மின்னரட்டை – நிமிடக்கதை

Sent at 10:14 AM on Wednesday
Sweet_T:  ஹி
R_Mohan1982: ?
Sweet_T: hi
R_Mohan1982: a/s/l please
Sweet_T: ???
R_Mohan1982: age/sex/location
Sweet_T: any age/any time/anywhere
R_Mohan1982: LOL. உங்களோட வயசு/பால்/வசிப்பிடம் என்ன
Sweet_T: 20/பெண்/சிங்கை
R_Mohan1982: சிங்கை?
Sweet_T: சிங்கப்பூர்
R_Mohan1982: ஓ…. பெயர் தெரிஞ்சிக்கலாமா?
Sweet_T: மங்கை
R_Mohan1982: மங்கப்பூர்?
Sweet_T: not funny :(
R_Mohan1982: வீட்ல தனியாவா?
Sweet_T: இல்ல கூட தங்கப்பூர் இருக்கா
R_Mohan1982: :) நல்ல ஜோக்
Sweet_T: நன்றி
R_Mohan1982: அப்புறம்?
Sweet_T: சொல்லுங்க.
R_Mohan1982: நீங்க அழகாயிருப்பீங்களா
Sweet_T: பரவாயில்லாம… நமிதா உயரம், ரேவதி முகம், நயதாரா நடை, ஜோதிகா கலர், ஐஸ்வர்யா மூக்கு etc. etc
R_Mohan1982: கண்ணு?
Sweet_T: குமரி முத்து
R_Mohan1982: ம். நெனச்சேன். :) உங்க ஃபேவரிட் ஹாபி என்ன?
Sweet_T: பில்டர் காபி
R_Mohan1982: ஹாபி.. பொழுதுபோக்கு
Sweet_T: தெரியுது என் ஹாபியே ஃபில்டர் காப்பி போட்டு குடிக்கிறதுதான்.
R_Mohan1982: போன பிறவியில நீங்க பேனாத்தான் பிறந்திருக்கணும். இப்படி கடிக்கிறீங்க.
Sweet_T: அறிவிருக்கா Dog
R_Mohan1982: என்னங்க திடீர்னு
Sweet_T: சாரி சாட் மாறிடுச்சு
R_Mohan1982: நீங்க என்ன ட்ரெஸ் போட்டிருக்கீங்க
Sweet_T: உடம்ப மறைக்கிற ட்ரெஸ்
R_Mohan1982: முழுசாவா
Sweet_T: பின்ன? பாதி கிழிச்சா போடுவாங்க?
R_Mohan1982: :)
Sweet_T: :)….. ஜொள்ளு வழியுது
R_Mohan1982: அப்புறம்?
Sweet_T: அப்புறம். ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் பன்ணியாச்சா?
R_Mohan1982: இன்னும் இல்ல.
Sweet_T: அத நியாபகப் படுத்தத்தான் சாட்ல வந்தேன்
R_Mohan1982: சரி எடுத்துடறேன்
Sweet_T: ஜொள்ள தொடச்சிட்டு ஒழுங்கா வேலையப் பாருங்க
R_Mohan1982: சரிம்மா பை.
Sweet_T: பை
Sweet_T logged off at 10:21 AM

Popularity: 7% [?]

Print This Post Print This Post இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப இந்த பதிவை மின்னஞ்சலில் அனுப்ப


RSS 2.0 மறுமொழிக்கான ஓடை | உங்கள் கருத்து.... உங்கள் தளத்தில் இணைக்க....13 மறுமொழிகள் to “மின்னரட்டை – நிமிடக்கதை”

 1. :-))))))))

 2. Radha Sriram சொல்கிறார்:

  nice.!! கணவரும் மனைவியுமா??

 3. ila சொல்கிறார்:

  சே……… இங்கேயும் இதேதானா?

 4. chinnappaiyan சொல்கிறார்:

  :-)))))))))))))

 5. கலக்கல்!!!

 6. kekkepikkuni சொல்கிறார்:

  //உங்களோட வயசு/பால்/வசிப்பிடம் என்ன
  Sweet_T: 20/பெண்/சிங்கை// வயசு நிஜமோ இல்லியோ, புதிசா கலயாணமானவங்க போல:-))

  //Sweet_T: அறிவிருக்கா Dog
  R_Mohan1982: என்னங்க திடீர்னு
  Sweet_T: சாரி சாட் மாறிடுச்சு//
  இதில தான் சாராம்சமே;-)

  கதை நல்லா இருந்தது. சின்ன விளம்பரம் நான் ட்விட்டரில் எழுதிய குறுங்கதை இதோ..

  நீங்க எழுதின இந்த கதையையும் குறுங்கதையாக்கிடலாம் போலிருக்கிறதே!

 7. கப்பி சொல்கிறார்:

  :))

 8. Prabhu சொல்கிறார்:

  Good one

 9. நன்றி மக்கள்ஸ்.

  நேற்று வால் மார்ட்டில் இரு நாவல்கள் பார்த்தேன் இரண்டுமே முழுவதும் மின் அரட்டையாகவே எழுதப்பட்டிருந்தன.

  அதிலிருந்து எடுத்த இன்ஸ்பிரேஷன். பதிவர்கள் சார்பில் சாட் கதைகள் எனும் புதிய வகையை உருவாக்கிடலாம்.

 10. ராஜிவ் சொல்கிறார்:

  நல்ல கான்செப்ட். :) இது போல நாவல் எழுதுவது கடினம்.

 11. நாவல் எழுதியிருக்காங்க ராஜிவ். ஆங்கிலத்துல.

 12. சிறில் ஸார்,

  நல்ல இதமான, பதமான கற்பனை.

  எனக்கு சென்ற வருடம் கிடைத்த ஒரு நிஜ அனுபவம் சில நாகரிக உண்மைகளை இதே பாணியில் படம் பிடித்துக் காட்டியது.

  தற்செயலாக நான் தினமும் சென்ற net centre-ல் இருந்து எனது பென் டிரைவில் தவறாக ஏற்றப்பட்ட ஒரு notepad file-ல் இருந்து எடுக்கப்பட்டது.

  இந்த (http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_08.html) சுட்டிக்குச் சென்று படித்துப் பாருங்கள்..

 13. நன்றி உண்மைத் தமிழன் சார்,,

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்