மேடை பேச்சில் (சந்திரமுகி வெற்றி விழா?) சொன்னதை நீங்களும் கேட்டிருக்கீங்க…//

  இந்தக் கதையையே சொன்னாரா?
  பரவாயில்ல இது என் சொந்தக் கதையில்ல :)

 16. nanaani சொல்கிறார்:

  நல்ல கதை, நல்ல தத்துவம், நல்ல முடிவு.

  //எனக்கு தெரியாது என்பது எனக்குத்தெரியாமப் போச்சே//ட்ரைவரின் பதில் நல்ல நகைச் சுவை!!!

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்